அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/25/14

வீட்டுத்தோட்டம் வெந்தயக்கீரை , கொண்டை கடலை செடி

வீட்டுத்தோட்டம் எங்க வீட்டில் முளைத்த வெந்தயக்கீரை !!
                                                  
                                                                                  


இதில் செய்த குழம்பு :) ஒரிஜினல் ரெசிபில கீரையை 
பொடியா நறுக்க சொன்னாங்க ..நான்தான் கீரைக்கு 
வலிக்குமேன்னு முழுசா போட்டுட்டேன் !!!
                                                                                   


ரெசிப்பி இங்கே 


                                                                     குழம்பு இங்கே
                                                                                       
 
அதில் சாம்பார் பொடிக்கு பதில் பாயிஜாவின் காயல்பட்டினம் 
மசாலாத்தூள் சேர்த்து செய்தேன் ..தூள் செய்முறை  இங்கே 

                                        இது கொண்டை கடலை செடி 
                                        லக்ஷ்மி ப்ராண்ட் அரிசி பையில 
                                        வளர்த்திருக்கிறேன் !
                                         எல்லாம் வளர்ந்ததும் அறுவடை செய்து 
                                         fresh ஆ சாப்பிடனும் .வட இந்தியர்கள் 
இதை ரோஸ்ட் செய்து மற்றும் குழம்பாக செய்தும் சாப்பிடுகிறார்கள் 
ஆனால் இங்கு விலை அதிகம் ..
பூ வந்திருக்கு !

இது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய வெங்காயத்தாள் 
வேர்பகுதியை வெட்டி நட்டு வளர்த்தது 
இந்த ஐடியாவை தந்தது 
மஹி !
மல்லிப்பூ கொத்த மல்லிப்பூ :)
வெந்தயக்கீரையின் மருத்துவ பயன்கள் 
நலம் வலைத்தளத்தில் சென்று வாசிக்கவும் ..

வீட்டில் நண்பர் இளங்கோ வெற்றிலை கொடி 
 வளர்த்து இருக்கார் பார்க்க அழகா இருக்கு 
விருப்பப்பட்டவங்க ஒரு விசிட் விடுங்க 
அவர் பக்கம் :)
http://www.ippadikkuelango.com/2014/06/blog-post.html


ஜெஸ்ஸி க்கு ஸ்ட்ராபெர்ரிஸ் வேணுமாம் :)

xxxxxxxxxxxxxxxxx 

50 comments:

 1. //நான்தான் கீரைக்கு வலிக்குமேன்னு முழுசா போட்டுட்டேன் !!!//

  ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடு என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

  அதிராவைக் கேட்டால்தான் தெரியும். ;)))))

  அருமையான பதிவு. அழகான படங்கள். பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 2. ஒவ்வொரு இணைப்பிற்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..

   Delete
 3. ஆவ்வ் அஞ்சு. வெந்தயக்கீரை,கொண்டைக்கடலை செடி கலக்கிறேள். நானும் வெ.கீரை வைத்து வந்திருக்கு. ஆனா ஏன் செடி சிறிதாக இருக்கு.?
  //.நான்தான் கீரைக்கு வலிக்குமேன்னு முழுசா போட்டுட்டேன் !!!//
  ஸ்ஸ்ஸ்ஸப்பா தாங்க முடியல. இங்கு கடும் வெயில். அதைச் சொன்னேன்.
  கொத்தமல்லி எனக்கு சரிவரவில்லை. அதன் பூ இப்போதான் பார்க்கிறேன்.
  எங்க வீட்ல (ஊர்ல)இருந்த ரோஷி பனானா சாப்பிடுவா. ஜெஸி பார்க்க அழகு..நானும் வெயிடிங் என் தோட்டத்து காய்களுக்கு.
  அழகாக இருக்கு கார்டின்.பகிர்வுக்கு நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. கொத்தமல்லிப்பூ பிடுங்காம விட்டா அழகான பூ கிடைக்கும் இப்படி வெளேர்னு இருக்கு .
   நானே பறிக்காம கணவரை விட்டுதான் பறிச்சேன் :)) இலை பாவம்தானே ..வெ கீரைக்கு வெயில் பத்தலையா இல்லை ரொம்ப உயரமா வளர விட்டேனான்னு தெரிலா ஆனா சுவை சூப்பர்ப்
   Delete
 4. வீட்டுத் தோட்டம் சூப்பர் அஞ்சு. இன்னும் கொஞ்சம் படங்கள் தூரமா எடுத்திருக்கலாம்... எனக்கு கொண்டைக்கடலை பூ, செடி ஒழுங்கான படம் வேணும்.. கச்சான் நட்டிருக்கிறேன், கொண்டை வச்சவவ இதுவரை கண்டதுமில்லை நட்டதுமில்லை :).. நல்ல ஐடியா.. அடுத்த சமரில் அவ தப்பவே முடியாது.. கொண்.க ஐச் சொன்னேன்:).

  ReplyDelete
  Replies
  1. அது படத்தை கிராப் செய்ததால் அப்படி வந்திருக்கு :)
   அடுத்த படம் எடுத்து அனுப்பறேன் க்ளியரா :)
   கொண்டக்கா செம டேஸ்ட் ..இங்கே கார்பன்சோ பீன்ஸ் என்று விக்கிறாங்க பஞ்சாப் கடையில் fresh நல்லா இருக்கும்

   Delete
 5. இருந்தாலும் மனதுக்கு நிம்மதி + சந்தோசம்.. இம்முறை ஆருமே மணத்தக்காழி பற்றிக் கதைக்கவேயில்லை:) ஹா..ஹா..ஹா... ஓ லலலலாஆஆஆஆஆஆஆஆ:).

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!அந்த சோக கதையை ஏன் கேக்கறீங்க :) மணத்தக்காளி வளர்ந்தது நானும் ஹாப்பியா இருந்தேன்
   ஒரு வாரத்தில் செடிங்களை காணோம் !!!
   திரும்பி நட்டேன் வளர்ந்தது ஒரு வாரத்தில் காணோம் !!
   டவுட் வந்து அடுத்த முறையும் நட்டேன் ..ஜெசி வீட்டுக்குள்ள இருந்து ஒரே எக்சைட்டட் !! இங்கும் அங்கும் ஓடுது
   மெதுவா எட்டி பார்த்தா ஒரு ஜோடி புறாக்கள் :) கிளுகிளுன்னு சதம் பண்ணிக்கிட்டு செடிங்களை அதுவும் தி கிரேட் //// //மணதக்காழி /// அதை மட்டும் ஜாலியா சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க ..
   அப்பவே நினைச்சேன் இது பூசார் சதி :)..நீங்க தானே அனுப்பி வச்சிங்க அந்த சோடிபுறாக்களை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  2. விட மாட்டேன் நான் மணத்தக்காளி இல்லைன்னா என்ன ? அதுக்கு பதில் சுண்டக்காய் போட்டிருக்கேன் தளிர்த்திருக்கு :)

   Delete
 6. //இது கொண்டை கடலை செடி
  லக்ஷ்மி ப்ராண்ட் அரிசி பையில
  வளர்த்திருக்கிறேன் !///

  அவ்வ்வ்வ்வ் இப்போ லஸ்மி பிராண்ட் க்கு எங்கின போவேன் நான்ன்ன்ன்:))

  ReplyDelete
 7. ///ஜெஸ்ஸி க்கு ஸ்ட்ராபெர்ரிஸ் வேணுமாம் :)///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓஓஓஓஓஓஓஒ ஜெசியின் பார்வை ஸ்ரோபெரியில் இல்லை:)..

  ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் புரியுமாமே:))----- இது பிபிசில பயமொயி சொல்லுறாங்கோ.. நேயர் விருப்பத்தில:)

  ReplyDelete
 8. வெந்தய செடி எவ்ளோ நாளில் வளர்ந்திடும் என தெரியுமோ அஞ்சு?.. நான் போட்டது உருளைக்கிழங்கில் சிக்கி வளர முடியாமல் இருக்கு... நாளைக்கே இன்னொரு சாடியில் போட்டிடவோ?.. ஓகஸ்ட் 15 க்கு பின் குளிர் தொடங்கிடும் இங்கு.. அதுக்குள் பிடுங்கிடலாமோ?..

  ReplyDelete
  Replies
  1. one week ..தனியா ஒரு அலுமினியம் food tray இருக்குமே அதில் போடுங்க சீக்கிரம் வளரும்

   Delete
 9. அடுத்து வரவிருக்கும் என்று வலைதளத்தில் ஒடிக் கொண்டிருக்கும் செய்தியில் என் பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள் இப்படி எல்லாம் சமைச்சா உங்க வீட்டுக்கு நாங்களும் வரத்தானே செய்வோம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ :) அது போன வருஷம் ஒரு அலெக்ஸா ரான்க் ஆர்வகோளாரில் தினமும் போஸ்ட் போட்டோம் நானும் எங்க ஊர் அதிரா மியாவும் :)..பிறகு திடீர்னு பிசியாகிட்டேன் ..மேலே அந்த எழுத்துங்க பாட்டுக்கு ஓடிட்டே இருக்கு ..நானும் ஒரு வெளம்பரம்னு அப்படியே விட்டுட்டேன் :)


   நான் இப்போ நல்லாவே சமைக்கிறேன் ..நீங்க தாராளமா வரலாம் :)....

   (கலை கண்ணில் மட்டும் இந்த பின்னூட்டம்லாம் தெரியவே கூடாது சாமீ _ ()_ )

   Delete
 10. 'வெந்தயக் கீரைக்கு வலிக்கும்' என்பதையெல்லாம் நான் நம்பமாட்டேன், உண்மைய சொல்லுங்க, கசக்கும்னுதானே முழுசா போட்டீங்க. கீரை சூப்பரா வந்திருக்கு.

  கடையில் வாங்கிய கொண்டக் கடலையைத்தான் விதையாக்கினீங்களா? இல்லை விதையாவே வாங்கிப் போட்டீங்களா? அரிசி பை ஐடியா நல்லாருக்கு. தொட்டி என்றால் கொஞ்சம் மண்ணே போதும். அரிசி பை என்றால் நிறைய மண் வேண்டுமே.

  மஹியின் ஐடியாவால எங்க வீட்டு வெங்காயத்தாள் இன்னுமும் வந்திட்டிருக்கு. இன்றைய‌ ஆம்லெட்கூட‌ வெங்காயத்தாள் சேர்த்ததுதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா!!! நான் உண்மையில அவசராவசரமா சமைச்சேன் அதனால் தான் வெட்டவில்லை :)
   இப்போ நீங்க சொன்ன பிறகுதான் புரியுது !!!!! குழம்பு கசக்கவேயில்லை :)))
   இனிமே வெட்டவே மாட்டேன் :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா ...
   அது அஞ்சு கிலோ அளவு பை தான் ரொம்ப மண் போடல்லை ..ஊறவச்சி செய்வோமே அந்த கடலைதான் போட்டேன் உடனே வளர்ந்திடுச்சி ..உங்க ஊர் க்ளைமட்டுக்கு நல்லா வரும் போடுங்க :)

   Delete
 11. வெந்தயம், மல்லி பூக்கள் ப்ரஸ் செய்து கார்ட் செய்யலாம். வெந்தயப்பூ கார்ட்... வாசமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பிரஸ் பண்ணா பூவுக்கு வலிக்காதா இமா !!! :)
   நான் கேக்கலை மியாவ் தான் கேக்க சொன்னாங்க :)
   உங்க வீட்டு மணதக்காழி:) /ளி ப்ளீஸ் எனக்கு ஒரு முழு போஸ்டும் மணத்தக்காளி படமா போடுங்க
   எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை பூஸ் மட்டும் லாலாலா பாடக்கூடாது :)))

   Delete
  2. அந்த கொத்த மல்லிப்பூ பிளாக் பின்னணியில் வச்சு செய்தா சூப்பரா இருக்கும் !!
   செய்திடறேன் :) ஐடியாக்கு நன்றி இமா

   Delete
  3. எனக்கு கமண்ட் ஃபீட்பாக் எதுவும் வரல.
   ம்.. தக்காளி எங்கயாச்சும் தப்பா தட்டிருக்கேனா! சாரி. ;( தூக்கக் கலக்கமா இருந்து இருக்கும்.

   Delete
 12. ஹையோ.. இப்படி கார்டினிங் படம் எல்லாம் போட்டு அசத்துறீங்களே அஞ்சு!...
  அருமை எல்லாமே!..

  இப்பதான் நான் இந்த உலகத்துக்கே மீண்டு வந்திருக்கேன்.
  பார்க்கலாம்... உங்க தோட்டப் பயிர்களைப் பார்க்க எனக்கும் ஆவலாய் இருக்கு.

  மண் மூட்டைதான் வாங்கணும்.. முதல்ல அதைச் செய்துடுவோம். வெந்தயம், கொ. மல்லி போடணும்.

  ஆமா.. சுண்டங்கத்தரி முளைவந்துதா... அதிசயம் தான். நானும் முயன்று தோற்றுப் போனேன் அஞ்சு... :(

  சாதாரணமா மண்ணிலயே முளைவர போட்டுவீங்களா இதையும்..

  எல்லாமே அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..நான் சுண்டைக்காய் சின்ன பாக்கெட்டில் farmers மார்கெட்டில் வாங்கி வந்து அதை வெட்டி காயவைத்து விதைங்களை நட்டேன் ..உங்களுக்கு சின்ன யோகர்ட் கப்ஸ் அல்லது பிளாஸ்டிக் கப்பில் compost கொஞ்சம் போட்டு ஒரன்றிரண்டு விதைகளை தூவுங்க கிட்சன் ஜன்னல் ஓரம் வைங்க ஒரு வாரத்தில் வளரும் பிறகு தொட்டிக்கு மாற்றலாம்
   இது கத்தரி தக்காளி செடிகளுக்கு .
   வெந்தயம் ,மல்லி சும்மா அலுமினியம் ட்ரேயில் கம்போஸ்ட் போட்டு தூவி வளர்த்தால் கடகடன்னு வளரும் .
   மல்லி சிலதை முழுதாகவும் சிலதை லேசா தட்டியும் போடுங்க ..

   Delete
  2. வீட்டில் வளர்த்த காய்கறிகள் சுவையே அலாதி ..விரைவில் உங்கள் ப்ளாகில் ஏதாவது ஒரு காய்கறி செடியுடன் அதற்கேற்ற கவிதையும் பார்க்கணும் நான் :)

   Delete
 13. பயனுள்ள பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 14. அருமையான குறிப்புகளுடன் இனிய பதிவு.. நம் கையால் பயிரிட்டு இளஞ்செடிகளைப் பராமரிப்பது தனியானதோர் சுகம்..
  நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா
   நம்ம ஊர் வெய்யிலுக்கு நல்லா வளரும் இங்கே தண்ணீர் பிரச்சினை இல்லை ஆனால் வெயில் மட்டும் அவ்வப்போ வந்து மறைந்து போகும் ..இன்னும் நிறைய செடி வளர்க்க ஆசை எனக்கு

   Delete
 15. தோட்டப்பகிர்வுகள் செழிப்பு..
  பாராட்டுக்கள் பசுமையான பதிவுக்கு..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா வீட்டில் வளர்த்த காய்கறிகள் சுவையே அலாதி ..

   Delete
 16. உங்க வீட்டுத்தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு.

  "//கீரையை
  பொடியா நறுக்க சொன்னாங்க ..நான்தான் கீரைக்கு
  வலிக்குமேன்னு முழுசா போட்டுட்டேன் !!!//"

  ஆமா, இப்படியெல்லாம் உங்களால சொல்ல முடியுது!!!!

  ReplyDelete
  Replies
  1. :)) ஹா ஹா உண்மையில் நான் அவசர அவசரமா செய்தேன் நறுக்க கொஞ்சம் லேட்டாகும்போல இருந்தது .. !!
   அப்புறம் இன்னொரு பெரிஈய ரகசியம் இருக்கு :) யார்கிட்டயும் சொல்லாதீங்க ..கீரையை வெட்டி ஆய்ந்து கொடுத்தது என் கணவர் :))) கீரை மட்டும்தான் அவர் ஆய்ந்து கொடுத்தார் பமிளகாய் பூண்டு தேங்கா எல்லாம் நான்தான் வெட்டினேன்

   ஸ்ஸ்ஸ் ஹப்பா !!! நானும் kitchen il வேலை செய்றேன்னு எல்லாருக்கும் தெரியணுமே !!

   Delete
 17. How to plant வெந்தயக்கீரை....lovely garden............
  by
  anuprem

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=5-11YUUw2Uo

   this would be very useful for beginner .
   i bet home grown methis are very tasty !!

   Delete
  2. thanks...surely i will show my plants....waittttttttt

   Delete
 18. Brilliant idea. I am going to try too.

  ReplyDelete
  Replies
  1. Thanks Vanathy ..i would like to see your kitchen garden tooo:)

   Delete
 19. வணக்கம்,தங்கையே!நலமா?/// ஒரிஜினல் ரெசிபில கீரையை
  பொடியா நறுக்க சொன்னாங்க ..நான்தான் கீரைக்கு
  வலிக்குமேன்னு முழுசா போட்டுட்டேன் !!!///அது சரி.........வேக வைக்கிறப்போ வலிக்காதுல்ல?ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   ஹா ஹா :) அது சும்மா சுடுதண்ணில ஸ்பா :) நல்லது உடம்புக்கு :)

   Delete
 20. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ...! அழகான தோட்டம் எவ்வளவு நல்ல மனது தங்களுக்கு
  கீரைக்கும் நோகும் என்று
  கிள்ளாமல் விட்டு
  கபடமாய் நேரத்தை
  கொள்ளாமல் கொன்றீரே ! ஆஹா ரொம்ப கெட்டிக்காரி நல்ல யோசனை வீட்டு தாவரங்கள் ருசி மட்டுமல்ல( கெமிக்கல் அற்றது) ஆரோக்கியமானவை யல்லவா.பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 22. வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
  www.ponnibuddha.blogspot.in
  www.drbjambulingam.blogspot.in

  ReplyDelete
 23. வீட்டிலே நல்லவினை யில்லா உணவிருக்கு
  நாட்டிலே உள்ளதெல்லாம் நஞ்சு !

  அருமை அழகு

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. வெ.கீரை அடுத்த முறை வாங்கியதும் உங்க ரெசிப்பி செய்து பார்க்கிறேன் அக்கா. கீரை சும்மா ஃப்ரெஷ்ஷ்ஷ்ஷா இருக்கு. :)
  கொ.கடலை எத்தனை செடி வளர்க்கறீங்க? பத்திருபது செடி வந்தாத்தானே ஓரளவுக்கு காய் கிடைக்கும்? நிறைய வளர்த்து சீக்கிரம் காய் பறிச்சு ரெசிப்பி போட வாழ்த்துக்கள்!
  ஜெஸ்ஸி & ஸ்ட்ராபெரி ரெண்டுமே சூப்பர்!
  வெ.தாள் நல்லா வருது. இங்கயும் வளர்ந்துட்டே இருக்கு, மண்ணுக்குள்ள என்ன நடக்குதுன்னு பார்க்கணும். ஹஹ!! :)

  ReplyDelete