அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/28/14

Loud ஸ்பீக்கர் ..3 !! :) க்வில்லிங் மற்றும் பீச் பக்கம்

ஸ்பீக்கர் ..3 !! :)
பள்ளி விடுமுறை விட்டதும்  பல இடங்களுக்கு சென்று வந்தோம் 
முதலில் brighton பகுதி பீச்சுக்கு சென்றோம் .அந்த கடற்கரை 
முழுதும் மணல் இல்லாமல் வெறுமனே கூழாங்கற்கள் நிறைந்து காணப்பட்டது .
அதுவும் ஒவ்வொன்றும் அடிச்சா மரண அடிதான் :)


                     இந்த ராட்டினத்தை கண்ணால் பார்த்ததற்கே இன்னும் 
                                            எனக்கு மயக்கம் தெளியலை :))
                                                                                        

                                                                                     
   அந்த கூழாங் கற்களில் என் கண்ணுக்கு பட்டு அங்கிருந்து 
எடுத்து வந்தேன் !!பாருங்கள் இவற்றை 
மனித முகம் வரைந்தார்போன்று இருக்கு ஒன்றில் 


                             மற்றும் ஒரு பெரிய மீன் அல்லது படகு வடிவம் 
அச்சில் வார்த்தார்போலவும் இருக்கு இன்னொன்றில் !
                                                                                

----------------------------------------------------
இது எங்க ஜெஸியின் வெட்னரி டாக்டருக்கு செய்த 
தாங்க்யூ கார்ட் ..

இங்குள்ள கால்நடை ,வெட்னரி மருத்துவர்கள் தங்கள் 
pet பேஷன்டுகளிடம் மிக மிக அன்பா நடந்துக்குவாங்க 1
ட்ரீட்மென்ட் கொண்டு போனா அதுங்களை கட்டி பிடிச்சி 
அரவணைத்து !!ஒரே முத்த மழை பாசமழைதான் :)
நமது மருத்துவர்கள் கவனிக்க வேண்டியது !!
பாசமழையை  மட்டும் தான் சொன்னேன் :))))
சமீபத்தில் ஜெஸ்ஸிக்கு நாங்க மைக்ரோ சிப்பிங் 
தகடு பொருத்தினோம் .microchipping என்பது ஒரு 
வளர்ப்புபிராணி காணாமல் போனால் அதை எளிதில் ட்ரேஸ் 
செய்து கண்டுபிடிக்க உதவும் மேலும் அவங்க கொடுக்கும் ஒரு 
சிறு டாலர் போன்ற பிளாஸ்டிக்கையும் பிராணிகளின் 
கழுத்துபட்டையில் இணைத்துவிட  வேண்டும் ..
நான் ஜெஸ்ஸி கலர் இருக்குமாறு ஒரு பூஸ் வாழ்த்து அட்டை 
செய்தேன் .வாழ்த்து அட்டையில் ஜெஸியின் கையொப்பம் 
போட்டாகணுமே :) அவளுக்குபதில் நான் போட முடியாது :)
எப்படி கையெழுத்தை வாங்குவதென்று யோசித்து 
செய்தது இது :)

இங்க் அல்லது ஸ்டாம்ப் எதுவுமே இரசாயனம் கலந்திருக்கும் 
அதனால் தோட்டத்துக்கு சென்று கீழே விழுந்திருந்த பல வண்ண 
மலர்களை எடுத்து ஒரு  தட்டில் வைத்து நசுக்கினேன் 
ஒரு கலவையாக அடர் சிவப்பு நிறம் கிடைத்தது .
ஜெஸ்ஸி மேடம் கிட்ட சைன்  பண்ண சொன்னா ரொம்ப பிகு பண்ணிக்கிட்டாங்க :) ஒரு மாதிரி காலை  புடிச்சி கால்நாட்டு வாங்கி விட்டேன் .
இந்த மலர் இதழ்களை இரண்டு காகிதங்கள் இடையில் வைத்து 
பூரி கட்டையில் உருட்டினாலும் அல்லது wax காதிதத்தின் இடையில் 
வைத்து அயர்ன் செய்தாலும் அழகிய அச்சு கிடைக்கும் 
செய்து பாருங்களேன் இந்த சுட்டியில் பார்த்து 
மற்றும் இங்கும் 
..............................
.

26 comments:

 1. //ஜெஸ்ஸி மேடம் கிட்ட சைன் பண்ண சொன்னா ரொம்ப பிகு பண்ணிக்கிட்டாங்க :) ஒரு மாதிரி காலை புடிச்சி கால்நாட்டு வாங்கி விட்டேன் .//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இனி ஜெஸ்ஸி மேடத்தை யாரும் கைநாட்டுப்பேர்வழி எனச் சொல்லவே முடியாது. :)))))

  அழகான பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசிததர்க்கும் மிக்க நன்றி அண்ணா :)

   Delete
 2. ஜெஸ்ஸி கார்டு அழகா இருக்கு .....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கலை :)

   Delete
 3. ஒரு குலாங்கல்லில் எனக்கு மனித முகம் தெரியுது அக்கா .... கடைசியில் காலை புடிச்சி கால்நாட்டு வாங்கினது செமக் காமெடி ஹஹ்ஹா

  ReplyDelete
  Replies
  1. :)) HAA HAA ..எப்பவும் சும்மாவே நான் வச்சிருக்கிற க்ளூவைஎல்லாம் தொட்டு வீடெல்லாம் நடப்பா அன்னிக்கு செம ரகளை சைன் போட

   Delete
 4. நல்ல பதிவு....
  அந்த பீச்சுக்குக் கிட்டத் தான் எங்க மகள் இருக்கிறா....
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசிததர்க்கும் மிக்க நன்றி அக்கா .அந்த கடற் பக்கம் ரொம்ப அழகான இடம் .நாங்க ஜூலை இறுதியில் போனோம்

   Delete
 5. அஞ்சு,

  நான் சொல்லும் ரகசியத்தக் கேளுங்க, பார்த்ததனால் வரும் மயக்கம் ஏறினால்தான் தீரும். அடுத்த தடவ போகும்போது ஞாபகம் வச்சுக்கோங்க.

  ஆமாம், எனக்கும் மனித‌ முகமும் மீனும் தெரியுது.

  வாழ்த்து அட்டை அழகா இருக்கு. "கால்நாட்டு" ____ ஹா ஹா ஹா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசிததர்க்கும் மிக்க சித்ரா ..

   நிசம்மாவா சொல்றீங்க !! அப்போ அடுத்த முறை ஏறிடறேன் ..எதுக்கும் life இன்சூரன்ஸ் அப்பளை பண்ணிட்டே செய்றேன் :))

   Delete
 6. லவுட்ஸ்பீக்கரில் இம்முறையும் கூறப்பட்ட...:) காட்டப்பட்ட
  அத்தனையும் மிகச் சுவாரஸ்யம் நிறைந்தது!

  கைவண்ணங்களை ஏற்கனவே அங்கும் கண்டு பிரமித்தேன்!..

  கல்லிலே இயற்கையின் கைவண்ணம்!
  இங்கு, க்விலிங்கில் அஞ்சுவின் கைவண்ணம்!
  மிக மிக அருமை!

  கால்நாட்டு புதிய சொல்லுடன் தொழில் நுட்பமும் அற்புதம்!...:)

  அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிததர்க்கும் மிக்க நன்றி இளமதி .பூனைகளுடன்LIFE உண்மையில் செம ஜாலிதான் :)

   Delete
 7. beach ரொம்ப அழகா இருக்கு .....quilling கார்டு சூப்பர் ....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிததர்க்கும் மிக்க நன்றி ANU :)

   Delete
 8. கால்நாட்டுக்காவது தலை அசைத்த ஜெஸ்ஸி வாழ்க. நல்ல ஆரோக்கியமா இருக்கட்டும். .மலர்கள் பற்றின குறிப்பு பேத்திக்கு உபயோகமாக இருக்கும். குறித்துகொள்கிறேன் ஏஞ்சல். க்வில்லிங் லெஜண்ட்னு உங்களைக் கூப்பிடப் போறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லிம்மா :) நான் இன்னும் ஸ்டில் கற்றுகொள்கிறேன் ஒரு சில ரஷ்ய க்வில்லிங் படங்கள் ஷேர் செய்றேன் ! அவ்வளவு அழகும்மா .
   கால்நாட்டுக்கு நான் அதை கெஞ்சி ட்ரீட்ஸ் கொடுத்து ஏமாற்றிதான் வாங்கினேன் :)
   அந்த FLOWER POUNDING இன்னொரு லிங்க் இணைத்துள்ளேன் ..குட்டிபாப்பாவுக்கு சுலபமா இருக்கும் செய்ய

   Delete
 9. லண்டன் ஐ ல் ஏறின அனுபவத்தின் பின் இது இருக்கும் பக்கம் போவதில்லை நான். கல்லிலே உருவம் இயற்கையின் அற்புதம். அழகா இருக்கு.பீச் படங்கள் அழகா இருக்கு.
  as usual quilling card beauti & need work அஞ்சு. ஜெஸிகிட்ட வாங்கிய கால்நாட்டு சூப்பர். முயன்ற ஐடியா அதைவிட சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. நானெல்லாம் ஒரு தொலைவில் பார்த்தே மயங்கி விழும் ஆள் :) ஸ்ஸ்ஸ் யப்பா !! என் கணவர் சொன்னார் ஏறி உக்காந்தா அப்புறம் ஒண்ணுமே தெரியாதாம் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா :)

   Delete
 10. அந்த ராட்டிணத்தில் நானும் தனிமரமாக சுற்றியிருக்கின்றேன்!ஹீ

  ReplyDelete
  Replies
  1. தனிமரமாக சுற்றியது போதும் அடுத்து மனைவியையும் செல்ல மகனையும் அழைத்து வாங்க இங்கிலாந்துக்கு .மகனுக்கு மட்டும் குட்டி ராட்டினம் :)

   Delete
 11. Replies
  1. தங்கள் வருகைக்கும் படங்களை ரசிததர்க்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 12. பதிவுகளை ரெகுலரா எட்டிப்பார்த்து படிச்சுகிட்டாலும், கருத்தை பதிக்க(!) இப்பத்தான் நேரம் வாய்ச்சிருக்கு அக்கா! :)

  ஜெஸ்ஸி டாக்டர் கிட்ட சமர்த்தா இருக்காளா? குட் கர்ள்! :) எங்காளுக்கு டாக்டரைப் பார்த்தாலே அலர்ஜி. கிட்ட நெருங்கவே விடமாட்டார். இத்தனைக்கும் லேடி டாக்டர்! ;)

  ஜெஸ்ஸி-யின் கைநாட்டை கால்நாட்டு என்று சொன்னதை வன்மையாக க(ண்)டிக்கிறேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! வவ்வ்வ்வ்! =)

  அழகான பதிவு..அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 13. வாங்க மஹி :) அவ ஒழுங்க சைன் பண்ணியிருந்தா அது கைநாட்டு :) அடம் பண்ணதால் கால்நாட்டு :) nooo dont bite :)))))
  ஜெஸ்ஸி டாக்டர் கிட்ட போனதும் ஒரே பாச மழைதான் :)

  //இத்தனைக்கும் லேடி டாக்டர்! ;)// how old is she !!
  எட்டிபார்த்து படிப்பதே மிக்க சந்தோசம் மஹி டைம் இருக்கும்போது கமெண்டுங்க அதுபோதும் .

  ReplyDelete
 14. கால்நாட்டு ..................ஹி!ஹி!!ஹி!!!

  ReplyDelete
 15. ஒரு மாதிரி காலை புடிச்சி கால்நாட்டு வாங்கி விட்டேன் .//

  கை பிடிச்சி இருந்தால் கை நாட்டு வாங்கி இருக்கலாம்.
  அருமை.

  ReplyDelete