அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/14/14

Loud Speaker 5,Homeless jesus,அறுவடைத்திருநாள் !  ஸ்பீக்கர் 5..:)

                                               
பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுள்ளோர் 
சாலையை எளிதில் கடக்க உதவும் சிறு பொத்தான் அமைப்பு  .
                                                                                       

..இதைப்பற்றியும் எனக்கு சொன்னது எனது மகள்தான் ,சில வருடங்கள் முன் சாலையில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்கும்போது 
எனக்கு அந்த சிறிய பெட்டியை காட்டி இதில் கீழே ஒரு சுழலும் பொத்தான் போன்ற அமைப்பு இருக்கே ..எதற்கு என்று தெரியுமா எனக்கேட்டாள் ...!! எப்பவும் போல நான் ஞே !! என்று விழிக்க அவள் எனக்கு அது வேலை செய்யும் விதத்தை காட்டினாள் !!கண்ணை மூடிக்கொண்டு அந்த சுழலும் அமைப்பில் விரல்களை வைக்க கூறினாள் சிறிது நேரத்தில் 
திடீரென அது சுழல ஆரம்பித்தது !!அதேநேரம் பீப்  கேட்டது கண்ணை திறந்தா பச்சை நிறம் ஒளிர்ந்து சாலையை கடக்கலாம் என காட்டியது ..
இந்த அமைப்பு பார்வை குறைபாடுஉள்ளோர்   சாலையை எளிதில் பிறர் உதவியின்றி கடக்க உதுவுகிறதாம் ..நான் அவளிடம் கேட்டேன் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என ..அவள் சொன்னா 
இந்த விஷயம் அவளுக்கு கிண்டர் கார்டன் படிக்கும்போதே அதாவது ஐந்து வயதில் ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் அழைத்து சென்று 
இதை சொல்லிகொடுத்தார்களாம் ! மீண்டும் பிரைமரி ஸ்கூலிலும் கற்பித்தார்களாம் !!எல்லாவற்றையும் சொல்லிட்டு என்னை பார்த்து 
கேட்டாள் //அம்மா உங்க ஸ்கூலில் நீங்க இதெல்லாம் படிக்கல்லையா ?//
நான் எப்பவும் போல ....ஞே !!
                                                                        


வாழ்க்கைக்கு படிப்பு மட்டும் முக்கியமில்லை இப்படிப்பட்ட தற்காப்பு 
மற்றும் பொது விஷயங்களும் சிறுவயதிலேயே கற்றுகொடுக்கணும் ..
நான் பிறகு கூகிளில் தேடியபோது என் வலையில் அகப்பட்டவை .

தொட்டுணரக்கூடிய சிறு முகடுகளுடன் பிளாஸ்டிக் அல்லது இரும்பில் ஆன இந்த சுழலும் பொத்தான் அனைத்து  கட்டுப்பாட்டு  பெட்டியிலும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது .
பார்வையற்றோர் எளிதில் கடக்க பீப் ஒலி யும் எழும்பும் மற்றும் அதேநேரம் சுழலும்  .இந்த சுழலும் அமைப்பினை கண்டுபிடித்தவர்கள் நொட்டிங்ஹாம் பல்கலைகழகத்தின் போக்குவரத்து துறை சார்ந்தவர்கள் .1980 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள் ஆனால் 1989 ஆண்டு முதல்தான் பயன்பாட்டில் வந்தது ..
நம்ம நாட்டில் இப்படி ஒரு வசதி கண்டிப்பா தேவை !!


ஹோம்லெஸ் ஜீசஸ் !!
                                                                            

இந்த சிலை இப்போ பிரபலம் .உலகின் மிக பெரிய நகரங்களில் 
வைக்க இடம் தேடறாங்களாம் !!ஏற்கனவே ஆஸ்திரேலியா ,
ட அமெரிக்கா வில் ஏழு நகரங்களில் இவ் வெண்கல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன .
                                                                           


Tim Schmalz ..
இவர் தான் இந்த வீடு வாசலற்ற இயேசு கிறிஸ்துவின் சிலையை 
வடிவமைத்தவர் .கனடாவில் டொராண்டோ நகரத்தில் இவர் ஏழை மனிதர் 
ஒருவர் கடுங்குளிரில் ஒரு வீதியோர பெஞ்சில் படுத்திருப்பதை கண்டு அதை அடிப்படையாக வைத்து இந்த ஹோம்லஸ் ஜீசஸை உருவாக்கியிருக்கார் !! வெளிநாடுகளில் இருப்பிடமற்றோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர் .சிலர் எதற்கு இப்படி ரோட்டோரங்களில் ஸ்லீப் பைகளில் உறங்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை .இவர்களுக்கு இருப்பிட வசதி அமைத்து தந்தாலும் சிலருக்கு இந்த நாடோடி வாழ்க்கை விருப்பமா என்றும் விளங்கவில்லை ..இப்படி பட்டோருக்கு எங்கள் ஆலயத்தில் வருடந்தோறும் நவம்பர் துவங்கி ஏப்ரல் வரை இரவு உறங்க வசதி அமைத்திருக்கிறார்கள் .
திங்கள் ஒரு ஆலயம் செவ்வாய் ஒரு ஆலயம் என லிஸ்ட் போட்டு  இருக்கும் .
எல்லாம் அருகருகில் உள்ள இடங்கள் .

ஏழைகளுக்கு செய்வது இறைவனுக்கு செய்வதை போல !எனும் கருத்தை வலியுறுத்தி TIM  இச்சிலைகளை வடிவமைத்துள்ளார் ..அதில் முகம் மூடப்பட்டு இருக்கும் போர்த்திய கால்களில் சிலுவையில் அறையப்பட்ட அந்த வடுக்கள் இருக்கும் , பென்ச்சின் ஓரம் ஒருவர் அமர இடம் உள்ளது .
இதில் வேடிக்கை என்னவென்றால் பல நகரங்களில் இச்சிலைகளை வைக்க மக்கள் ஒப்புகொள்ளவில்லையாம் !! இன்னும் ஒரு சிலை லண்டன் பகுதியில் ஒரு பார்க் முன்பு காத்திருக்கு இடம் தேடி //Can you find a home for Jesus? ... Can you find him a home in London?  //

                                                                             

பேப்பரில் பார்த்த விளம்பரம் ..A CANADIAN sculptor, Timothy Schmalz, is appealing for help to find a site in London to place his statue Jesus the Homeless//


 அறுவடைத்திருநாள் /ஹார்வஸ்ட் பெஸ்டிவல் /HARVEST FESTIVAL .

 இது வருடந்தோறும் எங்கள் ஆங்க்லிகன் ஆலயங்களில் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் விழா .சென்னையில் இருக்கும்போது அனைத்து ஆலயங்களிலும் அன்னிக்கு பிரியாணி பலவித உணவுபொருட்கள் என விற்பனை களை கட்டும் நாலு ஆப்பிள் ஒரு தட்டில் வைத்து அதை ஏலத்தில் எடுக்க ஆலய பிரபலங்களுக்குள்  போட்டி நடக்கும் .சின்ன கடலை மிட்டாய் பாக்கெட் பத்து ருபா தானிருக்கும் அதை ஏலத்தில் முன்னூறு ரூபாவுக்கும் எடுப்பாங்க :( எனக்கு பார்க்க வெறுப்பாக இருக்கும் ..எல்லாரும் தங்கள் பண பலத்தை காட்ட முயலும் இடம் என்ற தோற்றமிருக்கும் அதே இங்கு வெளிநாட்டில் தலை கீழ் .ஹார்வஸ்ட் திருவிழா அன்று நாங்கள் பெட்டியில் அடைக்கப்பட்ட உணவு முதல் நிறைய விருப்பமான பொருட்களை 
ஆலயத்தில் கொடுக்கணும் அவர்கள் அதனை சேர்த்து ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள் .மனதுக்கும் நிறைவு .இம்முறை எங்கள் ஆலயத்தில் 100 கிலோ பெறுமானமுள்ள பொருட்கள் சேர்ந்தன !!

மனதை தொட்ட படம் !
அன்பென்பது யாதெனின் !!!!!!!!!!!!!!!!!!!!!
                                                                         

படங்கள் அனைத்தும் கூகிளில் கிடைத்தவை :)

நன்றி நண்பர்களே மீண்டு அடுத்த லவுட் ஸ்பீக்கரில் சந்திப்போம் :)
  


21 comments:

 1. வெரி லவ்ட்...
  தகவல்களில் இருக்கும் மனித நேயம் அருமை..
  தொடர்க
  வாழ்த்துக்கள்
  சீக்கிரம் இங்கலாந்தில் ஏசுவுக்கு ஒரு இடம் கிடைக்கட்டும்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி சகோதரா .நானும் அதைத்தான் வேண்டுகிறேன் ஆனா மக்களுக்கு அப்படி ஏழ்மை கோலத்தில் ஜீசஸை பார்க்க ஆசையில்லையாம் :( ரியாலிட்டியை ஏற்க மறுக்கிறார்கள் எத்தனை ஏழைகள் இருப்பிடமின்றி உணவின்றி இருக்காங்கன்னு நினைப்பு வந்தா பயந்திடுவாங்க இவங்க ..

   Delete
 2. தெரியாத ஒரு புதிய செய்தி சகோ.
  நீங்கள் சொல்வது உண்மை தான். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..கல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை ! இங்கே பிள்ளைகளுக்கு சமையல் முதல் தையல் டிசைனிங் மர வேலை அனைத்தையும் ஒரு வகுப்பாக கற்றுகொடுக்கறாங்க ஒனில்லைன்ன ஒன்னு படித்து பிழைக்க வழியும் உண்டு .அடுத்து தற்காப்பு கலை எந்த சூழ்நிலையிலும் ஸ்ட்ராங்கா முடிவெடுக்க இத்தகைய விஷயங்கள் உதவும் .சமீபத்தில் புலி அடித்த விஷயம் கேள்விபட்டிருப்பீர்கள் ..சுமார் 15 நிமிடங்கள் யாரேனும் ஒருவர் சிறு நெருப்பை பற்றவைதிருந்தால் கூட அம்மிருகம் பயந்து ஓடியிருக்கும் இதை முக புத்தகத்தில் ஒருவர் சொன்னார் :(

   Delete
 3. பார்வை அற்றோருக்கு உதவும் சிக்னலைப் பற்றி பள்ளியில் சொல்லிக் கொடுப்பது போன்று, மாணவர்களுக்கு சிறிய வகுப்புகளிலேயே நில நடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றும் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன, மேலை நாடுகளில். னீங்கள் சொல்லியிருப்பது போல் நம் நாட்ட்டிலும் இந்த விழுப்புணர்வு, இது மட்டுமல்ல பல விழிப்புணர்வுகள், பயிற்சிகள் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக சிவிக் சென்ஸ்.

  Tim Schmalz .....எப்பேர்ப்பட்ட சேவை! ம்கவும் போற்றப்படக் கூடிய ஒன்று!

  அறுப்பின் பண்டிகை...தாங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வு மேலநாடுகளில் ....ஹார்வஸ்ட் திருவிழா அன்று நாங்கள் பெட்டியில் அடைக்கப்பட்ட உணவு முதல் நிறைய விருப்பமான பொருட்களை
  ஆலயத்தில் கொடுக்கணும் அவர்கள் அதனை சேர்த்து ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள் .மனதுக்கும் நிறைவு .இம்முறை எங்கள் ஆலயத்தில் 100 கிலோ பெறுமானமுள்ள பொருட்கள் சேர்ந்தன !!//

  அருமை! னம்மூர் ஏழைகள் நிறைந்த நாடு.....இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல் அனுபவ்ம் உண்டு.

  மனதைத் தொட்ட படம்தான்!

  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி சகோதரா .இங்கே ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து நாடுகளும் இணைப்பின் பின் பலர் உணவின்றி வேலையின்றி தவிக்கிறாங்க ..பலருக்கு வீடில்லை மேலும் வேண்டா பழக்கங்கள் எல்லாம் உண்டுங்கு .food bank என்று ஒன்று ஆரம்பித்துள்ளார்கள் நாம் அனைவரும் விரும்பிய உணவை சேமித்து அங்கு கொடுக்கணும் அவங்க வாராவாரம் டிஸ்ட்ரிபியூட் செய்வாங்க !! நம் நாட்டில் ரைஸ் பக்கட் சவால் மாதிரிதான் .டிம் அவர்கள் உருவாக்கிய சிலையில் முகமில்லை ஆனா மனதுக்கு என்னமோ செய்யுமாம் அதனருகில் அமரும்போது !! லண்டன் போனா நானும் பார்த்து படம் எடுக்கணும் வாடிகனுக்கும் ஒரு சிலை எடுத்து சென்றுள்ளர்கலாம்.மகளிடம் நிறைய விஷயங்கள் கற்கிறேன் நீங்க சொன்னதுபோல சிவிக் சென்ஸ் மிக முக்கியம் .அந்த நிலா நடுக்க விழிப்புணர்வும் பார்த்தேன் .எதற்கும் ஆயத்தமாக இருப்பது தயார்படுத்துவது நன்று பிள்ளைகளை ..

   Delete
 4. பலப்பல செய்தியாக அருமையாக
  பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி அக்கா ..

   Delete
 5. //அம்மா உங்க ஸ்கூலில் நீங்க இதெல்லாம் படிக்கல்லையா ?
  நான் எப்பவும் போல ....ஞே !!//

  ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) நான் அவளிடம் இப்படி ஞே //வாங்காத நாட்களே இல்லையண்ணா ஒவ்வொருநாளும் ஒரு விஷயம் எனக்கு சொல்லித்தரா நானும் அவளிடம் கற்றுக்கொள்கிறேன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா .

   Delete
 6. லௌட் ஸ்பீக்கரில் வந்த விடயங்கள் அத்தனையும் அருமை!

  கண் தெரியாதவர்களுக்கு வீதியைக் கடப்பதற்குரிய தொழில் நுட்பம் இங்கும் சில இடங்களில் பொருத்தியுள்ளனர். ஆனால்.. எல்லா இடங்களிலும் இல்லை. அது ஒரு குறைதான்!

  ஹோம்லெஸ் ஜீஸஸ்!.. அறிந்ததில்லை. படத்தில் பார்க்கும்போதே மனதை நெருடுகிறது. இங்கும் ஹோம்லெஸ் பீப்பிள் நிறையவே உள்ளனர்! ஆனாலும் அவர்களுக்கு நகரசபை ஏதோ ஓரிடத்தில் இரவு தங்க வசதி செய்து கொடுத்திருந்த போதிலும் சிலர் அதனை விரும்பாமல் ரோட்டோரத்தில் இப்படிச் ஸ்லீப்சாக்கில் படுத்து, இருந்து வாழ்கிறார்கள்...:( அவர்களுக்கு அங்கு ஒன்றாகத் தங்குவதில் விருப்பமில்லையாம்!..:(
  தொலைக் காட்சியில் அவர்களின் பேட்டி கண்டுள்ளேன்!..:)
  இதை என்னவெனச் சொல்ல...:0

  என் மனதையும் படங்களும் பதிவுமே தொட்டது அஞ்சு!
  அருமை!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி .எனக்கே அந்த ஹோம்லெஸ் மனிதருடன் அப்பெண்மணி அமர்ந்து உணவுண்ணும் காட்சி மனதுக்கு என்னமோ செய்தது !நாம் இப்படி செய்வோமா என்று நினைத்து பார்தேன் :( சும்மா வங்கி கொடுத்தது மட்டுமன்றி அவரோடு அமர்ந்து உரையாடிக்கொண்டே சாபிடுவது என்பது உண்மையில் பெரிய விஷயமல்லாவா !!
   ஒவ்வொரு நாளும் ஏதாகிலும் மகளிடம் கற்றுகொள்வேன் அதை நட்புக்களுடன் பகிர்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 1

   Delete
 7. இன்றைய வலைப்பதிவு முழுக்க முழுக்க மிகவும் சுவாரஸ்யமான (Very very Interesting ) தகவல்கள்.

  தாங்கள் பார்வையற்றோர் என்று நினைக்காத வண்ணம் பார்வையற்றோருக்கு மேனாட்டில் நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். JESUS THE HOMELESS – என்பதனை யார்தான் ஒத்துக் கொள்வார்கள். ஆனாலும் சிலை தத்ரூபமாக உள்ளது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

  HARVEST FESTIVAL என்பதனை “அறுவடைத் திருநாள்” என்றுதான் மொழி பெயர்ப்பது வழக்கம். ( அறுப்பின் பண்டிகை > அறுவடைத் திருநாள்)

  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 8. அண்ணா உடனே மாத்திடறேன் :) அறுவடைத்திருநாள் தான் சரியான மொழிபெயர்ப்பு !!
  நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க ஆலயத்தில் செகரட்டரி இப்படி வாசித்தார் அவர்தான் ஏலமும் விடுவார் !!அதே மனதில் நின்று விட்டது :) என்ன காமெடின்னா மூணு வருஷம் முன் போனப்போ அவரது மகனும் இப்போதைய செகரட்டரி அப்படியே தான் அறிக்கை வாசிச்சார் ..குடும்பமே தப்பு தப்பா பேசி என்னையும் குழப்பிட்டாங்க
  ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .

  ReplyDelete
 9. ஆமாம் அண்ணா அந்த பெஞ்சின் ஓரத்தில் கொஞ்சம் இடம் இருக்கு அதில் அமர்ந்தா மனசுக்கு மிக அமைதியா இருந்ததின்னு ஒரு நபர் சொன்னாராம் !!

  ReplyDelete
 10. போக்குவரத்தை நம்பொருட்டு நிறுத்தும் கருவி பற்றிய அறிமுகத்தால் அதைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

  நம் நாட்டில் இப்படி வைத்தால் நம் மக்கள் தொட்டதற்கெல்லாம் அதை உபயோகப்படுத்தியே கொன்று விடுவார்கள். :))

  நேற்றைய செய்தியில் சில பள்ளி மாணவர்கள் ஆம்புலன்ஸ் வண்டி வந்தால் போக்குவரத்து தானாக நிற்கும்படியான ஒரு அமைப்பை உருவாக்கி இருப்பதாகப் படித்தேன்.

  ஹோம்லஸ் ஜீசஸ் செய்தி அருமை.

  நம்மில் எத்தனை பேர்கள் உணவில்லாதவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதோடு அவர்களோடேயே சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவோம்! ம்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஸ்ரீராம்!!! இந்த சுழலும் அமைப்பு இருக்குன்னு தெரிஞ்சா எல்லாரும் நீங்க சொன்ன மாதிரி செய்ய வாய்ப்புண்டு :) இங்கும் சில நேரம் பார்த்திருக்கேன் சிக்னலில் கார்கள் வரிசையா நிற்கும் சில குறும்பு வாண்டுகள் பச்சை பட்டனுக்கு பிரஸ் பண்ணிட்டு எதிர்பக்கம் சென்று உடனே அங்கிருந்து பச்சை பட்டனுக்கு மீண்டும் பிரஸ் பண்ணுவாங்க
   வாகனங்கள் காத்துகொண்டு இருக்கும் இங்கே விஷயம் என்னவென்றால் நடு இரவாக இருந்தாலும் யாருமில்லைன்னு தைரியமா ரோடை கிராஸ் பண்ண முடியாது !!நாங்க ஜெர்மனில இருந்தப்போ ஒரு சைனீஸ் லேடி ரெட் சிக்னலில் யரும் பார்க்கலைன்னு நினைச்சி க்ராஸ் பண்ண பார்த்தாங்க அவங்க கெட்ட ட்ட நேரமான்னு தெரில ஒரு போலிஸ் காரிலிருந்து காவலர் இறங்கி அவர் கையை பிடித்து இழுத்து நிறுத்தி /கண்டிப்புடன் பச்சை வரும் வரை காத்திருந்து செலுங்கல் :)என்றார் ....எளியோருடன் அமர்ந்து உண்ணும் அந்த மனம் எனக்கும் வேண்டும்னு நானும் வேண்டிகொள்கிறேன் ..உண்மையில் அந்த மனிதருடன் உணவுண்ணும் பெண்மணி கடவுளுக்கு அடுத்தபடியா மனசில் இருக்கார் .

   Delete
 11. அந்த ஆம்புலன்ஸ் விஷயம் மிக மிக தேவையான ஒன்று நம் நாட்டுக்கு பல உயிர்கள் காக்கப்படும்

  ReplyDelete
 12. ஏஞ்சலின்,

  ஹி ஹி ! இங்கு வந்த புதுசுல ஆங்காங்கே சாலையில் உள்ள 'ஆரஞ்சு கோன்' பற்றி சொன்னதுகூட 'எங்க பாப்பா'தான். இவர்கள் பள்ளியில் முதலில் கற்றுக்கொள்வது இது மாதிரியானவைதான்.

  "எப்படி இன்னும் எதிர்ப்பு வராம இருக்கு !" என நினைத்துக்கொண்டேதான் படித்தேன். ஏற்கனவே ஆப்பிரிக்க மனித‌ உருவில் வடிவமைத்துவிட்டு ...... ஏகத்துக்கும் பிரச்சினை.

  இவர்களுக்கு சாப்பிடவும், தங்கவும் இலவசமாக இடம் இருந்தாலும் அங்கு போகமாட்டார்கள், எல்லாம் போதைப் பழக்கம்தான்.

  கடைசிப் படம் மனதைத் தொட்டது.

  ReplyDelete
 13. எல்லாத்தகவல்களும் அருமை அஞ்சு. ஹோம்லெஸ் ஜீசஸ் செய்தி ,படங்களும் நன்றாக ,அறியாத வற்றை உங்க பகிர்வின் மூலம் அறிந்துகொண்டேன். கடைசிப்படம் மனதில்.நன்றி

  ReplyDelete
 14. இப்படி பட்டோருக்கு எங்கள் ஆலயத்தில் வருடந்தோறும் நவம்பர் துவங்கி ஏப்ரல் வரை இரவு உறங்க வசதி அமைத்திருக்கிறார்கள் .
  திங்கள் ஒரு ஆலயம் செவ்வாய் ஒரு ஆலயம் என லிஸ்ட் போட்டு இருக்கும் //

  நல்ல செயல்.

  லவுட் ஸ்பீக்கரில் வரும அனைத்தும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete