அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/22/14

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை ...............

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை ..............


                                                             
 

இத்தகைய வன்கொடுமைகளுக்கு மன்னிப்பே கிடையாது 
இந்தியாவில் மட்டும் ஏழு லட்சம் சிறுமிகள் ஒவ்வொரு 

ஆண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் 
என்கிறது புள்ளி விவரம் .
நம் மகா பெருமைக்
குரிய பாரத தேசத்தின் பாலியல் 
தொழிலாளர்களில் 15 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட 
குழந்தைகள். நாட்டை தாய் நாடென்றும் மொழியை தாய் மொழியென்றும் போற்றும் பண்பாடும் பாரம்பரியமும் உள்ள 
ஒரு சமூகம்தான் குழந்தைகளை இப்படி நடத்துகிறது என்றால் 
நாம் போராடி பெற்ற சுதந்தரத்தால் எதனை சாதித்தோம் ..
இது வேதனையான தலைகுனிவான ஒரு விஷயம் 


பெண் பிள்ளைகள் மட்டும் இவ்வாறான பாலியல் 
கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று நினைத்தால் 
அது முட்டாள்தனம் ..ஏனென்றால் எத்தனையோ சிறுவர்கள்
இத்தகைய கொடுமைகளை சொல்ல முடியாமல் தங்கள் 
ஆதங்கத்தினை பிற்காலத்தில் தங்களைபோன்ற பிற 
சிறார்களிடம் மீண்டும் காட்டுகிறார்கள் .
எத்தனையோ சினிமாக்களில் இலைமறை காயாக ஆண்

குழந்தைகளும் பாதிக்கபட்டுள்ளதை காட்டியிருப்பார்கள் .
அது நூற்றுக்கு நூறு நிஜம் ..

எப்படி உங்கள் குழந்தை சொல்லாமல் இந்த விஷயம் 

உங்களுக்கு தெரியவரும் ?
ஆரோக்கியமான சூழலை உருவாக்குங்கள் பெற்றோர்களே !
குழந்தைகள் மலரினும் மென்மையானவர்கள் .அவர்களுக்கு தைரியத்தை ஊட்டுங்கள் !
எது நடந்தாலும் பெற்றோரிடம் மறைக்க கூடாது என 

வலியுறுத்துங்கள் !!சிறு விஷயத்துக்கும் அவர்களை அடிப்பேன் உதைப்பேன் என்று பயமுறுத்தாதீர்கள் !
மிக முக்கியம் குடும்ப உறுப்பினர் ஆக இருப்பினும் 
தாய் தந்தை தவிர பிறரிடம் ஒரு எல்லை வைத்தே
பழக விடுங்கள் .

அத்தை மாமா பெரியப்பா சித்தப்பா பக்கத்துக்கு வீட்டு 
அங்கிள் ஆன்டி என எவரிடமும் அளவுடனே பழகட்டும் ..
காலத்தின் கோலம் நல்லோரையும் சந்தேகப்பட வைக்கிறது 
ஒரு வயதுக்கு மேல் பிள்ளைகளை நெருங்கிய உறவினராக 

இருப்பினும் அவர்களுடன் தனிமையில் விட வேண்டாம் ..

இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் சில பழக்கங்கள்

உறக்கமின்மை ,தலை வலி ,பிறப்பு உறுப்புக்களில் 

வலி எரிச்சல் ,மன உளைச்சல் பாதிப்புகள்
படுக்கையில் சிறு நீர் கழித்தல் ,படிப்பில் மந்தம்
குடும்பத்தில் அல்லது அக்கம்பக்கம் குறிப்பிட்ட 

சிலரை (ஆணோ /பெண்ணோ) தவிர்த்தல்
..

எல்லாம் சரி வீட்டில் பாதுகாக்கப்படும் பிள்ளைகளுக்கு 

பள்ளியில் பேராபத்து வருகிறதே என்ற கேள்விக்கு ..
பெற்றோர்களே !!பணம் மட்டும் குறிக்கோளாக அலையும் 

பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்காதீர்கள் !
இல்லை தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் 
தயவு செய்து அதீத கண்காணிப்புடன் கவனியுங்கள் ............
அது உங்கள் உரிமை ............உங்கள் குழந்தை வீட்டுக்கு 
வந்ததும் அந்த நாளில் பள்ளி நிகழ்வுகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .தினமும் இயன்றவரை வகுப்பு 
ஆசிரியரை சந்தியுங்கள் .
வெளிநாடுகளில் வகுப்பு ஆசிரியர் மெயில் உட்பட அனைத்தும் பெற்றோருக்கு தெரியும் .
உங்கள் பிள்ளை பழக்கத்தில் செயல்களில் சந்தேகம் 
ஏற்பட்டால் ஆசிரியரை அணுகுங்கள் .
இண்டர்நேஷனல் லெவல் பள்ளிகள் என்று பீற்றிகொள்ளும் 
பணம் உறிஞ்சும் தனியார் பள்ளிகள் வெளிநாட்டு பள்ளி 
போன்ற தரத்தை முழுதும் கொண்டு வர வேண்டும் .!!!
பெங்களூர் பள்ளி யில் நடந்தது போன்று குழந்தையை 
பனிஷ்மெண்ட் என்ற பெயரில் தனியறையில் வைக்க
யாருக்கும் உரிமையில்லை அதுவும் பனிரெண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளை இப்படி தண்டிக்க எந்த பள்ளிக்கும் அல்லது ஆசிரியருக்கும் உரிமை இல்லை .
முறைப்படி பெற்றோரை அழைத்து அவர்களிடம் கூறியிருக்க 
வேண்டும் ..அதுதான் விதிமுறை .

வெளிநாட்டு பள்ளிகளில் டிடென்ஷன் என்று ஒன்றுண்டு 
தவறு செய்த பிள்ளைகள் சில மணிநேரம் கூடுதலாக வகுப்பில் இருக்கணும் .அதற்கு ஒரு வாரமுன்பே //உங்கள் பிள்ளை செய்த தவறுக்கு இந்த காரணமாக //என்று ஒரு கடிதம் பெற்றோருக்கு அனுப்பப்படும் .அதனால் எந்த பிள்ளையையும் உடனடியாக 
தண்டிக்க கூடாது என்று வலியுறுத்துங்கள் .
பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பெற்றோருக்கு 
தெரியபடுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமை ...
எந்த பள்ளியாக இருந்தாலும் அங்கு பணிபுரிபவர்களின் 

முழு விவரம் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும் .

வெளிநாடுகளில் பாலியல் குற்றவாளிகளின் பெயரகளை

 அரசே வெளியிட்டுவிடும்
//The child sex offender disclosure scheme allows parents, carers and 
guardians to formally ask the police to tell them if someone has a 
record for child sexual offences.//
.
குழந்தை வளர்ப்பு என்பது அவர்களை மிரட்டி அடக்கி 

வைப்பதில்லை. அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவதன் மூலம் அச்சத்தினையும், அன்பான அறிவுரைகள் கூறுவதன் மூலம் நம்பிக்கையையும் உண்டாக்க முடியும்.
குழந்தைகள் அச்சமும் வெறுப்புமின்றி மனம்விட்டுப் 

பெற்றோர்களுடன் கலந்து பழகுகிற சுதந்திரத்தைக் குடும்பத்தினர் வழங்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற அணுகுமுறை உருவானால் ஒரு குழப்பமற்ற சந்ததி உருவாகும். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தன்னை திருத்திக் கொண்டால் ஒழிய, சமுதாயத்தைத் திருத்த முடியாது. சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், வளர்ச்சிக்கும், முதல்நிலை தனிமனிதச் சீர்திருத்தம் மட்டுமே சாத்தியம்
பெற்றோர் சிலர் வருவாய் தேடுவதிலேயே முனைப்பு கொண்டு குழந்தையின் முறையான வளர்ப்பை மறந்து விடுகின்றனர். பணம் கொடுக்கிற பலத்தைவிட அன்பு கொடுக்கிற பாதுகாப்பு மிகப்பெரியது. அன்பு என்பது ஒருமுகப்பட்ட அக்கறை. அக்கறையின் வெளிப்பாடுதான் அன்பு.


(இது நலம் முக புத்தகதில் வந்த எனது பதிவு )


33 comments:

 1. //குழந்தை வளர்ப்பு என்பது அவர்களை மிரட்டி அடக்கி
  வைப்பதில்லை.//

  சரியாக சொன்னீர்கள்..
  தனிமனித ஒழுக்கம் ஒன்றே நமக்கும் பிறருக்கும் என்றென்றும் சிறப்பானது.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஐயா .

   Delete
 2. மிகவும் பயனுள்ள அவசியமான அத்யாவஸ்யமான கட்டுரை.

  //மிக முக்கியம் குடும்ப உறுப்பினர் ஆக இருப்பினும்
  தாய் தந்தை தவிர பிறரிடம் ஒரு எல்லை வைத்தே
  பழக விடுங்கள்.//

  //ஒரு வயதுக்கு மேல் பிள்ளைகளை நெருங்கிய உறவினராக
  இருப்பினும் அவர்களுடன் தனிமையில் விட வேண்டாம் ..//

  இது மிக மிக மிக மிக முக்கியமானது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .பொல்லா உலகில் நாம் தான் விழிப்புடன் இருக்கணும்

   Delete
  2. சொந்தத்தந்தையே ஆனாலும், சொந்த அண்ணன் தம்பியே ஆனாலும், ஓர் குறிப்பிட்ட வயதுக்குமேல், பெண் குழந்தைகள் தன் தந்தையையோ / தன் உடன் பிறப்புக்களையோ தொட்டுப்பழகவோ, அவர்கள் அவளைக் கொஞ்சி மகிழவோ, தாயானவள் அனுமதிக்கவே கூடாது என்பது என் சொந்தக் கருத்து.

   Delete
  3. இந்த உலகில் பிறந்துள்ள எந்த ஆடவனும் 100% யோக்யன் கிடையாது. அவ்வாறு ஒருவன் இருக்கவும் இயலாது.

   உலக மக்கட்தொகை அழியாமலும், குறையாமலும் இருப்பதற்காக, இயற்கை அதுபோல ஒரு அற்புதத்தை மனிதனுக்குள் வேறுசில காரணங்களுக்காக வரமாக அளித்துள்ளது என்பதே உண்மை.

   வெளிப்பார்வைக்கும்,, பழக்கத்திற்கும் மிக நல்லவர்களாகவே தோன்றினாலும்கூட, ஒவ்வொரு ஆடவனுக்குள்ளும் ஓர் மிருகம் ஒளிந்துள்ளது.

   அது பெரும்பாலும் எப்போதுமே தூங்கிக்கொண்டுதான் உள்ளது. அது எப்போது விழிக்கும், விழித்தெழும் போது அது என்ன செய்யும் என அவனுக்கே தெரியாது.

   இப்படியிருந்தும் இன்னும் இன்றும் பலர் யோக்யர்களாகவே வாழ்கிறார்கள் என்பதை நினைத்து நாம் கொஞ்சம் மகிழ்ந்து நிம்மதி கொள்ளலாம்.

   அவர்கள் பலரும் அவ்வாறு இருப்பதற்குக் காரணமாக சிலவற்றைச் சொல்லலாம்:

   1] பழி பாவங்களுக்கு அஞ்சுபவர்கள். கடவுளுக்கும் தன் மனசாட்சிக்கும் பயப்படுபவர்கள்.

   2] இதனால் பின்னால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணி மட்டும் அஞ்சி நடுங்கி தங்களைத் தாங்களே மனதளவில் கட்டுப்படுத்திக்கொள்பவர்கள்.

   3] சமூகத்தில் தன் பெயருக்கு ஏதும் களங்கம் வந்து விடக்கூடாதே என்பதில் அதிக கவனமும், அக்கறையும் உள்ளவர்கள்.

   4] இதுவரை தகுந்த சமய சந்தர்ப்பங்களோ, சாதகமான சூழ்நிலைகளோ ஏற்படாமல், அதை எதிர்பார்த்து ஏங்கியிருப்பவர்கள்.

   என பலவாறாக இதைப்பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் அதற்கு எனக்கு நேரமோ விருப்பமோ இல்லை.

   நான் சொல்லவரும், இதையெல்லாம் பெண் குழந்தையைப் பெற்ற ஒரு தாயால் மட்டுமே முற்றிலுமாக உணர முடியும். அதனால் இது விஷயத்தில் அவர்களின் பொறுப்பு மிக மிக அதிகம்.

   ஒவ்வொரு பெண்ணும் கண்ணும் கருத்துமாக மிக ஒழுக்கமாக வளர்க்கப்பட வேண்டும். அந்தந்த பருவத்தில் அவர்களுக்கு தாயால் பக்குவமாக பயமுறுத்தாதபடி சொல்லித்தரப்பட வேண்டிய பாடங்கள், போதனைகள், கவனங்கள், பக்குவங்கள் ஏராளம் ஏராளம்.

   தாயில்லாப்பெண் குழந்தைகள் பாடு மிகவும் கஷ்டம். அவர்கள் பாவம்.... பரிதாபத்திற்கு உரியவர்கள். அது இயற்கையாகவே அவர்களுக்கு வரவேண்டும், சிலருக்கு அது இயற்கையாகவே அதிர்ஷ்டவசமாக வந்துவிடுவதும் உண்டு.

   காலம் காலமாக தொடர்ந்து வரும் [நாம் அறியாத] இதுபோன்ற அயோக்யத்தனங்களுக்கும், இன்று ஆங்காங்கே நடைபெற்றுவரும் இதுபோன்ற விரும்பத்தகாத பல்வேறு சம்பவங்களுக்கும், அவை வெளியுலகுக்கு அவ்வப்போது வெளிச்சம் போட்டு காட்டப்படுவதற்கும் இன்றைய நவீன தொலை தொடர்பு சாதனங்களே காரணமாகும் என்பதும் மறுப்பதற்கு இல்லை.

   oooOooo

   Delete
  4. அண்ணா நீங்க சொல்லியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ..
   ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கும் ..சில சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து வெளிக்காட்டும் ..சில ஆன்மிகம் மற்றும் பெயர கெட கூடாது என்ற வைராக்கியம் காரணமாக வெளிவராமல் அமுக்கப்படும்
   ஒரு சிறு திருத்தம் ..ஆடவர் மட்டுமில்லை அண்ணா!! சில மிருக குணமுள்ள பெண்களும் இவ்வாறான குற்றம் புரிகிரார்களாம் ..கடவுள்தான் இவங்களை திருத்தனும் :(

   அந்த பள்ளியில் மருத்துவரை அழைத்து வந்த ஆசிரியை நேர்மையானவர் என்றால் உடனே பெற்றோருக்கு சொல்லியிருக்கனுமே
   குற்றத்துக்கு உடந்தையானதால் அவரும் குற்றவாளிதான் ..இங்கு பெண்ணே பெண்ணுக்கு எதிரியாகிவிட்டார் :(

   விரிவான பின்னூட்டத்துக்கு பிக்க நன்றி அண்ணா ..நீங்கள் சொன்னவை அனைத்தும் 100 உண்மை


   Delete
  5. ஐயா எடுத்து உரைத்தது மிக மிக மிக சரி..........

   Delete
 3. அஞ்சு.. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நடக்கின்ற கொடுமைகளை எண்ணும்போது...

  என்ன பாவம் செய்தனர் அந்தச் சின்னஞ் சிறுசுகள்?
  நிச்சயம் விழிப்புணர்வு மிக மிக அவசியம்.
  அவசர அவசியமான பதிவு அஞ்சு!

  பகிர்வினுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி .உங்கள் ஆதங்கத்தை பதிவு செய்ததற்கும் நன்றிகள்
   மன வருத்தம் வரும் பதிவுகளை எழுத மிக யோசிப்பேன் ..ஆனால் இந்த சம்பவம் ஒரு விழிப்புணர்வாக இருக்கணும் என்றே பதிவு செய்தேன்

   Delete
 4. பணம் கொடுக்கிற பலத்தைவிட அன்பு கொடுக்கிற பாதுகாப்பு மிகப்பெரியது. ................உண்மை.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அனு ..

   Delete
 5. மிக வேதனையான உலகிது...
  நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
  கல்லு, முள்ளுகளைத் தவிர்த்துப் போவது போல.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..
   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைக்கா

   Delete
 6. கருத்துக்கள் யாவும் மிகவும் அருமை! பள்ளிகள் தவிர, வீடுகளிலும் பெற்றோர் அறியாது இந்த‌க் கொடுமைகள் நடந்து வருகின்றன! வெளியார், வீட்டிலேயே நெடுங்காலமாக இருந்து வருபவர்கள் என்று பெரியவர்கள் அவர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்து குழந்தைகளை அவர்களிடம் விட்டு விட்டு வெளியே செல்கையிலும் இது போன்ற அத்து மீறல்கள் ந‌ட்க்கின்றன! இந்த விஷயத்தில் பெற்றோருக்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம்!

  அருமையான பதிவிற்கு இனிய பாராட்டுக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..
   மனம் மிகவும் நொந்துபோனேன் இந்த சம்பவம் அறிந்து :(
   எனது வெறுப்பு பொறுப்பை ஏற்க மறுக்கும் அந்த பள்ளி நிர்வாகம் .
   மற்றும் மற்ற ஆசிரியை மருத்துவர் அனைவருமே குற்றவாளிகள்

   Delete
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

  வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

  ReplyDelete
 8. குழந்தை வளர்ப்பு பற்றி மிக விரிவாக எழுத்துரைத்திருக்கிறீர்கள். இன்றைக்கு இளம் பெற்றோர்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படக்கூடியது.

  பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ சொக்கன் ..
   ம்ம் ,...இயன்றவரை இன்னும் அதிகமாக இதைப்பற்றி எழுத முயற்சிக்கிறேன்

   Delete
 9. Hello Angelin...How are you and the family? Nice writeup on a subject closer to my heart...Catchup with you soon...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரெவரி .மனதிலுள்ள ஆதங்கத்தை கொட்டிட்டேன் .நானெல்லாம் கத்தோலிக்க பள்ளியில் தான் படித்தேன் ..அங்கு இருந்த பாதுகாப்பு இந்த உலகத்தரம் வாய்ந்த ஸோ கால்ட் இண்டர்நேஷனல் லெவல் பள்ளிகளில் இல்லையே :( ம்ம்

   Delete
  2. நாங்க நலம் ..நீங்க வீட்டில் அனைவரும் நலம்தானே

   Delete
 10. வணக்கம்,தங்கையே!நலமா?///நல்ல பயன் தரும் பெற்றோருக்கான பகிர்வு.மேலோர்கள் கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடே!எல்லோருக்குமான தெளிவூட்டல்,மற்றும் நல் வாழ்க்கைக்கான பதிவும் கூட.{{{ரெ வரி க்கும் வணக்கம்!நலமா?நாம் எல்லோரும் நலம்.}}}

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யோகா அண்ணா

   Delete
 11. Yoga Ayya...How are you...? How is Nesan...Karuvaachi...Miss all the good times...

  ReplyDelete
  Replies
  1. யோகா மாமா நல்லா இருக்காக ...நேசன் அண்ணா நல்லா இருக்காக .... கருவாச்சி நல்லாவே இல்ல ........

   ரெ ரீ அண்ணா எவ்வளவு நாள் ஆச்சி ..எப்படி இருக்கீங்க ....நல்லா இருக்கீங்களா ...எப்போ திருப்பி வருவீங்க .....

   Delete
  2. அக்கா உண்மையான பதிவக்கா ....இன்னும் சில மிருகங்கள் இருக்கின்றன ..

   Delete
 12. வெகு அருமையான கருத்துக்கள் ஏஞ்சல். யோசித்து அழகாகக் கோர்த்து எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இமா ..மிகுந்த மன வலியுடன் தான் எழுதினேன் .

   Delete
 13. எல்லா பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது !

  ReplyDelete
 14. அன்பு தமிழ் உறவே!
  ஆருயிர் நல் வணக்கம்!

  இன்றைய வலைச் சரத்தின்,
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துகள்!

  வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
  உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
  உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
  தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
  (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

  ReplyDelete