அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/29/14

ஹாலோவீன் கொண்டாட்டம் ............

ஹாலோவீன் கொண்டாட்டம் ............
                                                                              

இனி வரும் படங்களை பார்த்து 
பயந்திட வேண்டாம் :))
                                                                                  

                                                   
                                                                                   


அக்டோபர் 31  அன்று  ஹலோவீன் கொண்டாட்டங்கள் 
நடைபெறும் .அன்று இரவு சூனியக்காரிகள்  ,கொள்ளி வாய்பிசாசுகள்,
நீலி ,இரத்த காட்டேரிகள் எல்லாம் ...............
                                      
                                                 (இது என் செல்பி இல்லை :)

                                                                             

ரொம்ப புத்துணர்வோடு உலாவும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கை :)
அது சரியாக நவம்பர் 1 (all saints  day )ஆம் தேதிக்கு முன் வருவதால் 
அதையொட்டியும் இந்த கொண்டாட்டம் என்றும் சிலர் சொல்கிறார்கள் ..
                                                                   
                                                                                 

                                                              டெகரேஷன்ஸ்   !!!
   
அந்தநாளில் மக்கள் பேய் காஸ்ட்யூமில் உலாவினால் மேலே சொன்ன 
பேய்கூட்டம் இந்த முகமூடி மற்றும் பேய் போல உடையணிந்த மக்களை பார்த்து அவங்களும் நம்ம :) !! கூட்டம்னு நினைத்து அட்டாக் செய்யாம போயிடும் என்பது மக்களின் நம்பிக்கை அதனால்  அன்று இரவு சின்னது பெரிசு என்று வகை தொகை இல்லாம எல்லாரும் பேய் பிசாசு மாதிரி ஆடை அலங்காரம் எல்லாம் செஞ்சுக்கிட்டு வீடு வீடா போய் பயம் காட்டி (மிரட்டி ) ஏதாவது சன்மானம் பெறுவாங்க .இவங்களுக்கு கொடுக்கவென்றே கடைகளில் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற தாள்களில் சுற்றிய மிட்டாய்கள் கிடைக்கும் . அன்று பூசணி சூப் சமைப்பாங்க .
                                                                                 

சன்மானம் தர விரும்பாதவர்கள் 
NO TRICK OR TREAT.என்ற வாசகத்தை ஜன்னலில்தெரிகிற மாதிரி 
 ஒட்டி வைக்க வேண்டும் .அப்படி ஒட்டியிருந்தால் இந்த ஒரு நாள்
 பிசாசுகள் தொல்லை தர மாட்டாங்க :)
ஆரம்ப காலத்தில் பீட்ரூட் மற்றும் நூல்கோலை இப்படி முகம் 
வடிவமாக வெட்டி குடைந்து அதனுள் சிறு விளக்கை வைத்திருந்தார்கள் 
பிறகு அளவில் பெரிய பூசணியை இதற்க்கு பதில் பயன்படுத்த துவங்கினார்களாம் .
ஹாலோவீன் சமயத்தில் மஞ்சள் பூசணி எல்லா கடைகளிலும் 
கிடைக்கும் .பெரிய பூசணியை வெட்டி கண் மூக்கு எல்லாம் 
குடைந்து மெழுகு கொளுத்தி வாசலில் வைப்பாங்க .
நெருப்பு பார்த்தா பேய் ஓடிடும் மற்றும்  குறிப்பிட்டுள்ள பிசாசுகளை
ஓட ஓட விரட்டும் என்பதும் ஐதீகம் .
                                                                                       
அன்று இரவு பார்ட்டி எல்லாம் நடக்கும் .இந்த ஹாலோவீன் 
கொண்டாட்டதுக்கு என்றே எல்லாம்  பேய் ட்ரஸ் 
எல்லாம் வாங்குவாங்க . கிறிஸ்மசுக்கு அலங்கரிக்கற 
மாதிரியே வீட்டை ஹாலோவீன் ஸ்பெஷல்ஸ் சிலந்தி
வவ்வால் ,பூச்சி ,கருப்பு பூனை,மண்டை ஓடு  எல்லாம் 
வைத்து அலங்காரம் செய்திருப்பார்கள் .நம்ம ஊர் 
தென்னந்துடைப்பம் கூட வச்சிருப்பாங்க பேய் ஓட்டறதுக்கு :))...
                                                                               
                                                                                

இதெல்லாம் மக்கள் அனைவரும் செய்யும் விஷயம் இங்கே ஒரு நாள் சந்தோஷம் .கிறிஸ்தவ இல்லங்களில் பெரும்பாலும் இக்கொண்டாட்டம் நடைபெறாது ..இம்முறை இங்குள்ள ஆலயங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து world விஷன் உடன் இணைந்து சிரியாவின் போரினால் இயல்பு வாழ்வை தொலைத்த அகதிகளாக உள்ள சிறு பிள்ளைகளுக்க்காக வித்யாசமாக ஹாலோவீன் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் .
                                                                                        
//A NIGHT OF HOPE .... EVERY CHILD FREE FROM FEAR
On October 31st, show the children of Syria they have not been forgotten. Churches across the country are joining together to turn a night of fear into a night of hope.  //

                                                                                     

ஒரு பூசணிக்காயை வாங்கி அதில் இதய வடிவம் வெட்டி செதுக்கி  எடுக்கணும் அதில் டீ லைட் கொளுத்தி அந்த செதுக்கப்பட்ட பூசணியுடன் ஒரு selfie எடுத்து world விசனுக்கு அனுப்பனும் .அது அங்குள்ள  சிறிய பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு ..உலகம் அவர்களை மறக்கவில்லை என்று நம்பிக்கயூட்டுவதற்க்கு !பிறகு அவர்கள் கொடுத்த எண்ணுக்கு sms செய்து ஒரு தொகை (ஐந்து பவுண்ட்) அனுப்ப வேண்டும் ......

.உலகெங்கும் ஹாலோவீன்  கொண்டாட்டங்கள் காரணம் இங்கே இருக்கு 


http://www.history.com/topics/halloween/halloween-around-the-world

http://www.pumpkinpatchesandmore.org/halloweenglobal.phpஅன்புடன் 

ஏஞ்சல் ...

24 comments:

 1. ஏஞ்சல்,

  இங்கும் ஹாலோவின் ரொம்ப ஃபேமஸ். அதைப் பற்றிய விளக்கம் அருமை.

  "இனி வரும் படங்களை பார்த்து பயந்திட வேண்டாம்" _____ என்றதும் படத்திலிருந்து ஏதாவது ஒரு உருவம் மட்டும் நீண்டு வெளியே வருவது போன்று இருக்குமோ என்று பயந்துகொண்டே பார்த்தேன்.

  World vision செய்யும் சேவை பாராட்டத்தக்கது. நன்மக்கள் கொடுப்பது அம்மக்களை சென்று சேர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) வாங்க சித்ரா ..முதல் கமெண்ட் நீங்கதான் உங்களுக்கு ஒரு கப் பூசணி சூப் பார்சல் பண்றேன் :)
   ..இல்லை எதுக்கும் கொஞ்சம் அட்வான்சா சொல்லிடலாமேன்னு தான்..அலெர்ட் பண்ணேன் நிறைய படங்கள் இணைக்கல்லை அதெல்லாம் ரத்தம் வழிய வழிய முட்டை கண் எல்லாம் பயம்மா இருந்திச்சி எனக்கே :)வருகைக்கு மிக்க நன்றி :)) .

   Delete
 2. Here we went to a farm and picked a pumpkin to make the Halloween lantern. My kids celebrate at school.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வான்ஸ் ..ஆமாம் நான் முன்பு மகளுக்கு ஒரு முறை செய்தேன் அப்புறம் பள்ளியில் ப்ரைமரி வகுப்பு வரை செய்து கொண்டு வருவா .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 3. இந்தக் கொண்டாட்டங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நம் நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு காரணம் இருக்கும். வசந்த காலத்தை வரவேற்க, வயல் வெளிகளைச் சுத்தம் செய்ய, அறுவடைக்கு ஆட்களைக் கூட்ட என்பது போல இந்த விழாவுக்கும் பின்னணிக் காரணம் ஒன்று இருக்கக் கூடும்!

  ReplyDelete
  Replies
  1. http://www.pumpkinpatchesandmore.org/halloweenglobal.php
   ஆமாம் ஸ்ரீராம் நேற்று ஒரு சுட்டியை இணைக்கவில்லை இப்போ இணைச்சுட்டேன் ..உலகெங்கும் இதன் கொண்டாட்டங்கள் காரணம் இங்கே இருக்கு

   Delete
 4. சகோ, இங்கும் ஹாலோவீன் கொண்டாட்டம் நடக்கும். ஆனால் எனக்கு அதை பற்றி முழுமையான விளக்கம் தெரியாது. தாங்கள் அதை மிக அழகாக படங்களுடன் விளக்கியுக்ள்ளீர்கள். மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சொக்கன் வருகைக்கும்கருதுக்கும் மிக்க நன்றி ..ஆஸ்திரேலியாவில் கூட இவ்விழா உண்டு ஐரிஷ் காரங்க பரப்பியது இது ..இப்போ எங்களுக்கு பள்ளி விடுமுறை அதனால் கடைகள் எல்லாம் ஒரே கூட்டம் இப்பொருட்களை வாங்க:)

   Delete
 5. நானும் சித்ரா சொன்ன மாதிரி ஏதோ பயங்கரபடம் போட்டிருக்கிறீ ங்களோ ந்னு நினைச்சேன்.
  ஹலோ வீன் கொண்டாட்டங்களின் தகவல்களை நன்றாக எழுதியிருக்கிறீங்க அஞ்சு. இவங்களோட நம்பிக்கை சிலது எங்களோட ஒத்து போகுது. பேய்,பிசாசு. அப்புறம் அவைக்கு பூசணி,துடைப்பம் என்று. இங்கும் இதே கதைதான். கடைகளில் இவ்வகை ட்ரெஸ், பூசணிக்காய் என ஹலோவீன் பொருட்கள் தான்.worldvision சேவை மிகவும் பாராட்டவேண்டியதொன்று.

  //(இது என் செல்பி இல்லை // அப்போ யாராயிருக்கும்??!!!!!. ஆனாலும் பயமுறுத்துது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா :)) ஆமாம் எனக்கு அந்த துடைபத்தை பார்த்ததும் சின்ன வயசில் வீட்டு கொல்லைப்பக்கம் பெட் கிட்ட எல்லாம் வைச்சி படுப்போம் அந்த நினைவு தான் வந்தது :)
   என்னாது செல்பி பயங்கரமா இருக்கா :) அது அ ஆரம்பித்து ராவில் முடியும் பெயர் நடுவில் தி போட்டுக்கோங்க :) அவங்க செல்பி .........

   Delete
 6. World vision செய்யும் சேவைக்குப்பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..ஆமாம் அக்கா அவர்கள் நிறையவே செய்கிர்றார்கள்

   Delete
 7. நல்ல பகிர்வு அஞ்சு!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி

   Delete
 8. ஹாலோவீன் கொண்டாட்டம் // இதுவரை கேள்விப்படாத விபரம். இப்படியும் கொண்டாடுவார்களா..? என ஆச்சரியமாக இருந்தது. நம்பிக்கை தானே...

  இம்முறை இங்குள்ள ஆலயங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து world விஷன் உடன் இணைந்து சிரியாவின் போரினால் இயல்பு வாழ்வை தொலைத்த அகதிகளாக உள்ள சிறு பிள்ளைகளுக்க்காக வித்யாசமாக ஹாலோவீன் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் .//

  ஆம் குழந்தைகளுக்கு ஒரு ஆறுதல் வேண்டியது அவசியம் தான் நல்லது அன்றோ...

  பூசணியை அழகா செதுக்கு தீபம் ஏற்றிருப்பது அழகாக இருக்கிறது.

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி உமையாள் ..ஆமாம் சிரியா பிள்ளைகள்பாவம் அதனால் தான் இம்முறை அவர்களையும் நாங்க மறக்கலைன்னு இந்த கொண்டாட்டம் .

   Delete
 9. ஹாலோவீன்
  இஸ் நாட் ஹாலோ ...
  நிறைய தெரிந்துகொண்டேன்
  எனக்கு உடன் நினைவு வருவது தி க்ரோ படம்தான். என் பிரியத்திற்குரிய ப்ருஸ்லியின் மகன் பிரான்டன் லீ நடித்தபடம் ...
  படத்தில் ஹாலோவீன் அன்று அவர் திருமணம் செய்துகொள்வார். ..

  கதையில் அன்றே கொல்லவும்படுவார்

  சோகம் என்னவென்றால் உண்மையிலேயே அவர் அதே படத்தில் ஒரு படபிடிப்பு விபத்தில் கொல்லப்பட்டுவிட்டார் ...

  நினைவலைகளை ஏற்படுத்தும் பதிவு சகோதரி..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சகோதரர் மது ..என் கணவரும் இதே விஷயம் சொன்னார் .!!

   Delete
 10. ஆம் சகோதரி! இதைப் பற்றித் தெரியும், கீதா அமெரிக்காவில் இருந்திருப்பதால் தெரியும். இதுவும் ஒரு வகையான அறுவடை சம்ப்ந்தப்பட்ட விழா தான் இல்லையா...பூசணிக்காய் (சிவப்பு) நிறைய வருமாமே ....எங்கு பார்த்தாலும் புசணிகளாய் இருகும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம்....புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன. நல்ல விளக்கங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சகோதரர் தில்லை . தாங்க்ஸ் கிவிங் சமயத்தில் பூசணி உணவுகள் famous ..
   பயங்காட்டும் படங்கள் இங்கே ஷாப்பிங் போனபோது எடுத்தது :)
   pagan festival இணைந்திருக்கும் என்பதால் நாங்க கொண்டாடுவதில்லை ..ஆனா சிறிய பிள்ளைகளுக்கு பணம் அனுப்ப மட்டும் இம்முறை ஸ்பெஷல் கொண்டாட்டம் ..

   Delete
 11. ஹாலோவீன் கொண்டாட்டம் வாழ்த்துககள்! படங்களும் கட்டுரையும் நல்ல சுவாரஸ்யம். பெரிய பூசணிக்காய் பற்றி . சிறப்பு செய்திகள். இதற்கு முன்னர் கடந்த ஆண்டுகளில் வல்லிசிம்ஹன், துளசி கோபால் ஆகியோர் தங்களது வலைத் தளங்களில் எழுதிய ஹாலோவீன் நிகழ்ச்சி பற்றிய கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன்.
  .
  நன்றி!

  ReplyDelete
 12. ஹாலோவின் கொண்டாட்டங்கள் பதிவினைப் பார்த்தேன்....இப்படியுமா விழா என எண்ணவைத்தது....மனித கற்பனைகள்....கடவுளையும் மிஞ்சிவிடும்!

  ReplyDelete
 13. ஐய்யோ.......பேய்.....பேய்....:):):)

  ReplyDelete
 14. ஹாலோவின் சமயம் போன வருடம் அமெரிக்காவில் இருந்தேன் கடைகள் , வீடுகளில் ஹாலோவின் கொண்டாட்டங்கள் கண்டு மகிழ்ந்தேன். என் பேரனும் ஹாலோவின் உடை(டைனோசர்) அணிந்து மிட்டாய் வாங்கி வந்தான் சில் வீடுகளில், மற்ற குழந்தைகளும் எங்கள் வீட்டுக்கு வந்து வாங்கி சென்றார்கள். வீட்டுக்கு எதிரே சோள்கொல்லை பொம்மை போல் உருவம், பெரிய பூசணி எல்லாம் வைத்தோம்.
  நானும் ஹாலோவீன் பதிவு போன வருடம் போட்டேன்.

  உங்கள் பகிர்வும், செய்திகளும், படங்களும் மிக அருமை ஏஞ்சலின்.

  ReplyDelete