அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/27/14

Loud Speaker 6 ! துளிர் விடும் விதைகள், சூப்பர் ஸ்டார் :)

Loud Speaker 6 !  
தேன் மதுரத்தமிழின் :) சகோதரி கிரேஸின் துளிர் விடும் விதைகள் அனைத்துமே அருமை .வாசிக்க வாசிக்க எனக்கு பல புதிய தமிழ் வார்த்தைகள் இலகுவாய் விளங்கின ..உதாரணத்துக்கு அனலி ..
குளிர்களி. கவிதைதுளிகளில்  என்மனதைக்கவர்ந்தவை இங்கே  ஒன்றிரண்டை பகிர்கிறேன் :)

                                                                         


//ஓவியத்திலா காட்டவேண்டும் ?// என்று காடழித்த மனிதர்களை சாடுவதிலாகட்டும் !விடாமல் கொட்டிய மழையிடம் கேட்ட கேள்வியும் 
அதற்கு மழை அளித்த பதில் ! மற்றும் நீலக்கடலை குப்பையாக்கலாமா 
என ஆதங்கப்படும் இடங்கள் என அனைத்திலும் கிரேஸின் சுற்று சூழல் இயற்கை வளங்கள் குறித்த ஆதங்கம் அழகாக வெளிபடுகிறது ..
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி கிரேஸ் .
நீங்கள் இன்னும் நிறைய கவிதைகள் இதைபோல எழுத வேண்டும் 
என வாழ்த்துகிறேன் 

நெகிழி எனும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பற்றிய கிரேசின்
 கவிதையில் உள்ள ஆத்மார்த்தமான கன்னத்தில் அறையும்
 மனதை பாதித்த வரிகள் .........

//ஆழி சேரும் ஒரு நெகிழி 
ஆமை ஒன்றை கொல்லலாம் !!//

//உணவென்றே நெகிழியை உட்கொண்டு 
உயிர்விடும் சில உயிர்கள் // 

சில காலம் முன்பு ஒரு ஆங்கில வலைத்தளத்தில் படித்தது நினைவுக்கு வருகின்றது .
அந்த ஆமைகுட்டியின் பெயர் peanut ..அதன் படத்தை இங்கிணைக்க மனம் வரவில்லை ..பாவம் நம்மால் வாயில்லாத ஜீவன்கள் படும் பாடு பார்ப்பவர் மனம் உருகும் ..
peanut the turtle என்று கூகிளில் டைப் செய்தா படம் வரும் .

சிலவருடங்கள் முன்பு அமெரிக்காவின் ,மிசௌரி கடல் பகுதியில் இந்த ஆமைக்குட்டி சுற்றிகொண்டிருந்ததாம் ..ஆமை போன்ற அசைவும் பெரிய நிலக்கடலை போன்ற உருவமும் அங்குள்ள சுற்றுசூழல் பாதுகாவலர்களுக்கு வித்யாசமாகப்படவே அதைபிடித்து பார்த்துள்ளார்கள் .ஆமை உடலை சுற்றி ஸிக்ஸ் பாக் ரிங் .
இதுதான் அந்த சிக்ஸ் பாக் ரிங் பியர் மற்றும் கோக் ,கான்களை 
சுற்றி இருக்கும் ....
                                                                     


மக்கள் கடற்பகுதியில் தாகத்தை தணிக்க எடுத்து சென்ற can களில் 
இருந்த பிளாஸ்டிக் வளையம் முட்டையில் இருந்து வெளிபட்டபோதோ இல்லை கடல் நீரை நோக்கிய பயணத்தின் போதோ இந்த சின்னஞ்சிறு 
ஜீவனின்  உடலில் மாட்டுப்பட்டு இருக்கலாம் .அந்த ஆமைக்குட்டி அந்த வளையத்துடனே சுமார் நான்கு வருடங்கள் வளர்ந்திருக்கு ..!! 
வேறு உயிரினமாக இருந்தால் மரணம் தழுவியிருக்கும் ஆனால் 
இதன்  கடினமான ஓடு இதை  காப்பாற்றி இருக்கு.
 வன சுற்றுசூழல் காவலர்கள் ஆராய்ந்ததில் அதற்க்கு நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மற்றுஇன்னும்சிலகுறைபாடுகள்  
இருந்தனவாம் இப்போ அந்த பிளாஸ்டிக் வளையம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் வாழ்நாள் முழுக்க அதன் 
வடிவம் எட்டு போல இருக்கும் என்கின்றார்கள் .
நம் போன்ற மக்களின் பொறுப்பற்ற செயல்தானே இதற்கு காரணம் 
நம் கண்களுக்கு பிளாஸ்டிக் பை ஆனால் மீன்களின் கண்களுக்கு 
அவை வேறு வகை ஜெல்லி மீன்கள் ..பல பெரிய மீன்களின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இரையாக சென்று அவற்றின் மரணத்துக்கு காரணமாகியுள்ளன :( 

இனியாவது விழிப்புணர்வோடு நடப்போமா ..பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துணிப்பைகளை எடுத்து செல்வோம் அப்படிதவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்த நேரிட்டாலும் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவோம் மீள் சுழற்ச்சி செய்வோம் என உறுதி கொள்வோம் ..


சூப்பர் ஸ்டார் :) டிகாப்ரியோ ,

                                                                                     


சூப்பர் ஸ்டார் :) லியொர்நாடோ டிகாப்ரியோ டைட்டானிக் படம் மூலம் உலகப்புகழ்பெற்றவர் ! ஐக்கிய நாடுகள் உச்சி மாநாட்டில் சுற்றுசூழல் குறித்த இவரது உரை அதில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் !
//As an actor I pretend for a living. I play fictitious characters often solving fictitious problems.//
உண்மையை அப்படியே சொல்லியிருக்கார் :) நான் ஒரு நடிகன் என்று சொல்ல நம்ம நாட்டு ந(ட்)ட்டிகர்களுக்கு துணிவிருக்கா :) 
இவர் செய்த சில நற்பணிகள் ..அவரது அறக்கட்டளை வாயிலாக 
1, ஒரு  மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியிருக்கார் ..
யானைகளை பாதுகாக்க 
2, WWF ப்ராஜக்டுக்கு நேபால் மாநிலத்தின் அழிந்து வரும் பல உயிரினங்களை பாதுகாக்க மட்டும் கிட்டத்தட்ட மூன்று 
மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்துள்ளார் !!
3, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க மூன்று மில்லியன் டாலர் 
வழங்கியுள்ளார் ..
பாராட்டுக்குரிய மனிதர் இவர்தான் !!
முழு உரையையும் வாசிக்க சுட்டியில் சென்று பார்க்கவும் 
இங்கே 
அவரது உரையின் காணொளி இணைப்பு இங்கே ,
https://www.youtube.com/watch?v=ka6_3TJcCkA

இது முட்டாள் ரசிகர்களுக்கு ..கலர் எழுத்தில் எழுத விருப்பமில்லை !
சும்மா நற்பணிமன்றம் ரசிகர் மன்றம்னு FILM காட்டி காகித கட்டவுட்டுக்கு பாலூற்றி உயிர விடுவதை விட உங்க ஆனானப்பட்ட பெரும் புகழ் வாய்ந்த நடிகர்களை இம்மாதிரி பூவுலகை வருங்கால சமுதாயத்தை காக்கும் நல்ல விஷயங்களை செய்ய ஊக்குவியுங்கள் ...
சில நடிகர்கள் நல்ல விஷயங்கள் செய்கிறார்கள்தான் அதில் மறுப்பேதும் இல்லை.. ஆனா நடிகனை  கடவுளாக நினைக்கும் அப்பாவி ரசிகர்களுக்கு
தான் மேற்கூறியவை .......

 நடிகர்கள் சிலரின்  முகத்திரை ..இதுதான் உண்மை :(

பிரபல நடிகர் அமிதாப் பச்சன் ..திடீரென ஒரு நாள் நான் பெப்சி குடிப்பதை நிறுத்தி விட்டேன் அதன் பிராண்ட் அம்பாசிடர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று ஸ்டேட்மன்ட் விட்டார் !! அதற்கு அவர் கூறிய
காரணம் /என் ஆசிரியர் பாய்சன் என்று சொல்லும் பானத்தை எதற்கு நீங்க ப்ரமோட் செய்றீங்கன்னு ஒரு பள்ளி மாணவி கேட்டாளாம் //
ஒகே நல்ல விஷயம்தான் அப்போ இவர் மருமகள் அதன் எதிரி நிறுவனம்
கோகோகோலா குடிகிறாரே விளம்பரத்தில் ?? அதன் பிராண்ட் அம்பாசடர் அவர்தானாம் !!!!அப்போ அது என்ன நியாயம்
விஷம்னா சின்ன விஷம் பெரிய விஷம்னு இருக்கா?? /அமிதாப் ஜி உங்க மருமகள் கோக் குடிக்கராங்க அது கூட விஷம்தானே :)அதைவிட இப்போ இவர் கிரேட்  BIG B பிரபல  நூடில்ஸ் விளம்பரத்தில் வருகின்றார் :)..நூடில்ஸ் ஒரு குப்பை உணவு என்று உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது :)

ரெண்டு ஜி பற்றி பேசினதாலோ இல்லை கோலா எதிர்ப்பு படத்தில் சொல்வதாலோ இவர்களை நம்பிட வேண்டாம் நடிகர்களை அவர்கள் நடிப்ப மட்டும் ரசித்து பாருங்கள் .அவர்களை தலையில் தூக்கி  வைத்து
கூத்தாடவும் வேண்டாம் பிறகு காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம் ..எல்லாம் பணத்துக்கு கொடுத்த காசுக்கு நடிப்பு தட்ஸ் இட் :)

  நன்றி சகோதரர் சொக்கன் :)
சாட்டையடி பதிவொன்று எழுதியிருக்கார் .எல்லாரும் போய் 
பாருங்க  இங்கே 

BTW நான் எந்த நடிகரின் ரசிகையுமில்லை :) இயற்கையை நேசிப்பவள் 
இயன்றவரை சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்த எனக்கு தெரிந்த மற்றும்  படித்தவற்றை   பகிர்கின்றேன் ..
================================================================= சற்று முன் முகபுத்தகத்தில் படித்தது ..
http://heronewsonline.com/sooriyur-story-for-kaththi-fans/
இந்த செய்தி அனைவருக்குமே !!கண்டிப்பாக வாசிக்கவும் 
சூரியூரும் – பெப்சி கம்பெனியும்---
--வீட்டில் இருந்தபடியே போராட அழைக்கின்றோம்--
http://www.thanneer.org/
=================================================================

அன்புடன் ஏஞ்சல் :)

...


38 comments:

 1. வெளிநாட்டு நடிகர்கள்/டிகைகள் தொழிலாக பார்க்கும் விடயம் இந்தியாவில் பிரச்சாரம் போல ஊக்கிவிக்கும் நிலை என்று மாறுமோ!சபிக்கப்பட்ட தேசம் நடிகர்/நடிகைக்கு தேர்/கோயில் காட்டும் நாடு!ம்ம்

  ReplyDelete
  Replies
  1. mm:( பத்தாயிரம் இல்லை பத்து இலட்சம் பெரியார் வந்தாலும் இவற்களை திருத்த முடியாது

   Delete
 2. கோலா விளம்பரம் எல்லாம் கல்லா விடயம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நேசன் ..இப்போதான் உண்மையான கத்தி /சூரியூர் கிராமம் பற்றி படிச்சிட்டு வந்தேன் ..
   இந்த சுட்டியிலும் பாருங்க :(
   http://heronewsonline.com/sooriyur-story-for-kaththi-fans/

   Delete
 3. ப்ளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வும், மற்ற உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கா தன்மையும் அவசியம் பரவ வேண்டும். ஜெமோவின் யானை டாக்டர் கூட இந்த வகையிலான ஒரு பதிவுதான்.

  காசு கிடைத்தால் எந்த விளம்பரத்திலும் நடிக்கும் நடிகர்களைப் பற்றிப் பேசி பிரயோஜனமில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சகோ ..
   அந்த சூரியூர் கிராமம் பகிர்வு யாருடையது தெரியுமா ..முன்பு எங்கள் ப்ளாகில் நீங்க வினோத்ராஜ் பற்றி ,,திருச்சி மாவடிக்குளம் தூர்வார்றல் பற்றி எழுதினீங்களே அவர்தான் அவருடைய பதிவு ..அருமையான விஷயங்களை செய்கின்றார்கள் அந்த அமைப்பை சேர்ந்தவங்க ..இவங்களுக்கு கிடைக்காத பெரும் புகழும் . நடிகர்களுக்கு போகுது :(
   ரசிகரின் மனநிலை மாறினால்தான் நம்ம நாடு உருப்படும்

   Delete
  2. அனைவரும் சிறு பிராயம் முதல் பிள்ளைங்களுக்கு சொல்லிதரணும் ..பிளாஸ்டி உண்மையில் பேய்தான் :(

   Delete
  3. //முன்பு எங்கள் ப்ளாகில் நீங்க வினோத்ராஜ் பற்றி ,,திருச்சி மாவடிக்குளம் தூர்வார்றல் பற்றி எழுதினீங்களே அவர்தான்//

   அட!

   Delete
 4. முதலில் என் மனம் நெகிழ்ந்த நன்றி ஏஞ்சல்..என் கவிதைகளைப் படித்துவிட்டு பதிவும் இட்டுவிட்டீர்கள். உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
  வளையம் மாட்டிய ஆமைபடம் பார்த்துள்ளேன், அதோடு வயிற்றில் பிளாஸ்டிக்கோடு பறவைகளும், வளையத்தோடு சீலும்..இவையெல்லாம் மனதை உலுக்கியிருந்தன..கடற்கரையில் பொறுப்பில்லாமல் மக்கள் குப்பை வீசுவது கண்டு, ஏற்கெனவே மனதை உலுக்கிய விசயங்களோடு கவிதையாக்கினேன். அதைச் சரியாகப் புரிந்து இன்னும் சில தகவல்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.
  பிளாஸ்டிக் ப்ரீ லைப் என்று மகனின் பள்ளியில் திட்டமிட்டு நிறைய வேலைகள் செய்தோம்..அதுபோல இங்கும் பள்ளிகளில் விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும். இதைப்பற்றி ஒரு பதிவு தனியாகப் போடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கிரேஸ் உண்மைதான் ..நம்மால் இயன்றதை கூடுமானவரை ப்ளாகில் எழுதணும்..நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் படங்களில் நானும் பார்த்திருக்கேன் :( மனிதரின் பொறுப்பற்ற செயல்கள்தான் அப்பாவி ஜீவன்கள் கஷ்டபடுது ..பிளாஸ்டி அழிய எவ்வளவு காலம் எடுக்குது அது புரியாமல் எதேர்கேடுதாலும் பிளாஸ்டிக் :(
   பயன்பாட்டை குறைத்தாலே நாடும் சூழலும் வளமடையும் .
   நிறைய கவிதைகள் எழுதுங்க விழிப்புணர்வு விஷயங்களை பகிருங்கள் சகோதரி .

   Delete
 5. நடிகர்களைப் பார்த்து மயங்கி ஆராதிப்போர்க்குச் சாட்டையடி! நீங்கள் சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை! மக்கள் உணர்ந்தால் நாடு வளம் பெறும்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கிரேஸ் உண்மைதான் ..நம் நாட்டில் எந்த நடிகனும் தனக்கு சிலை வைக்க சொல்லவில்லை .இந்த முட்டாள் ரசிகர்களின் மனநிலை மாறனும்பா !

   Delete
 6. முதலில் என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ.

  என்னுடைய பதிவுக்கும், தங்களின் இந்த பதிவுக்கும் (வெளி நாட்டு நடிகர்) எவ்வளவு முரண்பாடுகள்!!!!
  உண்மையில் நம் நாட்டு ரசிகர்கள் திருந்தினாலே, நடிகர்களும் திருந்திவிடுவார்கள் என்பது என் எண்ணம். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடைபெறும் காரியமில்லை.

  நானும் அந்த சூரியூர் கிராமம் பற்றி படித்தேன். இதைத்தான் ஒரு வேளை, முருகதாஸ் தெரிந்து கொண்டு, அந்த கிராமத்தை சொல்லாமல் வேறொரு கற்பனையான கிராமத்தை சொல்லியிருக்கிறாரோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..உண்மையில் இன்னிக்கு நடிகர்களை பற்றி கூற காரணம் உங்க பதிவில் பகிர்ந்த அந்த படம் தான் :)
   ம்ம் இருக்கலாம் முருகதாஸ் அந்த சூரியூர் கிராமம் பற்றியும் சொல்லாமல் சொல்லியிருக்கலாம் ..எங்கே இவ்விஷயத்தை நேரிடையாக சொன்னாலும் அவருக்கு பிரச்சினை தான் நம் நாட்டில் .!!1.
   நடிகர் ரசிகர் விஷயத்தில் வெளிநாட்டினர் ரொம்ப தைரியம் ..இப்போ டிகாப்ரியோ உரைக்கு ஒருவர் கேள்வி கேட்டார்
   கார்பன் எமிஷன் குறைக்கணும்னு சொல்லிட்டு நீங்க எதுக்கு ப்ரைவேட் விமானத்தில் வரீங்கன்னு :)
   என்னவொரு ஆறுதல்னா தல தளபதி சண்டையெல்லாம் வெளிநாட்டில் இருக்காது

   Delete
 7. ஆமைக்குட்டியின் நிலை மனத்தை அழுத்துகிறது. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நான்கு வருடங்களாய் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? இயற்கையை அழிக்கவும், இயற்கை சார்ந்த பிற உயிரினங்களின் வாழ்க்கையைப் பறிக்கவும் கெடுக்கவும் நமக்கென்ன உரிமை? உணர்ந்து திருந்தவேண்டும் ஒவ்வொருவரும். பகிர்வுக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..க்றேசின் கவிதை எவ்வளவு உண்மைகளை சொல்லி சென்றது தெரியுமா ..இயற்கை நமது சொத்து நாம்தான் பாதுகாக்கணும் ..அந்த ஆமை ஒரு சிறு உதாரணம் அதைப்போல எத்தனையோ ஜீவன்கள் இருக்கு .

   Delete
 8. கிரேஸின் கவிதை தொகுப்பு குறித்து விபரமாக பகிர்ந்துள்ளீர்கள். ஊர் வரும் போது வாங்க வேண்டும்.
  ஆமை ...வருத்தமாக இருக்கிறது.

  நடிகர்களில் சிலர் இப்படியும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது நம் நடிகர்கள் மேல் நாட்டில் கற்றுக் கொள்ள்வது போல் இதையும் கற்றுக் கொள்ளலாம்.

  குளிப்பானம்,நூடில்ஸ் தவிர்த்து 6 வருடங்கள் ஆகிவிட்டது. மற்றவர்களுக்கும் அதைகுறித்து சொல்லி வருகிறோம்.

  நல்ல பதிவு சகோதரி.

  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி உமையாள் ..நாங்க எவ்வித செயற்கை நிறம் மனம் சேர்த்த பொருட்கள் /canned உணவு இவற்றை தவிர்த்து விட்டோம் ,,நமக்கு நாம் தான் பாதுகாப்பு .
   ரசிகனை நினைச்சிதான் பாவமா இருக்கு :(

   Delete
 9. மிக நல்ல பதிவு சகோதரி.
  கவிதைப் புத்தகம் வாசிக்கும் ஆவல்
  என்ன செய்ய முடியும் டென்மார்க்கிலிருந்து.
  நன்றி.
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் சகோதரி கிரேசை வாழ்த்தியதற்கும் நன்றி வேதாக்கா :)

   Delete
 10. வாழ்த்துக்கள்.. அஞ்சுக்கு தமிழ் நல்லாப் புரியுதாம்ம்ம்.. விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ... தேம்ஸ்க்குப் போயிடுறேன் :)

  ReplyDelete
  Replies
  1. எங்கேடா..நம் இருப்பிடம் கடகடான்னு ஆடுதேன்னு நினைச்சேன் :) வாங்க மியாவ் ..இப்போ coffee இதன் தமிழ் மொழி பெயர்ப்பு சொல்லுங்க பார்ப்போம் :) கர்ர்ர்
   அனலி என்பது என்பது சூரியன் என இலகுவாக புரிந்ததுன்னு சொன்னேன் .
   வந்ததுதான் வந்தீங்க இந்த குறளை மூச்சி விடாம சொல்லுங்க பார்ப்போம்
   துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
   துப்பாய தூஉம் மழை !!!

   Delete
 11. வாழ்த்துக்கள் அஞ்சு. ப்ளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு,இயற்கை வளம்,சூழல் பாதுகாப்பு பற்றிய பதிவுகள் பகிர்வுகளாக எழுதி அசத்திவருகிறீர்கள்.அதற்கு இப்பொழுது வெளியிடப்பட்ட தோழி கிரேஸின் கவிதைத்தொகுப்பிலிருந்தே கவிதையை மேற்கோள் காட்டி, அவரின் தொகுப்பிற்கும் பெருமை சேர்த்திருக்கிறீங்க.
  ஆமையின் தகவல் வாசிக்க‌ மனது பாரமாகிவிட்டது. சுற்று சூழல் மாசடைவதை தடுக்க எத்தனைவிதமாக முயற்சிகள் நடந்தும், இப்படியான சம்பவங்கள் குறையவில்லை.சூப்பர் ஸ்டார்தான் டிகாப்ரியோ. நல்லதொரு பகிர்வு அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. இது முன்பே பசுமை விடியலில் பகிர்ந்தது ப்ரியா இந்த ஆமை பற்றிய செய்தி .இங்கே ப்ளாகில் பகிரவில்லை .
   கிரேஸின் கவிதை படித்ததும் உடனே நினைவுக்கு வந்தது ..உடன் இங்கும் பகிர்ந்தேன் ,வருகைக்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி .

   Delete
 12. கிரேஸின் கவிதைகள் அருமை...விழிப்புணர்வு இருந்தும் மனிதர்களின் அலட்சியமே..உயிரினங்களின் துன்பத்திற்கு காரணம்மா...நல்லபதிவு..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி ..கிரேஸ் கவியாய் படித்தவை அனைத்துமே உண்மைதான் .மனிதரின் அலட்சியமே வாயில்லா ஜீவன்களின் அழிவுக்கு காரணமாகுது .வருகைக்கு பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி

   Delete
 13. ஏஞ்சலின்,

  முக்கியமான வேலை ஒன்னு இருக்கு, ஒரு புகைப்படத்தை ஐபேடில் பெருசாக்கிப் பாத்துட்டு .... இதோ வறேன்.

  ReplyDelete
 14. ஏஞ்சலினைப் பார்த்தாச்சூஊஊ ! வெங்கட் நாகராஜின் மகள் ரோஷ்ணியைப் பற்றிய பதிவுக்குப் போனபோது அங்கே ஒரு பதிவில் பார்த்தேன்.

  யார் செய்த தவறின் பலனை யார் அனுபவிப்பது ? பாவம் ஆமை.

  யாருக்காக யார் உயிரை விடுவது ? நடிகர்களின் நடிப்பை ரசிப்பதோடு நின்றுவிடாமல் .... அதற்குமேல் போவது அவரவர் பாடு. என்னவொன்று அவன் அப்பாவி ரசிகனாக இருப்பதுதான் வேதனை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க சித்ரா :) நட்புக்கள் அனைவருக்கும் தெரிவித்தேன் என் பதிவிலும் குறிப்பிட்டுஇருந்தேன் :)நீங்க அந்த பதிவை மிஸ் பண்ணிடீங்க :)

   Delete
 15. ஆமாம் சித்ரா ஆமை மட்டுமா எத்தனை சிற்றுயிர்கள் மனிதனின் பொறுப்பற்ற பேராசையால் வதைபடுகின்றன :(
  கட்டவுட்டுக்கு பால் ஊத்தினவன் பெத்தவங்களுக்கு இனி இல்லையே :(

  ReplyDelete
 16. கை கொடுங்கள் சகோதரி! மிக மிக அருமையானஒரு பதிவு! எப்படி இந்தப் பதிவு எங்கள் கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை!

  சுற்றுப்புறச் சூழல் குறித்து எத்தனை கட்டுரைவள் விழிப்புணர்வு வாசகங்கள் வந்தாலும், கூட்டங்கள் கூடினாலும் நம் மக்கள் எப்போது சினிமா மோகத்திலிருந்தும், அரசியல் தாக்கத்திலிருந்தும் வெளி வருகின்றார்களோ அப்போதுதான் நல்ல காலம் பிறக்கும். கிரேஸ் சகோதரியின் கவிதைகள் அருமை! நல்ல கருத்துக்கள் அடங்கியவை!

  அமிதாப்ஜியிடம் உங்கள் கேள்வி நியாயமானதே.....நூடுல்ஸ் பத்தி வேறு ஒரு மாணவி கேட்கும் வரை காத்திருப்பாரோ?!! ஏன் அவர் ஒன்றுமே தெரியாத கைகுழந்தையோ?! அட போங்கப்பா.....நல்ல அழ்காக எழுதுகின்றீர்கள் சகோதரி!

  கட் அவுட் மரணம் இன்றைய எங்கள் பதிவு இரவு.......

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..எனக்கு அந்த சம்பவம் படிச்சதில் இருந்து அவ்ளோ கோபம் ..தன சொந்த பெற்றோரை மறந்து சினிமா மோகத்தில் இப்படி சாகராங்களே :(
   உங்க பதிவும் படிச்சேன் ..நீங்க கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் கட்டுரை இதை பற்றி அட்டை கத்தி வீரர் //படிச்சீங்களா ஹிந்து ஆன்லைன் பத்திரிக்கைல நல்லா சாடியிருக்கார் ..ஆனா அவரையுமிந்த ரசிக கண்மணிகள் விட்டு வைக்கலை நல்ல விஷயம் சொன்னா கூட அவர அவர் இனம் சொல்லி திட்டிறாங்க நான் வாசித்து வெறுத்து போனேன்

   Delete
 17. முதலில் அன்புத்தோழி கிரேஸ்ஸிற்கு என் அகம் நிறைந்த வாழ்த்துக்கள்!
  எத்தனை தடவை படித்தாலும் அத்தனையும் புத்தம்புதுப் பொருளோடு அருமையான கவிதைகளாகக் காண்கிறேன்!
  கிரேஸ் கிரேஸ்தான்..! அற்புதக் கவிஞர்! என் அகம்நிறைந்த இனிய தோழியும் ஆவார்!

  ஆமை பற்றிய தகவல் முன்னரும் முகப்புத்தக்கத்தில் படித்தேன்.
  நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு அஞ்சு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி எனக்கும் அவர் கவிதைகள் அனைத்தும் பிடிச்சு போனது .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 18. லவுட் ஸ்பீக்கர் எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது...
  எனவே ... வேற என்ன தொடர்ந்து படிக்கலாம்
  என்னைய எங்க ரசிகர் மன்றம் அமைக்கவிடப் போறீங்க
  உங்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்காதே..

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ மது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..என்னது ??? ரசிகர் மன்றமா !!!
   நான் முகபுத்தகத்துக்கே மீண்டும் ஓடிபோயிடறேன் :)) .தொடர் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள்
   :)

   Delete

 19. பிளாஸ்டிக் விழிப்புணர்வு பற்றிய கிரேசின் கவிதை அருமை வாழ்த்துக்கள் கிரேச் அவர்களுக்கு.
  பகிர்வுக்கு நன்றி உங்களுக்கு.
  சூப்பர் ஸ்டார் :) டிகாப்ரியோ அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரிய மனிதர்தான்.
  நடிகர்கள் நல்லவற்றுக்கு விளம்பர மாடலாக இருக்க வேண்டும்.
  அனைத்து விஷ்யங்களும் மிக அருமை.தொடர்ந்து நல்லவற்றை பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது ஏஞ்சலின்.

  ReplyDelete