அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/24/14

Loud ஸ்பீக்கர் ...1 .தக்காளி செடி கண்டெய்னர் தோட்டம்


ஸ்பீக்கர் பூ :) 


                                                                            

இவை எங்கள் தோட்டத்தில் மலர்ந்த nasturtium எனும் மலர்கள் 
ஒரே செடியில் ஆரஞ்சு சிவப்பு மஞ்சள் கொஞ்சம் அழுக்கு வெண்மை கலந்த மஞ்சள் என மூவர்ணங்களில்  உள்ளன .

                                                                                

பார்வைக்கு ஸ்பீக்கர் போலவே உள்ளன :)
ஒவ்வொறு முறையும் பதிவு எழுதும்போது இந்த தலைப்பில் 
எனக்கு நிறைய குழப்பம் :)
                                                                               

அஞ்சறைப்பெட்டி ட்ரங்கு பெட்டி காக்டெயில் என்று 
நிறைய பேர் தலைப்பு தந்து எழுதுவது போல நான் இனி 
ஸ்பீக்கர் :)  என்றதலைப்பில் அனைத்து விஷயங்களையும் 
கலந்து எழுதலாம்னு நினைக்கிறேன் :) 
எல்லாம் ஸ்பீக்கர் பூ மகிமை !!

ஸ்பீக்கர் 1..   


                                                                                     கன்டெய்னர் தோட்டம் /தொட்டியில் தக்காளி செடி வளர்ப்பு .
நலம்.நெட் .தளத்தில் //தொட்டியில் தக்காளி வளர்ப்பு முறை 
// container gardening குறிப்புகளை பின்பற்றி பழைய big shopper  
பையில் மற்றும் இன்னொரு தொட்டியில் தக்காளி  செடி 
வளர்த்தேன் .
அதிக மழை மற்றும் வெயில் கொஞ்சம் குறைந்ததால்
 அறுவடை தாமதமாகியது .நம்மூர் காலநிலைக்கு 
உடனே நல்ல அறுவடை கிடைக்கும் .
இம்முறையில் பூச்சி மருந்துகள் எதுவும் பயன்படுத்தவில்லை .
அருகே ஒரு சாமந்தி செடி நட்டு வைத்தேன் அதுவே இயற்கையாக 
எந்த பூச்சியையும் நெருங்க விடவில்லை ..ஒரு அதிகப்ரசங்கி வேலையால் :)  எங்கே காற்றுக்கு விழுந்து விடுமோ என்ற 
பயத்தில் ஒரு சிறு பழைய நாற்காலியை தொட்டி அருகே 
அண்டை கொடுக்க .(பாரி முல்லைக்கு தேர் கொடுத்தார் 
ஏஞ்சல் தக்காளி செடிக்குசேர் /chair கொடுத்தார்னு வரலாற்றில் 
நம்ம பெயரும்  வரணும்ல :)எங்க ஏரியா அணில்களுக்கு 
மகா வசதி :) அதில் அமர்ந்து தக்காளிகளை ருசிக்க ஆரம்பித்து விட்டார்கள் !!!!
பையில் வளர்த்த செடிகளுக்கு சற்று நீண்ட குச்சியை 
தாங்கும் விதம் கட்டி வைக்க அதில் உள்ள தக்காளிகள் 
இவை  கொலாஜ் படத்தில் உள்ளவை .
இங்கே  கண்டெய்னர் தோட்டம் முறை பற்றி வாசிக்கவும்.

 அடுத்து ஒரு சமையல் குறிப்பு :)

ஒரு முறை தக்காளி செடி  கிளை ஒடிந்து விழுந்து விட்டது 
அதில் ஆறேழு பெரிய காய்கள் இருந்தன நெட்டில் தேடியதில் 
அதிலும் கூட்டு செய்யலாம்னு கண்டுபிடிச்சி என் முறையில் 
சற்று மாற்றி செய்தேன் :)
                                                                 


தக்காளி காய்களை சிறியதாக பொரியலுக்கு நறுக்குவது
போலநறுக்கி கொண்டு ,முட்டைகோஸ் கூட்டு பொரியல் 
செய்வதுபோல குக்கரில் வெங்காயம் ,மிளகாய்,தேங்காய் 
துருவல் மஞ்சள்தூள் சேர்த்து  தாளித்து மூன்று விசில் 
வந்ததும் இறக்கிவிடவேண்டும் .தண்ணீர் சேர்க்க வேண்டாம் .
ருசி அபாரம் !! 
                                                                         
தக்காளி பதிவு நீண்டு விட்டது அடுத்த பதிவில் எனக்கு 
கிடைத்த விருதுகள் வெளிவருமென தெரிவித்துக்கொள்கிறேன் 

அன்புடன் ஸ்பீக்கர் :) ஏஞ்சல் 
16 comments:

 1. வணக்கம்

  அழகிய பூ பற்றிய பகிர்வும் சுவையான உணவு பற்றி அறிமுகம் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் விருது பற்றிய பதிவுக்காக காத்திருக்கேன்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
 3. ஸ்பீக்கர் ஏஞ்சல் :} ,

  உங்க முதல் ஸ்பீக்கரே பிடிச்சுப் போச்சு. இனிதான் எங்க வீட்டுத் தோட்டத்தை எட்டிப் பார்க்க வேண்டும். சம்மரில் எங்க வீட்டிலும் நிறைய தக்காளி வந்தது.

  ReplyDelete
 4. வீட்டுக்கு வந்த புதிதில் வைத்தேன்.ஆனா ஒருவித புழுக்களும் ,பூச்சியும் நிறைய வந்துவிட்டது. வெட்டி எறிந்தாச்சு.
  தக்காளி வளர்ப்பு முறை நல்ல தகவல். சிம்பிளான கூட்டு ரெசிப்பி.
  ஸ்பீக்கர்" நல்ல பெயர் வைத்திருக்கிறீங்க அஞ்சு.

  ReplyDelete
 5. லவுட் ஸ்பீக்கர்.................ஹி!ஹி!!ஹீ!!!////அருமை(த்) தங்கையே,நலமா?

  ReplyDelete
  Replies
  1. annaaaa :) we are fine ..how are you :) did you forget to wish some one :))))))))))))))))))))))))))))

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 6. ஸ்பீக்கர்.....
  ஹாஹா

  தக்காளி செடி பார்க்க அருமையாக இருக்கு
  தக்காளி கறியும் சூப்பர்.

  ReplyDelete
 7. கண்டிப்பாக செய்து பார்க்கனும்

  ReplyDelete
 8. போட்டோஸ் சூப்பர்

  ReplyDelete
 9. சூப்பர் அஞ்சு!..
  தக்காளி அறுவடை கண்பட்டுவிடப் போகிறது!..:)

  கூட்டு சிம்பிள்!..
  ஆனா ருசி அருமையாக இருக்கும் போலத் தோணுதே..:)

  ஸ்பீக்கர் பூப்போலப் பதிவும் அசத்தல்!
  வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
 10. ஸ்பீக்கர் நல்லா இருக்கே..வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. மிக்க நன்றி அக்கா .கொஞ்சம் நாட்களாக எழுதுவதில் ஒரு lazy இருந்து வந்தது எனக்கு ..முகபுத்தகமும் ஒரு காரணம்தான் :) இப்போ விருதை பெற்றுகொண்டதும் ஒரு உற்சாகம் பற்றிகொண்டார்போலிருக்கு ..விரைவில் இதனை எனது பதிவில் வெளியிடுகிறேன் ..விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

  என்னிடம் வாக்கு கொடுத்தது போல் வலைத்தளத்தில் வந்து சமையல் குறிப்பு, மற்றும் ஸ்பீக்கர் வரவுக்கும் நன்றி மகிழ்ச்சி ஏஞ்சலின்.
  படங்கள் எல்லாம் அழகு.
  தக்காளி கூட்டு அருமை.

  ReplyDelete
 12. ****எங்க ஏரியா அணில்களுக்கு
  மகா வசதி :) அதில் அமர்ந்து தக்காளிகளை ருசிக்க ஆரம்பித்து விட்டார்கள் !!!!***

  விருந்தினருக்குப் போக மிச்சம்தான் உங்களுக்கு! :)

  ReplyDelete