அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/25/14

வீட்டுத்தோட்டம் வெந்தயக்கீரை , கொண்டை கடலை செடி

வீட்டுத்தோட்டம் எங்க வீட்டில் முளைத்த வெந்தயக்கீரை !!
                                                  
                                                                                  


இதில் செய்த குழம்பு :) ஒரிஜினல் ரெசிபில கீரையை 
பொடியா நறுக்க சொன்னாங்க ..நான்தான் கீரைக்கு 
வலிக்குமேன்னு முழுசா போட்டுட்டேன் !!!
                                                                                   


ரெசிப்பி இங்கே 


                                                                     குழம்பு இங்கே
                                                                                       
 
அதில் சாம்பார் பொடிக்கு பதில் பாயிஜாவின் காயல்பட்டினம் 
மசாலாத்தூள் சேர்த்து செய்தேன் ..தூள் செய்முறை  இங்கே 

                                        இது கொண்டை கடலை செடி 
                                        லக்ஷ்மி ப்ராண்ட் அரிசி பையில 
                                        வளர்த்திருக்கிறேன் !
                                         எல்லாம் வளர்ந்ததும் அறுவடை செய்து 
                                         fresh ஆ சாப்பிடனும் .வட இந்தியர்கள் 
இதை ரோஸ்ட் செய்து மற்றும் குழம்பாக செய்தும் சாப்பிடுகிறார்கள் 
ஆனால் இங்கு விலை அதிகம் ..
பூ வந்திருக்கு !

இது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய வெங்காயத்தாள் 
வேர்பகுதியை வெட்டி நட்டு வளர்த்தது 
இந்த ஐடியாவை தந்தது 
மஹி !
மல்லிப்பூ கொத்த மல்லிப்பூ :)
வெந்தயக்கீரையின் மருத்துவ பயன்கள் 
நலம் வலைத்தளத்தில் சென்று வாசிக்கவும் ..

வீட்டில் நண்பர் இளங்கோ வெற்றிலை கொடி 
 வளர்த்து இருக்கார் பார்க்க அழகா இருக்கு 
விருப்பப்பட்டவங்க ஒரு விசிட் விடுங்க 
அவர் பக்கம் :)
http://www.ippadikkuelango.com/2014/06/blog-post.html


ஜெஸ்ஸி க்கு ஸ்ட்ராபெர்ரிஸ் வேணுமாம் :)

xxxxxxxxxxxxxxxxx 

6/23/14

பத்து கேள்விகளும் எனது பதில்களும்

பத்து கேள்விகளும் எனது பதில்களும் :)


தோழி இளமதி இங்கே என்னை பத்து கேள்விகள் கேட்டிருக்கார் 
அவற்றுக்கான எனது பதில்கள்..

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?
    

     ம்ம்ம் ..100 வயது வரை  அனைவரும் வாழணும்னு 
    இறைவனிடம் வேண்டிகொள்கிறேன் முதலில் ..
    எனது நூறாவது பிறந்தநாளை உலகின் மிக பெரிய
    இந்த ஆலமரத்தின் கீழே இயற்கை சூழலில் கொண்டாட 
    விரும்புகிறேன் . 
                                                                       அன்று நூறு இல்லை :)) நூற்றைம்பது மரக்கன்றுகளை 
    நானும் எனது பிறந்தநாள் வைபவத்தில் 
    கலந்து கொள்ளும் அனைவருமாக சேர்ந்து நடுவோம் .
    எனக்கு மிகவும் பிடித்த கருப்பட்டி காப்பி ,மற்றும் 
     பலாப்பழ சிப்ஸ் ,நேந்திரம் சிப்ஸ்   இதெல்லாம் சாப்பிட்டுக்
    கொண்டே ...அங்கே வரும் பட்டாம்பூச்சிகளையும் ,சின்ன 
    பறவைகளையும் எண்ணுவேன் .
    கண்டிப்பாக பார்ட்டி தட்டு கோப்பை எல்லாமே மண் 
     சாமான்கள்தான் ....யார் யாருக்கு என்ன வேணும்னு 
   இப்பவே லிஸ்ட் தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன்...
   எல்லா செலவும் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுடையது :))
   எல்லாரும் என்னென்ன வேணும்னு இங்கேயே சொல்லிடுங்க :))))

     
    2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?.

         கற்றது கையளவு கல்லாதது உலகளவு ..!!!!
     ஓரளவு கற்றுக்கொண்டேன் ,வாழ்க்கையை உலகத்தை 
      மனிதர்களை நட்புக்களை  ..:))))
     இன்னும் அதிகமாக தாழ்மையுடன் இருக்க ,எவ்வித 
     எதிர்பார்ப்பும் இன்றி அன்பு பாராட்ட ..யாருக்கும் கஷ்டம் 
     எவ்வித மனக்கஷ்டமும் தராமலிருக்க பெரியோர்கள் மற்றும் 
     நற்பண்பாளர்களிடமிருந்தும் நிறைய விஷயங்களை நல்ல 
    பண்புகளை கற்றுக்கொள்ள விரும்புகின்றேன் ..
     

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
    
   ஹா ஹா :))))))) இதோ இப்பக்கூட சிரிச்சிட்டே தான்
   இருக்கேன் :)
     
    தொடர்ச்சியா சிரித்தது சனிக்கிழமை நானும் கணவருமா 
சேர்ந்து வீடே அதிர்ர மாதிரி சிரிச்சோம் :))
 அது வந்து நாலு  நாள் முன்னாடிதான் நம்ம  கேப்டன் 
படம் ஒண்ணை ஸ்டேடசா ஷேர் செய்தேன்  ,,,செய்திட்டு 
கணவருக்கும் காட்டினேன் :)
இதோ இதுதான் அது :))
                                                                     


                                                          
அன்னிக்கு சனிக்கிழமை .நான் கிச்சனில் சமைச்சிட்டிருந்தேன் ...லையனல் மிஸ்ஸி 91 வது நிமிடம் ஒரு கோல் போட்டதும் 
                                                                                 

கணவர் வாய் தவறி ..ஆஆ லயண்டேட் மிக்சி லாஸ்ட் மினிட் 
கோல்  போட்டுட்டார்னு ஸ்லிப் of தி tongue சொன்னார் அதை 
கேட்டு விழுந்து புரண்டு சிரிச்சேன் :)

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
      எங்க நாட்டில் அந்த பிரச்சினைல்லாம் கிடையாதுங்க .
      ஒருவேளை நம்மூருக்கு வரும்போது நடந்தா :)
       வேப்ப மரத்தடியில் அமர்ந்து பனை விசிறி வச்சு 
      விசிறிக்கிட்டு இருப்பேன் ..நானும் எங்காத்துக்காரரும் 
     எங்க பொண்ணுக்கு கூட்டாஞ்சோறு சமைச்சி 
      கொடுப்போம் ..ஆத்தங்கரையில் உக்காந்து காலை 
      நனைச்சிட்டே இருப்பேன் ..                                                               
       ரொம்ப நாளா வெடி தேங்கா எப்படி இருக்கும்னு சாப்பிட 
       ஆசை ..யாரையாச்சும் கேட்டு செய்து தர சொல்வேன் .

    ஒரு 24 மணி நேரமாவது இயற்கைக்கு கேடு விளைவிக்காம 
    இருக்க முயற்சிப்பேன் ..அப்படி ஒரு நாள் வாய்த்தால் ..

      
      

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 
       எங்கள் மகள் //தாயுமானவள் // அவளிடம் நாங்கள் கற்றுக்கொள்ள 
வேண்டியது எவ்வளவோ இருக்கு !!!அதனால் சின்ன சின்ன அட்வைஸ் 
மட்டுமே சொல்வேன் :)
 வாழ்வோ தாழ்வோ இறைவனை மறவாதே ...
 உன் மனதுக்கு எது சரி எனபடுகிறதோ அதை மட்டுமே செய் .
 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை ..உன் வீட்டுக்கு யார் வந்தாலும் 
வயிறு நிறைய அன்னமிட்டு உபசரி .
அம்மாவை மாதிரி ரொம்ப லேட்டா சமைக்க கத்துக்காதே ..
ரெண்டு வருஷம் உன் கணவர் சமைக்கட்டும் பிறகு நீ கிச்சன் 
பொறுப்பை எடுத்துக்கோ ..எதை சமைச்சாலும் முதலில் உன் கணவர் அதை ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறார என்று தெரிந்து வைச்சிக்கோ :)
அவருக்கு தெரிந்த உணவுகளை தப்பித்தவறியும் சமைச்சிடாதே .
 அப்படி தவறி சமைத்தாலும் வாயில் நுழையாத ஒரு 
பெயரை பதார்த்தத்துக்கு வைத்துவிடு ..


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
   எல்லா பிரச்சினைக்கும் தலையாய காரணம் கோபம் 
வெறுப்பு,  பொறாமை ,அகந்தை வீண் பேச்சு ,புரணி 
இவையெல்லாம் தான் இவற்றை ஒட்டுமொத்தமாக 
இல்லாம பண்ணிட்டா ஒரு மெகா அழி ரப்பர் வச்சு 
அழிச்சிடுவேன் :)

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

     எனக்கு இறை நம்பிக்கை அதிகம் வீழ்ந்தாலும் தூக்கி 
    விட இறைவன்  துணை வருவார் என்ற நம்பிக்கையுடன்
     அவரை நித்தம் வணங்கும் என் உள்ளத்திடம் மட்டும் 
    அட்வைஸ் கேப்பேன் .என் மனதுக்கு மட்டும் ஒரு விஷயம் 
   தவறென்று தோன்றினால் இடம் பொருள் ஏவல்  பாராமல் 
   காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்பேன் ..
    சரி தவறை நிர்ணயிப்பது எனது மனம் மனம் மனம் :)
   


8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

    இதுவரை அப்படி நடக்கவில்லை ..இனியும் நடக்க கூடாதென்பதே 
  எனது வேண்டுதல் ..
யாராவது அப்படி பரப்பினாலும் அது அவர்களின் குறையன்றி 
எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை ..அவர்களை மன்னிக்க சொல்லி இறைவனிடம்  அப்பவும் வேண்டுவேன் 

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
     
    நம்முடன் உயிர் மூச்சாய் இருந்த ஒரு ஜீவன் இனி இல்லை என்ற நினைவே மிக கொடுமையானது ..அப்படி யாருக்கும் நடக்கவே 
கூடாது ..எனக்கு மரணம் என்ற வார்த்தை பிடிக்காத ஒன்று ..
ஆனால் விதி வலியது அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்  
முடிந்தவரை அவரை ஆறுதல் படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன் ..
எனக்கே பயம் மரணத்தை நினைச்சி ...ஸ்ஸ்ஸ்ஸ் இத்தோட 
அடுத்த கேள்விக்கு ஜம்ப்பறேன் ................


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

       ஹா ஹா :))))) பெரும் ரகசியம் ஒன்னு சொல்லிடறேன் 
இந்த மாதிரி தனிமையான நேரத்தில் தான் நான் நெட்டில் பார்த்த சமையல் குறிப்புங்களை செஞ்சு  பார்ப்பேன் :)
தப்பா வந்தாலும் தூக்கி கொட்டிடுவேனே :)

சேர்த்து ஒளிச்சு வச்ச ஜன்க் குப்பைங்களை தேடி எடுப்பேன் 
கிராப்ட் செய்யத்தான் :) ஏனென்றால் எனக்கே எங்க ஒளிச்சு
 வச்சேன்னு தெரியாது :)

அப்புறம் தோட்டத்துக்கு போய் மீன்களோட பேசுவேன் .
மலர்களை ரசிப்பேன் ..நோ நோ .டச் பண்ண மாட்டேன் .
அம்மா கொடுத்த ரெசிப்பி புக்செல்லாம் எடுத்து பார்ப்பேன் .
அப்பா கடைசியா அனுப்பின புடவையை பெட்டியில் 
இருந்து மடிப்பு கலையாம எடுத்து பார்த்து வைப்பேன் .
அவங்க கைப்பட அனுப்பின கடிதங்களை தொட்டு பார்ப்பேன் .
ஜெஸ்ஸி கூட ஹைட் அன்ட் சீக் விளையாடுவேன் 
அவளுக்கு பூச்சி ஈ எல்லாம் காட்டுவேன் ..
முகபுத்தகம் சென்று லைக் போடுவேன் ...
நட்பூக்களுடன் சாட் செய்வேன்                                                                 
ஜெஸ்ஸிக்கு செயின் போட்டு அழகு பார்ப்பேன் .

                                                                             

சந்தோஷ தருணங்களை மட்டும் நினைவுபடுத்தி பார்ப்பேன் 
தினமும் ஒரு நிமிடமாவது எங்களிடம் சொல்லாமல் 
கொள்ளாமல் பிரிந்து சென்ற அன்பு கிரிஜாவை 
நினைத்துக்கொள்வேன் .... 
ஏன் சொல்லாமல் சென்றாய் அன்புத்தோழி :( என்று 
என்னிடமே கேட்டுக்கொள்வேன் ..

                                                      அவ்ளோதான் :) 

இதை தொடர நான் அழைப்பது 
அன்பு தங்கை கலை   கிராமத்து கருவாச்சி ..
தம்பி பிரகாஷ்  தமிழ் வாசி 
குட்டிம்மா புகழ் தம்பி இலியாஸ் 
சகோதரர் நாஞ்சில் மனோ 
தலைவி கௌசல்யா  மனதோடு மட்டும் .

நேரமும் விருப்பமும் இருக்கறவங்க யாரும் தொடரலாம் :))


   

6/18/14

என் வீட்டு தோட்டத்தில் :)

என் வீட்டு தோட்டத்தில் :)


 தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..

இது நலம் முகபுத்தகத்தில் நான் பகிர்ந்த தோட்ட  குறிப்பு 

மேலும் பல வீட்டு தோட்ட குறிப்புகளுக்கு கீழ்காணும்
 சுட்டிக்கு சென்று வாசிக்கவும் 

                           https://www.facebook.com/nalam.net?ref_type=bookmark
                                                         
                                                       http://www.nalam.net/
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் பாதி அளவிற்கு 

மட்டும்மண் + காய்ந்த இலை, தழை, மண்புழு உரம் கலந்த 
கலவையை இட்டு நிரப்ப வேண்டும் 
 நன்றாக விளைந்த உருளைகிழங்கை பாதியாக வெட்டி , 
வெட்டிய பாகம் கீழே இருக்குமாறு மண்ணில் ஊன்றி 
வைக்கவும்.

 எனது பதிவை பார்த்து அதே முறையில் இங்கு கிழங்கு 
விதைத்திருப்பவர்   மேதகு அதிரா மியாவ் :)

                               
                                                                                                        

செடி ஓரளவு வளர்ந்ததும் மேலும் கொஞ்சம் மண்ணை 
நிரப்ப வேண்டும்.
முதலில் மொத்தமாக போடாமல் இவ்வாறு செய்வதால் 
கிழங்கு நன்கு திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் 
கிடைக்க வாய்ப்பு உண்டு.
                                                                               


மற்றொரு முறை ....

வீட்டில் வாங்கி வைத்த கிழங்குகள் சில நேரம் முளை 
விட்டிருக்கும் அல்லது விதைக்கவென நாமே chitting 
முறையில் முளைக்க வைக்கலாம் ..

நன்கு முற்றிய கிழங்குகளை முட்டை வைக்கும் கார்ட்போர்ட் 
முட்டை பெட்டியில் செங்குத்தாக நிற்க வைத்து ஒளிபடும் 
இடத்தில் வைக்க வேண்டும் ,

இவை தானாக சில நாளில் முளைக்கும் (1.5 செண்டி மீட்டர் 
அளவு வளர்ந்துவிடும் ) 
 அப்படி முளைத்த கிழங்குகளை கோணிப்பை /கருப்பு பாலித்தீன் 
பை போன்றவற்றில் கலப்பு உர மண் நிரப்பி வளர்க்கலாம் .
பைகளில் அடிப்பாகத்தில் நீர் வெளியேறதுளைகள் இட வேண்டும் ..
பையில் பாதி அளவுக்கு சுமார் 30 செ.மீ அளவுக்கு கலப்பு 
உரமண்ணை இட்டு அதில் முளைவிட்ட கிழங்குகளை புதைத்து 
அதன்மேல் மீண்டும்கலப்பு உர மண்ணால் 
மேலும் 15 செ .மீ உயரம் வரை நிரப்பி மூட வேண்டும் ...

 இது எங்க வீட்டு உருளைகிழங்கு ..நான் grow bags இல்
 வளர்த்து வருகிறேன் 

                                                                           நத்தை போன்றவை செடியை அண்டாதிருக்கவும் நீர் வெளியேற 
வசதியாகவும்மூன்று செங்கல்களை பை அல்லது பிளாஸ்டிக் 
வாளியின் கீழே வைக்க வேண்டும் .
மறக்காமல் அடிப்புறத்தில் துளைகள் இட வேண்டும் 
சுமார் மூன்று வாரத்தில் இலை முளைத்து செடி வளர ஆரம்பிக்கும் .

அவை மேலும் 15 செண்டி மீட்டர் உயரம் வளர்ந்ததும் பையின் மேற்பக்கத்தை உட்புறம் பிரித்து விட்டு மேலும் சிறிது கலப்பு உரத்தை இட வேண்டும் .

செடி வளர வளர பையை விரித்து விட வேண்டும் .
இரண்டு மாதத்தில் பூ விட துவங்கும் ,இலைகளும் வாட ஆரம்பிக்கும் இது அறுவடைக்கு உகந்த நேரம் .
இப்போது கிழங்கை மண்ணிலிருந்து அறுவடை செய்து எடுக்கலாம் .

நானும் அதிராவும் உருளை அறுவடைக்கு காத்திருக்கிறோம் :)

இது தொட்டியில் விளைந்த ஸ்ட்ராபெர்ரி :)
எங்க வீட்டு அறுவடை :) மிக மிக இனிப்பு சுவை !!
                                                                                     

இது ஜெஸ்ஸி பக்கம் :)
             நானும் அம்மாவுக்கு க்விலிங்கில் உதவி செய்வேன் :)
                                                                                  


அடுத்து ஒரு சமையல் குறிப்பு பதிவில் மீண்டும் சந்திப்போம் :)))))