அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/31/14

Loud speaker ...7 ஓவியக் கலைஞர்கள் /street art.. Banksy, David Zinn


இன்றைய ஒலிபெருக்கியில் ஓவியர்கள் பான்க்ஸி  ,
டேவிட் ஜின் மற்றும் எளிய வீட்டு  குறிப்பு :) ..

முதலாமவர் ...DAVID  ZINN  ..

                                                                                 

இவர்  ஒரு பாதையோர  கார்டூனிஸ்ட் மிச்சிகன் பகுதியில் இவர் சாக் பீஸ் சித்திரங்கள் மிக பிரபலம் ..இவரது சித்திரங்கள் நிரந்தரமில்லாதவை ..மழை பெய்தா நீரில் கரைந்து  மறையும் ஆனாலும் இவரது நடைபாதையோர சித்திரங்கள் பலர் மனதை கொள்ளை கொண்டவை !
                                                                               
சிறிய  கற்பனை ஏலியன் மற்றும் slug எனும் ஓடில்லா நத்தை இவரது கதாபாத்திரங்கள் ...ரோட்டோரம் ,வெடிப்புக்கள் உடைந்த செங்கல் சுவர் ,நடை பாதை ஓரம், பூங்கா நாற்காலி என இவரது கதாபாத்திரங்கள் பலஇடங்களில் அழகூட்டுகின்றன ..படம் வரைய இவர் பயன்படுத்துவது வண்ண  சாக் பீஸ் மற்றும் கரித்துண்டங்கள் !! இவரது முகபுத்தக David Zinn பக்கம் சென்றால் நிறைய படங்கள் பார்க்கலாம் . 

                               ஓநாயை காப்பாற்றும் மூன்று எலிகள் 

                                                                             

உடைந்த ஸ்லாப் வழியே பார்க்கும் koi  மீன் :)


                                                            


                      விளக்கு ஒளியில் பாடம் படிக்கும் எலியார் :)
                                                                                

பூச்சி மற்றும் கரடி இரண்டும் இணைந்த bug bear ....pig  மற்றும் ஆக்டோபஸ் இரண்டும் இணைந்த பக்டோபஸ் என்று இவரது கற்பனையில் உதித்த வண்ண  அழகிய சித்திரங்கள் உங்கள் உள்ளம் கவரும் இங்கே சென்று பாருங்க 

 1. பான்க்ஸி   / Banksy  ..

  தனது graffiti எனப்படும் சுவர் சித்திரங்களால் 90 கள்  முதல் இங்கிலாந்தில் ஆரம்பித்து தற்சமயம் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பிரபலமானவர் ..இந்த பான்ஸ்கி /BANKSY .நம் நாட்டில் வீட்டின் வெளிப்புற சுவற்றில் தேர்தல் நேரத்தில் நாம் கட்சி சின்னங்களை பார்த்திருப்போம் ,சிறுநீர் கழிக்காதே ,எச்சில் துப்பாதே அல்லது ஏதேனும் விளம்பரம் ,அல்லது சுவரொட்டிகள் ஆக்கிரமிப்பை பார்த்திருப்போம் :)
  இது அதுபோலதான் ஆனால் இவர் நடு இரவில் முகமூடி அணிந்து யாருக்கும் தெரியாமல் யாரும் எதிர்பாராத இடத்தில ஏற்கனவே தயாரித்து எடுத்து வந்த ஸ்டென்சில் உதவியுடன் ஸ்ப்ரே பெயின்ட் மூலம் ஓவியத்தை !!வரைந்து விட்டு போய் விடுவார் ..இவர் பிரிஸ்டல் எனும் பகுதியை சேர்ந்தவராம் பள்ளியில் படிக்கும்போது தனது வீடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் இப்படி வரைவதில் ஆரம்பித்து இவர் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது .இவர் ஒரு தம்பதியினரின் காரவன் வெளிப் பக்கத்தில் வரைந்த ஓவியம்!
                                                                                                                                            அந்த காரவன் 500,000 பவுண்டுக்கு விலை பேசப்பட்டதாம் .இவரது ஓவியங்கள் சித்திரங்கள் பெரும்பாலும் சர்ச்சைகுரியவை ..ஏழ்மை ,முதலாளித்துவம் ,கம்யூனிசம் ,காமெடி ,போர் ஆகிய கருத்துக்களை கருப்பொருளாக கொண்டவை ..பொது இடங்களில் படங்கள் வரைவது இந்நாட்டை பொறுத்தவரை குற்றம் .இவர் பொது இடங்கள்  மற்றும் உபயோகத்தில் இல்லாத பழைய வீடுகள் ,ஏலத்திற்கு வரும் வீட்டு சுவர்கள் ..சுரங்க பாதை உடைந்த  தொலைபேசி பூத் ,பொது கழிப்பிடம் மற்றும் அசுத்தமான கவனிப்பாரற்ற இடங்களில் யாருக்கும் தெரியாமல் வரைந்து விடுவார் பல இடங்களில் உடனே அடுத்த நாளே அது அழிக்கப்படும் .ஆனால் பிரிஸ்டல் என்ற ஒரு இடத்தில இவர் வரைந்த 
 2. ஒரு சித்திரம் 
 3. (ஒரு சாளரம் அதன் வழியே மனைவி :) சந்தேகக்கண் கொண்டு  தேடும் கணவன் ..ஜன்னல் கீழே தொங்கி கொண்டு ஒரு ஆண் )!!அங்கு இருக்க வேண்டுமா   அழிக்கப்படவேண்டுமா  என்று பொது மக்களிடம் கேட்டபோது 97 சதவீதம் பேர் இருக்கட்டும் அப்புறப்படுத்த வேண்டாம் என்றனராம் :)இதில் விந்தை என்னவென்றால் இதுவரை இவரை யாரும் நேரில் பார்த்ததில்லை .ஓரிருவர் தாங்கள் கண்டதாக சில படங்களை வெளியிட்டனர் ஆனால் அது அவரில்லை ..இதுநாள் வரை தனது முகத்தை மறைத்து அதனால் பெரும் புகழ் பெற்றுள்ளார் ..லண்டன் பகுதியில் இவர் வரைந்த சுவர் சித்திரங்கள்பல உள்ளன  வில்லங்கமான கருப்பொருள்  மற்றும் முகம் சுழிக்கும் கருப்பொருள் என்றால் உடனே அவை  நகராட்சி மன்றத்தால் அழிக்கப்படும் .இவரது ஓவியங்கள் ஆவென்று வாய் பிளக்க வைப்பவை ,சில கண் கூச வைப்பவை சில மனதை பிளப்பவை .....,இவர் 2013 நியூயார்க் நகரில்  கான்வாஸ் ஓவியங்களை ஒரு அரங்கில் வைத்தும் விற்பனை செய்துள்ளார் ..அங்கும் தனது முகத்தை காட்டவில்லை .2010 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை தேர்ந்தெடுத்த சிறந்த 100 மனிதர்களில் இவரும் ஒருவர் ..அதிலும் காகித பை முகத்தை மறைத்த ஒரு உருவமே இவரை படமாக வெளிக்காட்டியது :)
 4.                                                                            
 5. ஸ்மைலி மோனாலிசா 

 6. மொபைல் காதலர்கள் :)


 7. ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட் தம்பதியினர் இவரது கான்வாஸ் சித்திரங்களை 400,000 அமெரிக்க டாலர்களுக்கு விலை கொடுத்து வாங்கினார்களாம் 

  இவர் இஸ்ரேல் பாலஸ்தீனம் நடுவிலுள்ள தடுப்பு சுவற்றில் வரைந்த மனதை உருக்கும் சித்திரங்கள்


 8. இது கிரீன் பீஸ் அமைப்பிற்கு இவர் வரைந்து சில காரணங்களால் தனி நபர் ஒருவருக்கு அளிக்கப்பட்டதாம் .பிறகு அவர் அதனை விற்று உள்ளார் .ஜங்கில் புக் கதாபாத்திரங்கள்  கண்கள் கட்டப்பட்டு ..அழிவை நோக்கும் காடுகள் என்ற கருப்பொருள் வைத்து வரையப்பட்ட படம் .


டேவிட் மற்றும் பான்க்ஸி  இருவரையும் தூக்கி சாப்பிடுமளவு திறமை நம் நாட்டினரிடம் இருக்கு ..சகோதரர் தில்லை அவர்கள் ஒரு லிங்க் 
இங்கே பின்னூட்டத்தில் .சொன்னார் .என்ன ஒரு கலைத்திறமை 
அனைவரும் கண்டிப்பாக பார்க்கவும் இந்த சுட்டியில் 
 1. *********************************************************
 2. காகிதப்பூக்கள் ..டிப்ஸ் கார்னர் :)
கீறல் விழுந்த தேய்ந்த மர சாமான்கள் ஸ்டூல்கள் இவற்றை மீண்டும் பழைய பொலிவுக்கு கொண்டுவர ..எனது டிப்ஸ் ..ஒரு வலைப்பூவில் படித்து 
செய்து பார்த்தேன் ..எனக்கு வெற்றி :)
இதோ செய்முறை விளக்கம் ..
ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பையில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் கலந்து துணியால் அதை தொட்டு கீறல் விழுந்த இடத்தில நன்கு தேய்க்க ..பளீச்சிடும் :)


அன்புடன் ஏஞ்சல் :))))))))))


10/29/14

ஹாலோவீன் கொண்டாட்டம் ............

ஹாலோவீன் கொண்டாட்டம் ............
                                                                              

இனி வரும் படங்களை பார்த்து 
பயந்திட வேண்டாம் :))
                                                                                  

                                                   
                                                                                   


அக்டோபர் 31  அன்று  ஹலோவீன் கொண்டாட்டங்கள் 
நடைபெறும் .அன்று இரவு சூனியக்காரிகள்  ,கொள்ளி வாய்பிசாசுகள்,
நீலி ,இரத்த காட்டேரிகள் எல்லாம் ...............
                                      
                                                 (இது என் செல்பி இல்லை :)

                                                                             

ரொம்ப புத்துணர்வோடு உலாவும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கை :)
அது சரியாக நவம்பர் 1 (all saints  day )ஆம் தேதிக்கு முன் வருவதால் 
அதையொட்டியும் இந்த கொண்டாட்டம் என்றும் சிலர் சொல்கிறார்கள் ..
                                                                   
                                                                                 

                                                              டெகரேஷன்ஸ்   !!!
   
அந்தநாளில் மக்கள் பேய் காஸ்ட்யூமில் உலாவினால் மேலே சொன்ன 
பேய்கூட்டம் இந்த முகமூடி மற்றும் பேய் போல உடையணிந்த மக்களை பார்த்து அவங்களும் நம்ம :) !! கூட்டம்னு நினைத்து அட்டாக் செய்யாம போயிடும் என்பது மக்களின் நம்பிக்கை அதனால்  அன்று இரவு சின்னது பெரிசு என்று வகை தொகை இல்லாம எல்லாரும் பேய் பிசாசு மாதிரி ஆடை அலங்காரம் எல்லாம் செஞ்சுக்கிட்டு வீடு வீடா போய் பயம் காட்டி (மிரட்டி ) ஏதாவது சன்மானம் பெறுவாங்க .இவங்களுக்கு கொடுக்கவென்றே கடைகளில் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற தாள்களில் சுற்றிய மிட்டாய்கள் கிடைக்கும் . அன்று பூசணி சூப் சமைப்பாங்க .
                                                                                 

சன்மானம் தர விரும்பாதவர்கள் 
NO TRICK OR TREAT.என்ற வாசகத்தை ஜன்னலில்தெரிகிற மாதிரி 
 ஒட்டி வைக்க வேண்டும் .அப்படி ஒட்டியிருந்தால் இந்த ஒரு நாள்
 பிசாசுகள் தொல்லை தர மாட்டாங்க :)
ஆரம்ப காலத்தில் பீட்ரூட் மற்றும் நூல்கோலை இப்படி முகம் 
வடிவமாக வெட்டி குடைந்து அதனுள் சிறு விளக்கை வைத்திருந்தார்கள் 
பிறகு அளவில் பெரிய பூசணியை இதற்க்கு பதில் பயன்படுத்த துவங்கினார்களாம் .
ஹாலோவீன் சமயத்தில் மஞ்சள் பூசணி எல்லா கடைகளிலும் 
கிடைக்கும் .பெரிய பூசணியை வெட்டி கண் மூக்கு எல்லாம் 
குடைந்து மெழுகு கொளுத்தி வாசலில் வைப்பாங்க .
நெருப்பு பார்த்தா பேய் ஓடிடும் மற்றும்  குறிப்பிட்டுள்ள பிசாசுகளை
ஓட ஓட விரட்டும் என்பதும் ஐதீகம் .
                                                                                       
அன்று இரவு பார்ட்டி எல்லாம் நடக்கும் .இந்த ஹாலோவீன் 
கொண்டாட்டதுக்கு என்றே எல்லாம்  பேய் ட்ரஸ் 
எல்லாம் வாங்குவாங்க . கிறிஸ்மசுக்கு அலங்கரிக்கற 
மாதிரியே வீட்டை ஹாலோவீன் ஸ்பெஷல்ஸ் சிலந்தி
வவ்வால் ,பூச்சி ,கருப்பு பூனை,மண்டை ஓடு  எல்லாம் 
வைத்து அலங்காரம் செய்திருப்பார்கள் .நம்ம ஊர் 
தென்னந்துடைப்பம் கூட வச்சிருப்பாங்க பேய் ஓட்டறதுக்கு :))...
                                                                               
                                                                                

இதெல்லாம் மக்கள் அனைவரும் செய்யும் விஷயம் இங்கே ஒரு நாள் சந்தோஷம் .கிறிஸ்தவ இல்லங்களில் பெரும்பாலும் இக்கொண்டாட்டம் நடைபெறாது ..இம்முறை இங்குள்ள ஆலயங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து world விஷன் உடன் இணைந்து சிரியாவின் போரினால் இயல்பு வாழ்வை தொலைத்த அகதிகளாக உள்ள சிறு பிள்ளைகளுக்க்காக வித்யாசமாக ஹாலோவீன் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் .
                                                                                        
//A NIGHT OF HOPE .... EVERY CHILD FREE FROM FEAR
On October 31st, show the children of Syria they have not been forgotten. Churches across the country are joining together to turn a night of fear into a night of hope.  //

                                                                                     

ஒரு பூசணிக்காயை வாங்கி அதில் இதய வடிவம் வெட்டி செதுக்கி  எடுக்கணும் அதில் டீ லைட் கொளுத்தி அந்த செதுக்கப்பட்ட பூசணியுடன் ஒரு selfie எடுத்து world விசனுக்கு அனுப்பனும் .அது அங்குள்ள  சிறிய பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு ..உலகம் அவர்களை மறக்கவில்லை என்று நம்பிக்கயூட்டுவதற்க்கு !பிறகு அவர்கள் கொடுத்த எண்ணுக்கு sms செய்து ஒரு தொகை (ஐந்து பவுண்ட்) அனுப்ப வேண்டும் ......

.உலகெங்கும் ஹாலோவீன்  கொண்டாட்டங்கள் காரணம் இங்கே இருக்கு 


http://www.history.com/topics/halloween/halloween-around-the-world

http://www.pumpkinpatchesandmore.org/halloweenglobal.phpஅன்புடன் 

ஏஞ்சல் ...

10/27/14

Loud Speaker 6 ! துளிர் விடும் விதைகள், சூப்பர் ஸ்டார் :)

Loud Speaker 6 !  
தேன் மதுரத்தமிழின் :) சகோதரி கிரேஸின் துளிர் விடும் விதைகள் அனைத்துமே அருமை .வாசிக்க வாசிக்க எனக்கு பல புதிய தமிழ் வார்த்தைகள் இலகுவாய் விளங்கின ..உதாரணத்துக்கு அனலி ..
குளிர்களி. கவிதைதுளிகளில்  என்மனதைக்கவர்ந்தவை இங்கே  ஒன்றிரண்டை பகிர்கிறேன் :)

                                                                         


//ஓவியத்திலா காட்டவேண்டும் ?// என்று காடழித்த மனிதர்களை சாடுவதிலாகட்டும் !விடாமல் கொட்டிய மழையிடம் கேட்ட கேள்வியும் 
அதற்கு மழை அளித்த பதில் ! மற்றும் நீலக்கடலை குப்பையாக்கலாமா 
என ஆதங்கப்படும் இடங்கள் என அனைத்திலும் கிரேஸின் சுற்று சூழல் இயற்கை வளங்கள் குறித்த ஆதங்கம் அழகாக வெளிபடுகிறது ..
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி கிரேஸ் .
நீங்கள் இன்னும் நிறைய கவிதைகள் இதைபோல எழுத வேண்டும் 
என வாழ்த்துகிறேன் 

நெகிழி எனும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பற்றிய கிரேசின்
 கவிதையில் உள்ள ஆத்மார்த்தமான கன்னத்தில் அறையும்
 மனதை பாதித்த வரிகள் .........

//ஆழி சேரும் ஒரு நெகிழி 
ஆமை ஒன்றை கொல்லலாம் !!//

//உணவென்றே நெகிழியை உட்கொண்டு 
உயிர்விடும் சில உயிர்கள் // 

சில காலம் முன்பு ஒரு ஆங்கில வலைத்தளத்தில் படித்தது நினைவுக்கு வருகின்றது .
அந்த ஆமைகுட்டியின் பெயர் peanut ..அதன் படத்தை இங்கிணைக்க மனம் வரவில்லை ..பாவம் நம்மால் வாயில்லாத ஜீவன்கள் படும் பாடு பார்ப்பவர் மனம் உருகும் ..
peanut the turtle என்று கூகிளில் டைப் செய்தா படம் வரும் .

சிலவருடங்கள் முன்பு அமெரிக்காவின் ,மிசௌரி கடல் பகுதியில் இந்த ஆமைக்குட்டி சுற்றிகொண்டிருந்ததாம் ..ஆமை போன்ற அசைவும் பெரிய நிலக்கடலை போன்ற உருவமும் அங்குள்ள சுற்றுசூழல் பாதுகாவலர்களுக்கு வித்யாசமாகப்படவே அதைபிடித்து பார்த்துள்ளார்கள் .ஆமை உடலை சுற்றி ஸிக்ஸ் பாக் ரிங் .
இதுதான் அந்த சிக்ஸ் பாக் ரிங் பியர் மற்றும் கோக் ,கான்களை 
சுற்றி இருக்கும் ....
                                                                     


மக்கள் கடற்பகுதியில் தாகத்தை தணிக்க எடுத்து சென்ற can களில் 
இருந்த பிளாஸ்டிக் வளையம் முட்டையில் இருந்து வெளிபட்டபோதோ இல்லை கடல் நீரை நோக்கிய பயணத்தின் போதோ இந்த சின்னஞ்சிறு 
ஜீவனின்  உடலில் மாட்டுப்பட்டு இருக்கலாம் .அந்த ஆமைக்குட்டி அந்த வளையத்துடனே சுமார் நான்கு வருடங்கள் வளர்ந்திருக்கு ..!! 
வேறு உயிரினமாக இருந்தால் மரணம் தழுவியிருக்கும் ஆனால் 
இதன்  கடினமான ஓடு இதை  காப்பாற்றி இருக்கு.
 வன சுற்றுசூழல் காவலர்கள் ஆராய்ந்ததில் அதற்க்கு நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மற்றுஇன்னும்சிலகுறைபாடுகள்  
இருந்தனவாம் இப்போ அந்த பிளாஸ்டிக் வளையம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் வாழ்நாள் முழுக்க அதன் 
வடிவம் எட்டு போல இருக்கும் என்கின்றார்கள் .
நம் போன்ற மக்களின் பொறுப்பற்ற செயல்தானே இதற்கு காரணம் 
நம் கண்களுக்கு பிளாஸ்டிக் பை ஆனால் மீன்களின் கண்களுக்கு 
அவை வேறு வகை ஜெல்லி மீன்கள் ..பல பெரிய மீன்களின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இரையாக சென்று அவற்றின் மரணத்துக்கு காரணமாகியுள்ளன :( 

இனியாவது விழிப்புணர்வோடு நடப்போமா ..பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துணிப்பைகளை எடுத்து செல்வோம் அப்படிதவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்த நேரிட்டாலும் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவோம் மீள் சுழற்ச்சி செய்வோம் என உறுதி கொள்வோம் ..


சூப்பர் ஸ்டார் :) டிகாப்ரியோ ,

                                                                                     


சூப்பர் ஸ்டார் :) லியொர்நாடோ டிகாப்ரியோ டைட்டானிக் படம் மூலம் உலகப்புகழ்பெற்றவர் ! ஐக்கிய நாடுகள் உச்சி மாநாட்டில் சுற்றுசூழல் குறித்த இவரது உரை அதில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் !
//As an actor I pretend for a living. I play fictitious characters often solving fictitious problems.//
உண்மையை அப்படியே சொல்லியிருக்கார் :) நான் ஒரு நடிகன் என்று சொல்ல நம்ம நாட்டு ந(ட்)ட்டிகர்களுக்கு துணிவிருக்கா :) 
இவர் செய்த சில நற்பணிகள் ..அவரது அறக்கட்டளை வாயிலாக 
1, ஒரு  மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியிருக்கார் ..
யானைகளை பாதுகாக்க 
2, WWF ப்ராஜக்டுக்கு நேபால் மாநிலத்தின் அழிந்து வரும் பல உயிரினங்களை பாதுகாக்க மட்டும் கிட்டத்தட்ட மூன்று 
மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்துள்ளார் !!
3, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க மூன்று மில்லியன் டாலர் 
வழங்கியுள்ளார் ..
பாராட்டுக்குரிய மனிதர் இவர்தான் !!
முழு உரையையும் வாசிக்க சுட்டியில் சென்று பார்க்கவும் 
இங்கே 
அவரது உரையின் காணொளி இணைப்பு இங்கே ,
https://www.youtube.com/watch?v=ka6_3TJcCkA

இது முட்டாள் ரசிகர்களுக்கு ..கலர் எழுத்தில் எழுத விருப்பமில்லை !
சும்மா நற்பணிமன்றம் ரசிகர் மன்றம்னு FILM காட்டி காகித கட்டவுட்டுக்கு பாலூற்றி உயிர விடுவதை விட உங்க ஆனானப்பட்ட பெரும் புகழ் வாய்ந்த நடிகர்களை இம்மாதிரி பூவுலகை வருங்கால சமுதாயத்தை காக்கும் நல்ல விஷயங்களை செய்ய ஊக்குவியுங்கள் ...
சில நடிகர்கள் நல்ல விஷயங்கள் செய்கிறார்கள்தான் அதில் மறுப்பேதும் இல்லை.. ஆனா நடிகனை  கடவுளாக நினைக்கும் அப்பாவி ரசிகர்களுக்கு
தான் மேற்கூறியவை .......

 நடிகர்கள் சிலரின்  முகத்திரை ..இதுதான் உண்மை :(

பிரபல நடிகர் அமிதாப் பச்சன் ..திடீரென ஒரு நாள் நான் பெப்சி குடிப்பதை நிறுத்தி விட்டேன் அதன் பிராண்ட் அம்பாசிடர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று ஸ்டேட்மன்ட் விட்டார் !! அதற்கு அவர் கூறிய
காரணம் /என் ஆசிரியர் பாய்சன் என்று சொல்லும் பானத்தை எதற்கு நீங்க ப்ரமோட் செய்றீங்கன்னு ஒரு பள்ளி மாணவி கேட்டாளாம் //
ஒகே நல்ல விஷயம்தான் அப்போ இவர் மருமகள் அதன் எதிரி நிறுவனம்
கோகோகோலா குடிகிறாரே விளம்பரத்தில் ?? அதன் பிராண்ட் அம்பாசடர் அவர்தானாம் !!!!அப்போ அது என்ன நியாயம்
விஷம்னா சின்ன விஷம் பெரிய விஷம்னு இருக்கா?? /அமிதாப் ஜி உங்க மருமகள் கோக் குடிக்கராங்க அது கூட விஷம்தானே :)அதைவிட இப்போ இவர் கிரேட்  BIG B பிரபல  நூடில்ஸ் விளம்பரத்தில் வருகின்றார் :)..நூடில்ஸ் ஒரு குப்பை உணவு என்று உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது :)

ரெண்டு ஜி பற்றி பேசினதாலோ இல்லை கோலா எதிர்ப்பு படத்தில் சொல்வதாலோ இவர்களை நம்பிட வேண்டாம் நடிகர்களை அவர்கள் நடிப்ப மட்டும் ரசித்து பாருங்கள் .அவர்களை தலையில் தூக்கி  வைத்து
கூத்தாடவும் வேண்டாம் பிறகு காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம் ..எல்லாம் பணத்துக்கு கொடுத்த காசுக்கு நடிப்பு தட்ஸ் இட் :)

  நன்றி சகோதரர் சொக்கன் :)
சாட்டையடி பதிவொன்று எழுதியிருக்கார் .எல்லாரும் போய் 
பாருங்க  இங்கே 

BTW நான் எந்த நடிகரின் ரசிகையுமில்லை :) இயற்கையை நேசிப்பவள் 
இயன்றவரை சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்த எனக்கு தெரிந்த மற்றும்  படித்தவற்றை   பகிர்கின்றேன் ..
================================================================= சற்று முன் முகபுத்தகத்தில் படித்தது ..
http://heronewsonline.com/sooriyur-story-for-kaththi-fans/
இந்த செய்தி அனைவருக்குமே !!கண்டிப்பாக வாசிக்கவும் 
சூரியூரும் – பெப்சி கம்பெனியும்---
--வீட்டில் இருந்தபடியே போராட அழைக்கின்றோம்--
http://www.thanneer.org/
=================================================================

அன்புடன் ஏஞ்சல் :)

...


10/21/14

தீபாவளி வாழ்த்துக்கள் ,Diwali in uk

தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் :) 


                                                                             
xxxxxxxxxxxxxx 

இது குஜராத்தி பாட்டி ஒருவருக்கு செய்தது எங்க ஊர் தீபாவளி படங்கள் சில :)

இது லெஸ்டர் எனும் பகுதியில் வீதியெங்கும் 
வண்ண விளக்கு அலங்காரங்கள் .
இது அதிகமாக இந்தியர்கள் வாழும் பகுதி .
உகாண்டாவில் இருந்து 1962 களில் மிக அதிகமான 
ஆசிய வம்சாவளியினர் இங்கு குடி பெயர்ந்தனறாம் 
ஒரு காலத்தில் அப்பகுதி எவ்வித முன்னேற்றமின்றி 
இருந்தது இவர்களின் வருகைக்குபிறகு அந்த பகுதி 
செழிப்பானது .
நிறைய நகை கடைகள் ,துணிக்கடைகள் 
அப்புறம் ஹோட்டல் சரவணபவன் கூட இருக்கு :)
தீபாவளி பட்டாசு வெடிக்க பல்லாயிரக்கணக்கில் 
மக்கள் இங்கு கூடுவார்கள் !!

இது சுவாமி நாராயணன் கோவில் .லண்டன் 
மிக பெரிய கோவில் .
Swaminarayan Mandir is the largest traditional Hindu temple 
outside India!

ஆண்டுதோறும் இங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் 
நடைபெறும் பிரதமரும் அவரது மனைவியும் சிறப்பு 
விருந்தினர்கள் .

பாருங்க எங்க தல டேவிட் காமரூனும் அவரது 
மனைவி சமந்தா காமரூனும் போறாங்க :)

தலைவியோட சாறி கலர் எனக்கு பிடித்திருப்பதால் 
தனியா ஒரு படம் :)


எங்க ஏரியாவில் ஒரு வாரமாகவே எல்லா ஸ்வீட்சும் சுட சுட 
உடனே கண் முன்னாலேயே சுட்டு தராங்க :)
நாளைக்கு டவுன் பக்கம் போனா ஜெகஜோதியா இருக்கும் 
அனைவரும் சந்தோஷமா ஹெல்த்தியான 
உணவுகளுடன் இனிப்புகளுடன் மற்றும் லேகியத்துடன் 
தீபாவளி கொண்டாடுங்கள் .
அனைவருக்கும் இனிய இனிக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

அன்புடன் ஏஞ்சல் :)..

10/14/14

Loud Speaker 5,Homeless jesus,அறுவடைத்திருநாள் !  ஸ்பீக்கர் 5..:)

                                               
பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுள்ளோர் 
சாலையை எளிதில் கடக்க உதவும் சிறு பொத்தான் அமைப்பு  .
                                                                                       

..இதைப்பற்றியும் எனக்கு சொன்னது எனது மகள்தான் ,சில வருடங்கள் முன் சாலையில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்கும்போது 
எனக்கு அந்த சிறிய பெட்டியை காட்டி இதில் கீழே ஒரு சுழலும் பொத்தான் போன்ற அமைப்பு இருக்கே ..எதற்கு என்று தெரியுமா எனக்கேட்டாள் ...!! எப்பவும் போல நான் ஞே !! என்று விழிக்க அவள் எனக்கு அது வேலை செய்யும் விதத்தை காட்டினாள் !!கண்ணை மூடிக்கொண்டு அந்த சுழலும் அமைப்பில் விரல்களை வைக்க கூறினாள் சிறிது நேரத்தில் 
திடீரென அது சுழல ஆரம்பித்தது !!அதேநேரம் பீப்  கேட்டது கண்ணை திறந்தா பச்சை நிறம் ஒளிர்ந்து சாலையை கடக்கலாம் என காட்டியது ..
இந்த அமைப்பு பார்வை குறைபாடுஉள்ளோர்   சாலையை எளிதில் பிறர் உதவியின்றி கடக்க உதுவுகிறதாம் ..நான் அவளிடம் கேட்டேன் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என ..அவள் சொன்னா 
இந்த விஷயம் அவளுக்கு கிண்டர் கார்டன் படிக்கும்போதே அதாவது ஐந்து வயதில் ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் அழைத்து சென்று 
இதை சொல்லிகொடுத்தார்களாம் ! மீண்டும் பிரைமரி ஸ்கூலிலும் கற்பித்தார்களாம் !!எல்லாவற்றையும் சொல்லிட்டு என்னை பார்த்து 
கேட்டாள் //அம்மா உங்க ஸ்கூலில் நீங்க இதெல்லாம் படிக்கல்லையா ?//
நான் எப்பவும் போல ....ஞே !!
                                                                        


வாழ்க்கைக்கு படிப்பு மட்டும் முக்கியமில்லை இப்படிப்பட்ட தற்காப்பு 
மற்றும் பொது விஷயங்களும் சிறுவயதிலேயே கற்றுகொடுக்கணும் ..
நான் பிறகு கூகிளில் தேடியபோது என் வலையில் அகப்பட்டவை .

தொட்டுணரக்கூடிய சிறு முகடுகளுடன் பிளாஸ்டிக் அல்லது இரும்பில் ஆன இந்த சுழலும் பொத்தான் அனைத்து  கட்டுப்பாட்டு  பெட்டியிலும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது .
பார்வையற்றோர் எளிதில் கடக்க பீப் ஒலி யும் எழும்பும் மற்றும் அதேநேரம் சுழலும்  .இந்த சுழலும் அமைப்பினை கண்டுபிடித்தவர்கள் நொட்டிங்ஹாம் பல்கலைகழகத்தின் போக்குவரத்து துறை சார்ந்தவர்கள் .1980 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள் ஆனால் 1989 ஆண்டு முதல்தான் பயன்பாட்டில் வந்தது ..
நம்ம நாட்டில் இப்படி ஒரு வசதி கண்டிப்பா தேவை !!


ஹோம்லெஸ் ஜீசஸ் !!
                                                                            

இந்த சிலை இப்போ பிரபலம் .உலகின் மிக பெரிய நகரங்களில் 
வைக்க இடம் தேடறாங்களாம் !!ஏற்கனவே ஆஸ்திரேலியா ,
ட அமெரிக்கா வில் ஏழு நகரங்களில் இவ் வெண்கல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன .
                                                                           


Tim Schmalz ..
இவர் தான் இந்த வீடு வாசலற்ற இயேசு கிறிஸ்துவின் சிலையை 
வடிவமைத்தவர் .கனடாவில் டொராண்டோ நகரத்தில் இவர் ஏழை மனிதர் 
ஒருவர் கடுங்குளிரில் ஒரு வீதியோர பெஞ்சில் படுத்திருப்பதை கண்டு அதை அடிப்படையாக வைத்து இந்த ஹோம்லஸ் ஜீசஸை உருவாக்கியிருக்கார் !! வெளிநாடுகளில் இருப்பிடமற்றோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர் .சிலர் எதற்கு இப்படி ரோட்டோரங்களில் ஸ்லீப் பைகளில் உறங்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை .இவர்களுக்கு இருப்பிட வசதி அமைத்து தந்தாலும் சிலருக்கு இந்த நாடோடி வாழ்க்கை விருப்பமா என்றும் விளங்கவில்லை ..இப்படி பட்டோருக்கு எங்கள் ஆலயத்தில் வருடந்தோறும் நவம்பர் துவங்கி ஏப்ரல் வரை இரவு உறங்க வசதி அமைத்திருக்கிறார்கள் .
திங்கள் ஒரு ஆலயம் செவ்வாய் ஒரு ஆலயம் என லிஸ்ட் போட்டு  இருக்கும் .
எல்லாம் அருகருகில் உள்ள இடங்கள் .

ஏழைகளுக்கு செய்வது இறைவனுக்கு செய்வதை போல !எனும் கருத்தை வலியுறுத்தி TIM  இச்சிலைகளை வடிவமைத்துள்ளார் ..அதில் முகம் மூடப்பட்டு இருக்கும் போர்த்திய கால்களில் சிலுவையில் அறையப்பட்ட அந்த வடுக்கள் இருக்கும் , பென்ச்சின் ஓரம் ஒருவர் அமர இடம் உள்ளது .
இதில் வேடிக்கை என்னவென்றால் பல நகரங்களில் இச்சிலைகளை வைக்க மக்கள் ஒப்புகொள்ளவில்லையாம் !! இன்னும் ஒரு சிலை லண்டன் பகுதியில் ஒரு பார்க் முன்பு காத்திருக்கு இடம் தேடி //Can you find a home for Jesus? ... Can you find him a home in London?  //

                                                                             

பேப்பரில் பார்த்த விளம்பரம் ..A CANADIAN sculptor, Timothy Schmalz, is appealing for help to find a site in London to place his statue Jesus the Homeless//


 அறுவடைத்திருநாள் /ஹார்வஸ்ட் பெஸ்டிவல் /HARVEST FESTIVAL .

 இது வருடந்தோறும் எங்கள் ஆங்க்லிகன் ஆலயங்களில் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் விழா .சென்னையில் இருக்கும்போது அனைத்து ஆலயங்களிலும் அன்னிக்கு பிரியாணி பலவித உணவுபொருட்கள் என விற்பனை களை கட்டும் நாலு ஆப்பிள் ஒரு தட்டில் வைத்து அதை ஏலத்தில் எடுக்க ஆலய பிரபலங்களுக்குள்  போட்டி நடக்கும் .சின்ன கடலை மிட்டாய் பாக்கெட் பத்து ருபா தானிருக்கும் அதை ஏலத்தில் முன்னூறு ரூபாவுக்கும் எடுப்பாங்க :( எனக்கு பார்க்க வெறுப்பாக இருக்கும் ..எல்லாரும் தங்கள் பண பலத்தை காட்ட முயலும் இடம் என்ற தோற்றமிருக்கும் அதே இங்கு வெளிநாட்டில் தலை கீழ் .ஹார்வஸ்ட் திருவிழா அன்று நாங்கள் பெட்டியில் அடைக்கப்பட்ட உணவு முதல் நிறைய விருப்பமான பொருட்களை 
ஆலயத்தில் கொடுக்கணும் அவர்கள் அதனை சேர்த்து ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள் .மனதுக்கும் நிறைவு .இம்முறை எங்கள் ஆலயத்தில் 100 கிலோ பெறுமானமுள்ள பொருட்கள் சேர்ந்தன !!

மனதை தொட்ட படம் !
அன்பென்பது யாதெனின் !!!!!!!!!!!!!!!!!!!!!
                                                                         

படங்கள் அனைத்தும் கூகிளில் கிடைத்தவை :)

நன்றி நண்பர்களே மீண்டு அடுத்த லவுட் ஸ்பீக்கரில் சந்திப்போம் :)