அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/2/14

ரெயின்போ லூம் நட்பு + பாசக்கயிறு ( friendship bands ) :))


ரெயின்போ லூம் நட்பு + பாசக்கயிறு ( friendship bands )  :))
                                                                                         

சில மாதங்களாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள சிறுவர்
சிறுமியர் மத்தியில் இந்த ரெயின்போ லூம் பேண்ட் (Rainbow loom band ) 
படு வேகமாக பிரபலமடைந்துள்ளது  .

                                                                                                    
                                                                
                                                      விடுமுறை  நாள் துவங்கியதும்
 பிள்ளைகள் அனைவரும் இந்த ரப்பர் பாண்ட் போன்ற பொருட்களை 
வாங்கி friendship band செய்ய ஆரம்பித்து விட்டார்கள் !!
சிறு பிளாஸ்டிக் பாக்கெட்டில் நூற்றுக்கணக்கில் பல வர்ணங்களில் 
கிடைக்கிறது .
அமேசான் நிறுவனம் விற்கும் டாப் ட்வெண்டி பொருட்களில் இந்த 
லூம் பாண்டும் அடங்கும் .
                    
                    EBAY வில் இந்த 24,000 பான்ட் களால் பின்னப்பட்ட உடை 
                                  சுமார் 170,000£ இற்கு விற்பனையாகியிருக்கு !!

         Looming Profit: Helen Wright, left, and Kathryn with their loom band dress which they 
         sold for £170,000 on eBay.
                                                                                            

                                                                                              


ஏப்ரல் மாதம் சுற்றுபயணம் செய்து கொண்டிருந்த இளவரசர் வில்லியம்
 மற்றும் அவரது மனைவி கேட் இவர்களுக்கு இரண்டு சிறுமிகள் லும் 
பாண்டை பரிசளித்துள்ளார்கள் !! அதை அணிந்த வாறு இருவரும் 
படத்துக்குபோஸ் கொடுக்கவும் அடுத்த நாளே இன்னும் விற்பனை 
மூன்று மடங்காகிவிட்டதாம் இங்கிலாந்தில் :)

                                                                                                  

                                                                                               
லும் பாண்ட் அணியாத பிரபலங்களே இல்லை :) டேவிட் பெக்காம் ,
அரச குடும்பத்தில் மாமியார் கமீலா மருமகள் கேட் மற்றும் இளவரசர்
 வில்லியம் பாடகி மைலி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது .
                                                                                                     இதில் ஜிம் கிம்மல் கோட் செய்து சாரிட்டிக்கு விற்பனை செய்தார் ..
மேலும் இவற்றில் காலணிகள் பொம்மைகள் என விதம் விதமாக 
செய்கிறர்கள் !!
                                                                                                
                                                                                         

அதுமட்டுமில்லை  ஆலயத்தில் திருவிருந்து ஆராதனையில் அப்பம் 
பெற கையை நீட்டினேன் !! பார்த்தால் பாதிரியார் கையிலும் 
லூம்  பாண்ட்  ப்ரேஸ்லெட் :) 

எங்க வீட்டிலும் மகள் ஆர்வமுடன் செய்கிறாள் ..
                                                                                                         
இப்படி இங்கு பிரபலமாகிவரும் லூம் பிரேஸ்லட் நம் நாட்டில் 
விற்பனையாகிறதா என்று கூகிளை தட்ட !!
நம்ம நாட்டிலும் 600 ரூபாயாம் ! அங்கும் செம பிசினஸ் போலிருக்க 
..இப்படி விற்பனையாகும் இந்த பிரபல ரெயின்போ லும் பாண்ட் எப்படி 
தயாரிக்கிறாங்க தெரியுமா ?
கிழக்கு ஆசியா நாடுகளான சீனா மற்றும் தாய்லாந்தில் குறைந்த 
பரப்பளவுநிலத்தில் இவற்றை தயாரிக்கிறார்கள்  
இவை இயற்கை ரப்பர் கிடையாது .செயற்கை /சிந்தடிக் இழை ரப்பர் .
சிலிகான் போன்ற பொருள் எளிதில் அழிக்க முடியாது 
அதனால் இதை மீள் சுழற்சி செய்ய இயலாது :( 

குறைந்த விலையில் கிடைப்பதால் ரோடு முழுதும் வீசப்பட்டு உள்ளது ..
இப்படி பட்ட குப்பைகள் இறுதியில் சென்றடைவது கடலைத்தான் ..
அங்கு மீன்களும் ஆமைகளும் கடல் பறவைகளும் இவற்றால் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன .
மேலும் நாய் பூனைகளுக்கு இவற்றை உண்ணும் பழக்கமுண்டு ..
எக்ஸ் ரே மெஷின் கூட கண்டறிய முடியாது இவை உடலுக்குள்
 எங்கிருக்கு என்பதை :(
சிறு பிள்ளைகள் இவற்றுடன் விளையாடும்போது பெற்றோர் 
கண்டிப்பாக கண்காணிப்பில் இருக்கணும் 
ஒரு சிறுவனுக்கு இங்கிலாந்தில் பார்வை ஒரு கண்ணில் போய்  விட்டது .
ஒரு சிறுவன் கையில் போட்டு அப்படியே மறந்து தூங்கியதால் ..,,
இரத்த ஓட்டம் நின்று போகும் சூழ்நிலையில் தாய் கண்டுபிடித்து 
காப்பற்றப்பட்டான் ..

நம் நாட்டில் பிள்ளைகள் சாதா ரப்பர் பான்டையே விரலால் இழுத்து 
வில்லத்தனம் செய்வாங்க ..அதனால் இதனை கவனமுடன் பயன்படுத்த 
அறிவுறுத்துங்கள் பெற்றோர்களே .
அப்பாவி வாயில்லா ஜீவன்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் 
கண்காணியுங்கள் .ப்ரேஸ்லெட்டை இரவு கழட்டி விட சொல்லுங்கள் 
இல்லையென்றால் இரத்த ஓட்டம் தடைப்படும் .
எப்படியும் ...பப்ளிசிட்டிக்கு எங்க நாட்டில் த்ரிஷாவோ சமந்தாவோ 
இல்லை சூர்யாவோ ,விஜயோ இதை போட்டதும் அதி வேகமாக 
பிரபலமாகபோகுது !! :) எனவே கவனமுடன் பயன்படுத்த சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளை ..                                                                                    xxxxxxxxxxxxxx

11 comments:

 1. வணக்கம்,தங்கச்சி!நலமா?///நேத்துத் தான் 'உங்க' ஊர்லேருந்து வந்தேன்.தங்கச்சி மக கூட,இது செஞ்சுட்டு இருந்தாங்க.நம்ம புள்ளைங்களுக்கும் வாங்கித் தர சொல்லியிருக்கேன்.///விழிப்புணர்வூட்டும் நல்ல பகிர்வு/பதிவு.பிளாஸ்டிக் பொருள் இன்னாலே ஜாக்கிரதை அதிகம்,அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா :) எங்க ஊர்ல பார்த்த இடமெல்லாம் இவை கொட்டி சிதறி இருக்கு
   பிள்ளைங்களை ஒரு மாதிரி மயக்கி வச்சிருக்கு இந்த ரெயின்போ லூம் பான்ட்ஸ் :)
   உண்மையில் சிந்தனைக்கு நல்ல பயிற்சிதான் ..ஆனா கவனமுடன் இருக்கணும் குட்டி பிள்ளைங்க
   மற்றும் வளர்ப்பு பிராணிகள் .

   உங்க மொபைல் போனுக்கு ஒரு கவர் செய்து கொடுக்க சொல்லுங்க மகளை ..

   எங்க ஊர்ல நேத்து வரைக்கும் நல்ல வெதர் ..இன்னிக்கு வானம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது :(

   Delete
  2. என்னோட பிரிவைத் தாங்க முடியாமத் தான் கொட்டோ,கொட்டு ன்னு கொட்டுது போல,ஹ!ஹ!!ஹா!!!

   Delete
  3. எங்க "உங்க"தங்கச்சியக் காணம்?தொடர் எழுதுறேன்,பேர்வழி ன்னுட்டு டக்கு ன்னு,பொட்டு ன்னு போட்டுட்டு தல மறைவாயிட்டாங்க!

   Delete
 2. வணக்கம்
  ரெயின்போ லூம் நட்பு + பாசக்கயிறு பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. பிரபலங்கள் பயன்படுத்துவதால் - ஆபத்தான ஒரு பொருளுக்கு அமோக வரவேற்பு!..
  வினையை விலை கொடுத்து வாங்குகின்றனர்!..
  அதன் பலன் - ஒட்டு மொத்த மக்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் அவதி!..
  கடவுள் தந்த நல்லறிவைக் கொண்டு வையகத்தை வாழ வைப்போம்!..

  ReplyDelete
 4. இங்கேயும் இதன் தாக்கம் இருக்கு அஞ்சு. நானும் ஆரம்பத்தில் செய்திருந்தேன். உண்மையில் இதன் கெடுதல் அதிகம்தான். நல்லதொரு விழிப்புணர்வுள்ள பதிவு.நன்றி

  ReplyDelete
 5. இங்கு ஆஸ்திரேலியாவிலும் இந்த லூம் பாண்ட் பித்து பிடித்து ஆடுகிறது.

  ஓவியாவும் அவர்களின் வயதிற்கேற்ப இந்த லூம் பாண்டை கொண்டு மோதிரம், செயின் என்று செய்து போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 6. இங்கு இந்தியாவில் இது அதிகம் காணக் கிடைக்கவில்லையா, இல்லை என் கண்ணில்தான் படவில்லையா? தெரியவில்லை! :)))

  ReplyDelete
 7. லூம் பிரேஸ்லட் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்! சுவாரஸ்யம் மற்றும் சமூக அக்கறையுடன் அருமையான பதிவு !

  ReplyDelete
 8. கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைக் குறிப்புகள் அவசியமானவை.

  ReplyDelete