அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/25/14

ஐஸ் வாளி சவாலும் அரிசி வாளி சவாலும் !!

ஐஸ் வாளி  சவாலும்  அரிசி வாளி சவாலும்
முதலில் ஐஸ் பக்கட் சவால் ..


                                                                        

உலகெங்கும் இப்போ இது வேகமாக பரவி வரும் ஒரு சவால் ..
நரம்பு மரத்து போவது (Amyotrophic lateral sclerosis - ALS) 
சம்பந்தமான நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் 
ஏற்படுத்த துவங்கப்பட்ட இந்த சவாலில் பங்கு பெறுபவர் 
ஒரு வாளி நிறைய குளிர்ந்த ஐஸ் நீரை தலையில் ஊற்றிக்கொண்டு தன்னை ஒரு வீடியோவோ அல்லது ஸ்மார்ட் போனில் ஒரு செல்பி படமோ எடுத்து முகபுதகத்தில் வெளியிடவேண்டும் பிறகு 
ஒரு தொகை குறுந்தகவல் மூலம் குறிப்பிட்ட சேவை நிறுவனத்திற்கு அனுப்புவதாக செய்தி அனுப்ப வேண்டும் பிறகு தனது நண்பர் தெரிந்தவர் யாரையேனும் இந்த சவாலில் பங்கேற்க அழைப்பு 
விடுக்க வேண்டும் ..
இதில் பங்கு பெற்ற பிரபலங்கள் பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ் ,
மார்க் ஹெட் of முகபுத்தகம் :)
                                                                      
                                                                   
டேவிட் பெக்கம் ,ஜஸ்டின் பீபர் ..
                                                                       
                                                                           

இப்போது இங்கிலாந்தில் இதே சவால் புற்று நோய் ஆராய்ச்சி விழிப்புணர்வுக்காக வேகமாக பரவி வருகிறது
மாக்மில்லன் தன்னார்வ தொண்டு நிறுவனம் புற்றுநோய் 
விழிப்புணர்வு மற்றும் நோயுற்றோருக்கான HOSPICE , 
போன்ற பல  சேவைகளில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம் .
இவர்கள் இந்த சவால் மூலம் சேர்க்கும் பணத்தை புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் செலவழிக்கிறார்கள் .

நம்ம சென்னைல ஹன்சிகா ஆரம்பிச்சு வைத்து இப்போ 
அருண்விஜய் ஜெயம்ரவி அப்புறம் த்ரிஷா என்று எல்லாம் 
இப்போ இந்த சவாலில் பங்கேற்கிறார்களாம் :))))))))

இந்த சவாலில் யாரும் பங்கேற்கலாம் ...
என்ன தேவை என்பதை இங்கே கூறியுள்ளேன்

தேவையான பொருட்கள் 
ஒரு பெரிய அளவு வாளி ..அது தளும்பும் அளவுக்கு குளிர்ந்த 
ஜில் தண்ணி ,ஒரு பெரிய துவாலை ,ஜில் தண்ணியை 
தலையில் தானே ஊற்றிக்கொள்ள கொஞ்சூண்டு தைரியம் ,
சூடா ஒரு கப் தேநீர் ,
ஒரு ஸ்மார்ட் போன் ..
செல்பி எடுக்க முடியல்லைன்னா நண்பரை விட்டு படம் 
எடுக்க சொல்லுங்க ...பிறகு அவர்களையே நாமினேட் செய்ய 
வசதியாக இருக்கும் 
மிக முக்கியம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொண்டு /சேவை விழிப்புணர்வு நிறுவனகளுக்கு செக்காக அனுப்ப வேண்டும்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க .. நம் நாட்டின் அடிப்படை
 தேவை பசிப்பிணி நீக்குவது..SO, ஹைதராபாத்தை ஒருவர் .ரைஸ் பக்கட் சவால் என்று ஒன்றினை அறிமுகபடுத்தி உள்ளார் . 
அவர் பெயர் மஞ்சு லதா ..கலாநிதி ..
                                                                         
                                                             (thanks google )             
பெயரை பார்த்ததும் சிலருக்கு குறிப்பா கடசீ பேரை பார்த்ததும் 
குழப்பம் வரலாம் .சந்தேகம்லாம் வேண்டாம்:) இவர் ஒரு
 ஜர்னலிஸ்ட் .
முகபுதகத்தில் இந்த சவாலுக்குன்னே ஒரு பக்கத்தை 
துவங்கி உள்ளார் .https://www.facebook.com/ricebucketchallenge

.இதன்படி ஆளுக்கு ஒரு வாளி நிறைத்து அரிசி இலவசமாக ஏழைகளுக்கு விநியோகிக்கவேண்டும் .
அவர்களது புகைப்படம் இந்த பக்கத்தில் பிரசுரிக்கப்படும் ..

அல்லது நூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை ஏழைகள் இருக்கும் அரசு மருத்தவமனைக்கு சென்று அவர்களுக்கு 
வழங்கணும் ..சிலர் இதனை ஆதரிக்கவில்லை ..மக்களை சோம்பேறியாக்கும் என்றெல்லாம் பின்னூட்டம் அவர் பதிவில் பார்த்தேன்.
ஒரு நாணயத்தில் இரு பக்கம் உண்டு எது வேண்டுமோ 
அதை தெரிவு செய்யுங்கள்

                                                   xxxxxxxxxxxxxxxxxxxx 

11 comments:

 1. ரைஸ் பக்கெட் நல்லாத்தான் இருக்கு ...
  தகவலுக்கு நன்றி ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ .மது

   Delete
 2. ம்.. நல்ல தகவல்தான் இரண்டும். ஆனால்...
  ஐஸ் வாளி சவாலுக்கு அத்தனை தைரியம் கிடையாதே..:)

  ரைஸ் வாளி ஓ!.. செய்யலாமே!...:)

  அருமை! நல்ல தகவல்கள்! வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி

   Delete
 3. ஐஸ் பக்கெட் சவாலை இங்குள்ள் சென்னை பிரபலங்கள் எப்படி எதிர் கொள்வார்கள் என்று பார்ப்போம். ரைஸ் பக்கெட் சவால் என்பது ஏட்டிக்கு போட்டி என்பதாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளங்கோ அண்ணா

   Delete
 4. முதல் தகவல் படித்ததும் ஜில்லிட்டுப்போக வைத்தது.

  இரண்டாவது தகவல் பசிப்பிணியைப் போக்குவதாக இருப்பதால் நிறைவாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா

   Delete
 5. நல்ல பகிர்வு.சவால்கள் புதியவை.நலம் பெற்றால் சரி தான்,பகிர்வுக்கு நன்றி தங்கச்சி!

  ReplyDelete
 6. சவால் நன்றாகத் தான் இருக்கிறது பசிப் பிணியை போக்குவது மேலும் சிறப்பு. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 7. ஐஸ் பக்கெட் வேணாம்பா. அரிசி வேணா கொடுக்கலாம்.நல்ல தர்மம். பசித்தவர்களுக்குக் கொடுப்பதை விட என்ன பெரிய தானம் இருக்க முடியும். அருமையான பதிவு ஏஞ்சல்.

  ReplyDelete