அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/26/14

Loud speaker 11 .மூதாதையர் ,.மற்றும் சில நினைவுகள்

Loud speaker 11 ..

எல்லாரும் கண்களை மூடி மனதில் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி
 சுருளை நினைச்சுக்கோங்க ...இப்ப சில வருஷங்கள் பின்னோக்கி 
 போறோம் .
இது ஒரு மீள்  பதிவு ..லிங்க் கொடுக்கலாம்னு நினைச்சேன் 
ஆனா அதில் நான் முதன்முறையா செய்த அதிரசம் படத்தை போட்டுட்டேன் அதைபார்த்து யாரும் ஓடிறகூடாதே என்ற 
நல்ல எண்ணத்தில் மீண்டும் இங்கே பதிவாக்கிட்டேன் :)


ஒரு கிராமத்தில் நாற்புறமும் சோளக்கொல்லை /கரும்பு /
வெற்றிலை /நிலக்கடலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்த ஒரு 
வீட்டின் அறையில் ,ஒரு சின்ன தேவதை மரத்தாலான தொட்டிலில் 
அழகா தூங்கி கொண்டிருக்கு :)  அதோட அம்மா சமையல் அறையில் 
இருந்து எதேச்சையாக பெட் ரூமுக்கு வந்தா !!!!!!!! அவங்களுக்கு 
பேரதிர்ச்சி !!!!!




                                                            இது கூகிளில் சுட்டது :)               

தூளி தொட்டில் ஆடுது ஆனா ஆட்டுபவர் யாரென்று தெரியல 
இன்னும் சற்றே நெருங்கி வந்து பார்த்தால் இவர் கயிறைபிடித்து 
ஆட்டிவிட்டு மரசட்டத்தின் மீது ஏறி அந்த குழந்தையை அப்படியே 
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்காராம்:)

சில நிமிடங்கள் குழந்தையின் தாய் செய்வதறியாது திகைத்து 
பின் சுதாரித்து பிஸ்கட்மற்றும் சில தின்பண்டங்கள் எடுத்து  
போட எதற்கும் அசையாத அவர் இறுதியில் குழந்தை பக்கத்தில் 
இருந்த பால் பாட்டிலை தூக்கிட்டு மெதுவா போய்விட்டதாம் ..
குழந்தை யாருன்னு தெரிஞ்சிருக்கும் :))..எங்கம்மா இதை எப்பவும் 
நினைவு கூறுவாங்க .
அம்மாவுக்கும் உயிரினங்களுக்கும் அப்படி ஒரு நட்பு .
அடுத்த சம்பவம் 2011 ஆண்டு துவக்கத்தில் நடந்தது 
எங்க வீட்டுக்கு சென்னையில் வாராவாரம் ஒரு பூட்ஸ் 
கூட்டமே வருகை தருமாம் ..அதாவது எங்க வீட்டை தாண்டி 
ஒரு ஹோட்டல்காரர் வெள்ளிகிழமைகளில் தவறாமல் பூட்ஸ் 
குடும்பத்தாருக்கு இட்லி மற்றும் சில உணவுவகைகளை 
தருவாராம் .(boots dora's monkey) :)
                                                                                    

இவை அங்கே விசிட் செய்திட்டு போகும் வழியில் எங்க அம்மா
வீட்டில் தண்ணீர் பறவைகளுக்கென பெரிய   மண் தட்டில் வைப்பாங்க 
அதையும் அருந்தி விட்டு செல்வார்களாம் .அவர்களில் ஒருவர் 
 அங்கே இருந்து அம்மா கையால் சில உணவு சாப்பிட்டு ரிலாக்ஸ்டா 
செல்வார் .அவர் பெயர் ரவி ..அம்மா தான் பெயர் வைத்தார்களாம் .
அப்புறம் சில மாதங்கள் இவர்கள் வீட்டுப்பக்கம் வரவேயில்லை 
போலீசில் ஹோட்டல்காரர் மீது யாரோ கம்ப்ளைன்ட் கொடுக்க ,
அவர் உணவிடுவதை நிறுத்தியதால்  இவர்களும்  வரவேயில்லை ..
                                                                                


பின்பு சமீபத்தில் ரவி மட்டும் வந்திருக்கு எங்க வீட்டுக்கு ..என் தங்கை நீருடன் உணவு தந்தாளாம் ஆனால் உண்ணாமல் 
ரவி அப்படியே அமர்ந்திருக்கு தங்கைக்கு புரிந்துவிட்டது ,சில நிமிடங்கள் 
ரவி உள் வரை வீட்டினுள் வந்து விட்டு சாப்பிடாமலே  சென்று 
விட்டதாம் ..இந்த ரவியை  அம்மா ஒரு புகைப்படம் எடுத்தாங்க ..
எனக்கும்  ஒரு காப்பி அனுப்பி வைச்சாங்க என் மகள் இங்கு ஒருவர்
 விடாமல் பள்ளி ஆலயம் நண்பர் அக்கம்பக்கம்  என்று அனைவரிடமும் 
படத்தை காண்பிச்சா ..பதிவில் இணைக்க வீடு முழுதும் 
தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை ..:((( ..இந்த பதிவு இரண்டு வருடங்கள் முன் எழுதியது அப்போ கிடைக்காத படம் போன வாரம் கிடைத்தது .

விலங்குகள் ஆனாலும் அவற்றுக்கும் அன்புண்டு ..
அது சரி இப்போ திடீர்னு மூதாதையர் நினைவு வரக்காரணம் :)
சகோதரர் தில்லை மற்றும் கீதா அவர்களின் பதிவில் இவர்களின் 
அன்புதொல்லையை பார்த்தேன் :)கீதா அவர்களின் வீட்டில் வருங்கால வெட்னரியனை பார்க்க வந்த மூதாதையர் எங்க வீட்டுக்கு வரக்காரணம் 
எங்கப்பாவும் ஒரு கால்நடை மருத்துவர்தான் ..MBBS சீட் கிடைத்தும் 
வேண்டாமென்று ஒதுக்கி ஆசைப்பட்டு சேர்ந்தவர் ..ஆனால் அதே பாடத்தை நான் அடம்பிடித்து விரும்பியபோதும் தடுத்து விட்டார் :(
அதன் காரணம் ஒரு சில ஆசிரியர்களின் ஈகோ :( தனக்கு தெரியாததை 
மாணவர் சொல்லும்போது ஏற்றுகொள்ளும் மனபக்குவம் அனைவருக்கும் வேண்டும் .எங்கப்பாவும் ஒரு அரைப்பக்கம் அளவுதான் கல்லூரியில் படிக்கும்போது நோட்ஸ் எழுதினாராம் :) நிறைய ப்ரோபசர்களிடம் கருத்துவேறுபாடு ,தனது கொள்கையில் கருத்தில் தீவிரமாக இருந்ததால் மற்றும் என்னால் சில விஷயங்களை சமாளிக்க முடியாது என்று தீர்மானமாக நம்பினார் .ஏற்கனவே அங்கே தில்லையகத்தில் பதிவு ரேஞ்சுக்கு பின்னூட்டம கொடுத்து விட்டேன் :) மிகுதி இங்கே ...ஆசிரியரோ மருத்துவரோ எந்த படிப்பு படித்திருந்தாலும் சிறந்த இடத்தை குறிப்பா மக்கள் மனதில் இடம் பெறனும்னா தனக்கு தெரியாத ஒன்று தன்னை விட படிப்பில் குறைந்தவர் சொன்னாலும் ஏற்கும் மன பக்குவம் வரணும் ..
எனக்கு நினைவிருக்கு .ஏழாம் வகுப்பு படிக்கும்போது எனது ஆங்கிலநோட் புத்தகத்தில் அம்மா ஒரு திருத்தம் செய்தாங்க அதை பார்த்த ஆசிரியை //நீ இனி உன் அம்மாவிடமே பாடம் படி ,இங்கே பள்ளி வராதேன்னு சொன்னாங்க !என்னவொரு ஈகோ :(   ...அவர் Niece என்பதை 
neice என்று எழுதினதை அம்மா திருத்தினது பொறுக்கல்லை :(

மற்றொரு சம்பவம் ..

ஒரு Vet .. மருத்துவரிடம் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரு நாய்க்குட்டி எடுத்து சென்றோம் அருகில் கூட வராமல் 
ஒரே வார்த்தை சொன்னார் அது //RABIES // உடனே கொன்று விடனும் ..//
அப்போ எனக்கு 15 வயது எங்கப்பா வேறு நாட்டில் பயணம் .எனக்கு அழுகை வந்து விட்டது எப்படி  2 மாத நாய்குட்டிக்கு வீட்டில் உள்ளே வளர்க்கும் ஜீவன் :( அவர் தயாராக மருந்துடன் நிற்கிறார் ..நான் முடியவே முடியாது  என்று தூக்கிட்டு ஓடி வந்துட்டேன் .இரவு முழும் ப்ரெயர் செய்து தனி அறையில் விட்டோம் காலையில் எழும்பி பார்த்தா வாலை  ஆட்டியபடி நிற்கிறது !! அடுத்த நாள் அது விளையாடிய பின் முற்றத்தில் பார்த்தா கட்டைகளின் நடுவே பெரிய கருந்தேள் .அது கடித்ததால்தான் நுரை ஏற்பட்டுள்ளது .நான் விடல்லியே :)
ஒரு வாரம் கழித்து அந்த மருத்துவரின் வீட்டுக்கு நாய் குட்டியுடன் சென்றேன் அவர் இல்லை அவரது மகன் வருங்கால வெட் ..இருந்தார் அவரிடம் உங்க தந்தை   ரேபிஸ் என்றார் அது இல்லை இது தேள் பூச்சி கடிதான் //என்று அவரிடம் மறவாமல் நான் சொன்னதை கூறுங்கள் //என்றேன்.சொல்லிட்டு எங்க வீட்லயும் இப்படி செய்ததை மறைக்காமல் 
சொல்லிவிட்டேன்..  
அதுக்கப்புறம் எனக்கு வீட்டில் மண்டகப்படி ஏனென்றால் மருத்துவர் அப்பாவின் நெருங்கிய நண்பர் :) .இதெல்லாம் பல வருடங்கள் முன்பு 
நடந்தவை ..அப்பா இப்போ உயிருடன் இல்லை ! அந்த மருத்துவரும் அவரது மகனும் இருக்காங்க ..அவங்களுக்கு என்னை நினைவிருக்குமா தெரியாது :)ஆகவே தைரியமாக பெயர் இருப்பிடம் சொல்லாம எழுதுகிறேன்.. :) 
இப்போ எங்க மகளுக்கு ரொம்ப ஆசையாம் வெட்னரி டாக்டர் 
ஆகணும்னு :) இறைவனை  வேண்டுகிறேன் அவள் ஆசை நிறைவேறனும்னு ....அவள் வலைப்பக்கம் சென்று பின்னூட்டமிட்டு வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி மீண்டும் 
கிறிஸ்மஸ் விடுமுறையில்தான் அவள் ப்ளாகை பார்ப்பாள் அப்போ அனைவருக்கும் நன்றி கூறுவாள் அவள் வலையில் ..

                                                  -----------------------------------------------





17 comments:

  1. மலரும் நினைவுகள்..
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரர் மது ..சில பதிவுகள் நினைவை தூண்டிவிடும் உங்கள் //விடை கொடுத்த //அந்த ஆசிரியர் பதிவும் நிறைய நினைவுகளை கிளறி விட்டது எழுதுவேன் விரைவில் அவற்றையும்
      சகோதரி கீதா மற்றும் தில்லை சாரின் பதிவுகலில் நான் பெரிய பதிவு அளவுக்கே பின்னூட்டம் எழுதிட்டேன் !!
      அதான் மிச்சம் மீதியை இங்கே பகிர்ந்தாச்சு :)

      Delete
  2. மலரும் நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார் சகோ ..ஆமாம் ஊர் பற்றி நினைச்சால் இப்படி நிறைய மலரும் அரும்பு மொட்டாய் நினைவுகள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. நம்ம கீதா சகோதரி ஆரம்பிச்சு வச்ச நம்மவர் பதிவு ஒரு தொடர் பதிவாகிவிடும் போல இருக்கே...

    தங்கள் மகளின் எண்ணம் ஈடேறுவதற்கு இறைவனின் அருள் கண்டிப்பாக கிட்டும் சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா :) அவங்க நம்மவர்கள் ஆச்சே ! விட்டுட முடியுமா :) இன்னும் நிறைய இருக்கு ..தலையில் கட்டும் ரிப்பனை தூக்கிட்டு கூட போயிருக்காங்க நம்மவர் :).
      அமாம் மகள் மிகவும் ஆசைப்படறா இறைவனுக்கு சித்தம்னா படிக்கட்டும் ..நானாக அவளை நிர்பந்தம் செய்வதில்லை எதற்கும் .வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

      Delete
  4. சகோதரி! முதலில் உங்களுக்கு மிக்க நன்றி. நாங்கள் எழுதிய நம்மவர் பற்றி நீங்களும் பகிர்ந்து கொண்டதற்கு! மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது தங்கள் அம்மாவின்/நீங்க குட்டிப்பாப்பாவாக இருந்த போது நிகழ்ந்த...ஒருவேளை உங்கள் அப்பா வெட், உங்களுக்கும் அந்த ஆசை, உங்கல் மகளுக்கும் ஆசை என்பது அன்றே தெரிந்துவிட்டதோ....நீங்கள் எங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல...

    தங்களுக்கும் விலங்குகள் மீது இத்தனை ஆர்வம்...மிக்க மகிழ்ச்சி அதைவிட தங்கள் மகளுக்கும் ஆர்வம் கண்டு மிக மிக மகிழ்ச்சி...அவருக்கு வாழ்த்துக்கள்! நிச்சயாமாக ஆண்டவன் அருள் கிடைக்கும். மட்டுமல்ல நீங்கள் இருப்பது UK? என்றால் ராயல் வெட்னரி காலேஜில் சேருவதற்கு முயற்சிக்கலாமே! நல்ல கல்லூரி. அங்குள்ள எல்லா வெட் ஸ்கூல்ஸும் ராயலின் மெம்பர்களாக இருக்கத்தான் வேண்டும். அப்படி இருந்தால் தான்
    வேலிட் லைசன்ஸ் கிடைக்கும். மட்டுமல்ல ராயல் கல்லூரி, அமெரிக்கன் வெட்னரி மெடிக்கல் அசோசியேஷனின் அக்ரெடிட்டட் காலேஜ் என்பதால், மகள் நார்த் அமெரிக்கன் வெட்னரி லைசன்ஸ் தேர்வு மட்டும் எழுதினால் போதும், உலகில் எங்கு வேண்டுமானாலும் ப்ராக்டிஸ் செய்யலாம்.

    ஏன் இதைக் கூறுகின்றோம் என்றால், கீதாவின் மகன் இந்தியாவில் படித்ததால் (தங்கள் தந்தையைப் போல ரொமப்வே டெடிக்கேடட்) அவனது விருப்பம் நிறைவேற மிகவும் கஷ்டப்படுகின்றான். இங்குள்ள ககல்லூரிகள் அக்ரெடிட்டட் இல்லாததால், உலக அளவில் இந்த டிகிரி மதிக்கப்படுவதில்லை. (இங்குள்ள தரமும் அப்படித்தான் இருக்கின்றது. மிகையல்ல) அவனது விருப்பம் நிறைவேற மிகவும் கடினமானப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றான். தங்களுக்கு இதைக் குறித்த ஏதேனும் விவரம் வேண்டும் என்றால் தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
    தங்கள் தந்தையும் வெட் என்பதும் கீதாவின் மகனைப் போன்றே (அப்படியே) என்பதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. சரி உங்களிடம் அவரது மின் அஞ்சல் கேட்கலாம் என்று நினைத்து வந்தால் அவர் தற்போது இல்லை என்பதை அறிந்து மிகவும்
    வருத்தமாகிவிட்டது.

    நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்தமருத்துவரைப் போன்று (னுரை-ரேபிஸ்) பலர் இருக்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குறியது. அடிப்படை அறிவே அவர்கள் பெறவில்லை என்பது மிகவும் தெளிவாகின்றது.

    பின்னூட்டம் பெரிதாகி விட்டது. அதனால் இங்கு ஃபுல்ஸ்டாப்...

    மிக்க நன்றி சகோதரி...மிகவும் ரசித்துப் படித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்துக்களுக்கும் வெட்னரி மெடிசின் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி சகோ ..
      இப்போ மகள் 9 ஆம் வகுப்பில் இருக்கா 11 ஆம் வகுப்பில்தான் GCSE எழுதுவா இப்பவே அதற்கான பாடங்கள் தெரிவு செய்திட்டா ஹெல்த் சோஷியல்ஸ் மற்றும் அறிவியல் பாடங்கள் ஜெர்மன் மொழி, PE ....
      இங்கே பிரச்சினைகள் எதுவும் இராது என நினைக்கிறோம் ..உங்களுக்கு தெரிந்த விவரங்களை சொல்லுங்க ..நானும் தெரிந்துகொள்கிறேன் ..
      நம்ம நாட்டு கல்லூரிகளில் பெரும்பாலும் அனைவரும் நீங்க சொன்னதுபோல (வெளிநாட்டு பசுவுக்கான ட்ரீட்மெண்டை நம்ம நாட்டு மாடுகளுக்கு அப்ளை )செய்வதுதான் பிரச்சினை ..
      நாங்க கல்லூரியில் படிக்கும்[போது எங்க ப்ரொபசர் ஒருவர் சொல்வார் புக்கில் உள்ள படத்தை வரைவதை விட ச்பெசிமன் ஜாரில் இருப்பதை பார்த்து வரிங்க அப்போதான் IDENTIFICATION சுலபமாக இருக்கும்னு ..அது உண்மை பார்த்து ஆராய்வதே சிறந்தது ..அந்த மருத்துவர் ...அப்பப்பா மறக்க மாட்டேன் !! நிறையப்பேர் இப்படிதான் சகோ .இங்கே ஒரு MBBS பாம்பே மருத்துவர் ..தோட்டத்தில் விளையாடியதில் மகளுக்கு பாக்டேரியல் INFECTION ஏற்பட்டது அதை MEASLES என்று சொல்லி 2 வாரங்கள் ஆகியும் போகாவில்ல .வேறொரு மருத்துவரிடம் போனபோது அவர் கண்டுபிடிச்சார் ..ரெட் புக் மட்டுமே இவங்களுக்கு போதும்னு நினைக்கிறாங்க

      Delete
  5. வளர்ப்பு பிராணிகள் நம்மிடம் அன்பு செலுத்துவதே தனி! எங்கள் வீட்டில் பூனைக்குட்டிகள் என் தங்கையிடம் மிகுந்த பாசமாக இருக்கும். இப்போது பூனைகள் கிடையாது. ஒன்றிரண்டு நாய்கள் உள்ளது. குரங்குத்தொல்லையும் இங்கு கிடையாது! நல்லதொரு பதிவு! தங்கள் மகளும் ஓர் பதிவரா? இதுவரை தெரியாது! சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .உங்க மகளுக்கும் பிராணிகள் விருப்பமா .ரொம்ப சந்தோஷம் .
      எங்க வீட்ல ஒரு பூனை குட்டி இருக்கா :)
      ஆமாம் மகள் வலைப்பூ இணைப்பில் தந்திருக்கேன் ..அப்பப்போ அப்டேட் செய்றா

      Delete
  6. இப்போதுதான் படித்தேன். நீண்ட பதிவாக இருந்தபடியினால் அன்றைய அலுவல்கள் காரணமாக உடனே படிக்க இயலவில்லை. உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்பதனை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் மகளும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லதொரு மீள் நினைவு. எனக்கு என் வீட்டில் இருந்தவர்கள் ஞாபகத்தில் வந்துவிட்டார்கள். என் சித்தப்பாவுக்கு எல்லாப்பிராணிகள் மீதும் கொள்ளைபிரியம்.அதனால் வீட்டில் ஆடு,மாடு,நாய்,பூனை,சேவல்,வாத்து இருந்தன. எல்லாவற்றுக்கும் பெயர் வைத்துதான் அழைப்பார்.செல்வி என்று ஒரு பசு அவரின் செல்லமாக இருந்தது.அவரின் மரணம் சம்பவித்த 1 மணி நேரத்தில் அதுவும் அவருடன் சேர்ந்துவிட்டது. இங்கும் பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
    நீங்க படிக்க ஆசைப்பட்டதை மகள் ஆசைப்படுகின்றா.அவரின் விருப்பம் நிறைவேற இறைவன் அருளட்டும். என் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  8. /// இது கூகிளில் சுட்டது :) .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) சொல்லாட்டில் எங்களுக்கு தெரியாதாக்கும்:)

    ReplyDelete
  9. ///,ஒரு சின்ன தேவதை/// தேவதையைத் தேடி வந்தவர் ஆரூஊஊஊஊஊஊஊஊஊ?:)

    ReplyDelete
  10. ஷரனினின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.. இங்கு மெடிசின்.., வெட்னறி.. கொஞ்சம் உள்ளே நுழைவது கஸ்டம்தானாம்... ஆண்டவன் நாடினால் எதுவும் நடக்கும்..

    ReplyDelete
  11. ஏஞ்சலின்,

    தங்கள் மகளின் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள். மூதாதையர் & நாய்க்குட்டியின் மீள் பதிவு உங்களின் மனதிற்கு இத‌மாக இருந்திருக்குமே.

    ReplyDelete