அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/16/14

என் வீட்டு தோட்டத்தில் .அறுவடை :)மற்றும் க்வில்லிங்


தோழி ஒருவரின் மகனது பிறந்த நாளுக்கு செய்த சுகந்திப்பூ :)

                                                                              

மற்றும் மகளுக்கு மீள் சுழற்சி முறையில் செய்த
 பட்டாம்பூச்சி பிரேஸ்லெட் என் வீட்டு தோட்டத்தில் அறுவடை :)

சித்ரா மற்றும் ஆதி இருவரின் விருப்பத்திற்கிணங்கி 
எனது தோட்டத்தில் விளைந்த கொண்ட கடலை அறுவடை 
இன்று வெளியிடப்படுகிறது :))
அதற்க்கு முன் 

உருளைகிழங்கு அறுவடை ..

பை மற்றும் கண்டெய்னரில் கிழங்கு வளர்ப்பு இங்கே உள்ளது 
நான் அதே முறையில் வளர்த்து பத்து வாரம் கழிந்து அறுவடை செய்தேன்.
என்னால் பூக்களை படம் எடுக்க இயலவில்லை ..ஒரு மாதத்திற்கு முன் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையால் செடிகள் சில நாசமாகி விட்டன 
மற்றும் சில கீழே சரிந்து விட்டன ..மிச்சம் மீதியில் தண்டு வரை வெட்டி விட்டபின்னும் வளர்ந்து வந்த செடியில் அறுவடை செய்தது இவை 

                                                                              

அரைகிலோவுக்கும் அதிகம் கிடைத்தது :)
அப்படியே கழுவி தோலுடன் மஹியின் குறிப்புப்படி செய்தேன் 

                                                                             
 


தயிர் சாதத்துடன் சாப்பிட .ஸ்ஸ்ஸ்ஸ் !!
யம்மி !!!
அடுத்தது அனைவரும் ஆவலுடன் 
எதிர்பார்த்த வெள்ளை கொண்டை கடலை அறுவடை !!

:) :) :) :) :):):)
எப்படியும் எல்லாரும் சிரிக்க போறீங்க 
நானும் சேர்ந்து சிரிச்சுக்கறேன் :)

இப்போ இதில் சாட் மசாலா செய்வதா ?
இல்லை கடலை குருமா செய்வதா ?
சன்னா மசாலா செய்வதானு ஒரே குழப்பம் 
யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க ..:)


அடுத்தது 
வெகு ஆர்வமுடன் பச்சை பட்டாணி 
விதைத்து இருக்கிறேன் :)


காய்ந்த பட்டாணிகளை எடுத்து ஒரு 
கிச்சன் டிஷ்யூ பேப்பரில் நீர் தெளித்து 
சுற்றி ஜன்னலோரம் வைக்கவும் .
நான்கு நாட்களில் மேலே உள்ளதுபோல 
முளை விட்டிருக்கும் .
பிறகு ஒவ்வொன்றாக தனியே குழிகளில் நடலாம் 
அல்லது காலி முட்டை ஓடுகளில் கலப்பு மண் உரம் 
நிரப்பி இந்த முளைகட்டிய பட்டாணிகளை 
விதைக்கலாம் .முட்டை ஓட்டில் செடி சிறிது வளர்ந்ததும் 
ஓட்டுடன் நிலத்தில் நடலாம் .
படம்..நன்றி கூகிள் 

இதோ நான் நட்டு வளர்ந்தவை :)
பட்டாணி விளைந்ததும் அறுவடை இங்கே வெளிவரும் :)


அதுவரை நன்றி  கூறி விடை !!!
இருங்க இருங்க :)
சித்ரா அவர்களின் குறிப்பு பார்த்து செய்த 
 எள்ளடை 

இப்போ விடை பெறுவது ஏஞ்சலின் :)

இப்போ தூங்கிட்டேன் ..யாரும் குறிப்பா சித்ரா மற்றும் 
மஹி  சிரிச்சு
 என்னை எழுப்பக்கூடாது :)

xxxxxxxxxxxxxxx 
42 comments:

 1. அனைத்தும் அருமைதான் ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா ..உங்களுக்கு தான் முதல் ப்ளேட் சன்னா மசாலா :)
   வருகைக்கும் அனைத்தையும் ரசிததற்க்கும் மிக்க நன்றிக்கா

   Delete
 2. முட்டை ஓடுகள் இதற்கெல்லாமா பயன்படுகிறது!! ஆச்சிரியமாக இருக்கிறது சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அனைத்தையும் ரசிததர்க்கும் மிக்க நன்றி சகோ ..ஆமாம் முட்டை ஓடு ஒரு பிளான்ட் ஸ்டார்டர் ..குழந்தைகள் கூட கிச்சனில் தக்காளி செடிகளை வளர்த்து அப்புறம் தோட்டத்தில் நட வசதி ..
   மேலும் அதில் உள்ள சுண்ணாம்பு சத்து செடிங்களுக்கும் நல்லது

   Delete
 3. சுகந்திப்பூ + பட்டாம்பூச்சி பிரேஸ்லெட் பிரமாதம்...

  சன்னா மசாலா செய்யுங்க...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் சன்னா மசாலா ஐடியாவுக்கும் மிக்க நன்றிங்க DD :)

   நீங்க இன்னும் திண்டுக்கல் ரொட்டி ரெசிப்பி தரல்லை எங்களுக்கு :)

   Delete
 4. பேபி கிழங்காட்டம் தெரியுதே அஞ்சு... இன்னும் கொஞ்சம் நாள் போய் பிடுங்கியிருக்கலாம்.. கடலை கொஞ்சம்தான் வந்ததா... அடுத்த முறை நல்லா உரம் போட்டு வைங்க. ஜெஸ்ஸி ரொம்ப சுகமா படுத்து போஸ் தர்றது அழகு..:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ராதா இது குட்டி பேபி வெரைட்டி நான் கிட்டத்தட்ட 15 வாரம் வைத்தேன் ,இங்கே வெயில் ஒரு நாள் வந்தா மூனுனாளுக்கு மழை நானும் கொஞ்சம் தோட்டத்தை எனது hay பீவர் அல்லர்ஜில கவனிக்கல ..அடுத்த முறை நல்லா உரம் போட்டு வளக்கணும் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா ..

   Delete
 5. சுகந்திப்பூவும் பட்டாம்பூச்சியும் வழக்கம் போல அழகு.

  கிழங்கு - என்ன இனம் போட்டீங்க? வறுவல் பார்க்கவே நாவூறுது. யமி.

  கடலை குருமா பண்ணுங்க. ஃப்ரெஷ் கடலைக்கு நல்லா இருக்கும்.

  பட்டாணி - நானும் முன்னால் விதைச்சிருக்கேன். தளிர் சாலட்ல போடலாம். பிஞ்சுக் காய் சூப்பரா இருக்கும்.

  ம்... சித்ராவும் மகியும்தானே சிரிக்கக் கூடாது. இமா சிரிக்கலாம்ல! ஹாஹாஹா.... ;))))))

  ReplyDelete
  Replies
  1. Garrrrrr for imaa:))


   அது பேர் பாக்கில் இருந்தது மறந்துட்டேன் நோட் செய்ய ..இது உள்ளதிலேயே சின்ன வெரைட்டி இமா ..ஆனா சூப்பர் சுவை :)!
   வருகைக்கும் அனைத்தையும் ரசிததர்க்கும் மிக்க நன்றி

   Delete
 6. ஏஞ்சலின்,

  கைவினை அழகாக உள்ளது. சூரியகாந்திப் பூவை சுகந்திப் பூ'ன்னு சொல்லுவீங்களா!

  விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்த ஏஞ்சலினுக்கு நன்றி. உருளை அறுவடை அமோகம்தான். இன்னும் ஒருசில மாதங்களில் நானும் நடப் பார்க்கிறேன்.

  ஏற்கனவே எங்களுக்கு நிறைய அனுபவம் இருப்பதால் நாங்கபோய் சிரிப்பமா சொல்லுங்க!

  கொண்டைக்கடலையை அவசரப்பட்டு பறிச்சிட்டீங்களோ? தோல் பச்சையா இருக்கே. சாம்பார் முதல் கூட்டு வரை ஒரு நாளைக்கு ஒன்னுன்னு செஞ்சு இதுல ஒவ்வொன்னா எடுத்துப் போட்டுட்டாப் போச்சு. அவ்வளவுதான்.

  ப.பட்டாணி வளர்வதைப் பார்த்தால் ...... மல்லாட்டை முதல் எல்லாமும் வீட்டிலேயே வளர்க்கலாம் போல் உள்ளதே. எல்லடையும் சுட்டு லிங்க்கும் கொடுத்ததற்கு நன்றிங்க.

  நல்லா, சுகமா தூங்குங்கோ !

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா :) எங்கே மயங்கி விழபோறீங்கலோன்னு பயந்துட்டேன் என் வீட்டு அறுவடையை பார்த்து :)
   அது சுகந்திப்பூ //அந்த பெயர வைச்சது ப்ரியசகியின் மகன் ..அவருடைய பிறந்த நாளுக்கு செய்தது அந்த கார்ட்
   அவர் சிறு பிள்ளையா இருக்கும்போது மழலையில் அப்படி கூப்பிடுவாராம் அவங்க ஒரு பதிவில் சொல்லியிருந்தாங்க .

   ம்ம் ஆமாம் கொஞ்சம் ஆர்வகோளாரில் கொண்ட கடலை அவசரப்பட்டு பறிசிட்டேன் :)

   அப்புறம் எள்ளடை சூப்பர் கரமொருன்னு வந்தது வருகைக்கும் கருத்துக்கும் சிரிக்காமல் இருந்ததற்கும் நந்த்ரி :)

   Delete
 7. ஆ.. அஞ்சு!..:)

  கலக்கல் பதிவு அஞ்சு!

  க்விலிங்க் பூ சூர்யகாந்தி மாதிரியே அத்தனையும் ஜோர்!..:)

  க்விலிங் உங்ககிட்ட நல்லா இல்லேன்னாத்தான் வருத்தமே..
  இது சூப்பரா இருக்கு அஞ்சு!..

  நான் என் அம்மாவோட எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டேன்.. பார்க்கணும் இனித்தான்!..

  உ.கிழங்கு கண்ணு பட்டிடப் போகுது!
  கொண்டைக் கடலை இப்பிடியா வரும்?.. சரி!
  ப.பட்டாணியும் இதேமாதிரித்தானோ?..

  ஆமா இங்கே கூட்டுரம்ன்னு வாங்கப்போனா ஙே..ஙேன்னு ஆகிட்டுது எனக்கு..:(
  சிறிய மூட்டை இல்லைன்னு சொன்னாங்க. அப்புறம் அதுக்குப் பதிலா hornspäne என்னு ஒண்ணைக் கடைக்காரர் சொல்ல அதை என்னான்னு பார்த்தா...
  அதில மாட்டெலும்பு அரைச்சு மிக்ஸ்ட் பண்ணி வைச்சிருக்காங்க..:( எங்கே போக நான்?.. அவ்வ்வ்வ்..:(

  இன்னும் கூட்டுமண் வாங்கல.. சாதாரணமா வாங்குற மண்ணில பயிர் செய்தா வராதா அஞ்சு?..

  சித்ரா குறிப்பு எள்ளடை ஜமி!..:)

  ஜெஸ்ஸி தூக்கமும் அழ..கு..:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..நான் சர்சுக்கு போயிட்டு வந்து விரிவா பதில் தரேன் ..
   COMPOST என்று கேளுங்க ..இல்லாட்டி ப்ரியா கிட்ட ஐடியா கேளுங்க அவங்க தோட்டத்துக்கு எங்கே மண் வாங்கராங்கனு

   Delete
  2. ஒண்ணும் அவசரமில்ல அஞ்சு!
   ஆண்டவர்கிட்ட அமைதியா பிரார்த்தனை பண்ணீட்டு வாங்க!..:)

   Delete
 8. வீட்டுத் தோட்டம், கிழங்கு, பட்டாணி விளைச்சல் என்று ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மரங்களும் முன்பக்கம் பூச்செடிகளும்தான். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .
   இவை சும்மா எங்களுக்கு கிடைக்கும் வெய்யில் காலத்தில் போட்டவை ..கொஞ்சம் இடம் இருந்தாலும் தொட்டியில் போடுவார்கள் இங்கே சம்மரில்

   Delete
 9. க்வில்லிங் அழகா இருக்கு. என் மகளும் இப்போ கற்றுக் கொண்டிருக்கிறாள்...:)

  கொண்டக்கடலை இப்படியா இருக்கும்.! முதல்முறையாக பார்க்கிறேன். என் விருப்பத்தையும் நினைவில் கொண்டு படத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சித்ரா அவர்கள் சொன்னது போல ஒவ்வொண்ணா சமையலில் சேருங்க.....:)

  எள்ளடை பிரமாதமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Adhi.
   தோட்டம் சிவா நிறைய விளைச்சல் கண்டிருக்கார் கருப்பு கடலையில் ..பாருங்க அவர் பக்கமும் .
   மகள் க்வில்லிங் செய்ததும் படம் போடுங்க ..அருமையான கைவினை .ஜிமிக்கி கூட செய்யலாம் ..

   Delete
 10. சுகந்திப் பூ அழகு!.. (அது சூரிய காந்திதானே!..)

  மிக சந்தோஷமான அறுவடை.. ஒன்றிலிருந்து தானே நூறு!..
  பல்கிப் பெருகட்டும் தங்கள் தோட்டத்தின் விளைச்சல்!..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா அது சூர்யகாந்தி பூவேதான் ..தோழியின் மகன் சிறுவயதில் மழலையில் அப்படி கூப்பிடுவாராம் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

   Delete
 11. வணக்கம்
  கண்னைக்கவரும் கைவண்ணம் கண்டு மகிழ்ந்தேன் அனைத்து பிரமாதம்... வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்

   Delete
 12. அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி kumar .

   Delete
 13. ஆஹா அறுவடை ஆரம்பமாகிவிட்டதோ? சூப்பர். நான் இன்னும் தொடவில்லை:).. பூ வரவில்லை கிழங்குக்கு.

  ReplyDelete
 14. இன்றுதான் வாழ்க்கையில் முதன்முதலில் கொண்டைக்கடலையைக் காண்கிறேன்.. இப்படியா விளைகிறது.. ஒரு காயில் ஒன்றுதான் இருக்குமோ? கிரீன்பீஸ் போல இருக்குமாக்கும் என நினைச்சேன்..

  ReplyDelete
 15. //இதோ நான் நட்டு வளர்ந்தவை :)//

  இது இனி எப்போ வளர்ந்து.. எப்போ காய்க்கிறதாம்ம்.. பூ வரக் குளிரும் தொடங்கிடும்.. 2 லேட் என்றுதான் நினைக்கிறேன் அஞ்சு.. இருந்தாலும் பார்க்கலாம்ம்..

  உஸ்ஸ்ஸ்ஸ் மீயும் ஸ்லீப்பிங்.. ஆரும் எழுப்பிடாதீங்க....

  ReplyDelete
 16. அருமையான பதிவு .....
  உங்க யோசனையால்....எங்க வீட்டிலேயும் தக்காளி செடியும்,கீரையும் வளருது...

  ReplyDelete
  Replies
  1. Thanks Anu :) share your harvest photos with us

   Delete
 17. மஹி சிரிச்சு என்னை எழுப்பக்கூடாது :) ///// hahahaஹஹஹாஹா! :))))))) நீங்க தூங்கும்போது எழுப்பாம முழிச்சிகிட்டு இருக்கும்போதா எழுப்ப முடியும் அக்கா? ஹஹஹ! ஹிஹிஹி...ஹாஹா!

  அதான் நான் அப்பயே கேட்டேன், எத்தனை கொ.கடலை நட்டீங்கன்னு! பட்டாணியாவது ஒரு கிண்ணம் காய் கிடைக்கற அளவுக்கு வளர்க்கோணும், ஓகே?? ;))))

  உருளைக் கிழங்கு கலக்கிருச்சு! சூப்பர்! என்ஸாய்...

  ப்றேஸ்லெட்டும், சுகந்திப்பூ {இது என்னா பூ?? புச்சா இருக்கே எனக்கு??!! ;) } அழகா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. :) sooryakaanthi poo is suganthi poo :))))

   Delete
 18. தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மைதிலி .இப்போதான் பார்த்தேன் .தாமதத்திற்கு மன்னிக்கவும்

   Delete
 19. வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.
  www.ponnibuddha.blogspot.in
  www.drbjambulingam.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி .இப்போதான் பார்த்தேன் .

   Delete
 20. க்வில்லிங் அருமை!ஓ............இப்போ அறுவடைக் காலமோ?:)................///அரைகிலோவுக்கும் அதிகம் கிடைத்தது :)////ஒரு 1 1/2 பவுண்ட் லாபம்.............ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 21. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ..

   Delete