அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/28/14

Loud Speaker ..12,.மிஸ்ஸி ..மற்றும் சேத்

Loud Speaker ..12,.மிஸ்ஸி ,சேத் 

மிஸ்ஸி எனும் ..கிங் (பென்குயின் )பெண்குயின் :)


                                                                              

                                                                     
இதுதான் அந்த பென்குயின் ..நாங்க cotswold பறவைகள் பூங்காவில் இவரை பார்த்தோம் .வலப்பக்கம் இருப்பது மிஸ்ஸி அதனருகில் 
இருப்பது சேத் (seth ).
இவை  captive முறையில் பரமரிக்கபட்டு இந்த பூங்காவில் வளர்கிறார்கள் .
இப்படி captive முறையில் வளருபவை அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றன 
என்கிறார்கள் !
                                                                                

மிஸ்சிக்கு இந்த வருடம் 37 வயசு பூர்த்தியாகியுள்ளது .அருகில் 
இருக்கும் அதன் பார்ட்னர் சேத் இதனுடன் 18 வருடகாலம் 
லிவிங் டு கெதர் ஆக இருக்கிறார்களாம் ..நம்ம நாட்டு பெங்குயினாக இருந்தா கணவன் மனைவின்னு சொல்லலாம் :) இங்கே ஒன்லி பார்ட்னர்ஸ் :)..இதில் முக்கியமான விஷயம் மிஸ்சிக்கு ஒரு கண் பார்வை இல்லை .என்னே !! ஒரு அன்பு பாசம் நேசம் காதல் இந்த ஜீவன்களிடமும் !!இருவரும் எப்பவும் ஒன்றாகத்தான் காணப்படுவார்கலாம் !!

நாங்க பார்க்குக்கு போனப்போ மிஸ்ஸியை  பார்த்தோம் ஆனா தனியாக  படமெடுக்க முடியவில்லை .நிறைய கூட்டம் 
.அப்போ அங்கே பிங்க் கலர் sash அணிந்து ஒரு பெண் ,பென்குயின் பராமரிப்பவருடன் வாலண்டியர் உதவி செய்து கொண்டிருந்தார் .
அந்த sash இல் bride to be என்று எழுதபட்டிருந்தது ..

                                                                                     

நம்ம ஊரில் திருமணத்துக்கு முந்தின நாள் நலங்கு ,கஸின்ஸ் கெட்  டு கெதர் மற்றும் பாச்சிலர்ஸ் பார்ட்டி தருவதுபோல இங்குள்ள பெண்கள் hen பார்ட்டின்னு கொடுப்பாங்க .அப்போ ஒரு சாட்டின் துணியை குறுக்கு மாலை போட்டாற்போல அணிந்து  போவாங்க பார்ட்டிக்கு .

இந்த பெண் அந்த சாஷ் அணிந்து பார்ட்டிக்கு போகுமுன் அங்கே வாலெண்டியர் வேலை செய்ய ஒரு காரணம்  சொன்னார் ........ 
//இந்த பென்குயின் காதலர்கள் போல எங்க வாழ்க்கையும் இணைபிரியாம இருக்கணும் அதனால் இன்னிக்கு இங்கே உதவி செய்ய வந்தேன் என்றார் ,//

அது உண்மைதான் மிஸ்ஸி யும் சேத்தும் நின்னுகிட்டிருந்தாங்க இன்னொரு பென்குயின் சேத்தை எதோ வந்து கோபத்துடன் தள்ளியது உடனே மிஸ்ஸி ஜான்சி ராணிபோல பாய்ந்து தனது பார்ட்னரை கொத்திய பென்குயினை கோபத்துடன் கொத்துச்சி :) 
(இந்த  seth ..batman படத்தில் கூட நடிச்சிருக்கே   !!
1992 film Batman Returns with Danny DeVito.)
வாயில்லா  ஜீவன்களிடமும் இத்தனை அன்பா !!
ஏற்கனவே நான் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல !
என்று     இங்கே  தென் ஆப்பிரிக்கா டு croatia  இரு நாரைகளின்  உண்மை காதல் கதை பற்றி எழுதியுள்ளேன் ......
அதுபோல இவற்றை நேரில் கண்டபோது ஆச்சர்யமாக இருந்தது !!....

அது மட்டுமில்லை இங்கே பாருங்க இந்த பென்குயின்கள் சர் டேவிட் அட்டன்பரோவை சுற்றி நிற்பதை ..என்னத்தான் பேசியிருப்பார்களோ !
இது சென்ற வருடம் அவர் இங்கே வருகை தந்தபோது எடுத்த படமாம் .
ஒரு சில பென்குயின்கள் குஞ்சு பொரித்து உள்ளனவாம் இப்போ 
மேலும் படங்களுக்கு அவங்க முகபுத்தகம் சென்று பார்க்கவும் :)


                                                                         
அடுத்து ஒரு commercial break :)

 இந்த படத்தை பாருங்க ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா ??
எனது காலடித்தடங்கள் தான் இங்குள்ள  கடற்கரையில் 
எடுத்து அப்பவே   :) முகபுத்தகத்தில் போட்டேன் 
மாலை வீட்டுக்கு வந்தா அனைவரும் கேட்ட கேள்வி எப்படி அச்சு 
போலவந்தது !! நடந்தா குழிவாக தானே இருக்கும் !!
எனக்கே புரியவில்லை !!!!
                                                                           
இனிய வார இறுதி வாழ்த்துக்கள் :) 
                                                                               


                                                                                

11/22/14

rss + ing !!! எப்படி தடுப்பது

rss +ing இது ஒரு விதமான திருட்டு !

சில நாட்களுக்கு முன்பு தேனம்மை லக்ஷ்மணன் அக்கா அவர்கள் முகபுத்தகத்தில் இந்த  தனது பதிவுகள் 500 க்கும் மேல் rss + ingதளத்தில்  FORWARD ஆகியிருப்பதை சொல்லியிருந்தாங்க .எவ்வளவோ செய்து பார்த்தும் அந்த தளம் நிறைய விஷயங்களை டிசேபிள் செய்து வைத்திருந்ததால் நிறுத்தும் வழிகள் தெரியாமலிருந்தது ..
நேற்று புற்று நோய் வளாக பதிவுபோடுமுன் யாராவது அதே பதிவை தமிழில் எழுதியுள்ளார்களா என கூகிளில் /புற்றுநோய் ,வீட்டுத்தோட்டம் //
என்று டைப் செய்து தேடினேன் அப்போ 

என்று தேடலில் வந்தது லிங்க் உள்ளே போனா எனது பதிவுகள் 113 கிட்ட அங்கிருக்கு !!
உடனே பிரபுக்ருஷ்ணா கிட்ட கேட்டு எப்படி தடுப்பதின்னு முயற்சி செய்து அதை இப்போ ஸ்டாப் செய்தாச்சு ..
பிறகு ஆர்வகோளாரில் யார் யார் ப்ளாக் அங்கிருக்கு என்று தேடியதில் 
கோபு அண்ணா ப்ளாக் 
http://gopalakrishnan3.rssing.com/chan-6394639/all_p1.html

மனோ அக்கா பிளாக் 
http://millionaires10.rssing.com/chan-6394755/latest.php

இமாவின் ப்ளாக் 
http://nonpossessively10.rssing.com/chan-6417375/all_p1.html


தனிமரம் நேசன் பிளாக் 
http://minhow10.rssing.com/chan-6395185/latest.php

மதுரைத்தமிழன் ப்ளாக் 
http://avargal1.rssing.com/chan-6394641/all_p15.html

வெங்கட் நாகராஜ் ப்ளாக் 
http://venkatnagaraj1.rssing.com/chan-6394095/all_p1.html

இளங்கோ அண்ணா ப்ளாக் 
http://enathu1.rssing.com/chan-6394790/all_p2.html

கோமதியம்மா ப்ளாக் 
http://micro-aerophile10.rssing.com/chan-6393104/all_p2.html

ராஜேஸ்வரியக்கா ப்ளாக் 
http://millinormal10.rssing.com/chan-6394748/all_p2.html

ஆசியா ஓமர் ப்ளாக் 
http://mininations10.rssing.com/chan-6395302/latest.php     

இப்படி இன்னும் எத்தனை பிளாக்ஸ்  அங்கிருக்கோ தெரியலை !!

நான் அவர்கள் என் ப்ளாக் போஸ்டை ட்ராக் செய்வதை தடுத்து விட்டேன் ..

இந்த லின்க்சுக்கு ப்ளாக் உரிமையாளர்கள் செல்லவும் 

இடது பக்கம் மேலே /Are you the publisher? Claim or contact us about this channel//

என்று ஒரு பெட்டி தெரியுதே அதில் claim என்பதை கிளிக் செய்யவும் 
இப்போ ஒரு நம்பர் வரும் //

//channel 6395302// இது போல அதை ரைட் கிளிக் செய்து copy பண்ணுங்க 

பிறகு மீண்டும் முந்தைய பக்கம் போங்க (back ) இப்போ claim அருகில் இருக்கும் contact us கிளிக் பண்ணுங்க இப்போ பார்த்தா 
Channel URL:
Channel Title:
Channel Description:
Number of articles sampled so far for this RSS channel:
இந்த இடங்கள் தானாக பேஸ்ட் ஆகியிருக்கும் 
நீங்க உங்க மெயில் அட்ரஸ் மற்றும் அந்த கீழுள்ள பெட்டியில் ஆங்கிலத்தில் 
எழுதணும் / I am requesting this RSS channel to be removed from your site.//

மறக்காம ஸ்பாம் folder செக் பண்ணுங்க இவங்க மெயில்ஸ் அங்குதான் விழுது ..

Request RSS channel to be removed from our site
Your Name:
Your Email Address:
URL on our site where your content appears:http:// (validate URL)
Note: You may remove this channel from our site immediately by claiming it here.
Channel URL:
Channel Title:
Channel Description:
Number of articles sampled so far for this RSS channel:
How are you the owner of this content? (e.g., site owner, account holder at the site hosting this content, original author/artist, etc.)
I confirm that I am the legal owner of ALL the content in RSS feed: 
I confirm that this RSS feed has been added to your site without my permission or approval.
I understand that I may be asked for proof of my ownership of this RSS feed if other claims of ownership for this content are made or are currently pending.
I confirm that I am requesting this RSS channel to be removed from your site.
-------------------------------------------------------------------------------------
அவங்க எனக்கு அனுப்பிய மெயில் 


Nasas Nami oneworldonesite@yahoo.com

Nov 21 (1 day ago)
to me
Removed.
Regards,
Support
From: "no-reply@rssing.com" <no-reply@rssing.com>
To: oneworldonesite@yahoo.com
Sent: Friday, November 21, 2014 1:17 AM
Subject: [RSSING-125709] remove channel request

ip:82.9.37.78
subject: remove channel request
request: Request RSS channel to be removed from our site
name: angelin
email:
chanurl: http://kaagidha1.rssing.com/chan-6394896/all_p5.html
note: i am the owner of this blog .i request you to stop tracking my site in rss feeds.


---------------------------------------------------------------------------------------------


 சகோதரர் மது சொன்னமாதிரி //ஜம்ப் ப்ரேக் பூட்டு ,
செட்டிங்க்ஸ்ஸில் அதர்ஸ் ஸில் ஆலவ் அண்டில் ஜம்ப் பிரக் போட்டாலே முழுமையாக போகாது ...//

செய்தாலும்   பதிவை ட்ராக் செய்ய முடியாதாம் .

11/21/14

Loud Speaker 10.. பெர்மகல்ச்சர் ,அடையார் புற்றுநோய் மருத்துவமனை,ஜெர்மன் வெஜிடபிள் சூப் :)

இன்றைய லவுட் ஸ்பீக்கரில்  புற்றுநோய் மருத்துவ மனை வளாகத்தில் பெர்மகல்ச்சர் ,வீட்டு தோட்டம் ,
சமையல் குறிப்பு மற்றும் etc etc ..

நிலை கொள் விவசாயம் /permaculture என்பது இயற்கை ,சூழியல் ,
உணவு உற்பத்தி முறை ஆகிய மூன்றையும் இணைத்து உருவாக்கிய 
தோட்ட அமைப்பு .
பெர்மகல்ச்சர் என்ற ஒரு முறையை 1911 ல் அறிமுகபடுத்தியவர் Franklin Hiram King.அவரூக்கு பின் இந்த முறையின் தந்தை என்று கூறுமளவு 
அதனை உலகிற்கு காட்டியது Bill Mollison மற்றும்  David Holmgren இருவரும் தான் .இவர்களில் பில் மொலிசன் எண்பதுக்கு மேலிருக்கும் வயது ஆனாலும் இந்தியா ஆப்பிரிக்கா என பல் வேறு இடங்களுக்கு பயணம் செய்து .இந்த நிலை கொள் விவசாயத்தை கற்று கொடுக்கிறார் .
ஒன்ன்றுக்கும் உதவாத இடமாக இருப்பினும் அதையும் மாற்றி அங்கு விவசாயம் செய்வது இயற்கையை சூழியலை உணவு தாவரங்கள் வளர ஏற்புடையதாக்குவது இந்த பெர்மகல்சர் .

அடையார் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்திலும் 
வீட்டு தோட்டம் !
                                                                                    
                                                                             

இந்த முறையை பயன்படுத்தி நம்ம சென்னையிலும் வெற்றி கண்டுள்ளார்கள் இந்த நால்வரணி மகளிர் :)
இது அவர்களின் வலைப்பூ 

முயற்சி திருவினையாக்கும் !! ஆம் இந்த அனிதா ,கவிதா ,ப்ரியா ,அர்ச்சனா  நான்கு பெண்மணிகள் சேர்ந்து கூட்டு முயற்சியாக சென்னை அடையார் பகுதியில் தரிசாக கிடக்கும் இடங்களை சுத்தப்படுத்தி நிலைகொள் விவசாயம் எனும் பெர்மகல்ச்சர் முறையில் 
தோட்டங்களை அமைத்து வருகிறார்கள் .
                                                                               

அடையார் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கருகே தரிசாக இருந்த பரந்த இடத்தை சுத்தபடுத்தி அங்கே இப்போ அழகிய வீட்டு தோட்டம் அமைத்து  வெற்றி கண்டுள்ளார்கள் .

வீட்டுத்தோட்டம் அமைத்தல் பராமரித்தல் மனதுக்கு அமைதி தரும் பொழுது போக்கு அதுவும் நோயாளிகள் இருக்கும் இடத்தில அங்கு அவர்களை காண வரும் பார்வையாளர்களும் இளம் /முதிய நோயாளிகளும் விரிந்த பார்வையுடன் ஆச்சர்யமாக நோயை மறந்து இந்த தோட்ட வேலையை ரசிப்பதிலும் அதை பராமரிப்பதிலும் ஈடுபாடு காட்டுவதென்பது மிக அருமையான விஷயம் .
அடையார் புற்றுநோய் மருத்துவமனையை சார்ந்த ஒரு மருத்துவர் இந்த நான்கு பெண்களையும் ஒரு சமையல்  கண்காட்சியில் சந்தித்தபோது கூட்டாக இந்த முயற்சிக்கு வித்திட்டார்கள்.

2013 இல் ஆரம்பித்தபோது அடையார் புற்று நோய் வளாகத்தை சுத்தபடுத்த அண்ணா  பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வந்து இவர்களுக்கு அந்த இடத்தை சுத்தபடுத்த உதவினார்கலாம் . மேலும்  வெளியிலிருந்து வேறு கால்நடைகளோ அல்லது சுற்று வட்டார காட்டில் இருந்து மான்களோ தோட்டத்தில் புகா வண்ணம்  வேலியும்   அமைத்து   தந்தார்களாம் .
அந்த பகுதி  கற்கள் பாறைகள் என நிறைந்த எதற்கும் பயனில்லாத
 இடம் .மனம் தளராத இக்குழுவினர் பெர்ம கல்ச்சர் எனும் நிலை கொள் விவசாய தோட்ட முறையை அங்கு செயல்படுத்தி பெரிய வெற்றி கண்டுள்ளார்கள் .
பெர்ம கல்ச்சர் முறை----
 ஒருவர்  வேண்டாம் என் ஒதுக்கும் ஒதுக்கும் பொருள் மற்றவருக்கு தேவையான ஒன்றாக இருக்கும் .
நாம் வீசி எரியும் பல கழிவுகளை இவர்கள் சேமிக்க ஆரம்பித்தார்கள் .
raised bed எனும் உயர்த்தி கட்டிய மண் படுகைகள் அமைக்க ஆரம்பித்தார்கள் .இதற்க்கு இவர்கள் எடுத்துக்கொண்ட பொருட்கள் ....குப்பையில் எறியப்பட்ட வாழை இலைகள் ,பூமாலைகள் ,கரும்பு பிழிந்த பின் கிடைக்கும் சக்கை கழிவுகள் 
தேங்காய் நார்மட்டைகள்,நாருடன்  இளநீர் ஓடுகள் ,சமையலறை  கழிவுகள் என கிடைத்தவற்றை எல்லாம்  சேமித்து உள்ளார்கள் சில நல்மனம் கொண்டவர்கள் இவர்களுக்கு கம்போஸ்ட் மற்றும் அவர்கள் வீட்டில் இருந்த காய்ந்த இலைகள் . இலவசமாக கொடுத்தார்களாம் .ஒவ்வொரு பொருளாக சேர்த்து raised bed ,படுக்கையாக அமைத்து அத்துடன் பஞ்சகாவ்யா சேர்த்து இடத்தை தயார்செய்துள்ளார்கள் மேலும் நைட்ரஜன்  நிலைப்படுத்த  அந்த இடத்தில நவதானியங்களை விதைத்துள்ளார்கள் .நவதாநியங்களின் வேர்கணுக்களில் நைட்ரஜன் நிலைபடுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளன .இந்த முறையில் விளையும் செடிகளில் அதிக அளவு புரத சத்து உள்ளதாம் .சில மாதங்களுக்கு பிறகு தயார்படுத்தப்பட்ட அவ்விடத்தில் தக்காளி கத்தரி வாழை பூசணி உருளை,வாழை ,கீரை வகைகள்  கரும்பு என்று எண்ணிலடங்கா தொட்ட செடிகளை கோடை ,குளிர் கால பயிர்களை தேர்வு செய்து  வளர்த்து அறுவடையும் செய்து சாதித்துள்ளார்கள் இவர்கள் .இந்த தோட்ட வளர்ப்பை மருத்துவமனை வளாகத்துடன்  நிறுத்தி விடாமல் ,,ஊரூர் குப்பம் பெசன்ட் நகர் பகுதி ரெயில்வே ஸ்டேஷன் ,பாத சாரிகள் செல்லும் சாலையோரம் மற்றும் செடிகள் வளர்க்க உகந்த இடங்களில் இவர்கள் தோட்டம் அமைத்துள்ளார்கள் ..
இவர்களுக்கு ஸ்கோப் மற்று சில தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்கள் வந்து உதவி செய்கிறார்களாம் .மேலும் அப்பகுதி கிண்டர் கார்டன் பள்ளி பிள்ளைகளும் வந்து இங்கே உற்சாகத்துடன் பங்கு பெற்று செல்கிறார்களாம் .
.குழந்தைகளுக்கு சிறு வயது முதல் தோட்ட கலையில் ,ஆர்வம் ஏற்படுத்துவது சிறந்த பழக்கம் .அவங்க சாப்பிடும் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு  பயிற்றுவித்தல் மிக நன்மை பயக்கும் .
மேலும் இவர்கள் கம்போஸ்ட் எனும் கலப்பு உரத்தையும் இந்த மருத்துவமனை வளாகத்தில் தயாரிக்கிறார்கள் .
இவர்கள் மீள்பயன்பாடு எனும் விஷயத்தையும் தோட்டத்தில் செயல்படுத்தியுள்ளார்கள் .
பழைய பீங்கான் தட்டு பாத்திரம் கோப்பை வாஷ் பேஸின் சின்க் பாத் டப் ,கார் டயர் என தூக்கி வீசாமல் அதில் மூலிகை செடிகள் வளர்த்துள்ளார்கள்  ..
(இங்கு மட்டும் நான் அவர்களுடன் வேறுபடுகிறேன் ..ஏனென்றால் பழைய டயர் உணவுப்பொருள் தாவரங்களை வளர்க்க உகந்தவையல்ல இது எனது கருத்து மட்டுமல்ல , பழைய டயர்களில் இருந்து toxins வெளியேறும்
அது உணவு பொருட்களையும் அதை உட்கொள்பவரையும் பாதிக்கும் ).

--------------------------------------------------------------------------------------------------------------------------இது எனது மகளின் வலைப்பூ 
ஒரு வருடம் கழித்து மீண்டும் அப்டேட் செய்திருக்கா
நேரமிருப்பின் அவளை ஊக்குவியுங்கள்

--------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வாழ்த்து அட்டை :) இதன் செய்முறை மிக சுலபம் விரைவில் 
பதிவில் தருகிறேன் ..
                                                                                   


அடுத்து ஒரு சமையல் குறிப்பு :)
ஜெர்மன் வெஜிடபிள் சூப் :)


                                                                                   
கிறிஸ்மஸ் மார்க்கெட் போனப்போ இந்த  ப்ரெட் வாங்கி வந்தேன் )

                                                                           
இந்த பிரவுன் ப்ரெட் ஜெர்மனில எல்லா farmers மார்க்கெட்லயும்   கிடைக்கும் .
மாவை பிசைந்து 24 மணிநேரம் வைத்து அப்புறம் பேக் செய்வது
இதன் ஸ்பெஷாலிட்டி !!
அத்துடன் கொஞ்சம் வெண்ணெய் தடவி இந்த சூப்புடன்
சாப்பிட்டா !! யம் யம்மி ..
இந்த சூப்பில் காய்கறிகள் அழிய வேகவிடக்கூடாதுஸ்பூனால்
எடுத்து சாப்பிட வசதியாக இருக்கணும் .
சூப் ரெசிப்பி :)
காய்கறிகள் ,வேகவைத்த பார்லி நீருடன் ,கொஞ்சம் quinoa சுமார் இரண்டு தேக்கரண்டி ,organic veg  ஸ்டாக் கியூப்

காரட் ,ப்ரோகோலி ,பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் ,பச்சை பட்டாணி ,செலரி ,வெங்காயம் ,காலிப்ளவர் ,லீக்ஸ் ,
உருளை கிழங்கு அனைத்தையும் சம அளவு எடுத்துக்கணும் .
முதலில் உருளை காரட் போன்ற வேக நேரமெடுக்கும் காய்களை  நீரில் organic veg ஸ்டாக் கியூப் ,quinoa ,முன்னரே வேகவைத்த பார்லி அரிசி அனைத்தையும் சேர்த்து வேக விடனும் கொஞ்சம் வெந்தவுடன் பிற காய்களை சேர்க்கணும் .ஒரு அரை  மணிநேரம் மெதுவான தீயில் வேக விடனும் ..இறுதியில் விருப்பமானால் சோள மாவு கரைத்து சேர்க்கலாம்.
ஒரிஜினல் ஜெர்மன் சூப்பில் quinoa மற்றும் வேகவைத்த பார்லி அரிசி இருக்காது எனக்கு பிடிக்கும் என்பதால் சேர்த்தேன் .மிளகு தூள் தூவி
பரிமாறவும் ..
--------------------------------------------------------------------------------------------------------------------
மிக்க நன்றி உமையாள் உங்க குறிப்பு பீட்ரூட் சூப் மிக அருமை !

                                                                         
                                     
                                                       அன்புடன் Angelin :)
11/12/14

Loud Speaker 9 ,வன தேவதை ..சூர்யமணி பகத்

Loud Speaker ...9...

சில உணவுகள்  சுவையூட்டிகளும் ,செயற்கை நிறமூட்டிய உணவுபொருட்களும் ..
                                                                             
இது எங்கள் ஆலயத்தில் ஒரு சிறுவனிடம் நான் நேரில் பார்த்ததை வைத்து எழுதுகின்றேன் . ஒரு சிறுவன் சுமார் 5 வயது இருக்கும் ..எப்பவும் பெற்றோருக்கு அடங்க மாட்டான் .ஆலயத்துள் நுழைந்தவுடன் எதோ வேறு உலகத்துக்குள் நுழைந்ததுபோல இருக்கும் அவனது செய்கைகள் தன்னை சுற்றி சுற்றி பேயைகண்டார் போல மிரளுவான் (அதுக்கு பயந்தே அவன் பக்கத்துல கூட நான் இருக்க மாட்டேன் )அனைவரும் ஜெப வேளையில் அமைதியாக இருக்கும் நேரம் ஓலமிட்டு அழுவான் . ஆமென் சொல்லும்போது இடி இடிக்கிறமாதிரி சிரிப்பான் !! eucharistic பிரேயர் செய்யும்போது பெல் அடிப்பாங்க அந்த நேரம் குண்டூசி விழும் சத்தம் கூட கேக்காது அந்த நேரத்தில் இவன் மட்டும் கத்துவான் ..எங்கள் அனைவருக்குமே தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருக்கும் .பொறுக்க முடியாமல் ஒரு நாள் ரெவரண்ட் அவனது பெற்றோரிடம் சொன்னார் ..அப்போ அவங்க சொன்னது இச்சிறுவன் நர்சரியிலும் இப்படித்தானாம் ..வீட்டிலும் இப்படித்தானாம் சூப்பர் மார்கெட் போனால் அங்கும் ரணகளம் .இவனுக்கு எதோ பிரச்சினை ..சைல்ட் ஸ்பெஷலிஸ்டிடம் காட்டுங்க என்று ரெவரண்ட் அட்வைஸ் செய்தார் ..அவர்களும் அவ்வாறே அவனை அழைத்து சென்றனர் ..

அங்கே மருத்துவர்கள்  பரிந்துரைத்தது ..இவனுக்கு ..இவனது உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் செய்ய சொன்னாங்க Blue நிறம் No. 1 மற்றும் 2 Brilliant blue ,Also known as: Indigotineசேர்த்த உணவுபொருட்களை தவிர்க்க சொன்னார்கள் ..அச்சிறுவன் அடிக்கடி சாப்பிடும் m&m ஸ்வீட்சில் இது இருக்கும் மற்றும் இவன் தண்ணீர் குடிக்க மாட்டான் கோலா மட்டுமே அருந்துவான் அதற்கும் மற்றும் அனைத்து fizzy பானங்களுக்கும் தடா போட்டாச்சி ..இரண்டு மாதங்களுக்கு பிறகு இவன் மீண்டும் ஆலயத்துக்கு வந்தான் ..என் கண்களையே நம்மைப முடியவில்லை ..அப்படி ஒரு மாற்றம் ..அவனது சேஷ்டைகளுக்கு முக்கிய காரணமே அந்த செயற்கை நிறமூட்டிகள் ,fizzy உற்சாக பானங்கள் .இந்த உற்சாக பானங்களில் உள்ள அதிகப்படியான இனிப்பும் அமிலமும் பற்களின் எனாமலை அரித்து போக செய்கின்றன .
நீண்ட நாள் வைக்கவேண்டும் என்பதற்காக இந்த பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் சேர்கிறார்கள் இது நமது சிறுநீரகங்களில் கற்கள் உருவாக காரணமாகின்றன ..அளவுக்கதிகமாக சோடா போன்ற பானங்கள் அருந்துவதால் ..தற்கொலை எண்ணம் ,மனச்சோர்வு ,வன்முறை எண்ணம் ஆகியவை ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கிறன .
மார்பக புற்று ப்ராஸ்டேட் புற்று மற்றும் இன்னும் சில வகை புற்று நோய்களுக்கும் அதிக சோடா சேர்த்த பானங்கள் அருந்துவதற்கும் தொடர்புண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
ஆகவே இத்தகைய கேடு விளைவிக்கும் பானங்களை தவிர்த்து பழரசம் நீர் மோர் போன்ற உடலுக்கு ஏற்புடைய பானங்களை குடிக்க உறுதி எடுப்போம் 

இந்த காணொளியை கொஞ்சம் பாருங்க ..
முட்டை ஓட்டுக்கே இந்நிலைமை என்றால் ..நம் பற்கள் ???

https://www.youtube.com/watch?v=oeA3IAVULZc

வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் ..


6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படுகிறதாம் .கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும்  சாக்கடை நீர் ,முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர் ,சாயப்பட்டறை ,தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு,இரசாயன கழிவு ,மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு,தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள்  ஆகியன கலக்கின்றன .இப்படி பட்ட கழிவு  கலந்த நீர்நிலைகள்  மனிதர்கள் குடிக்கவோ இல்லை விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை .கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில்  விளையும் பயிர் மற்றும் காய்கறிகள்    பல பக்க விளைவுகள் உண்டாகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
மேலும்  வாசிக்க  இங்கே  செல்லவும் 


வன தேவதை ..சூர்யமணி பகத் !!
ம்ம்ம் ஐஸ்வர்யா ராய் கேன்சுக்கு போனதையெல்லாம் படம் படமா போடும் பத்திரிகைகள் இவர் போன்றவர்களையும் சின்ன பெட்டி செய்தியிலாவது சுட்டி காட்டலாமே !!
                                                               


இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மகளிரும் காலநிலை மாற்றமும் பற்றிய உச்சி மாநாட்டில் பங்கு பெற்றவர்..இவர் பெயர் சூர்யமணி பகத்.காடுகளை பாதுகாப்பது இவரது பணி மற்றும் குறிக்கோள் .

வயது 34,அமைதியான தெய்வீக களை பொருந்திய முகம் ,பலவர்ண சேலை ,பிளாஸ்டிக் வளையல், நீண்ட கருங்கூந்தல் இவைதான் இவரது தோற்றம் 
மேலும் வாசிக்க  செல்லவும் ..

http://www.nalam.net/forest-activist-suryamani-bhagat/

நாடாப்புழு பாதிப்புக்கள் ..


"நம் நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாடாப்புழு நீர்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என இந்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது .
எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் துரித உணவுகளின் தீமைகள் இவற்றை இங்கே சென்று வாசிக்கவும் 
https://www.facebook.com/nalam.net/posts/282101801985314

...மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம் ..

                                                                                       


11/7/14

Loud speaker 8 .. மனிதர்களும் செல்லப்பிராணிகளும் ..Pet Therapy ,Thula ,Bob

மனிதர்களும் செல்லப்பிராணிகளும் ..Pet Therapy 
இன்றைய ஒலிபெருக்கியின் கதாநாயகி, நாயகர்கள் ..வளர்ப்பு பிராணிகள் துலா ,பாப் (Thula,Bob )
                                                                                 


சமீபத்தில் இங்கு தொலைகாட்சியில் பார்த்தது மனதை தொட்ட செய்தி 
ஆட்டிசம் எனும் குறைபாடு இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதித்து பிறருடன் கலவாமல் தங்களுக்கு என ஒரு ஒரு தனி உலகை உருவாக்கி அமைத்து அதில் 
மூழ்கி இருப்பார்கள் .அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாத புதிர் !ஆனால் முறையான பயிற்சிகள் மற்றும் சில விஷயங்கள் அவர்களுக்கென அமைத்து கொடுப்பதன் மூலம் அவர்களையும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வரலாம் .
                                                                                     

பெரும்பாலான இவ்வாறான பாதிக்கப்பட்டகுழந்தைகளின் பெற்றோர்கள் கூறுவது மனிதர்களின் அருகாமையை  விட வளர்ப்பு பிராணிகளிடம் இந்த குறைபாடுள்ள பிள்ளைகள் அதிக ஈடுபாட்டுடன்  பழகுகிறார்களாம் !!இங்கே நிறைய இடங்களில் கழுதைகள் சரணாலயம் உண்டு .
                                                                                   

"assisted therapy' என்று இங்கு வாராவாரம் இக்குறைபாடுள்ள பிள்ளைகள் 
அழைத்து வரப்பட்டு இங்குள்ள கழுதைகளுடன் அவற்றை தடவி மற்றும் சவாரி செய்ய அனுமதிக்கிறார்கள் ..இதனால் சிறந்த பலனுண்டு என்றும் கண்டுபிடித்துள்ளார்கள் ..மேலும் இங்குள்ள முதியோர் இல்லங்களுக்கு 
இந்த விலங்குகளை மாதமொருமுறை அழைத்து சென்று அந்த முதியோர் இவற்றுடன் தடவி பழக அனுமதிக்கிறார்கள் ..மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை கூட சந்திக்க இந்த நாலுகால் அன்பர்களுக்கு ஸ்பெஷல் அனுமதி உண்டு .
                                                                                        
.இவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி கொடுத்து உள்ளார்கள் இதற்கென ..

                                                                                


நான் முகபுதகத்தில் பார்த்த ஒரு படம் ..இந்த சின்ன பிள்ளைக்கு ஐந்து வயது ,ஆட்டிசம் குறைபாடு உள்ள பிள்ளை பெயர் ஐரிஸ் கிரேஸ் .
இச்சிறுமிக்கு பேச வராது இவளின் பெற்றோர் குதிரை மற்றும் தெரப்பி நாய் இவற்றை இச்சிறுமியுடம் பழக விட்டு பார்த்தனர் அனால் அவற்றால் ஒரு மாற்றமும் கிடைக்கவில்லை பிறகு main coon வகை 
பூனை ஒன்றை இவளுக்கென எடுத்து வந்தனர் அந்த பூனை இவள் வாழ்வில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ..
அதுவரை தனது உடை கூட இவளுக்கு ஒழுங்காக நிலையாக இருக்காதாம் இப்போது அப்பூனை இவளுடன் எப்போவும் அருகில் இருக்கு .குறிபிடத்தக்க விஷயம் இப்பெண் ஒரு ஓவியர் அதற்கென ஒரு வெப்சைட்டும் உண்டு இங்கே பாருங்கள் ..
இச்சிறுபெண் வெளியே சென்றாலும் வீட்டில் இருந்தாலும் இந்த பூனைதான் துணை ..துலா வந்ததில் இருந்து இப்பெண்ணிடம்  அதிக புரிந்து கொள்ளல் மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ள  என பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம் ..ஐரிஸ் ஏதேனும் குழப்ப மன நிலையில் இருந்தாலும் அல்லது பயந்த மன நிலையில் இருந்தாலும் இப்பூனை அவளை சாந்தப்படுத்துகிறது ..மேலும் நிறைய படங்கள் இவர் முக புத்தகத்தில் 
இருக்கு ..இங்கே https://www.facebook.com/pages/Iris-Grace-Painting/609967369017975?ref=br_t
                                                                                        
                                                                              
இப்படிப்பட்ட தெரப்பி போல நமக்கும் இவை உதவும் பல நேரங்களில் ஸ்ட்ரெஸ் ,மற்றும் சுகவீனமடையும்போது ஒரு சிறு தலை வலி என்றாலும் இந்த நாலு காலர்கள் அருகாமையில் இருந்தால் சிறந்த நிவாரணம் !!அனுபவத்தால் கண்டுணர்ந்தது ..எங்க ஜெஸ்ஸி நான் 
கொஞ்சம் டயர்டாக படுத்தாலும் உடனே வந்து நாவால் நக்கி அன்பை பொழியும் !!அன்றொரு நாள் குறட்டை :) போட்ட கணவர் நெஞ்சில் ஏறி அமர்ந்து மிக அன்பாக தலையால் முட்டி என்னவோ ஏதோவென்று கவனிக்குது எங்க ஜெஸ்ஸி :) 
                                                                                 Bob 
 போதை பழக்கத்துக்கு அடிமையான ஒரு மனிதனின் வாழ்வில் ஒரு பூனை எவ்வளவு மாற்றங்கள்செய்துள்ளது !!இதன் பெயர் Bob .
ஜேம்ஸ் இதுவரை மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் ..
bob இவர் வாழ்வில் நுழைந்ததில் இருந்து இவரது வாழ்க்கை முறை தலை கீழாக மாறிவிட்டதாம் .
இவர் எழுதிய முதல் புத்தகம் 700,000 பிரதிகளுக்கு மேலே 
விற்கப்பட்டுள்ளது !இவங்க முகபுத்தகம் ட்விட்டர் என மிக பிரபலம் !

https://www.facebook.com/StreetCatBob  ...

                                                                                

இந்த காணொளி பாருங்களேன் :)
https://www.youtube.com/watch?v=MePaWG7g5FA
bob என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்
 என்கிறார் ஜேம்ஸ் !!
    http://www.bbc.co.uk/news/entertainment-arts-23117382.
சமீபத்தில் எங்க டவுனுக்கு இருவரும் மூன்றாம் புத்தகம் வெளியிட வந்திருக்காங்க ..எனக்கு தெரியாமல் போய் விட்டது 
தெரிஞ்சிருந்தா போய் ஒரு போட்டோவோடு வந்திருப்பேன் :)

இன்னிக்கு bow மியாவ்  சத்தம் அதிகம் கேக்குதா :)
வலைச்சரத்திலும்  நான் இந்த செல்லங்களை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன் :) இங்கே சென்று பார்க்கவும் :) 

மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் :)

அன்புடன் ஏஞ்சல்