அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/31/14

Loud speaker ...7 ஓவியக் கலைஞர்கள் /street art.. Banksy, David Zinn


இன்றைய ஒலிபெருக்கியில் ஓவியர்கள் பான்க்ஸி  ,
டேவிட் ஜின் மற்றும் எளிய வீட்டு  குறிப்பு :) ..

முதலாமவர் ...DAVID  ZINN  ..

                                                                                 

இவர்  ஒரு பாதையோர  கார்டூனிஸ்ட் மிச்சிகன் பகுதியில் இவர் சாக் பீஸ் சித்திரங்கள் மிக பிரபலம் ..இவரது சித்திரங்கள் நிரந்தரமில்லாதவை ..மழை பெய்தா நீரில் கரைந்து  மறையும் ஆனாலும் இவரது நடைபாதையோர சித்திரங்கள் பலர் மனதை கொள்ளை கொண்டவை !
                                                                               
சிறிய  கற்பனை ஏலியன் மற்றும் slug எனும் ஓடில்லா நத்தை இவரது கதாபாத்திரங்கள் ...ரோட்டோரம் ,வெடிப்புக்கள் உடைந்த செங்கல் சுவர் ,நடை பாதை ஓரம், பூங்கா நாற்காலி என இவரது கதாபாத்திரங்கள் பலஇடங்களில் அழகூட்டுகின்றன ..படம் வரைய இவர் பயன்படுத்துவது வண்ண  சாக் பீஸ் மற்றும் கரித்துண்டங்கள் !! இவரது முகபுத்தக David Zinn பக்கம் சென்றால் நிறைய படங்கள் பார்க்கலாம் . 

                               ஓநாயை காப்பாற்றும் மூன்று எலிகள் 

                                                                             

உடைந்த ஸ்லாப் வழியே பார்க்கும் koi  மீன் :)


                                                            


                      விளக்கு ஒளியில் பாடம் படிக்கும் எலியார் :)
                                                                                

பூச்சி மற்றும் கரடி இரண்டும் இணைந்த bug bear ....pig  மற்றும் ஆக்டோபஸ் இரண்டும் இணைந்த பக்டோபஸ் என்று இவரது கற்பனையில் உதித்த வண்ண  அழகிய சித்திரங்கள் உங்கள் உள்ளம் கவரும் இங்கே சென்று பாருங்க 

 1. பான்க்ஸி   / Banksy  ..

  தனது graffiti எனப்படும் சுவர் சித்திரங்களால் 90 கள்  முதல் இங்கிலாந்தில் ஆரம்பித்து தற்சமயம் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பிரபலமானவர் ..இந்த பான்ஸ்கி /BANKSY .நம் நாட்டில் வீட்டின் வெளிப்புற சுவற்றில் தேர்தல் நேரத்தில் நாம் கட்சி சின்னங்களை பார்த்திருப்போம் ,சிறுநீர் கழிக்காதே ,எச்சில் துப்பாதே அல்லது ஏதேனும் விளம்பரம் ,அல்லது சுவரொட்டிகள் ஆக்கிரமிப்பை பார்த்திருப்போம் :)
  இது அதுபோலதான் ஆனால் இவர் நடு இரவில் முகமூடி அணிந்து யாருக்கும் தெரியாமல் யாரும் எதிர்பாராத இடத்தில ஏற்கனவே தயாரித்து எடுத்து வந்த ஸ்டென்சில் உதவியுடன் ஸ்ப்ரே பெயின்ட் மூலம் ஓவியத்தை !!வரைந்து விட்டு போய் விடுவார் ..இவர் பிரிஸ்டல் எனும் பகுதியை சேர்ந்தவராம் பள்ளியில் படிக்கும்போது தனது வீடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் இப்படி வரைவதில் ஆரம்பித்து இவர் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது .இவர் ஒரு தம்பதியினரின் காரவன் வெளிப் பக்கத்தில் வரைந்த ஓவியம்!
                                                                                                                                            அந்த காரவன் 500,000 பவுண்டுக்கு விலை பேசப்பட்டதாம் .இவரது ஓவியங்கள் சித்திரங்கள் பெரும்பாலும் சர்ச்சைகுரியவை ..ஏழ்மை ,முதலாளித்துவம் ,கம்யூனிசம் ,காமெடி ,போர் ஆகிய கருத்துக்களை கருப்பொருளாக கொண்டவை ..பொது இடங்களில் படங்கள் வரைவது இந்நாட்டை பொறுத்தவரை குற்றம் .இவர் பொது இடங்கள்  மற்றும் உபயோகத்தில் இல்லாத பழைய வீடுகள் ,ஏலத்திற்கு வரும் வீட்டு சுவர்கள் ..சுரங்க பாதை உடைந்த  தொலைபேசி பூத் ,பொது கழிப்பிடம் மற்றும் அசுத்தமான கவனிப்பாரற்ற இடங்களில் யாருக்கும் தெரியாமல் வரைந்து விடுவார் பல இடங்களில் உடனே அடுத்த நாளே அது அழிக்கப்படும் .ஆனால் பிரிஸ்டல் என்ற ஒரு இடத்தில இவர் வரைந்த 
 2. ஒரு சித்திரம் 
 3. (ஒரு சாளரம் அதன் வழியே மனைவி :) சந்தேகக்கண் கொண்டு  தேடும் கணவன் ..ஜன்னல் கீழே தொங்கி கொண்டு ஒரு ஆண் )!!அங்கு இருக்க வேண்டுமா   அழிக்கப்படவேண்டுமா  என்று பொது மக்களிடம் கேட்டபோது 97 சதவீதம் பேர் இருக்கட்டும் அப்புறப்படுத்த வேண்டாம் என்றனராம் :)இதில் விந்தை என்னவென்றால் இதுவரை இவரை யாரும் நேரில் பார்த்ததில்லை .ஓரிருவர் தாங்கள் கண்டதாக சில படங்களை வெளியிட்டனர் ஆனால் அது அவரில்லை ..இதுநாள் வரை தனது முகத்தை மறைத்து அதனால் பெரும் புகழ் பெற்றுள்ளார் ..லண்டன் பகுதியில் இவர் வரைந்த சுவர் சித்திரங்கள்பல உள்ளன  வில்லங்கமான கருப்பொருள்  மற்றும் முகம் சுழிக்கும் கருப்பொருள் என்றால் உடனே அவை  நகராட்சி மன்றத்தால் அழிக்கப்படும் .இவரது ஓவியங்கள் ஆவென்று வாய் பிளக்க வைப்பவை ,சில கண் கூச வைப்பவை சில மனதை பிளப்பவை .....,இவர் 2013 நியூயார்க் நகரில்  கான்வாஸ் ஓவியங்களை ஒரு அரங்கில் வைத்தும் விற்பனை செய்துள்ளார் ..அங்கும் தனது முகத்தை காட்டவில்லை .2010 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை தேர்ந்தெடுத்த சிறந்த 100 மனிதர்களில் இவரும் ஒருவர் ..அதிலும் காகித பை முகத்தை மறைத்த ஒரு உருவமே இவரை படமாக வெளிக்காட்டியது :)
 4.                                                                            
 5. ஸ்மைலி மோனாலிசா 

 6. மொபைல் காதலர்கள் :)


 7. ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட் தம்பதியினர் இவரது கான்வாஸ் சித்திரங்களை 400,000 அமெரிக்க டாலர்களுக்கு விலை கொடுத்து வாங்கினார்களாம் 

  இவர் இஸ்ரேல் பாலஸ்தீனம் நடுவிலுள்ள தடுப்பு சுவற்றில் வரைந்த மனதை உருக்கும் சித்திரங்கள்


 8. இது கிரீன் பீஸ் அமைப்பிற்கு இவர் வரைந்து சில காரணங்களால் தனி நபர் ஒருவருக்கு அளிக்கப்பட்டதாம் .பிறகு அவர் அதனை விற்று உள்ளார் .ஜங்கில் புக் கதாபாத்திரங்கள்  கண்கள் கட்டப்பட்டு ..அழிவை நோக்கும் காடுகள் என்ற கருப்பொருள் வைத்து வரையப்பட்ட படம் .


டேவிட் மற்றும் பான்க்ஸி  இருவரையும் தூக்கி சாப்பிடுமளவு திறமை நம் நாட்டினரிடம் இருக்கு ..சகோதரர் தில்லை அவர்கள் ஒரு லிங்க் 
இங்கே பின்னூட்டத்தில் .சொன்னார் .என்ன ஒரு கலைத்திறமை 
அனைவரும் கண்டிப்பாக பார்க்கவும் இந்த சுட்டியில் 
 1. *********************************************************
 2. காகிதப்பூக்கள் ..டிப்ஸ் கார்னர் :)
கீறல் விழுந்த தேய்ந்த மர சாமான்கள் ஸ்டூல்கள் இவற்றை மீண்டும் பழைய பொலிவுக்கு கொண்டுவர ..எனது டிப்ஸ் ..ஒரு வலைப்பூவில் படித்து 
செய்து பார்த்தேன் ..எனக்கு வெற்றி :)
இதோ செய்முறை விளக்கம் ..
ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பையில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் கலந்து துணியால் அதை தொட்டு கீறல் விழுந்த இடத்தில நன்கு தேய்க்க ..பளீச்சிடும் :)


அன்புடன் ஏஞ்சல் :))))))))))


30 comments:

 1. டேவிட் ஜின் மற்றும் பான்ஸ்கி ஆகியோரின் கைவண்ணங்கள் விய்ப்பில் ஆழ்த்துகின்றன.. பதிவு செய்தமைக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் சாக் ஓவியங்களை ரசித்ததற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 2. அருமையான தகவல் தொகுப்பு
  லிங்குகளை தொடர்கிறேன்

  மலர்த்தரு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் சாக் ஓவியங்களை ரசித்ததற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 3. ஓ..! வா..வ்... ! வாய்பிளந்து கண் அகலத் திறந்து
  பார்க்கவைக்கும் ’பளிச்’ ஓவியங்கள்!

  அத்தனையும் கொத்தாக மனதைக் கொள்ளை கொள்கின்றன!..
  மிக மிக அருமை!
  நீங்கள் ரசனையின் உச்ச்..ச..த்தில் இருக்கின்றீர்கள்!...:))

  தத்ரூபமான ஓவியங்கள்! கவிக்காவியமும் ஓவியமும் எனக்கும் மனதிற்கு மிகவும் பிடித்தமானதே!..

  டிப்ஸ்..! அடே..! சூப்பரா இருக்கே!..:)
  நானும் தேய்ய்ய்...த்துப் பார்த்திடுகிறேன்..:)

  நல் பகிர்(தி)வு!. நன்றியுடன் வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி இன்னொரு சுட்டி இந்திய கலைஞர்களின் சாக்பீஸ் முப்பரிமான ஓவிய லிங்க் இணைத்துள்ளேன் ..ரொம்ப அருமை அதையும் பாருங்க ,,இந்த இரு ஓவியர்களை பற்று எனக்கு சொன்னதே என் பொண்ணுதான் :)
   மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 4. கண்கள் நகர மறுக்கின்றன
  ஒவியத்தில் லயத்த அவைகள்...!!!

  ஓவிய ஊர்வலத்தைக் காண
  ஓடிவிட்டேன் உடனேயே...!!!

  அப்பப்பா...அருமையான சித்திரங்கள்
  அஞ்சலின் படைத்த சுவை விருந்து...!!!

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் இன்னொரு சுட்டி இந்திய கலைஞர்களின் சாக்பீஸ் முப்பரிமான ஓவிய லிங்க் இணைத்துள்ளேன் ..ரொம்ப அருமை அதையும் பாருங்க

   இந்த இரு ஓவியர்களை பற்று எனக்கு சொன்னதே என் பொண்ணுதான் :)
   மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் உமையாள்

   Delete
 5. சூப்ப்ப்ப்பரா இருக்கு இரு கலைஞர்களும் வரைந்த ஓவியங்கள். DAVID ZINN .ன் ஓவியம் அற்புதம். "ஓநாயை காப்பாற்றும் எலிகள், உடைந்த ஸ்லாப் வழியே பார்க்கும் koi மீன் "// வாவ் சொல்ல வார்த்தையில்லை.
  வினிகர் டிப்ஸ் அருமை. நான் ஆரம்பத்தில் ஒவ்வொன்றுக்கும் அந்தந்த க்ளீனர்தான் பாவித்தேன். பக்கத்துவீட்டு காரின் Karin சொல்லியபின் எல்லாமே வினிகர் க்ளீனர்தான். ப்ரிட்ஜ் ,மைக்ரோவேவ், ஏடேல்ஸ்டால் (கொஞ்சம் தண்ணீர் சேர்த்து) edelstahl துடைத்தால் பளிச் ப்ளிச்தான். Vinegar is all-purpose cleaner.
  நல்லதொரு பதிவு அஞ்சு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க .ப்ரியா .ஆமாம் நான் இப்பெல்லாம் கெமிகல்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கிறேன் ..சோடா உப்பு மற்றும் வினிகர் கொஞ்சம் லைம் சாறு இவ்வளவும் போதுமே நமக்கு ..
   இன்னொரு சுட்டி இந்திய கலைஞர்களின் சாக்பீஸ் முப்பரிமான ஓவிய லிங்க் இணைத்துள்ளேன் ..ரொம்ப அருமை அதையும் பாருங்க

   Delete
 6. Nice post Akka! Enjoyed the paintings! Tips is also good!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் சாக் ஓவியங்களை ரசித்ததற்கும் மிக்க நன்றி Mahi :)

   Delete
 7. பாலஸ்தீன சித்திரம் மனதை நெருடுகின்றது.எலியாலும் உயிர்காப்பாற்ற முடியும் சித்திரம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Nesan

   Delete
 8. நல்ல தகவல்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 9. டேவிட், பான்ஸ்கி பற்றிய தகவல்கள் அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 10. ஆவ் எப்போதிந்த்்u இந்த ஸ்பீக்கர் ஆரம்பமாச்சு? மீ போனதடவை இருந்துதான் பார்க்கிறேன்ன்ன்ன்....

  நாங்க பிறக்கும்போதே மம்மி எனக் கூப்பிட்ட ஆட்களாக்கும்:) எங்களுக்குப் போய் கதை சொல்லீனம்.. 3 எலி.. ஒரு ஓநாயைக் காப்பாத்தினதாம்ம்:).... 3 பூஸ் என்றால்கூட நம்புவேன்:)..

  ReplyDelete
  Replies
  1. எங்கே இன்னொருதரம் சத்தமா மம்மீன்னு கூப்பிடுங்க :) பங்களூர் உங்களை வரவேற்கும் :)
   கர்ர்ர் அது கற்பனை சாக்பீஸ் ஓவியம்

   Delete
 11. ஆஹா! அருமையான படங்கள்! டேவிட், பான்ஸ்கி கொஞ்சம் தெரியும்தான் என்றாலும் தங்களின் தகவல்கள் அருமை. நன்றி! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  நம் இந்தியாவிலும் இது போன்று பலர் இருக்கின்றனர்தான்.....நடைபாதையில் வரைந்து சம்பாதிப்பவர்கள்...அற்புதமாக....மணல் ஓவியங்கள், மணல் சிற்பங்கள்,ஐஸ் ஓவியங்கள், ஐஸ் சிற்பங்கள் என்று கலக்குபவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இவர்கல் எவ்வளவு தூரம் உலகம் அறியும் என்று தெரிய வில்லை....

  இதோ சில லிங்குகள்...நேரம் இருந்தால் பாருங்கள்...சகோதரி....

  http://www.youthkiawaaz.com/2012/06/the-emerging-form-of-street-art-in-india/

  http://amvaishnav.wordpress.com/2012/09/25/indias-awesome-street-art/

  http://thelincolnite.co.uk/2011/04/street-artist-brings-indian-art-to-lincoln/ (நம் ஊர் கோலங்கள் வெளிநாட்டில்)

  http://undiscoveredindiantreasures.blogspot.in/2012/03/sand-sculpture-uniquness-of-orissas.html

  http://tracyleestum.com/incredible-3d-street-art-india/

  http://in.reuters.com/article/2012/03/22/india-maoists-abduction-idINDEE82L0C320120322

  http://breathedreamgo.com/2012/12/visiting-odisha-here-comes-the-sun/ (இந்த லிங்கில் ஒடிசாவின் ஃபேமஸ் சாண்ட் ஆர்ட் கீழே இருக்கும்.....)

  http://www.ndtv.com/article/india/indian-sand-artist-wins-gold-in-spain-244662 (ஒடிசா மணல் ஆர்டில் பிரபலம்.....)

  பகிர்வுக்கு மிக்க ந்னறி சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. சுதர்ஷன் பட்நாயக் முன்பு கூட ஒரு மணல் சிற்பம் அமைத்து பரிசு வாங்கினர் என்று நினைவிருக்கு
   கோனார்க்கில் நடந்த மணல்சிற்ப விழா வாவ் அருமை !!
   சுதர்ஷன் அவர்களின் சிற்பம்அனைத்தும் மிக அருமை !!
   நீங்க கொடுத்த அத்தனை சுட்டிகளிலும் என்னை பிரமிக்க வைத்தது புவனேஷ்வரில் நடந்த 3D சாக் ஓவியங்கள் !!
   எவ்வளவு திறமைகள் நம் நாட்டினரிடம் !!! இவர்களின் திறமைக்கு முன்னால் பான்ஸ்கியும் டேவிடும் எங்கோ ஒரு மூலைதான் !
   உண்மைதான் சகோ நான் இவர்களில் சுதர்ஷன் பட்நாயக் பற்றி மட்டுமே அறிந்திருக்கிறேன் ..நம் நாட்டில் பாதையோர ஓவியர்கள் பிரிமிக்க வைக்க வைப்பார்கள் ஆனா முப்பரிமாணத்தில் சொல்ல வார்த்தையில்லை இவர்களின் திறமை !!
   வருகைக்கும் எனக்கு இவர்களின் தளதைகுரிப்பா ட்ரேசி லீ தளத்தை அறிமுகப்படுதியதர்க்கும் மிக்க நன்றி சகோ

   Delete
  2. அந்த ட்ரேசி லீ ஓவியங்களின் சுட்டியையும் இணைச்சி விட்டேன் மிக்க நன்றி சகோ

   Delete
  3. மிக்க நன்றி சகோதரி!

   Delete
 12. இணைப்பிலும் போய் பார்த்தாச்சு. எல்லாம் அழகழ‌கான ஓவியங்கள். டிப்ஸும் அருமை ஏஞ்சலின்.

  ReplyDelete
 13. தெரியாத விஷயங்கள் சகோ. தங்களின் இந்த தொகுப்பு அருமை.

  அந்த டிப்ஸ் செய்து பார்க்க வேண்டும்.
  நன்றி.

  ReplyDelete
 14. வாவ்!!!! அஞ்சு உண்மையில் ட்ரெசி லீ ஓவியங்கள் பார்க்கபார்க்க பிரமிப்பா இருக்கு. எப்படி அழகா வரைந்திருக்கு ஒவ்வொரு ஓவியமும்.2வது படமே பிரமிக்கவைக்கிறது. காந்தி ஓவியம் சொல்லி வேலையில்லை. புத்தகத்தின் மீது பெண்கள்,படியில் நடக்கும் பெண் இப்படிஎல்லாமே அற்புதமா இருக்கு. சகோ தந்த மற்றைய லிங்க் ம் பார்க்கிறேன். மணல் சிற்பம் நானும் பார்த்திருக்கேன். அற்புதமான படைப்பு. நன்றி பகிர்விற்கு அஞ்சு.

  ReplyDelete
 15. WOW SUPER. ..கண்ணை பறிக்கும் படங்கள்.... ..பகிர்வுக்கு நன்றி..அந்த டிப்ஸ்ஐ கண்டிப்பாக முயற்சி செய்றேன் (கீறல் விழுந்த ராக் இருக்கு..)...

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு,தங்கையே!//டிப்'ஸ் ன்னா,காசு குடுக்கணும்,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 17. அழகான அருமையான பகிர்வு ஏஞ்சலின். எத்தனை திறமை வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் ஓவியத்தில்!

  டேவிட் மற்றும் பான்க்ஸி இருவரையும்போல் நம் நாட்டு கலைஞரும் அசத்துகிறார் தன் ஓவியத்தில்.
  அனைத்து பகிர்வும் மிக அருமை. அனைத்தையும் காண தந்த உங்களுக்கு பல பல நன்றிகள்.

  டிபஸ் மிக உபயோகமானது. நன்றி.

  ReplyDelete