அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/21/14

விழிப்புணர்வு !!

இது சைல்ட்  ஹெல்ப் லைன் காணொளி முகபுத்தகத்தில் 
கீதா பகிர்ந்தது ..                                     https://www.youtube.com/watch?v=7WJpdvlBMlE
                                      
                                                                                                 


ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு இதனை 
காண்பியுங்கள் உங்கள் குழந்தை உங்க கிட்ட பயமின்றி பழக இயல்பான சூழ்நிலையை உருவாக்குங்கள் ..
                                                                                                         

பயம் காரணமாக பல குழந்தைகள் பெற்றோரிடம் 
மறைக்கின்றனர் .
சிறு விஷயத்தை மறைப்பது போல மிக மோசமான 
விஷயங்களும் மறைக்கப்படும் :(

                                                                                                 இது பல வருடங்கள் முன் எங்கள் பள்ளியில் நடந்த 
ஒரு சம்பவம் .
எங்கள் பள்ளி கத்தொலிக்க பள்ளி .கடும் சட்டத்திட்டங்கள் கடைபிடிப்பார்கள் .பள்ளி சீருடை ஏழாம் வகுப்பு வரை 
அரைப்பாவாடை சட்டை ,எட்டாம் வகுப்புமுழு பாவாடை ,பிறகு ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 
அரைத்தாவணி ..கண்டிப்பாக இரண்டு சடை பின்னி எண்ணெய்
 வைத்து ரிப்பன் போட்டு மடித்து கட்ட வேண்டும் .
மற்றும் நகங்களை சீராக வெட்டியிருக்கணும் .
physical education வகுப்பில் பி.டி ஆசிரியர்கள் கையை நீட்ட 
சொல்லி பார்ப்பார்கள் .நகம் வெட்டாம வளர்த்திருந்தா 
கையில் foot ruler இனால் நங்கென்று அடி விழும் !!
மேலும் சனிகிழமை கூட கலர் டிரஸ் அனுமதி இல்லை  ..
இப்படிப்பட்ட பள்ளியில் தான் நானும் படித்தேன் .
ஒரு நாள் நாங்கள் பாட்மிண்டன் பயிற்சி செய்து கொண்டிருந்தோம் பந்து அடுத்த காம்பவுண்டில் விழுந்து விட்டது .
பள்ளி கேட் திறந்து இருந்தது அது ஆசிரியர் செல்லும் வழி ..
அதன் வழியே இரு மாணவியர் வெளியே சென்று அடுத்த 
காம்பவுண்டில் உள்ள வீட்டில் கேட்டு பந்தை எடுத்து வந்தனர் .
இதனை எங்கள் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ்
 போகும்போது வேறொரு வகுப்பு மாடியில் இருந்து 
பார்த்திருக்கிறார் ..
அடுத்த அரைமணிநேரத்தில் வெளியே சென்ற மாணவியருக்கு
 செம டோஸ் !! 
இம்போசிஷன் எழுத வைத்தார் H.M ..நடு அசெம்ளியில் அந்த மாணவியர் தலை குனிந்து பனிஷ்மேண்டுக்கு நிற்க 
வைக்கபட்டார்கள் .அவர் அடுத்த நாள் அசெம்ப்ளியில் 
கூறியது இதுதான் 

//உங்களுக்கு பள்ளி வளாகத்தில் என்ன நடந்தாலும் 
நாங்கள்தான் பொறுப்பு ..எங்களை நம்பிதானே உங்கள் 
பெற்றோர் இங்கே அனுப்புகிறார்கள் .
நாங்க கடினமுடன் நடப்போம் .பிற்காலத்தில் நீங்கள் இதனை உணர்வீர்கள் //
நான் படித்தது  அரசு உதவி பெரும் பள்ளி கத்தோலிக்க பள்ளி .
அனைத்து தரப்பினரும் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க 
வைத்த பள்ளி .


                                                                                                   
இதை எதற்கு நினைவு கூறுகிறேன் என்றால் ..

பெங்களூர் பள்ளி //சம்பவம் 
On Thursday angry parents had stormed the school but the management refused to take responsibility for the incident even though the incident happened during school hours.//
இந்த ஜென்மங்களை என்ன செய்வது ..பள்ளி ஹெட் டீச்சர் முதல் அந்த பிஞ்சு குழந்தையை பாதுகாக்க தவறிய நிர்வாகதினர் அனைவரையும்  பொது கழிப்பறைகளை ஒரு மாதம் கழுவ விடனும் ..
ஜெயில் போட்டாலும் பிரியாணி தின்று கொழுத்து இன்னும் கொழுப்பெடுத்து வரும் இந்த ஈனப்பிறவிகள் :(

                                                                                  
                                   XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX 

10 comments:

 1. வணக்கம்
  நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உடன் வருகைக்கு மிக்க நன்றி ரூபன் சகோ .மிகுந்த மன வலியுடன் பகிர்ந்தேன்.
   என்ன ஒரு சமூகம் இது:( ..நாம் தான் நமது குழந்தைகளை பாதுக்காக்கனும்

   Delete
 2. கேள்விப்பட்டபோது தீராத்துயரமாக இருந்தது அஞ்சு...

  கொடுமைக்கு எப்போதான் தீர்வு கிட்டுமோ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..உண்மையில் எனக்கு இப்பபிபட்ட விஷயங்களை படிக்க கூட பயமா இருக்கும் ஆனா நாம் ஒவ்வொருவரும் பகிரா விடில் இது இன்னும் தீவிரமாகும் ..இன்று கூட பிரேக்கிங் நியூஸ் அதே பெங்களூரில் மூற்று வயது சிறுமி பலாத்காரம் :(
   அடுத்து ஒரு போஸ்டும் போடபோறேன்

   Delete
 3. தேவையான நேரத்தில், எல்லோருக்கும் தேவையான ஒரு முக்கியமான விழிப்புணர்வு பதிவு.

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. "//பயம் காரணமாக சில குழந்தைகள் பெற்றோர்களிடம் மறைக்கின்றனர்//" - பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நல்ல நண்பர்களாக இருந்தால் கண்டிப்பாக பிள்ளைகளும் எல்லா விஷயத்தையும் சொல்லுவார்கள்.

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ ..சின்ன பிள்ளைங்க சாக்லேட் சாப்பிட்டு மறைப்பது போல பெரிய விஷயங்களையும் மறைக்க கூடும்
   அதுவும் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் மிக கவனமுடன் பாதுகாப்பாக தைரியத்தை ஊட்டி வளர்க்கணும் .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..

   Delete

 5. வணக்கம்!

  பொல்லாப் பொறுக்கிகளைக் கல்லால் அடித்துயிரை
  இல்லாமல் செய்வோம் இனி!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா ..

   Delete