அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/25/14

சிறிய வயதில் வானளாவிய சிந்தனை Google. science-in-action-finalists

சிறிய வயதில் வானளாவிய சிந்தனை science-in-action-finalists

                                                        வாழைபழத்தோலில் பயோ பிளாஸ்டிக் 
இதனை தயாரிதிருக்கும் இளம் மாணவி .
துருக்கியை சேர்ந்த Elif Bilgin,..வயது 16.
இவரது இந்த முயற்சியில் பலமுறைசறுக்கினாலும்!
((பத்து முறை தோல்வி ..அதற்கு பிறகு தான் வெற்றி கண்டார் )!

வாழைப்பழ தோல் அல்லவா :).
பனிரெண்டாம் தடவை விடா முயற்சியுடன் வெற்றி கண்டுள்ளார் இந்த மாணவி ..

உருளை கிழங்கு மற்றும் மாம்பழத்தில் இருந்து பிளாஸ்டிக் ஏற்கனவே தயாரிகிறார்கள் ..அதுபோல  வாழைபழத்தில் உள்ள ஸ்டார்ச் மற்றும் செல்லுலோஸ் ,   மற்றும் சில வேதி பொருட்களுடன் சேர்த்து  இவரது முயற்சியில் உருவான பயோ பிளாஸ்டிக் ..எலெக்ட்ரிக் கேபிள் ஒயர்களை சுற்றி கவசம்(coating ) போல வரும் பிளாஸ்டிக்  மற்றும் பெட்ரோலிய எண்ணையில் இருந்து தருவிக்கப்படும் பிளாஸ்டிக் இற்கு பதிலாக பயன்படுத்தலாம் .
மேலும் இந்த பயோ பிளாஸ்டிக் மற்ற பிளாஸ்டிக் போல எவ்வித பாதிப்பையும் நமது சுற்றுசூழலுக்கு ஏற்படுத்தாது .அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் குறிப்பாக cosmetics /wax strips போன்றவற்றில் பிளாஸ்டிக் கலந்து வருகிறது அவை சுற்றுசூழலுக்கும்நமக்கும் அதிக பாதிப்பை உண்டாக்கும் எனவே அவற்றுக்கு பதில் இந்த பயோ பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது 
Science in actionபோட்டியில் 
 $50,000 அமெரிக்க டாலர்கள் வென்றிருக்கிறார் இந்த மாணவி ,,இவருடன் பதினைந்து மாணவ மாணவியர்கள்  கடந்த  செப்டம்பர் மாதம் 2013 இறுதிகட்ட கூகிள் science போட்டிக்கு  சென்றார்கள்  .

அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த  சாம்பவி 

                                                   

                               source : http://blogs.scientificamerican.com
பெயர் ...S .M . சாம்பவி 
வயது ...13 
class ..IX STD ..Maharishi International Residential School ..Kanchipuram 
Google Science Fair ..2013 ...இவரது கண்டுபிடிப்பு ஆய்வு .Bio electricity ..கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு(WASTE WATER TREATMENT) அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது சம்பந்தப்பட்டது ..
தனது ப்ராஜக்ட் பற்றி 
இந்த குட்டி பெண் கூறுகிறார் //நான் வாழும் பகுதியில் நிறைய  தொழிற்சாலைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து வெளியேறும் இரசாயனகழிவுகள் இயற்கை சூழலுக்கு பாதகம் விளைவிக்கின்றன ..மேலும் மின்சார தேவையும் மிக அதிகம் எங்களுக்கு அதனால் ..இக்கண்டுபிடிப்பு வருங்கால சமுதாயத்துக்கு பேருதவியாக பயன்படும் //

இவரது ரோல் மாடல் ...சிறுவயது முதல்... இவரை ஊக்கபடுத்தி வந்தவர் இவரது தாயாராம் .இயற்கை சுற்று சூழல்விழிப்புணர்வு என இவரை இளம் வயதிலேயே பெரிய கனவு காண வைத்தது இவரது தாய் மற்றும்  முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 

கூகிள்science fair பற்றிய மேலதிக விபரங்களுக்கு  சுட்டியில் பார்க்கவம் 
https://www.googlesciencefair.com/en/projects/ahJzfnNjaWVuY2VmYWlyLTIwMTJyRAsSC1Byb2plY3RTaXRlIjNhaEp6Zm5OamFXVnVZMlZtWVdseUxUSXdNVEp5RUFzU0IxQnliMnBsWTNRWTc4cUpBUXcM
source : SCIENCE FAIR 2013 FINALISTS*********************************************************************************                                                                                                       


                                             
                                                                                     


12 comments:

 1. S .M . சாம்பவி அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் ..

   Delete
 2. சிறிய வயதில் வானளாவிய சிந்தனை
  சிறப்பான சிந்தனைகளை அறியச்செய்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா .

   Delete
 3. துருக்கியை சேர்ந்த Elif Bilgin மற்றும் காஞ்சிபுரம் மாணவி S .M . சாம்பவி இருவரைப் பற்றிய தங்களது பகிர்வுக்கு நன்றி! இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா ..இது நான் 2013 இல் எழுதி ..பப்ளிஷ் பண்ண மறந்த ஒரு பதிவு .எதேச்சையாக டாஷ்போர்டில் இருந்ததை கவனித்தேன் ...தாமதமானாலும் பராவாயில்லைஎன்று பகிர்ந்தேன்

   Delete
 4. சாதனை செய்யும் குழந்தைகளைப்பற்றிய நல்ல செய்திகளுக்கு நன்றிகள். இளம் விஞ்ஞானிகள் இருவருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. வணக்கம்,தங்கையே!நலமா?///லேட்டானாலும் நாம் அறிந்திராத கண்டு பிடிப்புகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!இரண்டு இளம் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வோடு தங்கள் அறிவியற்திறனை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தும் இளைய தலைமுறைக்கு இனிய வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 7. சிறிய வயதிலேயே சாதனை.கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete