அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/21/14

தீபாவளி வாழ்த்துக்கள் ,Diwali in uk

தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் :) 


                                                                             
xxxxxxxxxxxxxx 

இது குஜராத்தி பாட்டி ஒருவருக்கு செய்தது எங்க ஊர் தீபாவளி படங்கள் சில :)

இது லெஸ்டர் எனும் பகுதியில் வீதியெங்கும் 
வண்ண விளக்கு அலங்காரங்கள் .
இது அதிகமாக இந்தியர்கள் வாழும் பகுதி .
உகாண்டாவில் இருந்து 1962 களில் மிக அதிகமான 
ஆசிய வம்சாவளியினர் இங்கு குடி பெயர்ந்தனறாம் 
ஒரு காலத்தில் அப்பகுதி எவ்வித முன்னேற்றமின்றி 
இருந்தது இவர்களின் வருகைக்குபிறகு அந்த பகுதி 
செழிப்பானது .
நிறைய நகை கடைகள் ,துணிக்கடைகள் 
அப்புறம் ஹோட்டல் சரவணபவன் கூட இருக்கு :)
தீபாவளி பட்டாசு வெடிக்க பல்லாயிரக்கணக்கில் 
மக்கள் இங்கு கூடுவார்கள் !!

இது சுவாமி நாராயணன் கோவில் .லண்டன் 
மிக பெரிய கோவில் .
Swaminarayan Mandir is the largest traditional Hindu temple 
outside India!

ஆண்டுதோறும் இங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் 
நடைபெறும் பிரதமரும் அவரது மனைவியும் சிறப்பு 
விருந்தினர்கள் .

பாருங்க எங்க தல டேவிட் காமரூனும் அவரது 
மனைவி சமந்தா காமரூனும் போறாங்க :)

தலைவியோட சாறி கலர் எனக்கு பிடித்திருப்பதால் 
தனியா ஒரு படம் :)


எங்க ஏரியாவில் ஒரு வாரமாகவே எல்லா ஸ்வீட்சும் சுட சுட 
உடனே கண் முன்னாலேயே சுட்டு தராங்க :)
நாளைக்கு டவுன் பக்கம் போனா ஜெகஜோதியா இருக்கும் 
அனைவரும் சந்தோஷமா ஹெல்த்தியான 
உணவுகளுடன் இனிப்புகளுடன் மற்றும் லேகியத்துடன் 
தீபாவளி கொண்டாடுங்கள் .
அனைவருக்கும் இனிய இனிக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

அன்புடன் ஏஞ்சல் :)..

32 comments:

 1. வாழ்க நலம்..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 2. செய்திகள் + படங்கள் அனைத்தும் அருமை.
  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி கோபு அண்ணா

   Delete
 3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அருமையான காட்சிப்பகிர்வுகள் கமரூன் மனைவி சாரி அழகுதான்.ஹீ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நேசன் ..என்னது :) புடவை அழகா இருக்கா அப்ப உடனே அதே டிசைன் உங்க வீட்டமாவுக்கு ஆர்டர் கொடுங்க :)

   Delete
 4. அட, மிசஸ் கேமரூன் புடைவையில்!

  தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ..திருமதி கமரூன் கட்டியிருந்த சேலையும் அதைவிட அவங்க போட்டிருந்த நெக்லசும் சூப்பர் :)
   இங்கே நிறைய குஜராத்தியர்களும் பஞ்சாபியர்களும் இருப்பதால் ஜர்தோசி முதல் எல்லா வெரைட்டி சல்வார் சாரீஸ் எல்லாமே கிடைக்கும் :)

   Delete
 5. தீபாவளி வாழ்த்துக்கள்ம்மா ! தகவலும் படமும் அருமை !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி இனியா

   Delete
 6. கடல் கடந்த தேசத்தில் இருந்து வந்த, மதநல்லிணக்கம் கொண்ட உங்கள் தீபாவளி வாழ்த்திற்கு நன்றி! உங்கள் ஊரில் தீபாவளி கொண்டாடும் அன்பு நெஞசங்களுக்கும், அவர்களது இனிய தருணங்களில் பங்கெடுத்து மகிழும் சகோதரி குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா ..இருட்டு நேரமானதால் இரவில் என்னால் படங்களை எடுக்க முடியல்லை ..இன்னிக்கு இங்கே ஸ்வீட் கடைகள் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்தது .சனிக்கிழமை பக்கத்துக்கு சிட்டில பிரமாண்ட விழா நடைபெறும் ..அங்கு சென்றால் படங்கள் பகிர்கிறேன்

   Delete
 7. அழகழகான வாழ்த்து அட்டைகள் கண்ணைப் பறிக்கின்றன.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஏஞ்சல் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சித்ரா ..என் கணவரும் சொன்னார் இம்முறை அந்த முதல் கார்ட் ரொம்ப கலர்புல்லா இருக்குன்னு :) எல்லாம் கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பரை கையால் வெட்டி செய்தது

   Delete
 8. இரண்டும் க்விலிங் கார்டும் அழகா செய்திருக்கிறீங்க அஞ்சு.
  சிறப்பான தகவல்,படங்களும் நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியா எங்கே என் பங்கு ஸ்வீட்ஸ் ?:)))))
   வருகைக்கும் வாழ்த்துக்கும் பதிவை ரசிததற்க்கும் மிக்க நன்றி

   Delete
 9. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 10. படங்கள் அழகு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ ..இன்னும் நிறைய படங்கள் இணைக்க நினைச்சு டைம் இல்லாததால் விட்டுட்டேன்

   Delete
 12. அசத்தல் க்விலிங் தீபாவளி வாழ்த்து அட்டைகள்!
  சூப்பர்!..

  நல்ல தகவற் பகிர்வுகள்!
  மிக அருமை!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி இளமதி .எங்கே என் பங்கு ஸ்வீட்ஸ் ?

   Delete
 13. செய்திகள், படங்கள் யாவும் அருமை!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
   மனோ அக்கா .lighting ceremony என்று ஒன்று நடக்கும் பக்கத்து சிட்டியில் ஜகஜோதியா இருக்கும் ..திருவிழாதான் !


   Delete
 14. அசத்தலான பதிவு சகோதரி.. தொடர்க ..
  அதுவும் சிறப்பு விருந்தினர்கள்...வாவ்..
  நன்றி தகவலுக்கு...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் நன்றி சகோ .சிறப்பு விருந்தினர்கள் இம்மாதிரி கொண்டாட்டங்களில் அவசியம் கலந்து கொள்வார்கள் ..இன்னும் நிறைய படங்கள் இருந்தது .நேரபற்றாகுறை ஒன்றிரண்டு மட்டும் இணைத்தேன் .

   Delete
 15. ரம்மியமான பதிவு சகோதரி! மிகவும் ரசித்தோம்...தங்கள் கைவண்ணத்தை!

  அருமையான தகவல்கள்! எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி! சுடச் சுட ஸ்வீட் சாப்பிடுங்க....டேவி கமரூன்,,,அண்ட் மனைவி ஆஹா.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சகோ :)

   Delete
 16. அழகான கை வேலைப்பாடுகள். குஜராத்தி பாட்டி கொடுத்துவைத்தவர்.
  கோவில் மலர் தோட்டம் புகைப்படம் அழகு.
  சமந்தா காமரூன் அழகா புடவை கட்டி இருக்காங்களே..?
  வண்ணவிளக்குகள் கண்ணை கவர்கின்றன.
  தீபாவளி இனிதாக கழிந்து இருக்கும் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 17. மிசஸ் கேமரூன் புடைவையில்! அழகு.
  தீபாவளி பகிர்வு மிக அருமை.
  நீங்கள் செய்த வாழ்த்து அட்டை மிக அருமை.

  ReplyDelete