அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/23/14

பத்து கேள்விகளும் எனது பதில்களும்

பத்து கேள்விகளும் எனது பதில்களும் :)


தோழி இளமதி இங்கே என்னை பத்து கேள்விகள் கேட்டிருக்கார் 
அவற்றுக்கான எனது பதில்கள்..

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?
    

     ம்ம்ம் ..100 வயது வரை  அனைவரும் வாழணும்னு 
    இறைவனிடம் வேண்டிகொள்கிறேன் முதலில் ..
    எனது நூறாவது பிறந்தநாளை உலகின் மிக பெரிய
    இந்த ஆலமரத்தின் கீழே இயற்கை சூழலில் கொண்டாட 
    விரும்புகிறேன் . 
                                                                       அன்று நூறு இல்லை :)) நூற்றைம்பது மரக்கன்றுகளை 
    நானும் எனது பிறந்தநாள் வைபவத்தில் 
    கலந்து கொள்ளும் அனைவருமாக சேர்ந்து நடுவோம் .
    எனக்கு மிகவும் பிடித்த கருப்பட்டி காப்பி ,மற்றும் 
     பலாப்பழ சிப்ஸ் ,நேந்திரம் சிப்ஸ்   இதெல்லாம் சாப்பிட்டுக்
    கொண்டே ...அங்கே வரும் பட்டாம்பூச்சிகளையும் ,சின்ன 
    பறவைகளையும் எண்ணுவேன் .
    கண்டிப்பாக பார்ட்டி தட்டு கோப்பை எல்லாமே மண் 
     சாமான்கள்தான் ....யார் யாருக்கு என்ன வேணும்னு 
   இப்பவே லிஸ்ட் தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன்...
   எல்லா செலவும் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுடையது :))
   எல்லாரும் என்னென்ன வேணும்னு இங்கேயே சொல்லிடுங்க :))))

     
    2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?.

         கற்றது கையளவு கல்லாதது உலகளவு ..!!!!
     ஓரளவு கற்றுக்கொண்டேன் ,வாழ்க்கையை உலகத்தை 
      மனிதர்களை நட்புக்களை  ..:))))
     இன்னும் அதிகமாக தாழ்மையுடன் இருக்க ,எவ்வித 
     எதிர்பார்ப்பும் இன்றி அன்பு பாராட்ட ..யாருக்கும் கஷ்டம் 
     எவ்வித மனக்கஷ்டமும் தராமலிருக்க பெரியோர்கள் மற்றும் 
     நற்பண்பாளர்களிடமிருந்தும் நிறைய விஷயங்களை நல்ல 
    பண்புகளை கற்றுக்கொள்ள விரும்புகின்றேன் ..
     

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
    
   ஹா ஹா :))))))) இதோ இப்பக்கூட சிரிச்சிட்டே தான்
   இருக்கேன் :)
     
    தொடர்ச்சியா சிரித்தது சனிக்கிழமை நானும் கணவருமா 
சேர்ந்து வீடே அதிர்ர மாதிரி சிரிச்சோம் :))
 அது வந்து நாலு  நாள் முன்னாடிதான் நம்ம  கேப்டன் 
படம் ஒண்ணை ஸ்டேடசா ஷேர் செய்தேன்  ,,,செய்திட்டு 
கணவருக்கும் காட்டினேன் :)
இதோ இதுதான் அது :))
                                                                     


                                                          
அன்னிக்கு சனிக்கிழமை .நான் கிச்சனில் சமைச்சிட்டிருந்தேன் ...லையனல் மிஸ்ஸி 91 வது நிமிடம் ஒரு கோல் போட்டதும் 
                                                                                 

கணவர் வாய் தவறி ..ஆஆ லயண்டேட் மிக்சி லாஸ்ட் மினிட் 
கோல்  போட்டுட்டார்னு ஸ்லிப் of தி tongue சொன்னார் அதை 
கேட்டு விழுந்து புரண்டு சிரிச்சேன் :)

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
      எங்க நாட்டில் அந்த பிரச்சினைல்லாம் கிடையாதுங்க .
      ஒருவேளை நம்மூருக்கு வரும்போது நடந்தா :)
       வேப்ப மரத்தடியில் அமர்ந்து பனை விசிறி வச்சு 
      விசிறிக்கிட்டு இருப்பேன் ..நானும் எங்காத்துக்காரரும் 
     எங்க பொண்ணுக்கு கூட்டாஞ்சோறு சமைச்சி 
      கொடுப்போம் ..ஆத்தங்கரையில் உக்காந்து காலை 
      நனைச்சிட்டே இருப்பேன் ..                                                               
       ரொம்ப நாளா வெடி தேங்கா எப்படி இருக்கும்னு சாப்பிட 
       ஆசை ..யாரையாச்சும் கேட்டு செய்து தர சொல்வேன் .

    ஒரு 24 மணி நேரமாவது இயற்கைக்கு கேடு விளைவிக்காம 
    இருக்க முயற்சிப்பேன் ..அப்படி ஒரு நாள் வாய்த்தால் ..

      
      

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 
       எங்கள் மகள் //தாயுமானவள் // அவளிடம் நாங்கள் கற்றுக்கொள்ள 
வேண்டியது எவ்வளவோ இருக்கு !!!அதனால் சின்ன சின்ன அட்வைஸ் 
மட்டுமே சொல்வேன் :)
 வாழ்வோ தாழ்வோ இறைவனை மறவாதே ...
 உன் மனதுக்கு எது சரி எனபடுகிறதோ அதை மட்டுமே செய் .
 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை ..உன் வீட்டுக்கு யார் வந்தாலும் 
வயிறு நிறைய அன்னமிட்டு உபசரி .
அம்மாவை மாதிரி ரொம்ப லேட்டா சமைக்க கத்துக்காதே ..
ரெண்டு வருஷம் உன் கணவர் சமைக்கட்டும் பிறகு நீ கிச்சன் 
பொறுப்பை எடுத்துக்கோ ..எதை சமைச்சாலும் முதலில் உன் கணவர் அதை ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறார என்று தெரிந்து வைச்சிக்கோ :)
அவருக்கு தெரிந்த உணவுகளை தப்பித்தவறியும் சமைச்சிடாதே .
 அப்படி தவறி சமைத்தாலும் வாயில் நுழையாத ஒரு 
பெயரை பதார்த்தத்துக்கு வைத்துவிடு ..


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
   எல்லா பிரச்சினைக்கும் தலையாய காரணம் கோபம் 
வெறுப்பு,  பொறாமை ,அகந்தை வீண் பேச்சு ,புரணி 
இவையெல்லாம் தான் இவற்றை ஒட்டுமொத்தமாக 
இல்லாம பண்ணிட்டா ஒரு மெகா அழி ரப்பர் வச்சு 
அழிச்சிடுவேன் :)

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

     எனக்கு இறை நம்பிக்கை அதிகம் வீழ்ந்தாலும் தூக்கி 
    விட இறைவன்  துணை வருவார் என்ற நம்பிக்கையுடன்
     அவரை நித்தம் வணங்கும் என் உள்ளத்திடம் மட்டும் 
    அட்வைஸ் கேப்பேன் .என் மனதுக்கு மட்டும் ஒரு விஷயம் 
   தவறென்று தோன்றினால் இடம் பொருள் ஏவல்  பாராமல் 
   காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்பேன் ..
    சரி தவறை நிர்ணயிப்பது எனது மனம் மனம் மனம் :)
   


8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

    இதுவரை அப்படி நடக்கவில்லை ..இனியும் நடக்க கூடாதென்பதே 
  எனது வேண்டுதல் ..
யாராவது அப்படி பரப்பினாலும் அது அவர்களின் குறையன்றி 
எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை ..அவர்களை மன்னிக்க சொல்லி இறைவனிடம்  அப்பவும் வேண்டுவேன் 

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
     
    நம்முடன் உயிர் மூச்சாய் இருந்த ஒரு ஜீவன் இனி இல்லை என்ற நினைவே மிக கொடுமையானது ..அப்படி யாருக்கும் நடக்கவே 
கூடாது ..எனக்கு மரணம் என்ற வார்த்தை பிடிக்காத ஒன்று ..
ஆனால் விதி வலியது அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்  
முடிந்தவரை அவரை ஆறுதல் படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன் ..
எனக்கே பயம் மரணத்தை நினைச்சி ...ஸ்ஸ்ஸ்ஸ் இத்தோட 
அடுத்த கேள்விக்கு ஜம்ப்பறேன் ................


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

       ஹா ஹா :))))) பெரும் ரகசியம் ஒன்னு சொல்லிடறேன் 
இந்த மாதிரி தனிமையான நேரத்தில் தான் நான் நெட்டில் பார்த்த சமையல் குறிப்புங்களை செஞ்சு  பார்ப்பேன் :)
தப்பா வந்தாலும் தூக்கி கொட்டிடுவேனே :)

சேர்த்து ஒளிச்சு வச்ச ஜன்க் குப்பைங்களை தேடி எடுப்பேன் 
கிராப்ட் செய்யத்தான் :) ஏனென்றால் எனக்கே எங்க ஒளிச்சு
 வச்சேன்னு தெரியாது :)

அப்புறம் தோட்டத்துக்கு போய் மீன்களோட பேசுவேன் .
மலர்களை ரசிப்பேன் ..நோ நோ .டச் பண்ண மாட்டேன் .
அம்மா கொடுத்த ரெசிப்பி புக்செல்லாம் எடுத்து பார்ப்பேன் .
அப்பா கடைசியா அனுப்பின புடவையை பெட்டியில் 
இருந்து மடிப்பு கலையாம எடுத்து பார்த்து வைப்பேன் .
அவங்க கைப்பட அனுப்பின கடிதங்களை தொட்டு பார்ப்பேன் .
ஜெஸ்ஸி கூட ஹைட் அன்ட் சீக் விளையாடுவேன் 
அவளுக்கு பூச்சி ஈ எல்லாம் காட்டுவேன் ..
முகபுத்தகம் சென்று லைக் போடுவேன் ...
நட்பூக்களுடன் சாட் செய்வேன்                                                                 
ஜெஸ்ஸிக்கு செயின் போட்டு அழகு பார்ப்பேன் .

                                                                             

சந்தோஷ தருணங்களை மட்டும் நினைவுபடுத்தி பார்ப்பேன் 
தினமும் ஒரு நிமிடமாவது எங்களிடம் சொல்லாமல் 
கொள்ளாமல் பிரிந்து சென்ற அன்பு கிரிஜாவை 
நினைத்துக்கொள்வேன் .... 
ஏன் சொல்லாமல் சென்றாய் அன்புத்தோழி :( என்று 
என்னிடமே கேட்டுக்கொள்வேன் ..

                                                      அவ்ளோதான் :) 

இதை தொடர நான் அழைப்பது 
அன்பு தங்கை கலை   கிராமத்து கருவாச்சி ..
தம்பி பிரகாஷ்  தமிழ் வாசி 
குட்டிம்மா புகழ் தம்பி இலியாஸ் 
சகோதரர் நாஞ்சில் மனோ 
தலைவி கௌசல்யா  மனதோடு மட்டும் .

நேரமும் விருப்பமும் இருக்கறவங்க யாரும் தொடரலாம் :))


   

60 comments:

 1. ஆஆஆஆஆஆஆஆஅ அக்கா மீ தி first

  ReplyDelete
 2. அம்மாவை மாதிரி ரொம்ப லேட்டா சமைக்க கத்துக்காதே ..
  ரெண்டு வருஷம் உன் கணவர் சமைக்கட்டும் பிறகு நீ கிச்சன்
  பொறுப்பை எடுத்துக்கோ ..எதை சமைச்சாலும் முதலில் உன் கணவர் அதை ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறார என்று தெரிந்து வைச்சிக்கோ
  அவருக்கு தெரிந்த உணவுகளை தப்பித்தவறியும் சமைச்சிடாதே .
  அப்படி தவறி சமைத்தாலும் வாயில் நுழையாத ஒரு
  பெயரை பதார்த்தத்துக்கு வைத்துவிடு ..//////////////////////////////ஹஹ்ஹஹா அஞ்சு அக்கா சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஷ்ஹ் :) மெதுவா ..பாக்கமறந்தவங்களை கூட கூப்பிட்டு பார்க்க வைக்கிற மாதிரி இருக்கு :)

   அவ்வளவும் உண்மை கலை :)

   Delete
 3. ஏற்கனவே இப்படி கேள்வி கேட்டு "என்னா கத்துக்க ஆசை "ன்னு கேட்ட கேள்விக்கு "கப்பல் ஓட்ட, ரயில் ஓட்ட, விமானம் ஓட்ட கத்துக்க ஆசை"ன்னு சொன்னதும், மொத்த பதிவுலகமும் வயித்தை பிடிச்சுட்டு உக்கார்ந்ததா கேள்வி.

  ம்ம்ம் பார்ப்போம் எப்பிடி என் பதில்கள் வருதுன்னு, கோர்த்து விட்டதுக்கு நன்றிங்கோ....இனி உங்க மற்றும் வாசகர்கள் பாடு, எழுதுறேன் விரைவில்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) அன்பு நட்புக்கள் இருக்க பயமேன் :) உங்கள் பாணியில் பதில்களை வாசிக்க ஆவலாக உள்ளேன்
   எப்போ நடந்தது ஏரோப்ளேன் கற்கிற ஆசை ?? லிங்க் தரீங்களா

   Delete
 4. மூன்று தடவை கமெண்ட் வந்துருச்சோ ? இது கூகுளின் சதிங்கோ...

  ReplyDelete
  Replies
  1. கூகிள் இன்னிக்கு ரொம்ப சதி பண்ணுது மனோ ..டாஷ்போர்டில் ஒரு போஸ்ட் மட்டும் காட்டுது !!

   Delete
  2. பதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,http://avargal-unmaigal.blogspot.com/2014/06/reading-list.html

   Delete
 5. கிரி அக்கா மிஸ் யு

  ReplyDelete
 6. இப்படி ஒரு விரிவான பதில்கள் ....
  அவ்வளவும் உங்களின் ரசனையைக் காட்டுகிறது..
  வாழ்த்துக்கள் நன்றி
  www.malartharu.org

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது :)

   Delete
 7. அஞ்சு...:) அசத்திட்டீங்க போங்க...:)))

  அருமையான பதில்கள் அஞ்சு!
  நகைச்சுவையோடு உங்களுக்கே உங்களுக்கான இயற்கையோடு இணைந்த உணர்வினையும் சேர்த்துக் கலந்து மிக அழகாக ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எழுதியிருக்கிறீங்க.
  சூப்பரோ சூப்பர்!...:)

  ரொம்ப மகிழ்வாக இருக்கு அஞ்சு! வாழ்த்துக்கள்!

  ஹாஆ... கடவுளே இந்தக் கேள்வியெல்லாம் நான் கேட்கலைப்பா... இது ஒரு டெரர்... ஓ.. மன்னிக்கவும் தொடர்!

  யாரோ ஆரம்பிச்சு வைக்க பதில் எழுதி பத்துப்பேரை சேர்க்கணுமாம். அவங்க பதில் எழுதி இன்னும் பத்து... இப்பிடியே தொடராக இது தொடருது!...:)

  சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது....

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி :) என்னை தொடர அழைத்ததற்கு மிக்க நன்றி ..மிகுந்த ஆர்வத்துடன் கடகடன்னு எழுதி முடிச்சுட்டேன் .
   அவ்வளவும் உண்மை அதனால்தான் தங்கு தடையின்றி எழுத முடிந்தது :)
   அருமையான கேள்விகளை தொகுத்து அளித்த சகோதரரர் மதுரை தமிழனுக்கும் நன்றி

   Delete
 8. முதல் கேள்விக்கு எனக்கு தெரிந்த வரையில் பாஸிட்டிவாக பதில் சொன்னது நீங்கள் ஒருத்தர்தான் என நினைக்கிறேன்....மறக்காம 100 வது பிறந்த நாள் விழாவிற்கு எனக்கு அழைப்பிதழ் வையுங்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க மதுரை தமிழன் .. :) கண்டிப்பா ஹாண்ட் மேட் கார்ட் அனுப்புவேன் ..
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 9. // நூற்றைம்பது மரக்கன்றுகளை //- சிறப்பு...

  // சரி தவறை நிர்ணயிப்பது எனது மனம் // வாழ்த்துக்கள்...

  பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..:)

   Delete
 10. நகைச்சுவையுடன் பாசமும் பரிவும் இணைந்த அழகான விடைகள். மகிழ்ச்சி.. வாழ்க நலம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா :)

   Delete
 11. ரெண்டு வருஷம் உன் கணவர் சமைக்கட்டும் பிறகு நீ கிச்சன்
  பொறுப்பை எடுத்துக்கோ ..எதை சமைச்சாலும் முதலில் உன் கணவர் அதை ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறார என்று தெரிந்து வைச்சிக்கோ :)////

  நல்லா வருவிங்க... அம்மம்மா....

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் :)) நாளைக்கு அவளுக்கு உதவியா இருக்கும்ல

   Delete
 12. பெரும் ரகசியம் ஒன்னு சொல்லிடறேன்
  இந்த மாதிரி தனிமையான நேரத்தில் தான் நான் நெட்டில் பார்த்த சமையல் குறிப்புங்களை செஞ்சு பார்ப்பேன் :)
  தப்பா வந்தாலும் தூக்கி கொட்டிடுவேனே :)////

  ""தூக்கி கொட்டிடுவேனே""" என்பது அவரது தட்டில் தானே?????

  ReplyDelete
  Replies
  1. :)) ஆமாம் :) எனக்குன்னு ரெண்டு lab எலி வீட்டில் இருக்காங்க

   Delete
 13. அன்பு தங்கை கலை கிராமத்து கருவாச்சி ..///

  ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா.... தங்கையும் சிக்கிருச்சா?? மீ ஹேப்பி....

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் ஒருத்தர் விடாம பிடிச்சு போட்டுட்டேன் :)

   Delete
 14. தம்பி பிரகாஷ் தமிழ் வாசி
  குட்டிம்மா புகழ் தம்பி இலியாஸ் ////

  அவ்வ்வ்வவ்..... எனக்கும் இலியாருக்குமா??? இலி உமது மந்திரத்தால் நம்ம நூறாவது வயசில் எப்படி பிறந்தநாளை கொண்டாடுவோம்னு கண்டுபுடிச்சு சொல்லுமய்யா....

  ReplyDelete
 15. அருமையான பதில்கள். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆதி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 16. ஒவ்வொரு பதிலிலும் இயற்கையை நேசிக்கும் இனிய குணம் கண்டேன். ஹாட்ஸ் ஆஃப்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .:).

   Delete
 17. //உலகின் மிக பெரிய
  இந்த ஆலமரத்தின் கீழே இயற்கை சூழலில் கொண்டாட
  விரும்புகிறேன் . ///

  ஆஹா இப்போ புரிஞ்சிடுச்சு... மிகப் பெரிய ஆலமரம் எந்த நாட்டில இருக்கூஊஊஊ?? :) இப்பவே பிளான் பண்ணிட்டாபோல நாடு பார்க்க:)).. எங்கிட்டயேவா?:)

  ReplyDelete
  Replies
  1. garrr ..are you still here :)
   that tree is in India :)

   Delete
 18. /// அன்று நூறு இல்லை :)) நூற்றைம்பது மரக்கன்றுகளை
  நானும் எனது பிறந்தநாள் வைபவத்தில்
  கலந்து கொள்ளும் அனைவருமாக சேர்ந்து நடுவோம் .///

  ஹையோ வழி விடுங்கோ வழிவிடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்...:) 100 வாணாம்ம்ம் இப்பவே ஒரு 50 கன்றுகளை குனிஞ்சு நிமிர்ந்து நட்டுப்போட்டு... உஷாரா... நிமிர்ந்து நிற்கச் சொல்லுங்கோ கோல்ட் பிஸ்ஸை:)).. அப்படி நடந்துதென்றால்ல் இனிமேல் “பூஸ்” என்று பெயர் மாத்திடுறேன் எனக்கு:))

  ReplyDelete
  Replies
  1. வொய் திஸ் கொல வெர்ர்ர்ரி :)

   Delete
 19. /// பலாப்பழ சிப்ஸ் ,நேந்திரம் சிப்ஸ் இதெல்லாம் சாப்பிட்டுக்
  கொண்டே ...அங்கே வரும் பட்டாம்பூச்சிகளையும் ,சின்ன
  பறவைகளையும் எண்ணுவேன் .///

  ஆண்டவா அந்நேரம் அஞ்சுவுக்கு சிப்ஸ் ஐக் கடிக்கப் பல்லுக் கொடுத்திடப்பா.... பறவையை எண்ணிக் கணக்கெடுக்க... கடசி பக்கத்தில ஒரு பூஸாவது கெல்ப்புக்கு இருந்திடோணும்..:) இவை எல்லாம் நடந்தால்ல்.. நான் பழனிமலை முருகனுக்கு முள்ளுக்காவடி எடுப்பேன்ன்..

  ஊசிக்குறிப்பு:
  அஞ்சுவின் 100 ஆவது பிறந்தநாளுக்கு அடித்தநாள் எடுப்பேன் காவடி எனச் சொன்னேன்.. தெளிவா விளங்கோணும் என இவ்ளோ விளக்கம்:))

  ReplyDelete
  Replies
  1. முள் காவடி மட்டுமில்லை அதுக்கு முள் காலணி கூட தராங்க போட்டு நடக்க :)
   அந்த காட்சியை நாங்க பார்ப்போம் :))

   Delete
 20. ///எல்லா செலவும் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுடையது :))
  எல்லாரும் என்னென்ன வேணும்னு இங்கேயே சொல்லிடுங்க :))))
  ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது என்ன கொடுமை சாமீ:).. ஒரு சுவீட் 16 ல இருக்கும் பிள்ளையை உழைக்கச் சொல்லீனம்:).. முதல்ல அதிராவுக்கு சுவீட் 16 முடியோணும்:) அதுக்குப் பிறகெண்டால் மீ ரெடீஈஈஈஈஈ:)

  ReplyDelete
 21. ///கணவர் வாய் தவறி ..ஆஆ லயண்டேட் மிக்சி லாஸ்ட் மினிட்
  கோல் போட்டுட்டார்னு ஸ்லிப் of தி tongue சொன்னார் அதை
  கேட்டு விழுந்து புரண்டு சிரிச்சேன் :)///

  ஹா..ஹா..ஹா... பிஸ்ஸ் புரண்டதை ஆராவது பார்த்ததுண்டாஆஆஆஆஆஆஆ?:)

  ReplyDelete
  Replies
  1. ஆமா பிஷ் பொரண்டதை பிஷ் மட்டும்தான் பாக்க முடியும்

   Delete
 22. ///இந்த மாதிரி தனிமையான நேரத்தில் தான் நான் நெட்டில் பார்த்த சமையல் குறிப்புங்களை செஞ்சு பார்ப்பேன் :)
  தப்பா வந்தாலும் தூக்கி கொட்டிடுவேனே :)///

  ஹா..ஹா...ஹா... குக்கூஊஊஉ கிக்கீஈஈஈஈஈஈஈஈஇ.. மேலே 3 வது கேள்விக்கு எனக்கு பதில் இப்போ கிடைச்சிட்டுதூஊஊஊஊஊ:)..

  ReplyDelete
  Replies
  1. இதில நல்லா வெவரமா இருங்க :) உங்களுக்கு காசு வெட்டி போட சொல்லியிருக்கேன் உங்க சிஷ்யைக்கிட்ட :)

   Delete
 23. ///ஜெஸ்ஸிக்கு செயின் போட்டு அழகு பார்ப்பேன் .
  /// அப்போ தனிமை கிடைச்சால் மட்டும்தான் ஜெசியைக் கவனிப்பீங்களோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நோ இது அநீதி.... பூஸ் வதை:) இப்பவே போறேன் ஹை கோர்ட்ட்ட்ட்ட்:)...

  உஸ்ஸ்ஸ் இனி நான் ரொம்ப சீரியசா பேசப் போறேன்ன்ன்..

  அஞ்சு அழகா.. நகைச்சுவையா பதில் சொல்லிக் கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்... 100 வயதுக்கு மேலும் நலமோடு குடும்பத்தோடு வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் மியாவ் :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .சூட்டோட சூடா உங்க பதிவை ரிலீஸ் பண்ணுங்க :)

   Delete
 24. கலக்கிறீங்க அஞ்சு. நல்ல முன்னேற்றம். இப்படியே தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.மிக நல்ல ரசனையாக நகைச்சுவையையும் கலந்து எழுதியிருக்கிறீங்க. உங்க எண்ணங்கள், கருத்துக்கள், வாழ்க்கையில் கடைப்பிடிப்பவை அத்தனையும் மிக சிறப்பாக இருக்கு.கீப் இட் அப்.
  3 வது கேள்வி சத்தியமா முடியல்ல சிரிச்சு. ஜெஸ்ஸி செயினோடு அழகா இருக்கா. இங்கு நாய்க்கு அலங்காரம் செய்து பார்க்கிறார்கள். நீங்க ஜெஸ்ஸிக்கு செய்றீங்களா.
  நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..ஜெஸ்ஸி இப்போ எனக்கு பெரிய பொழுதுபோக்கு :) ஒரு செகண்ட் பயந்துட்டேன் ஓடிட்டா வெளியே செயினோட :).வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 25. அருமையான பகிர்வு அஞ்சலின் எண்ணங்கள் எப்போதும் பிரமிப்பைத்தருகின்றது கடவுள் உள்ளம் இயற்க்கை நேசிப்பு கிராமத்து யாசிப்பு !ம்ம் மனதை வருடுகின்றது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ..ஒவ்வொரு வெளிநாட்டு வாழ் மக்களிடமும் நம்ம கிராமத்து நினைவுகள் அழியாத கோலங்கள் தான் :)
   சொர்க்கமே என்றாலும் நம்மூர் தான்

   Delete
 26. ஏஞ்சலின், பிரமாதப்படுத்திட்டீங்க. இயற்கையும் சமூகநல அக்கறையும் கொண் ட அற்புதமான பதில்கள்.

  நீங்கள் சிரித்த காரணத்தை வாசிக்கையிலேயே எனக்கும் சிரிப்பு வருகிறது. ஐந்தாவது கேள்விக்கான பதில் அசத்தல். பாராட்டுகள்.

  கடைசியாய் எனக்கொரு சந்தேகம். நூறாவது பிறந்தநாளில் பலாப்பழ சிப்ஸ், நேந்திரம் சிப்ஸா? எப்படி சாப்பிடுவீங்க? ஊற வைக்கத்தான் கருப்பட்டி காப்பியா? :))))

  ReplyDelete
  Replies
  1. அது வந்து கீதா :) 100 வயசிலும் எனக்கு பல் நல்லாவே இருக்கும்னு நம்பறேன் .எங்க பாட்டி இறக்கும்போது 93 அவங்க அதுக்கு கொஞ்ச நாள் முன் கூட முறுக்கு சாப்பிடுவாங்க ..:)
   எல்ல்லாம் ஒரு நம்பிக்கைதான் ..இல்லனா பல் செட் போட்டாவது சாப்பிடுவேன் :)
   நீங்க சொன்ன மாதிரி காப்பியில் தொட்டும் சாப்பிடுவேன் :)))

   Delete
 27. SUPERB...
  i feel like read a super story...(not only q &a including comments...)..
  wow what a great circle u have...i love to read and write tamil (myyyyyyyyy language na ) ..but in blog i want to practice more...so in english...

  happy time..........
  by
  anuprem

  ReplyDelete
  Replies
  1. அனு ட்ரை பண்ணுங்க ..:) நான் முதலில் இங்க்லீஷ் ப்ளாக் மட்டும்தான் வச்சிருந்தேன் ,,அப்புறம்தான் தமிழில் ஆரம்பிச்சேன் :)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 28. அருமையான பதில்கள்.///
  அம்மாவை மாதிரி ரொம்ப லேட்டா சமைக்க கத்துக்காதே!////நாம தான் சப்பாத்தி எக்ஸ்பர்ட் ஆச்சே?ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. மாமா ,மருமகள் எப்படித்தான் என் ப்ளாக் வரும்போது மட்டும் மறக்காம பூதக்கண்ணாடியோட வராங்களோ :)
   ஒளிச்சி ஒளிச்சி எழுதினாலும் கண்டுபிடிக்கிறாங்க :)

   Delete
 29. "ஜெஸ்ஸி"க்கு செயின் போட்டு அழகு பார்ப்பேன் .////இந்தச் செயின் ................. 'அது'(ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி காணாம போச்சே?) இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. ஆஆ !! எந்த செயின் அண்ணா !!! என்து காணம்போகல்லை :)

   Delete
 30. அழகான பதில்கள்!
  //அம்மாவை மாதிரி ரொம்ப லேட்டா சமைக்க கத்துக்காதே ..
  ரெண்டு வருஷம் உன் கணவர் சமைக்கட்டும் பிறகு நீ கிச்சன்
  பொறுப்பை எடுத்துக்கோ ..எதை சமைச்சாலும் முதலில் உன் கணவர் அதை ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறார என்று தெரிந்து வைச்சிக்கோ :)
  அவருக்கு தெரிந்த உணவுகளை தப்பித்தவறியும் சமைச்சிடாதே .
  அப்படி தவறி சமைத்தாலும் வாயில் நுழையாத ஒரு
  பெயரை பதார்த்தத்துக்கு வைத்துவிடு ..// அஹாஹாஹாஹா! :)

  லயன் டேட்ஸ் காமெடி ஜுப்பர்!

  ஜெஸ்ஸி செயின் போட்டுகிட்டு லட்ஷணமா:) இருக்கா! :)))

  ReplyDelete