அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/22/14

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை ...............

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை ..............


                                                             
 

இத்தகைய வன்கொடுமைகளுக்கு மன்னிப்பே கிடையாது 
இந்தியாவில் மட்டும் ஏழு லட்சம் சிறுமிகள் ஒவ்வொரு 

ஆண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் 
என்கிறது புள்ளி விவரம் .
நம் மகா பெருமைக்
குரிய பாரத தேசத்தின் பாலியல் 
தொழிலாளர்களில் 15 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட 
குழந்தைகள். நாட்டை தாய் நாடென்றும் மொழியை தாய் மொழியென்றும் போற்றும் பண்பாடும் பாரம்பரியமும் உள்ள 
ஒரு சமூகம்தான் குழந்தைகளை இப்படி நடத்துகிறது என்றால் 
நாம் போராடி பெற்ற சுதந்தரத்தால் எதனை சாதித்தோம் ..
இது வேதனையான தலைகுனிவான ஒரு விஷயம் 


பெண் பிள்ளைகள் மட்டும் இவ்வாறான பாலியல் 
கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று நினைத்தால் 
அது முட்டாள்தனம் ..ஏனென்றால் எத்தனையோ சிறுவர்கள்
இத்தகைய கொடுமைகளை சொல்ல முடியாமல் தங்கள் 
ஆதங்கத்தினை பிற்காலத்தில் தங்களைபோன்ற பிற 
சிறார்களிடம் மீண்டும் காட்டுகிறார்கள் .
எத்தனையோ சினிமாக்களில் இலைமறை காயாக ஆண்

குழந்தைகளும் பாதிக்கபட்டுள்ளதை காட்டியிருப்பார்கள் .
அது நூற்றுக்கு நூறு நிஜம் ..

எப்படி உங்கள் குழந்தை சொல்லாமல் இந்த விஷயம் 

உங்களுக்கு தெரியவரும் ?
ஆரோக்கியமான சூழலை உருவாக்குங்கள் பெற்றோர்களே !
குழந்தைகள் மலரினும் மென்மையானவர்கள் .அவர்களுக்கு தைரியத்தை ஊட்டுங்கள் !
எது நடந்தாலும் பெற்றோரிடம் மறைக்க கூடாது என 

வலியுறுத்துங்கள் !!சிறு விஷயத்துக்கும் அவர்களை அடிப்பேன் உதைப்பேன் என்று பயமுறுத்தாதீர்கள் !
மிக முக்கியம் குடும்ப உறுப்பினர் ஆக இருப்பினும் 
தாய் தந்தை தவிர பிறரிடம் ஒரு எல்லை வைத்தே
பழக விடுங்கள் .

அத்தை மாமா பெரியப்பா சித்தப்பா பக்கத்துக்கு வீட்டு 
அங்கிள் ஆன்டி என எவரிடமும் அளவுடனே பழகட்டும் ..
காலத்தின் கோலம் நல்லோரையும் சந்தேகப்பட வைக்கிறது 
ஒரு வயதுக்கு மேல் பிள்ளைகளை நெருங்கிய உறவினராக 

இருப்பினும் அவர்களுடன் தனிமையில் விட வேண்டாம் ..

இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் சில பழக்கங்கள்

உறக்கமின்மை ,தலை வலி ,பிறப்பு உறுப்புக்களில் 

வலி எரிச்சல் ,மன உளைச்சல் பாதிப்புகள்
படுக்கையில் சிறு நீர் கழித்தல் ,படிப்பில் மந்தம்
குடும்பத்தில் அல்லது அக்கம்பக்கம் குறிப்பிட்ட 

சிலரை (ஆணோ /பெண்ணோ) தவிர்த்தல்
..

எல்லாம் சரி வீட்டில் பாதுகாக்கப்படும் பிள்ளைகளுக்கு 

பள்ளியில் பேராபத்து வருகிறதே என்ற கேள்விக்கு ..
பெற்றோர்களே !!பணம் மட்டும் குறிக்கோளாக அலையும் 

பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்காதீர்கள் !
இல்லை தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் 
தயவு செய்து அதீத கண்காணிப்புடன் கவனியுங்கள் ............
அது உங்கள் உரிமை ............உங்கள் குழந்தை வீட்டுக்கு 
வந்ததும் அந்த நாளில் பள்ளி நிகழ்வுகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .தினமும் இயன்றவரை வகுப்பு 
ஆசிரியரை சந்தியுங்கள் .
வெளிநாடுகளில் வகுப்பு ஆசிரியர் மெயில் உட்பட அனைத்தும் பெற்றோருக்கு தெரியும் .
உங்கள் பிள்ளை பழக்கத்தில் செயல்களில் சந்தேகம் 
ஏற்பட்டால் ஆசிரியரை அணுகுங்கள் .
இண்டர்நேஷனல் லெவல் பள்ளிகள் என்று பீற்றிகொள்ளும் 
பணம் உறிஞ்சும் தனியார் பள்ளிகள் வெளிநாட்டு பள்ளி 
போன்ற தரத்தை முழுதும் கொண்டு வர வேண்டும் .!!!
பெங்களூர் பள்ளி யில் நடந்தது போன்று குழந்தையை 
பனிஷ்மெண்ட் என்ற பெயரில் தனியறையில் வைக்க
யாருக்கும் உரிமையில்லை அதுவும் பனிரெண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளை இப்படி தண்டிக்க எந்த பள்ளிக்கும் அல்லது ஆசிரியருக்கும் உரிமை இல்லை .
முறைப்படி பெற்றோரை அழைத்து அவர்களிடம் கூறியிருக்க 
வேண்டும் ..அதுதான் விதிமுறை .

வெளிநாட்டு பள்ளிகளில் டிடென்ஷன் என்று ஒன்றுண்டு 
தவறு செய்த பிள்ளைகள் சில மணிநேரம் கூடுதலாக வகுப்பில் இருக்கணும் .அதற்கு ஒரு வாரமுன்பே //உங்கள் பிள்ளை செய்த தவறுக்கு இந்த காரணமாக //என்று ஒரு கடிதம் பெற்றோருக்கு அனுப்பப்படும் .அதனால் எந்த பிள்ளையையும் உடனடியாக 
தண்டிக்க கூடாது என்று வலியுறுத்துங்கள் .
பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பெற்றோருக்கு 
தெரியபடுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமை ...
எந்த பள்ளியாக இருந்தாலும் அங்கு பணிபுரிபவர்களின் 

முழு விவரம் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும் .

வெளிநாடுகளில் பாலியல் குற்றவாளிகளின் பெயரகளை

 அரசே வெளியிட்டுவிடும்
//The child sex offender disclosure scheme allows parents, carers and 
guardians to formally ask the police to tell them if someone has a 
record for child sexual offences.//
.
குழந்தை வளர்ப்பு என்பது அவர்களை மிரட்டி அடக்கி 

வைப்பதில்லை. அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவதன் மூலம் அச்சத்தினையும், அன்பான அறிவுரைகள் கூறுவதன் மூலம் நம்பிக்கையையும் உண்டாக்க முடியும்.
குழந்தைகள் அச்சமும் வெறுப்புமின்றி மனம்விட்டுப் 

பெற்றோர்களுடன் கலந்து பழகுகிற சுதந்திரத்தைக் குடும்பத்தினர் வழங்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற அணுகுமுறை உருவானால் ஒரு குழப்பமற்ற சந்ததி உருவாகும். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தன்னை திருத்திக் கொண்டால் ஒழிய, சமுதாயத்தைத் திருத்த முடியாது. சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், வளர்ச்சிக்கும், முதல்நிலை தனிமனிதச் சீர்திருத்தம் மட்டுமே சாத்தியம்
பெற்றோர் சிலர் வருவாய் தேடுவதிலேயே முனைப்பு கொண்டு குழந்தையின் முறையான வளர்ப்பை மறந்து விடுகின்றனர். பணம் கொடுக்கிற பலத்தைவிட அன்பு கொடுக்கிற பாதுகாப்பு மிகப்பெரியது. அன்பு என்பது ஒருமுகப்பட்ட அக்கறை. அக்கறையின் வெளிப்பாடுதான் அன்பு.


(இது நலம் முக புத்தகதில் வந்த எனது பதிவு )


7/21/14

விழிப்புணர்வு !!

இது சைல்ட்  ஹெல்ப் லைன் காணொளி முகபுத்தகத்தில் 
கீதா பகிர்ந்தது ..                                     https://www.youtube.com/watch?v=7WJpdvlBMlE
                                      
                                                                                                 


ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு இதனை 
காண்பியுங்கள் உங்கள் குழந்தை உங்க கிட்ட பயமின்றி பழக இயல்பான சூழ்நிலையை உருவாக்குங்கள் ..
                                                                                                         

பயம் காரணமாக பல குழந்தைகள் பெற்றோரிடம் 
மறைக்கின்றனர் .
சிறு விஷயத்தை மறைப்பது போல மிக மோசமான 
விஷயங்களும் மறைக்கப்படும் :(

                                                                                                 இது பல வருடங்கள் முன் எங்கள் பள்ளியில் நடந்த 
ஒரு சம்பவம் .
எங்கள் பள்ளி கத்தொலிக்க பள்ளி .கடும் சட்டத்திட்டங்கள் கடைபிடிப்பார்கள் .பள்ளி சீருடை ஏழாம் வகுப்பு வரை 
அரைப்பாவாடை சட்டை ,எட்டாம் வகுப்புமுழு பாவாடை ,பிறகு ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 
அரைத்தாவணி ..கண்டிப்பாக இரண்டு சடை பின்னி எண்ணெய்
 வைத்து ரிப்பன் போட்டு மடித்து கட்ட வேண்டும் .
மற்றும் நகங்களை சீராக வெட்டியிருக்கணும் .
physical education வகுப்பில் பி.டி ஆசிரியர்கள் கையை நீட்ட 
சொல்லி பார்ப்பார்கள் .நகம் வெட்டாம வளர்த்திருந்தா 
கையில் foot ruler இனால் நங்கென்று அடி விழும் !!
மேலும் சனிகிழமை கூட கலர் டிரஸ் அனுமதி இல்லை  ..
இப்படிப்பட்ட பள்ளியில் தான் நானும் படித்தேன் .
ஒரு நாள் நாங்கள் பாட்மிண்டன் பயிற்சி செய்து கொண்டிருந்தோம் பந்து அடுத்த காம்பவுண்டில் விழுந்து விட்டது .
பள்ளி கேட் திறந்து இருந்தது அது ஆசிரியர் செல்லும் வழி ..
அதன் வழியே இரு மாணவியர் வெளியே சென்று அடுத்த 
காம்பவுண்டில் உள்ள வீட்டில் கேட்டு பந்தை எடுத்து வந்தனர் .
இதனை எங்கள் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ்
 போகும்போது வேறொரு வகுப்பு மாடியில் இருந்து 
பார்த்திருக்கிறார் ..
அடுத்த அரைமணிநேரத்தில் வெளியே சென்ற மாணவியருக்கு
 செம டோஸ் !! 
இம்போசிஷன் எழுத வைத்தார் H.M ..நடு அசெம்ளியில் அந்த மாணவியர் தலை குனிந்து பனிஷ்மேண்டுக்கு நிற்க 
வைக்கபட்டார்கள் .அவர் அடுத்த நாள் அசெம்ப்ளியில் 
கூறியது இதுதான் 

//உங்களுக்கு பள்ளி வளாகத்தில் என்ன நடந்தாலும் 
நாங்கள்தான் பொறுப்பு ..எங்களை நம்பிதானே உங்கள் 
பெற்றோர் இங்கே அனுப்புகிறார்கள் .
நாங்க கடினமுடன் நடப்போம் .பிற்காலத்தில் நீங்கள் இதனை உணர்வீர்கள் //
நான் படித்தது  அரசு உதவி பெரும் பள்ளி கத்தோலிக்க பள்ளி .
அனைத்து தரப்பினரும் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க 
வைத்த பள்ளி .


                                                                                                   
இதை எதற்கு நினைவு கூறுகிறேன் என்றால் ..

பெங்களூர் பள்ளி //சம்பவம் 
On Thursday angry parents had stormed the school but the management refused to take responsibility for the incident even though the incident happened during school hours.//
இந்த ஜென்மங்களை என்ன செய்வது ..பள்ளி ஹெட் டீச்சர் முதல் அந்த பிஞ்சு குழந்தையை பாதுகாக்க தவறிய நிர்வாகதினர் அனைவரையும்  பொது கழிப்பறைகளை ஒரு மாதம் கழுவ விடனும் ..
ஜெயில் போட்டாலும் பிரியாணி தின்று கொழுத்து இன்னும் கொழுப்பெடுத்து வரும் இந்த ஈனப்பிறவிகள் :(

                                                                                  
                                   XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX 

7/16/14

என் வீட்டு தோட்டத்தில் .அறுவடை :)மற்றும் க்வில்லிங்


தோழி ஒருவரின் மகனது பிறந்த நாளுக்கு செய்த சுகந்திப்பூ :)

                                                                              

மற்றும் மகளுக்கு மீள் சுழற்சி முறையில் செய்த
 பட்டாம்பூச்சி பிரேஸ்லெட் என் வீட்டு தோட்டத்தில் அறுவடை :)

சித்ரா மற்றும் ஆதி இருவரின் விருப்பத்திற்கிணங்கி 
எனது தோட்டத்தில் விளைந்த கொண்ட கடலை அறுவடை 
இன்று வெளியிடப்படுகிறது :))
அதற்க்கு முன் 

உருளைகிழங்கு அறுவடை ..

பை மற்றும் கண்டெய்னரில் கிழங்கு வளர்ப்பு இங்கே உள்ளது 
நான் அதே முறையில் வளர்த்து பத்து வாரம் கழிந்து அறுவடை செய்தேன்.
என்னால் பூக்களை படம் எடுக்க இயலவில்லை ..ஒரு மாதத்திற்கு முன் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையால் செடிகள் சில நாசமாகி விட்டன 
மற்றும் சில கீழே சரிந்து விட்டன ..மிச்சம் மீதியில் தண்டு வரை வெட்டி விட்டபின்னும் வளர்ந்து வந்த செடியில் அறுவடை செய்தது இவை 

                                                                              

அரைகிலோவுக்கும் அதிகம் கிடைத்தது :)
அப்படியே கழுவி தோலுடன் மஹியின் குறிப்புப்படி செய்தேன் 

                                                                             
 


தயிர் சாதத்துடன் சாப்பிட .ஸ்ஸ்ஸ்ஸ் !!
யம்மி !!!
அடுத்தது அனைவரும் ஆவலுடன் 
எதிர்பார்த்த வெள்ளை கொண்டை கடலை அறுவடை !!

:) :) :) :) :):):)
எப்படியும் எல்லாரும் சிரிக்க போறீங்க 
நானும் சேர்ந்து சிரிச்சுக்கறேன் :)

இப்போ இதில் சாட் மசாலா செய்வதா ?
இல்லை கடலை குருமா செய்வதா ?
சன்னா மசாலா செய்வதானு ஒரே குழப்பம் 
யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க ..:)


அடுத்தது 
வெகு ஆர்வமுடன் பச்சை பட்டாணி 
விதைத்து இருக்கிறேன் :)


காய்ந்த பட்டாணிகளை எடுத்து ஒரு 
கிச்சன் டிஷ்யூ பேப்பரில் நீர் தெளித்து 
சுற்றி ஜன்னலோரம் வைக்கவும் .
நான்கு நாட்களில் மேலே உள்ளதுபோல 
முளை விட்டிருக்கும் .
பிறகு ஒவ்வொன்றாக தனியே குழிகளில் நடலாம் 
அல்லது காலி முட்டை ஓடுகளில் கலப்பு மண் உரம் 
நிரப்பி இந்த முளைகட்டிய பட்டாணிகளை 
விதைக்கலாம் .முட்டை ஓட்டில் செடி சிறிது வளர்ந்ததும் 
ஓட்டுடன் நிலத்தில் நடலாம் .
படம்..நன்றி கூகிள் 

இதோ நான் நட்டு வளர்ந்தவை :)
பட்டாணி விளைந்ததும் அறுவடை இங்கே வெளிவரும் :)


அதுவரை நன்றி  கூறி விடை !!!
இருங்க இருங்க :)
சித்ரா அவர்களின் குறிப்பு பார்த்து செய்த 
 எள்ளடை 

இப்போ விடை பெறுவது ஏஞ்சலின் :)

இப்போ தூங்கிட்டேன் ..யாரும் குறிப்பா சித்ரா மற்றும் 
மஹி  சிரிச்சு
 என்னை எழுப்பக்கூடாது :)

xxxxxxxxxxxxxxx