அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/4/14

Loud ஸ்பீக்கர் ...4 :)TIME CAPSULE ,ரசித்து ருசித்த சமையல் மற்றும் ஒரு சர்ப்ரைஸ் :))

ஸ்பீக்கர் 4.  :)

டைம் காப்ஸ்யூல் ...
                                                                                      

நாங்க பக்கத்து சிட்டிக்கு போனபோது ஒரு இடத்தில பெரிய 
வட்ட தகடு ஒன்று தரையில் பொருத்தப்பட்டு இருந்தது .
அதைப்பார்த்ததும் என் மகள் சொன்னா . இது டைம் காப்ஸ்யூல் .
.அப்புறம் அவளே எனக்கு சில விஷயங்கள் அதைப்பற்றி 
சொன்னாள் ..
                                                                             
       
டைம் காப்ஸ்யூல் ! .. பொக்கிஷம் !!!! என்றால் நமக்கு பிடித்த 
பொருட்களை பெட்டகத்தில் பத்திரப்படுத்தி வைப்பது போல 
வெளி நாட்டினர் தாங்கள் பயன்படுத்திய பொருட்கள் /நாட்குறிப்பு  
காதல் கடித(ங்கள் ): ம் ,பேனா ,சாக்லேட் தாள் ,கைக்கடிகாரம் ,
கைக்குட்டை மற்றும் சகல பொருட்களை இரும்பு பெட்டகத்தில் 
வைத்து புதைப்பார்கள் .புதைத்த இடம் மறக்காமலிருக்க அங்கே 
ஒரு இரும்பு வட்ட தகடை பொருத்தி விடுவார்கள் .அதில் 
புதைத்த நாள் நேரம் எல்லாம் இரும்பு அச்சிட்டு இருக்கும் 
அதனை மீண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் திறந்து 
பார்ப்பார்கள் ....2000 ஆம் ஆண்டு புதைத்த ஒரு பெட்டகம் முப்பது 
ஆண்டுக்கு பின்னர் தோண்டி யெடுக்கப்படும் ..
இது பழைய நினைவுகளை மீட்டிபார்க்கவும் ஒரு வழி ..!!


நம்ம நாட்டில் கூட பழைய பொக்கிஷங்களை பானையில் போட்டு 
நிலத்தில் புதைப்பார்கள் ..சிலர் எதிரிகளிடமிருந்து பொக்கிஷத்தை
 பாதுகாக்க ஒளித்து வைப்பார்கள் ,மருமகள்களுக்கு தன் நகை போய்டகூடாது என்ற நல்லெண்ணத்துடன்:) சில மாமியார்கள் 
யாருக்கும் தெரியாத இடத்தில புதைத்து வைப்பதும் உண்டு 
சில பல வருடங்களுக்கு பின் யாராவது நிலத்தை தோண்ட இந்த புதையல்கள் வெளி வரும் ..
                                                           

யாருக்கோ சொந்தமான பொருள் யாரோ ஒரு மூன்றாம் நபருக்கு கிடைக்கக்கூடும் !இதெல்லாம் காலந்தொட்டு நடந்து வருபவை ..

          இதை போல இயற்கை சூழியலை பலவித காரணிகளின் அழுத்தத்திலிருந்து (ecological stress)பாதுகாக்க இயற்கை 
ஆர்வலர்களின் முயற்சியுடன் உலகில் முதன் முறையாக 
ஏற்படுத்தப்பட்ட living time capsule .உயிருள்ள ஒரு டைம் காப்ஸ்யூல் பின்லாந்து நாட்டில் உருவாக்கியிருக்கின்றார்கள் .

உலகிலேயே முதன் முதலாக மனிதர்களால்1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 420 மீட்டர் நீளம் 270 மீட்டர் அகலம் 38 மீட்டர் 
உயரமுடன் நீள்வட்ட வடிவமான பிரம்மாண்ட மரங்களால் 
ஆன மலை.

                                                                        

இந்த மலையில் ..உலகின் பல பகுதியை சார்ந்த 11,000சுற்று 
சூழல் ஆர்வலர்களால் 11,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன .
இம்மரங்களை நட்ட ஒவ்வொருவருக்கும் சான்றிதழும் 
அம்மரங்களுக்கு பொறுப்பாளர் என்ற அத்தாட்சியும் பொறுப்பினையும் வழங்கி யுள்ளது பின்லாந்து அரசு .
                                                                                


நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு  சுமார் முப்பது சந்ததிக்கு அப்புறம் இம்மரங்களை நட்டவர்களின் சந்ததியினர் தங்களுக்கென முன்னோர்கள் உருவாக்கிய இயற்கையெனும் நிலையான  பொக்கிஷத்தை காணும் பாக்கியம் பெற்றவர்கள். 
இதில் முக்கிய விஷயம் அவ்வளவு பெரிய பரப்பளவு இடத்தை மரங்கள் வளர்ந்து ஆக்கிரமிக்கும் ..அந்நாட்டு அரசே அந்த இடத்தை வேறொரு காரியத்துக்கும் பயன்படுத்தவோ முடியாது ..அவ்வளவும் பதினோராயிரம் மனிதர்களின் பொதுவான சொத்து...

பொன் வெள்ளியைவிட வேறெதனையும் விட வருங்கால சந்ததிக்கு மரங்களே மிக மிக அவசியம் !!
............................................................................................................................................

அடுத்தது ஒரு ரசித்து ருசித்த சமையல் குறிப்பு
மேனகாவின் குறிப்பு பார்த்து செய்த சீஸ் குடை மிளகாய் பராத்தா 

                                           
               

பிறகு  :))))))))
                                                               

முதல் முறையாக எனது பேட்டி தேனக்கா என்று அழைக்கப்படும்  தேனம்மை லக்ஷ்மணன் அக்கா அவர்களின் 
வலைப்பூவில் இன்று வெளிவந்துள்ளது .எனது விருப்ப க்வில்லிங் 
பற்றி கூறியுள்ளேன் ..
இது அக்கா அவர்களின் வலைத்தளம் லிங்க் 
http://honeylaksh.blogspot.in/2014/10/blog-post_4.html
சென்று வாசித்து கருத்துக்களை கூறவும் ..

அன்புடன் ஏஞ்சல் ..45 comments:

 1. //பொன் வெள்ளியை விட வருங்கால சந்ததிக்கு மரங்களே மிக மிக அவசியம்..//

  இனிய கருத்துரையுடன் - நல்லதொரு பதிவு!..

  ReplyDelete
  Replies
  1. உடன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா

   Delete
 2. இதுவரை அறியாத அருமையான செய்தியும், ருசியான சீஸ் குடை மிளகாய் பராத்தாவும் அதைவிட இனிக்கும் பேட்டியும் என இந்தப்பதிவே மிகவும் கலக்கலாகத்தான் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா:)

   Delete
 3. மரங்க்ளால் ஆனமலை புதிய தகவல்.மிளகாய் சீஸ் பார்த்தா செய்து பார்க்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீக்கிரம் செய்து சாப்பிட்டு சொல்லுங்க சீஸ் பராத்தா :)

   Delete
 4. அருமை! அருமை!
  அத்தனையும் மிக அருமை!

  அதிலும் பெருமைதரும் பேட்டியும்
  பொக்கிஷ விடயமும் கூடவே
  நாவுக்கு சுவையினைத் தரும் பராத்தாவும்....

  இன்றைய பதிவே மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கிறது!

  மேலும் உங்கள் புகழ் ஓங்கவும் பெருமைகள் சிறக்கவும்
  உளமார வாழ்த்துகிறேன் அஞ்சு!

  சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கும்
  இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் உங்களன்புக்கும் மிக்க நன்றி இளமதி :)

   Delete
 5. சூப்பர்,அனைத்து தகல்வளும் நன்று...பராத்தா செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றிப்பா..

  தேனக்கா பதிவில் கமெண்ட் போட்டாச்சு,வாழ்த்துக்கல் ஏஞ்சலின் !!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா :) தினமும் கலர்புல் பராத்தாதான் இப்பெல்லாம் வீட்டில்

   Delete
 6. எனக்கு புதியதான தகவல்கள். ஏஞ்சல் அக்காங் :-)
  பேட்டி ரொம்ப நல்லாயிருக்குங்க..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங் தம்பி குணாங் :)

   Delete
 7. ” TIME CAPSULE “ – நல்ல சுவாரஸ்யமான விஷயம்.

  // சில பல வருடங்களுக்கு பின் யாராவது நிலத்தை தோண்ட இந்த புதையல்கள் வெளி வரும் .. யாருக்கோ சொந்தமான பொருள் யாரோ ஒரு மூன்றாம் நபருக்கு கிடைக்கக்கூடும் ! இதெல்லாம் காலந்தொட்டு நடந்து வருபவை .. //

  இதனால்தான் “தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் “ என்றார்கள் போலிருக்கிறது.

  சில ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, ” காலப் பெட்டகம் “ என்ற பெயரில் இந்திய வராலாற்று குறிப்புகளை ஒரு பெரிய ஸ்டீல் பெட்டகத்தினுள் வைத்து புதைத்ததாக நினைவு.

  பதிவில் மற்ற தகவல்களும் புதுமைதான். உங்கள் பேட்டியை படித்துப் பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இந்த இந்திராகாந்தி காலப் பெட்டகம் நான் அறியாத ஒன்று அண்ணா .
   இதை பற்றி இன்னும் அறிய ஆவலாக இருக்கு .இயன்றால் உங்கள்ம்பதிவில் எழுதுங்களேன்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

   Delete
 8. பின்லாந்து பின்னுதே...
  அற்புதமான சிந்தனை...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..உண்மைதான் இங்கே ஐரோப்பிய நாடுகள் பலவும் இயற்கையை பாதுகாக்க பல விஷயங்களை மேற்கொள்கிறார்கள் .மிருகங்கள் கடந்து செல்ல தனி ப்ரிட்ஜே கட்டியிருக்காங்கன்னா பாருங்களேன்

   Delete
 9. டைம் காப்ஸ்யூல் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் அது பற்றி விரிவான தகவல்களை அறியதந்தற்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன் சகோ .நான் படிச்சதை மற்றும் எனது மகளிடமிருந்தும் கற்றதை அனைவரிடமும் பகிர்ந்துள்ளேன் :)

   Delete
 10. புதிய தகவல் தெரிந்து கொண்டேன் சகோ.
  வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   Delete
 11. டைம் கப்ஸ்யூல் பற்றி கேள்விப் படவில்லை அறியத் தந்ததமைக்கு நன்றி ! அனைத்தும் ரசித்தேன்.
  .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இனியா .நான் படிச்சதை மற்றும் எனது மகளிடமிருந்தும் கற்றதை பகிர ஆசை :)

   Delete
 12. //சில மாமியார்கள்
  யாருக்கும் தெரியாத இடத்தில புதைத்து வைப்பதும் உண்டு
  சில பல வருடங்களுக்கு பின் யாராவது நிலத்தை தோண்ட இந்த புதையல்கள் வெளி வரும் ..//
  அனுபவம் பேசுதுபோல இருக்கேஏஏஏஏஏஏஏஎ...

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர் :) எங்க அத்தை எப்பவோ சாமிகிட்ட போயிட்டாங்க :) அதனால் இது பிறரின் அனுபவம் :)

   Delete
 13. //பொன் வெள்ளியைவிட வேறெதனையும் விட வருங்கால சந்ததிக்கு மரங்களே மிக மிக அவசியம் !!
  .........................................................../// ஓ அப்போ அஞ்சு உங்கட நகை வச்சிருக்கும் லொக்கர் கீயை என்னிடம் தாங்க.. எங்களிடம் பெரிய மரமிருக்கும் தாறம்... பேச்சு பேச்சா இருக்கோனும் சொல்லிட்டென்...

  ReplyDelete
  Replies
  1. :) thats the spirit :)அதிரா ரிட்டர்ன்ஸ் :) ச்ச்ச்ச்யப்பா ஒரு பேச்சுக்கு கூட இனி பேசும்போது பத்தாயிரம் தரம் யோசிசிட்டுதான் எழுதணும்

   Delete
 14. //அடுத்தது ஒரு ரசித்து ருசித்த சமையல் குறிப்பு/// ஹையோ முருகா விடுங்கோ விடுங்கோ நான் காசிக்குப் போயிடுறேன்ன்ன்ன்... நெஞ்சு பொறுக்குதில்லையப்பா... :)

  ReplyDelete
  Replies
  1. Dont worry my child :) இதாவது ரசித்து ருசித்தது இனிமேல் எல்லாம் சொந்த குறிப்பா போடறேன் :) chase yooo to kaasi :)

   Delete
 15. //முதல் முறையாக எனது பேட்டி தேனக்கா என்று அழைக்கப்படும் தேனம்மை லக்ஷ்மணன் அக்கா அவர்களின்
  வலைப்பூவில் இன்று வெளிவந்துள்ளது .// பேட்டி மட்டுமோ? ஊர்வசியையும் பார்த்தமே :)

  ReplyDelete
  Replies
  1. :) :) யார் அதிஸ் அது :)

   Delete
 16. நலமா ஏஞ்சலின் ?

  வீட்டில் அனைவரும் நலம் தானே...?


  வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு...ஹனி வலைப்பூவில் இன்று தான் பார்த்தேன்...வாழ்த்துக்கள்...

  கொஞ்சம் வேலைப்பளு...நிறைய பயணம்...


  மறுபடி வருகிறேன்...

  ரெவெரி

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சந்தோஷம் உங்களை இங்கு பார்த்ததில் ரெவரி சகோ :)
   வேலை பிரயாணம் எல்லாம் முடிச்சு நிதானமா வாங்க ...

   Delete
  2. நாங்க அனைவரும்நலம் ரெவரி ! கலை நான் நேசன் யோகா அண்ணா பேபி நிலா ஹேம்ஸ் அப்புறம் அப்புறம் உங்க அதிரா அக்கா கூட நலம் :))))))))))

   Delete
 17. அருமையான தகவல் அக்கா .... பேட்டி படிச்சி முடிச்சதும் வார்ரேன் அக்கா

  ReplyDelete
  Replies
  1. ஆஆவ் !!! கலை தேடினியே அண்ணாவை வந்திருக்கார் பார் !!!

   Delete
 18. இது வரை உங்கள் பதிவு என் டேஷ் போர்டில் வருவதில்லை
  இப்ப தான் பார்த்தேன், நீங்க வரும் போது அபப்டியே உங்கள் லின்க் வந்து கமென்ட் அளித்து சென்றுள்ளேன். இன்று தான் ஆட் பண்ணேன்.
  பேட்டிய படிச்சாச்சு, அருமை
  பராட்டா சூப்பர்

  ReplyDelete
 19. ஆஹா சூப்பர் பதிவு.புதிய செய்திகள்.நன்றிம்மா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா

   Delete
 20. உங்கள் பதிவு ப்ளாகர் டேஷ் போர்டில் வரவில்லை. இப்போது பார்த்துதான் வந்தோம்.

  அருமையான தகவல்! பொக்கிஷத்தகவல்!

  பின்லாந்து டைம்காப்ஸ்யூல் அருமையான சிந்தனை....

  நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு சுமார் முப்பது சந்ததிக்கு அப்புறம் இம்மரங்களை நட்டவர்களின் சந்ததியினர் தங்களுக்கென முன்னோர்கள் உருவாக்கிய இயற்கையெனும் நிலையான பொக்கிஷத்தை காணும் பாக்கியம் பெற்றவர்கள். //

  இது போன்று நம்நாட்டிலும் செய்யலாமே. வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள....இப்படி வழி வழியாகச் செய்தால் இயற்கையும் பராமரிக்கப்படுமே!

  சகோதரி தேனம்மை அவர்களின் வலைத்தளத்தில் தங்களின் பேட்டி கண்டுதான் உங்கள் பின்னூட்டம் பார்த்து பின் உங்கள் வலைத்தளத்தைத் தொடர்கின்றோம்!  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா .நான் லேபிள்ஸ் போட மறந்ததால் இந்த பதிவு தெரியாமல் போயிருக்கும் ..நான் முகபுதகத்தில நலம் மற்றும் பசுமை விடியலில் பகிர்வதை இங்கும் பகிர்கிறேன் .
   எனக்கு இயற்கை வளம் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி அனைவரிடம் பகிர மிக விருப்பம் !

   Delete
 21. காலப் பெட்டகம் அருமையான கான்செப்ட். மரங்களைக் காப்பது பிற்காலச் சந்ததிக்கென்ன, நமக்கே பயன்படும்! இப்போதும் கூட அகழ்வாராய்வில் சில பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு இவையெல்லாம் அந்தக் காலத்தில் உபயோகப் படித்தப் பட்டன என்று அறியும்போது பழங்கால மனிதர்கள் நம்மைவிட மேம்பட்டவர்களாக இருந்தார்கள் என்ற எண்ணம் தோன்றும்!

  ReplyDelete
 22. உங்கள் பதிவுகளுக்கு ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் சேர்க்கலாமே...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ..இப்போ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் இணைசிட்டேன் :)

   Delete
 23. நன்றி! சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன்!

  ReplyDelete
 24. நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு சுமார் முப்பது சந்ததிக்கு அப்புறம் இம்மரங்களை நட்டவர்களின் சந்ததியினர் தங்களுக்கென முன்னோர்கள் உருவாக்கிய இயற்கையெனும் நிலையான பொக்கிஷத்தை காணும் பாக்கியம் பெற்றவர்கள். //

  மிக உன்னதமான் பொக்கிஷ பகிர்வு ஏஞ்சலின்.

  குடைமிலஆய் பராத்தா, க்வில்லிங் கைவேலை அருமை.

  ReplyDelete