அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/30/14

கொஞ்சம் கைவினை கொஞ்சம் சமையல் :)

வணக்கம் நண்பர்களே :)
                                                                               


இது சணல் கயறு தோட்டத்தில் செடிகிளைகளை கட்ட பயன்படுத்தும் 
கயறினை வைத்து செய்த வாழ்த்து அட்டை

ஒரு சத்தான சமையல் குறிப்பு :)

பரட்டைக்கீரை கூட்டு ..

                                                                            
பேரைக்கேட்டாலே சும்மா அதிருதா :) 
இது KALE   பத்தி இங்கே சுட்டியில் தட்டி சென்று தெரிஞ்சுக்கோங்க .

KALE என்ற கீரையின் தமிழ்பெயர் பரட்டைக்கீரை .
குறைந்த கலோரி ,நிறைய நார்ச்சத்து ,பூச்சியம் அளவு கொழுப்பு 
சத்து நிறைந்தது இக்கீரை .
அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரண மாகும் உணவு .
இரும்புசத்து அதிகம் இருக்கு இந்த கீரையில் .
BEEF இல் இருப்பதை விட அதிகம் இரும்பு சத்து இதில் இருக்கு .
ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கு 
ஈரல் ,புற்றுநோய் ,எலும்பு குறைபாடு ,ஆஸ்த்மா போன்ற பல 
நோய்கள் வராம தடுக்க கூடியது .
பார்வை தெளிவா இருக்க தினமும் கேல் உணவில் சேர்க்க வேண்டும் 
அன்றாடம் நமது உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி ,வைட்டமின் A..கால்சியம் எல்லாம் இந்த கீரையில் இருக்கு .
அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் இக்கீரை :)

நான் எப்பவும் கடைகளில் இதைபார்த்திருக்கேன் ஆனால் 
வாங்கியதில்லை .இதை ஜூஸ் செய்தெல்லாம் அருந்தலாம்னு 
கேள்விபட்டிருக்கேன் ஆனா முயற்சித்ததில்லை :)
இந்த முறை இந்த கீரை எப்படி எங்க வீட்டுக்கு வந்ததுன்னா :)

(எப்பவும்போல )என் கணவர் COLLARD GREENS என்று நினைத்து இதை 
தெரியாமல் வாங்கி வந்தார் ..என்ன செய்யன்னு தெரியாம சும்மா
 கீரை மாதிரி செய்தேன் ..முருங்கை கீரை சுவையில் மிக அருமையாக 
வந்தது .மற்ற கீரைகள் சமைத்த பின் அளவு சுருங்கும் !
ஆனா இது க்வான்டிடி அதே அளவு சமைத்த பின்னும் இருந்தது :)
                                                                        ...................
உங்களுக்காக வலையில் மாட்டிய செய்முறை இங்கே .              ம்ம்ம் Feeling happpppppppy:) and Blessed !!
                 (FB  mania LOL!!!)
                                                                     
வெள்ளிக்கிழமை மாலை நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன் 
பள்ளி முடிந்து வீடு திரும்பும் ஒரு சிறு பெண் காரை விட்டு இறங்கினாள் அவள் வீட்டு பக்கம் பார்க்காமல் அதைத்தாண்டி முன்புறமாக வேகமாக நடந்தாள் எங்கு செல்கிறாள் என்ற ஆவலுடன் எட்டி பார்த்தேன் ..அங்கே ஒரு மூன்று வீடு தள்ளி வசிக்கும் முதிய பாகிஸ்தானிய பெண்மணி ஒருவர் குப்பை வாளியை தூக்க சிரமப்பட்டு கொண்டிருந்தார் ..இந்த பெண் ஓடி சென்று அவருக்கு அதை நிமிர்த்தி வைக்க உதவுகிறாள் !! கொஞ்சம் நேரம் முன் சில பள்ளி மாணவர்கள் விளையாட்டாக இவரது குப்பை வாளியை கவிழ்த்தி போட்டு விட்டு சென்றுள்ளார்கள் பாவம் ..
அதுமட்டுமன்றி அவரை அணைத்து நலம் விசாரிச்சது !! அப்புறம் ..//Mrs ரெஹ்மான் ..தோட்டத்தில் களை பிடுங்கனும்னா சொல்லுங்க வந்து உதவுகின்றேன்// !!! ...என்று சொல்லி பிறகு நடந்து சென்று தனது(எங்க ) வீட்டு கதவை தட்டியது

Little deeds of kindness,
little words of love,
make our earth an Eden,
like the heaven above.
............................................................


பின்குறிப்பு  நான் இதுவரையில் என் மகளுக்கு இதை செய் என்று சொல்லி கொடுக்கவில்லை ஆனால் அவள் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவள் முன்னால் எப்போதோ ஓரிரு முறை சிலருக்கு உதவியிருக்கிறேன் அந்த செயல்கள் அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டு இப்படி வெளிப்படுகின்றது!!
.....................................
இது தோட்டத்தில் மஞ்சள் பூவை தேனியோடு ரசிக்கும் ஜெஸ்ஸி :)

மீண்டும் சந்திப்போம் ...நண்பர்களே 

28 comments:

 1. நல்ல பண்புகள் சொல்லிகொடுத்து வருவது இல்லை..
  எல்லாம் ஆதியில் இருந்து தொடர்வது...

  அக்காவை போலதானே பிள்ளையும் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா :) உன் அக்கா மகள் அக்காவைவிடவும் 100 மடங்கு சிறந்தவள் :)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. 5 வயது வரை பார்க்கும், கேட்கும், ரசிக்கும், ருசிக்கும், இன்னும் பலவற்றும் தான் ஒருவரின் குணமாக என்றும் அமைந்து விடுகிறது... வாழ்த்துக்கள் அன்பு மகளுக்கும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ .உண்மைதான் நீங்க சொல்வது .. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 3. மனதில் ஆழமாக பதிந்து விட்டு வெளிப்படும்
  நேர்த்தி......... பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா ! அன்பான வருகைக்கும் பாராட்டி வாழ்த்தியதற்கும்

   Delete
 4. நிர்மலா கையில் கிடைத்ததால் சணலின் [VALUE ADDED] மதிப்புக்கூடியுள்ளது. வாழ்த்து அட்டை ஜோர் ஜோர் !

  பாராட்டுக்கள். ;)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா :)

   Delete
 5. //நான் இதுவரையில் என் மகளுக்கு இதை செய் என்று சொல்லி கொடுக்கவில்லை ஆனால் அவள் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவள் முன்னால் எப்போதோ ஓரிரு முறை சிலருக்கு உதவியிருக்கிறேன் அந்த செயல்கள் அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டு இப்படி வெளிப்படுகின்றது!!//

  தங்கள் குழந்தையின் இந்த அரிய செயல் இதனைப்படிக்கும் சிலர் மனதிலாவது ஆழமாகப் பதிந்துபோனால், அதுவே வெற்றி தான், நிர்மலா. வாழ்த்துகள் ..... தாய்க்கும் ..... சேய்க்கும்.

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .அந்த பெண்மணி என்னிடம் கடந்த வாரம் சொன்னார் //உங்கள் மகள் எனக்கு சிறந்த உதவி செய்கிறாள் .இறைவன் அவளை ஆசிர்வதிப்பார் //என்று இதை விட வேறென்ன வேண்டும் .முதியோர்ன் ஆசிகள் இறைவன் ஆசி கொடுத்ததுபோல் .!!

   Delete
 6. தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி.

  பிள்ளைகளுக்கு பெற்றோர் தான் உண்மையான ரோல் மாடல் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..உண்மையை சொல்லபோனால் அவள்தான் எனக்கே ரோல்மாடல் :)

   Delete
 7. சணல் பூக்கள் அருமை..
  குழந்தைகளின் நற்செயல்கள் இயற்கையாய் பயின்று வருவது..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துறை செல்வராஜு ஐயா .

   Delete
 8. சணல் பூ அழகாய் இருக்கு, அந்த பின்னணியில் இருக்கும் வெள்ளை கார்டும் பொருத்தமா இருக்கு பூக்களுக்கு. கோணித்துணி, கூட சிவப்புக்கல்லு,,கலக்கறேள் போங்கோ! கீப் இட் அப்! :)

  பரட்டைக்கீரை- பேரைப் பார்த்ததும் ஏதோ தலைய விரிச்சுப்போட்டு ;) இருக்க கீரையாய் இருக்கும்னு ஆவலா எட்டிப் பார்த்தா "கேல்"நு சொல்லி பல்பு குடுத்துட்டீங்க..அவ்வ்வ்வ்! எனி ஹவ், புதுப்பேரைத் தெரிஞ்சுகிட்டேன்.

  ஷரன்-ஐ ஒரு நல்ல பெண்ணா வளர்த்துட்டீங்க..பாராட்டுக்கள்-உங்களுக்கும் அவங்களுக்கும்! :)) என்னதான் படிப்பு-வசதி இருந்தாலும் பண்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. நல்ல மனிதர்(மனுஷி:)களை) இந்த உலகிற்கு உருவாக்கித் தரவேண்டும் என்பதே என் ஆசையும்! :)

  ஜெஸ்ஸி க்யூட்! மியாவ் மியாவ்!! என்ஸொய் தி கார்டன் ஜெஸ்ஸி! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மஹி ..இந்த காலபிள்ளை களுக்கு நிறைய பக்குவம் மஹி ...எதை செய்யணும் எதை செய்யகூடாது என்பதில் தெளிவா இருக்காங்க .நாம் வளர்ந்த விதம் வேறு இவர்கள் இப்பவே எதற்கும் தைரியமாக இருக்காங்க .நாம் பேச தயங்கும் விஷயங்களை கூட வெளிப்படையாக விவாதிக்கறாங்க .ம்ம் உங்க வீட்டு ராணி இன்னும் அட்வான்ஸ்டா இருப்பா குழந்தைகள் நம்மக்கே பாடம் கற்பிக்கும் காலமிது ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 9. நல்ல சுவையூட்டும் பதிவு
  நோய்களை விரட்டும் உணவுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மகிழ்வே
  http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க மது .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 10. வணக்கம் தங்கையே!நலமா?///கீரை.........:)///மருமகளின் வளர்ச்சி பூரிப்பைத் தருகிறது.தாயைப் போல பிள்ளை.(அப்பாவுக்குத் தான் கீரை கூட வாங்கத் தெரியல! :))

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மருமக இல்லையா அதான்

   Delete
 11. அஞ்சு நலம்தானே. புது விதமான முயற்சி கலக்கிறீங்க. சணல்கயிற்றில் பூ அழகா இருக்கு. backround ம் பொருத்தம்.
  இந்த இங்கு Grünkohl. நானும் செய்திருக்கிறேன். டேஸ்ட் ம் கூட.

  புலிக்கு பிறந்தது பூனையாகுமா." நற்பண்புகள் உள்ள மகளாக வளர்வதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் உங்களுக்கும்,ஷரோனுக்கும்.

  ReplyDelete
 12. ஜெஸ்ஸி வளர்ந்து அழகா இருக்கு.

  ReplyDelete
 13. ஷெரன் அப்படி இருப்பதில் எனக்கு ஆச்சரியமே தெரியலக்கா ....நீங்க எப்படியோ அவள் அப்படியே இருக்கா ..... உங்கள் குணம் அப்படியே அவளிடம் இருக்கிறது .... தாயைப் போல் நூலைப் போல் சேலை ....

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா!(மைண்ட் வாய்ஸ்:காப்பியடிக்கிறத நம்ம கிட்ட கேக்கணும்!)

   Delete
 14. நூலைப்போல் சேலை

  ReplyDelete
 15. ஏஞ்சலின்,

  வாழ்த்து அட்டையை சணல் கயிறுகொண்டு என்னமா செய்திருக்கீங்க!

  கீரைக்கு மறக்க முடியாத பேராதான் வச்சிருக்காங்க. இனி இதை எங்கு பார்த்தாலும் பரட்டைதான் முதலில் நினைவுக்கு வரும்.

  மகளின் உதவும் குணம் கண்டு மகிழ்ச்சி.

  ReplyDelete
 16. அன்பு அஞ்சு!...

  அருமையான சணல் கயிற்றுக் கைவேலை. மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

  கீரையின் பெயரே ஒரு தினுசாக இருக்கிறதே.. இங்கு கிடைக்குமா? பார்ப்போம்... :)

  உங்கள் குணம் உங்கள் மகளுக்கும் அமைந்திருப்பது இறைவனின் கொடைதான் அஞ்சு.
  சில பிள்ளைகள் தாயைப் போலவோ தந்தைபோலவோ வேண்டிய நல்ல குணங்கள் ஏதுமின்றி இருந்து விடுகிறார்களே.. அந்த வருத்தத்தை நான் எத்தனையோ பெற்றோரிடம் கண்டிருக்கின்றேன்.
  ஆக, இறைவனின் ஆசியும் அருளும் இருந்தாலன்றி எதுவுமில்லை.

  அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
 17. வாழ்த்திதழ் - அழகோ அழகு.
  காலே - உங்கள் முறைப்படி சமைத்துப் பார்கிறேன்.
  ஷரோன் குட்டிக்கு என் அன்பு வாழ்த்துக்கள். :-)

  ReplyDelete