அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/21/14

Loud Speaker 10.. பெர்மகல்ச்சர் ,அடையார் புற்றுநோய் மருத்துவமனை,ஜெர்மன் வெஜிடபிள் சூப் :)

இன்றைய லவுட் ஸ்பீக்கரில்  புற்றுநோய் மருத்துவ மனை வளாகத்தில் பெர்மகல்ச்சர் ,வீட்டு தோட்டம் ,
சமையல் குறிப்பு மற்றும் etc etc ..

நிலை கொள் விவசாயம் /permaculture என்பது இயற்கை ,சூழியல் ,
உணவு உற்பத்தி முறை ஆகிய மூன்றையும் இணைத்து உருவாக்கிய 
தோட்ட அமைப்பு .
பெர்மகல்ச்சர் என்ற ஒரு முறையை 1911 ல் அறிமுகபடுத்தியவர் Franklin Hiram King.அவரூக்கு பின் இந்த முறையின் தந்தை என்று கூறுமளவு 
அதனை உலகிற்கு காட்டியது Bill Mollison மற்றும்  David Holmgren இருவரும் தான் .இவர்களில் பில் மொலிசன் எண்பதுக்கு மேலிருக்கும் வயது ஆனாலும் இந்தியா ஆப்பிரிக்கா என பல் வேறு இடங்களுக்கு பயணம் செய்து .இந்த நிலை கொள் விவசாயத்தை கற்று கொடுக்கிறார் .
ஒன்ன்றுக்கும் உதவாத இடமாக இருப்பினும் அதையும் மாற்றி அங்கு விவசாயம் செய்வது இயற்கையை சூழியலை உணவு தாவரங்கள் வளர ஏற்புடையதாக்குவது இந்த பெர்மகல்சர் .

அடையார் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்திலும் 
வீட்டு தோட்டம் !
                                                                                    
                                                                             

இந்த முறையை பயன்படுத்தி நம்ம சென்னையிலும் வெற்றி கண்டுள்ளார்கள் இந்த நால்வரணி மகளிர் :)
இது அவர்களின் வலைப்பூ 

முயற்சி திருவினையாக்கும் !! ஆம் இந்த அனிதா ,கவிதா ,ப்ரியா ,அர்ச்சனா  நான்கு பெண்மணிகள் சேர்ந்து கூட்டு முயற்சியாக சென்னை அடையார் பகுதியில் தரிசாக கிடக்கும் இடங்களை சுத்தப்படுத்தி நிலைகொள் விவசாயம் எனும் பெர்மகல்ச்சர் முறையில் 
தோட்டங்களை அமைத்து வருகிறார்கள் .
                                                                               

அடையார் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கருகே தரிசாக இருந்த பரந்த இடத்தை சுத்தபடுத்தி அங்கே இப்போ அழகிய வீட்டு தோட்டம் அமைத்து  வெற்றி கண்டுள்ளார்கள் .

வீட்டுத்தோட்டம் அமைத்தல் பராமரித்தல் மனதுக்கு அமைதி தரும் பொழுது போக்கு அதுவும் நோயாளிகள் இருக்கும் இடத்தில அங்கு அவர்களை காண வரும் பார்வையாளர்களும் இளம் /முதிய நோயாளிகளும் விரிந்த பார்வையுடன் ஆச்சர்யமாக நோயை மறந்து இந்த தோட்ட வேலையை ரசிப்பதிலும் அதை பராமரிப்பதிலும் ஈடுபாடு காட்டுவதென்பது மிக அருமையான விஷயம் .
அடையார் புற்றுநோய் மருத்துவமனையை சார்ந்த ஒரு மருத்துவர் இந்த நான்கு பெண்களையும் ஒரு சமையல்  கண்காட்சியில் சந்தித்தபோது கூட்டாக இந்த முயற்சிக்கு வித்திட்டார்கள்.

2013 இல் ஆரம்பித்தபோது அடையார் புற்று நோய் வளாகத்தை சுத்தபடுத்த அண்ணா  பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வந்து இவர்களுக்கு அந்த இடத்தை சுத்தபடுத்த உதவினார்கலாம் . மேலும்  வெளியிலிருந்து வேறு கால்நடைகளோ அல்லது சுற்று வட்டார காட்டில் இருந்து மான்களோ தோட்டத்தில் புகா வண்ணம்  வேலியும்   அமைத்து   தந்தார்களாம் .
அந்த பகுதி  கற்கள் பாறைகள் என நிறைந்த எதற்கும் பயனில்லாத
 இடம் .மனம் தளராத இக்குழுவினர் பெர்ம கல்ச்சர் எனும் நிலை கொள் விவசாய தோட்ட முறையை அங்கு செயல்படுத்தி பெரிய வெற்றி கண்டுள்ளார்கள் .
பெர்ம கல்ச்சர் முறை----
 ஒருவர்  வேண்டாம் என் ஒதுக்கும் ஒதுக்கும் பொருள் மற்றவருக்கு தேவையான ஒன்றாக இருக்கும் .
நாம் வீசி எரியும் பல கழிவுகளை இவர்கள் சேமிக்க ஆரம்பித்தார்கள் .
raised bed எனும் உயர்த்தி கட்டிய மண் படுகைகள் அமைக்க ஆரம்பித்தார்கள் .இதற்க்கு இவர்கள் எடுத்துக்கொண்ட பொருட்கள் ....குப்பையில் எறியப்பட்ட வாழை இலைகள் ,பூமாலைகள் ,கரும்பு பிழிந்த பின் கிடைக்கும் சக்கை கழிவுகள் 
தேங்காய் நார்மட்டைகள்,நாருடன்  இளநீர் ஓடுகள் ,சமையலறை  கழிவுகள் என கிடைத்தவற்றை எல்லாம்  சேமித்து உள்ளார்கள் சில நல்மனம் கொண்டவர்கள் இவர்களுக்கு கம்போஸ்ட் மற்றும் அவர்கள் வீட்டில் இருந்த காய்ந்த இலைகள் . இலவசமாக கொடுத்தார்களாம் .ஒவ்வொரு பொருளாக சேர்த்து raised bed ,படுக்கையாக அமைத்து அத்துடன் பஞ்சகாவ்யா சேர்த்து இடத்தை தயார்செய்துள்ளார்கள் மேலும் நைட்ரஜன்  நிலைப்படுத்த  அந்த இடத்தில நவதானியங்களை விதைத்துள்ளார்கள் .நவதாநியங்களின் வேர்கணுக்களில் நைட்ரஜன் நிலைபடுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளன .இந்த முறையில் விளையும் செடிகளில் அதிக அளவு புரத சத்து உள்ளதாம் .சில மாதங்களுக்கு பிறகு தயார்படுத்தப்பட்ட அவ்விடத்தில் தக்காளி கத்தரி வாழை பூசணி உருளை,வாழை ,கீரை வகைகள்  கரும்பு என்று எண்ணிலடங்கா தொட்ட செடிகளை கோடை ,குளிர் கால பயிர்களை தேர்வு செய்து  வளர்த்து அறுவடையும் செய்து சாதித்துள்ளார்கள் இவர்கள் .இந்த தோட்ட வளர்ப்பை மருத்துவமனை வளாகத்துடன்  நிறுத்தி விடாமல் ,,ஊரூர் குப்பம் பெசன்ட் நகர் பகுதி ரெயில்வே ஸ்டேஷன் ,பாத சாரிகள் செல்லும் சாலையோரம் மற்றும் செடிகள் வளர்க்க உகந்த இடங்களில் இவர்கள் தோட்டம் அமைத்துள்ளார்கள் ..
இவர்களுக்கு ஸ்கோப் மற்று சில தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்கள் வந்து உதவி செய்கிறார்களாம் .மேலும் அப்பகுதி கிண்டர் கார்டன் பள்ளி பிள்ளைகளும் வந்து இங்கே உற்சாகத்துடன் பங்கு பெற்று செல்கிறார்களாம் .
.குழந்தைகளுக்கு சிறு வயது முதல் தோட்ட கலையில் ,ஆர்வம் ஏற்படுத்துவது சிறந்த பழக்கம் .அவங்க சாப்பிடும் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு  பயிற்றுவித்தல் மிக நன்மை பயக்கும் .
மேலும் இவர்கள் கம்போஸ்ட் எனும் கலப்பு உரத்தையும் இந்த மருத்துவமனை வளாகத்தில் தயாரிக்கிறார்கள் .
இவர்கள் மீள்பயன்பாடு எனும் விஷயத்தையும் தோட்டத்தில் செயல்படுத்தியுள்ளார்கள் .
பழைய பீங்கான் தட்டு பாத்திரம் கோப்பை வாஷ் பேஸின் சின்க் பாத் டப் ,கார் டயர் என தூக்கி வீசாமல் அதில் மூலிகை செடிகள் வளர்த்துள்ளார்கள்  ..
(இங்கு மட்டும் நான் அவர்களுடன் வேறுபடுகிறேன் ..ஏனென்றால் பழைய டயர் உணவுப்பொருள் தாவரங்களை வளர்க்க உகந்தவையல்ல இது எனது கருத்து மட்டுமல்ல , பழைய டயர்களில் இருந்து toxins வெளியேறும்
அது உணவு பொருட்களையும் அதை உட்கொள்பவரையும் பாதிக்கும் ).

--------------------------------------------------------------------------------------------------------------------------இது எனது மகளின் வலைப்பூ 
ஒரு வருடம் கழித்து மீண்டும் அப்டேட் செய்திருக்கா
நேரமிருப்பின் அவளை ஊக்குவியுங்கள்

--------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வாழ்த்து அட்டை :) இதன் செய்முறை மிக சுலபம் விரைவில் 
பதிவில் தருகிறேன் ..
                                                                                   


அடுத்து ஒரு சமையல் குறிப்பு :)
ஜெர்மன் வெஜிடபிள் சூப் :)


                                                                                   
கிறிஸ்மஸ் மார்க்கெட் போனப்போ இந்த  ப்ரெட் வாங்கி வந்தேன் )

                                                                           
இந்த பிரவுன் ப்ரெட் ஜெர்மனில எல்லா farmers மார்க்கெட்லயும்   கிடைக்கும் .
மாவை பிசைந்து 24 மணிநேரம் வைத்து அப்புறம் பேக் செய்வது
இதன் ஸ்பெஷாலிட்டி !!
அத்துடன் கொஞ்சம் வெண்ணெய் தடவி இந்த சூப்புடன்
சாப்பிட்டா !! யம் யம்மி ..
இந்த சூப்பில் காய்கறிகள் அழிய வேகவிடக்கூடாதுஸ்பூனால்
எடுத்து சாப்பிட வசதியாக இருக்கணும் .
சூப் ரெசிப்பி :)
காய்கறிகள் ,வேகவைத்த பார்லி நீருடன் ,கொஞ்சம் quinoa சுமார் இரண்டு தேக்கரண்டி ,organic veg  ஸ்டாக் கியூப்

காரட் ,ப்ரோகோலி ,பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் ,பச்சை பட்டாணி ,செலரி ,வெங்காயம் ,காலிப்ளவர் ,லீக்ஸ் ,
உருளை கிழங்கு அனைத்தையும் சம அளவு எடுத்துக்கணும் .
முதலில் உருளை காரட் போன்ற வேக நேரமெடுக்கும் காய்களை  நீரில் organic veg ஸ்டாக் கியூப் ,quinoa ,முன்னரே வேகவைத்த பார்லி அரிசி அனைத்தையும் சேர்த்து வேக விடனும் கொஞ்சம் வெந்தவுடன் பிற காய்களை சேர்க்கணும் .ஒரு அரை  மணிநேரம் மெதுவான தீயில் வேக விடனும் ..இறுதியில் விருப்பமானால் சோள மாவு கரைத்து சேர்க்கலாம்.
ஒரிஜினல் ஜெர்மன் சூப்பில் quinoa மற்றும் வேகவைத்த பார்லி அரிசி இருக்காது எனக்கு பிடிக்கும் என்பதால் சேர்த்தேன் .மிளகு தூள் தூவி
பரிமாறவும் ..
--------------------------------------------------------------------------------------------------------------------
மிக்க நன்றி உமையாள் உங்க குறிப்பு பீட்ரூட் சூப் மிக அருமை !

                                                                         
                                     
                                                       அன்புடன் Angelin :)
37 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊ.. அந்த மஞ்சள் பூ.. சே..சே.. மஞ்சள் சட்டை நேக்குத்தேன்ன்ன்ன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் :) சின்ன பேபி கூட போட்டி போடும் மியாஆவ் :)அது லயாவுக்குதான்

   Delete
 2. நலமா,தங்கையே?///பகிர்வு அருமை தங்கையே!//வாழ்த்துக்கு நன்றி,கோடி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா .பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி இருந்தது :)

   Delete
 3. ஆஹா.. அஞ்சுவா இது இப்பூடிப் பெரீய பதிவூஊஊஊஊஊஉ.. எனக்கு பிரவுன் பிரெட் புய்க்காது அஞ்சு.. ஆனா ஓட்ஸ் பிரெட் மட்டும் பிடிக்கும்.... ஆஹா சூப்பூஊஊஊஊஊஊஊஊ.. அஞ்சு செய்திருக்கிறா... இம்முறை சகலகலா வல்லி எனும் பட்டம் அஞ்சுக்கு வழங்கப்படுகிறது.. by: Athira.

  ReplyDelete
  Replies
  1. nandri nandri :) இது பசுமை விடியலுக்கு நான் போட்ட பதிவு :) சுருக்கமா கொடுத்தா முக புத்தகம் போக நிறைய பேருக்கு கஷ்டம் அதான் இங்கேயே போட்டுட்டேன்

   Delete
 4. step by step படங்களா போடுங்கோ மகி வீட்டு சட்டைக்கு:).. நான் பார்க்கோனும்:).. அதன் அழகு கொள்ளை போகுதே.. சொல்லி வேலையில்லை, வித்தியாசமான முறையில செய்து கலக்கிட்டீங்க அஞ்சு... வெல் டன்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஸ்டேப் பை ஸ்டெப் டுடோரியல் தரேன் :) நீங்களும் செய்யணும் அதே போல பிங்க் frock :)

   Delete
 5. நல்ல செயல் 4வர்க்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். அதை எங்களுக்கு பதிவிட்டதற்கு நன்றி

  ஜெர்மன்சூப் பார்க்கும்போதே...சூப்பராக இருக்கிறது. one cup plesae...

  ப்ரவுன் பிரட் நல்லா இருக்கிறது. இங்கும் கிடைக்கிறது.

  மகளின் கைவண்ணம் சூப்பர்...முதலில் குட்டியின் தளத்திற்கு செல்கிறேன் வேறு என்ன வேலை..ம்

  அட...நம்ம சூப்பா...ஆஹா...அழகா செய்து இருக்கிறீர்கள். இன்ப அதிர்ச்சி....நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் உங்க சூப் எங்க வீட்டில் அடிக்கடி செய்றேன் ..:)
   மகள் தளம் சென்றீர்களா .நன்றி .முகபுத்தகத்தில் பகிரும் செய்தி இங்கிருந்தா ஒரு வாரம் வரைக்கும் படிக்கலாம் அங்குன்னா உடனே அடுத்த போஸ்ட் வந்து இது கீழே போகும் அதனால்தான் இங்கும் பகிர்ந்தேன் பொறுமையாக படித்ததற்கு நன்றி :)

   Delete
 6. மிகவும் நல்லதொரு பதிவு அஞ்சு. நிலை கொள்க விவசாயம் பற்றிய பதிவு உண்மையில் அவர்களை பாராட்டியாகனும். ஜேர்மன் க்றிஸ்மஸ் மார்க்கட் பேமஸ். ப்ரவுன் ப்ரெட் ,சூப் டேஸ்டியா இருக்கும். உங்க குறிப்பு டிபரன்டா இருக்கிறது . லயாவுக்காக செய்த சட்டை ரெம்ப அழகுஊஊஊ. நானும் செய்முறை எதிர்பார்க்கிறேன். ஷரோனுக்கு என் வாழ்த்துக்கள் என்றும். அட!!!!!! நீங்களும் பீட்ரூட் சூப் செய்தீர்களாஆஆ . நல்ல டேஸ்ட் இல்ல.!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..இந்த permaculture போஸ்ட் முகபுத்தகத்தில் போட்டேன் .இங்கும் அப்படியே எழுதினா வாசிக்க எளிதாக இருக்கும்னு அப்படியே பேஸ்ட் செய்தேன் .சொக்காய் டுடோரியல் விரைவில் வரும் .
   சூப் உங்க ரெசிப்பியும் பகிருங்களேன் எங்களுடன் ....

   then beetroot soup !! :p yumyum

   Delete
 7. பசுமை விடியலுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 8. மஞ்சல் சட்டைக்காட் பார்க்கும் போது செய்யும் ஆசை வந்திருச்சு!ஹீ செய்முறையை விரைவில் பகிருங்கள் செய்து பார்க்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. ATHIRAAV :) note this :))
   கண்டிப்பா விரைவில் போடறேன் சுலபம் செய்வது

   Delete
 9. பான் இங்கு கபூர்மார்க்கட்டில் அதிகம் வரும் மாமிசக்கறி இன்னும் சுவையாக இருக்கும் அதுக்கு.

  ReplyDelete
 10. பீட்ரூட் சூப் நல்லது குளிருக்கு.

  ReplyDelete
 11. Me present..will be back later!! 😀

  ReplyDelete
  Replies
  1. enge present !! kaanom present !! i want it right now :) ulle enna irunthathu mahi :)

   Delete
 12. பசுமை விடியலுக்கு போட்ட பதிவா? வாழ்த்துக்கள்.
  வீட்டுத்தோட்டம் நீங்கள் சொல்வது போல் மன மகிழ்ச்சி, உற்சாகத்தை தரும்.

  மகளுக்கு வாழ்த்துக்கள்.
  சூப் அருமை.

  வாழ்த்து அட்டை மிக அழகு.
  பதிவு சொல்லும் விஷயங்கள் அனைத்தும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆமா கோமதியம்மா நான் பசுமை விடியல் மற்றும் நலம் இரண்டிலும் அவ்வப்போ இப்படி செய்திகள் பகிர்வேன் .
   ரொம்ப பிடிச்ச விஷயம்னா அப்படியே இங்கும் எழுதுவேன் ,,நிறையப்பேர் முகபுத்தகம் வரமாட்டாங்க அதானால்தான் இங்கே எழுதுனா நிறைய பேரை சென்றடையும் .

   Delete
 13. Replies
  1. Thanks Gopu Anna ..hope you are having lot of fun with your grandchildren ! give my regards to manni

   Delete
 14. நிலை கொள் விவசாயம் என்பது மிகவும் வியப்பான செய்தி ...அருமையான சூப் ...பகிற்விற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அனு!

   Delete
 15. என்னவெனச் சொல்ல..:)

  அத்தனையும் கொள்ளை அழகு!
  நிலை கொள்விவசாயம், வீட்டுத்தோட்டம் உண்மையில் மனந்தொட்ட பதிவும் பகிர்வும் அஞ்சு!..

  மஞ்சள் பூ சின்னச் சட்டை அற்புதம்!!!
  அழகு வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.. நானும் செய்முறையை எதிர்பார்க்கின்றேன்!

  பிறவுண் ப்ரெட்+ சூப் சுப்பர்! நானும் இவ்வகையிலும், உமையாளின் வகையாகவும் சூப் செய்வதுண்டு!

  மிக அருமை! வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இளமதி .விரைவில் டுட்டோரியல் போடறேன்

   Delete
 16. வணக்கம்
  எல்லாம் சிறப்பாக உள்ளது பாராட்ட வார்த்தைகள் இல்லை....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ ரூபன்

   Delete
 17. //ஒருவர் வேண்டாம் என் ஒதுக்கும் ஒதுக்கும் பொருள் மற்றவருக்கு தேவையான ஒன்றாக இருக்கும்..//

  இனிய கருத்து..
  நல்ல செய்திகளைப் பதிவு செய்தது கண்டு மகிழ்ச்சி..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா !

   Delete
 18. பர்மா கல்சர் முறை அறிமுகம் அருமை ..
  தகவல் கடலாக இருக்கிறீர்களே ...
  வாழ்த்துக்கள் சகோதரி..

  ReplyDelete
  Replies
  1. அது நான் சில மாதங்கள் முன் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பேப்பரில் படிச்சேன் ..தமிழில் எங்கும் பார்த்த நினைவு வரல்லை
   அவங்க கான்சப்ட் ..புற்றுநோய் வளாகத்தில் கூட இப்படி செய்யலாம் என்பது எனக்கு பிடிச்சது அதான் முழுவதையும் மற்றும் பெர்மகல்ச்சர் பற்றிய சில குறிப்பையும் எழுதிட்டேன் .:))

   Delete
 19. இந்த வார loud speaker அனைத்தும் அருமை. குறிப்பாக அந்த நால்வர் கூட்டணிக்கு பாராட்டுக்கள்.
  அந்த ஜெர்மன் சூப் சூப்பர் ஆக இருக்கும் போல.
  அப்புறம் தங்களின் செல்ல மகளின் கைவண்ணத்தை கண்டு ரசித்தேன். அவர் மேன்மேலும் படைப்புகளை படைப்பதற்கு வாழ்த்துக்கள். அவரை ஊக்குவிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete