அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/18/14

என் வீட்டு தோட்டத்தில் :)

என் வீட்டு தோட்டத்தில் :)


 தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..

இது நலம் முகபுத்தகத்தில் நான் பகிர்ந்த தோட்ட  குறிப்பு 

மேலும் பல வீட்டு தோட்ட குறிப்புகளுக்கு கீழ்காணும்
 சுட்டிக்கு சென்று வாசிக்கவும் 

                           https://www.facebook.com/nalam.net?ref_type=bookmark
                                                         
                                                       http://www.nalam.net/
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் பாதி அளவிற்கு 

மட்டும்மண் + காய்ந்த இலை, தழை, மண்புழு உரம் கலந்த 
கலவையை இட்டு நிரப்ப வேண்டும் 
 நன்றாக விளைந்த உருளைகிழங்கை பாதியாக வெட்டி , 
வெட்டிய பாகம் கீழே இருக்குமாறு மண்ணில் ஊன்றி 
வைக்கவும்.

 எனது பதிவை பார்த்து அதே முறையில் இங்கு கிழங்கு 
விதைத்திருப்பவர்   மேதகு அதிரா மியாவ் :)

                               
                                                                                                        

செடி ஓரளவு வளர்ந்ததும் மேலும் கொஞ்சம் மண்ணை 
நிரப்ப வேண்டும்.
முதலில் மொத்தமாக போடாமல் இவ்வாறு செய்வதால் 
கிழங்கு நன்கு திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் 
கிடைக்க வாய்ப்பு உண்டு.
                                                                               


மற்றொரு முறை ....

வீட்டில் வாங்கி வைத்த கிழங்குகள் சில நேரம் முளை 
விட்டிருக்கும் அல்லது விதைக்கவென நாமே chitting 
முறையில் முளைக்க வைக்கலாம் ..

நன்கு முற்றிய கிழங்குகளை முட்டை வைக்கும் கார்ட்போர்ட் 
முட்டை பெட்டியில் செங்குத்தாக நிற்க வைத்து ஒளிபடும் 
இடத்தில் வைக்க வேண்டும் ,

இவை தானாக சில நாளில் முளைக்கும் (1.5 செண்டி மீட்டர் 
அளவு வளர்ந்துவிடும் ) 
 அப்படி முளைத்த கிழங்குகளை கோணிப்பை /கருப்பு பாலித்தீன் 
பை போன்றவற்றில் கலப்பு உர மண் நிரப்பி வளர்க்கலாம் .
பைகளில் அடிப்பாகத்தில் நீர் வெளியேறதுளைகள் இட வேண்டும் ..
பையில் பாதி அளவுக்கு சுமார் 30 செ.மீ அளவுக்கு கலப்பு 
உரமண்ணை இட்டு அதில் முளைவிட்ட கிழங்குகளை புதைத்து 
அதன்மேல் மீண்டும்கலப்பு உர மண்ணால் 
மேலும் 15 செ .மீ உயரம் வரை நிரப்பி மூட வேண்டும் ...

 இது எங்க வீட்டு உருளைகிழங்கு ..நான் grow bags இல்
 வளர்த்து வருகிறேன் 

                                                                           நத்தை போன்றவை செடியை அண்டாதிருக்கவும் நீர் வெளியேற 
வசதியாகவும்மூன்று செங்கல்களை பை அல்லது பிளாஸ்டிக் 
வாளியின் கீழே வைக்க வேண்டும் .
மறக்காமல் அடிப்புறத்தில் துளைகள் இட வேண்டும் 
சுமார் மூன்று வாரத்தில் இலை முளைத்து செடி வளர ஆரம்பிக்கும் .

அவை மேலும் 15 செண்டி மீட்டர் உயரம் வளர்ந்ததும் பையின் மேற்பக்கத்தை உட்புறம் பிரித்து விட்டு மேலும் சிறிது கலப்பு உரத்தை இட வேண்டும் .

செடி வளர வளர பையை விரித்து விட வேண்டும் .
இரண்டு மாதத்தில் பூ விட துவங்கும் ,இலைகளும் வாட ஆரம்பிக்கும் இது அறுவடைக்கு உகந்த நேரம் .
இப்போது கிழங்கை மண்ணிலிருந்து அறுவடை செய்து எடுக்கலாம் .

நானும் அதிராவும் உருளை அறுவடைக்கு காத்திருக்கிறோம் :)

இது தொட்டியில் விளைந்த ஸ்ட்ராபெர்ரி :)
எங்க வீட்டு அறுவடை :) மிக மிக இனிப்பு சுவை !!
                                                                                     

இது ஜெஸ்ஸி பக்கம் :)
             நானும் அம்மாவுக்கு க்விலிங்கில் உதவி செய்வேன் :)
                                                                                  


அடுத்து ஒரு சமையல் குறிப்பு பதிவில் மீண்டும் சந்திப்போம் :)))))

25 comments:

 1. அஞ்சு... வீட்டுத் தோட்டக் கிழங்கு வளர்ப்பு பற்றி
  மிக அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள்.
  நீங்கள் சொன்னபடி நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
  இந்தக் கால நிலையில் இப்போ இப்படிக் கிழங்கை முளைக்க வைத்து பயிர் செய்தால் எத்தனை நாட்களில் அதன் பலன் கிடைக்கும்.?...

  ஸ்ரோபரியும் சூப்பர்!...

  ஜெஸி நல்லா வளர்ந்திட்டா.. பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு...:)

  பயனுள்ள பதிவு! நன்றியுடன் வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. பூ வந்ததும் சில நாளில் இலைகள் காய்ந்து பிரவுன் ஆகும் அப்போ அறுவடைக்கு தயார் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி

   Delete
 2. வா.வ் உருளைக்கிழங்கு. நான் அடுத்த தடவைதான் வைக்கலாம் என
  இருக்கிறேன். நல்ல விரிவா புரியவைத்திருக்கிறீங்க.
  அதிராவும் செய்கிறாவா!!!!! ஸ்ரோபரியுமா அவ்வ்வ்வ்.
  ஜெஸி அழகா இருக்கா அஞ்சு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கிழங்குன்னா ஜெர்மனிதானே :) அடுத்த சம்மர் கண்டிப்பா போடுங்க ..அந்த இரண்டு சுட்டிகளிலும் நிறைய தொட்ட குறிப்புகள் பகிர்கிறோம் ..வாசித்து பாருங்க
   ஜெஸ்ஸி எவ்வளவு அழகோ அதைவிட அட்டகாசம் அதிகம் :) எங்களுக்கு ஒரு நாலுகால் பிள்ளை எங்க ஜெஸ்ஸி :)

   Delete
 3. இனிப்பான ஸ்ட்ராபெர்ரியும் அருமையான உருளைக்கிழங்கு உதவும் ஜெஸ்ஸி -- சந்தோஷப்பகிர்வுக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..உதவி செய்வதில் ஜெஸ்ஸி ரொம்ப கிரேட் !! எப்போ நான் எனது க்வில்லிங் தாள்களை எடுத்தாலும் முதலில் செய்ய ரெடியாவது அவள்தான் :)

   Delete
 4. எனக்கும் இந்த தோட்டத்துக்கும் ரொம்ப துரமாக்கும்.

  நம்மளால் தோட்டத்து வேலையெல்லாம் செய்யத்தான் முடியாது, சரி படித்தாவது பார்ப்போமே என்று உங்கள் பதிவை படித்தேன்.
  நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..உங்க ஊர்லதான் வருஷபூராவும் நல்ல வெய்யில் ஆச்சே ..நீங்க கண்டிப்பா வீட்டு தோட்டம் போடணும் :) கொத்தமல்லி ,மேத்தி இதெல்லாம் அடிக்கடி கிச்சனுக்கு தேவைப்படுபவை :)
   உங்க மகள்களுடன் சேர்ந்து ஒரு குட்டி தோட்டம் போடுங்க :)

   Delete
 5. ஸ்ட்ராபெர்ரி ஆகா...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..ஸ்ட்ராபெரி ..சுவையில் ஆஹா ஆஹா என்று சொலிட்டெ போகலாம் அவ்ளோ ருசி
   நம்ம ஊரில் விதை கிடைச்சா நீங்களும் ட்ரை பண்ணுங்க

   Delete
 6. உருளைக் கிழங்கும் ஸ்ட்ராபெர்ரியும் தழைத்து வளரட்டும்.
  அவை - ஒரு பக்கமாக இருந்தாலும்,

  பேகன் மயிலுக்குப் போர்வை போர்த்தினார் - அன்று!..
  ஏஞ்சலின் ஜெஸ்ஸிக்கும் சட்டை தைத்துப் போட்டார் இன்று!..

  (ஏன்.. ஜெஸ்ஸிக்கு அந்த கலர் பிடிக்கலையாமா!..)

  வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா ..வெயில் காலத்தில் மட்டும்தான் எங்களுக்கு இந்த வசதி :)
   ஜெசீக்கு அந்த சட்டை பிடிக்கவில்லை பயங்கர கோபத்துடன் இருந்தது :)
   அந்த சட்டை நான் தைக்கவில்லை அது எங்கள் மகள் பாரிஸ் போனப்போ அங்குள்ள கடைகளில் இதை பார்த்து நாலுகால் தங்கைக்கு என்று வாங்கி வந்தாள் :)

   Delete
 7. சூப்பர்! 2 பேர் வீட்டிலிருந்தும் 10 கிலோ உ.கிழங்கு எங்களுக்கு அனுப்பிருங்கோ, என்ன? ;)

  ஸ்ட்ராபெரி பார்க்கவே இனிப்பா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகி ..நிஜம்மாவே செம ஸ்வீட் ..நாங்க ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் நேராகவே போய் பரிச்சு சாப்பிட்டிருக்கோம் ..நீர்த்தன்மையுடன் டேஸ்டில்லாம இருக்கும் ஆன்னா வீட்டில் வளர்ந்தது ரொம்ப சுவை
   நீங்களும் ட்ரை பண்ணுங்க ..உருளைக்கிழங்கு மெசேஜ் பூசாருக்கு அனுப்பிட்டேன் :) மேடம் அருகம்புல்லெல்லாம் வளர்க்கிறாங்க அதையும் கொசுறா கேளுங்க :)

   Delete
 8. ஆஹா... தளதளன்னு செடி நல்லா வளர்ந்திருக்கே. மகசூலும் நல்லா இருக்கும் அஞ்சு.. ஜெஸ்ஸியும் அழகா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராதா :) வெயில் இருக்கும்போது மட்டுமே எங்களுக்கு இப்படி சான்ஸ் குளிர் ஆரம்பிச்சா செடிங்க பாதிலேயே காஞ்சுடும் ..இந்த சம்மர் நல்ல வெயில் இன்னும் மூன்று வாரத்தில் அறுவடை செய்யவோம் :) ஜெஸ்ஸி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா கலாட்டா குறும்போடு வளருது :)

   Delete
 9. ஒருவழியாக அறுவடையெல்லாம் ஆனபின் அதிகமாய் இருந்தால் அனுப்பி வையுங்கோ, நிர்மலா ;)

  அருமையான பொறுமையான அழகான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 10. வணக்கம்

  வீட்டுத்தோட்டம் செய்யும் முறை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 11. பார்க்கவே சூப்பரா இருக்கு. வாய்ப்பு கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன். ஸ்ட்ராபெர்ரிக்கு சுத்தி போடுங்க...:)))

  ReplyDelete
 12. இனிய வணக்கம் அஞ்சு!

  உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
  வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

  ReplyDelete
 13. ஆவ் இங்கேயா பதிவு வந்திருக்கு.. நான் அங்க போடப்போறீங்களோ என நினைச்சேன்ன்...

  பார்ப்போம் நீங்க எத்தனை கிலோ நான் எத்தனை கிலோ புடுங்குறோம் என:).. இதில மகிக்கு 10 கிலோவா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இருவருடையதையும் சேர்த்தாலே வருமோ தெரியல்ல:).

  ஸ்ரோபெரியும் ஜெஸியும் சூப்பராத்தான் இருக்கஞ்சு... ஜெஸி இப்போ பொம்பிஅளை ஆகிட்டா.. :)

  ReplyDelete
 14. //அடுத்து ஒரு சமையல் குறிப்பு பதிவில் மீண்டும் சந்திப்போம் :)))))/// ஓஓஓஓஓஒ நோஓஓஓஓஓஓஓஓஒ... சமையல் குறிப்போ?? :) நா ஒத்துக்க மாட்டேன்ன்.. உண்ணா விரதம் இருப்பேன்ன்:).

  ReplyDelete
 15. //அடுத்து ஒரு சமையல் குறிப்பு பதிவில் மீண்டும் சந்திப்போம் :)))))///
  ஹையா! எனக்குத் தெரியுமே! கிழங்கு அலுவா! சரியா!! ;))

  ReplyDelete