அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/26/14

ஜப்பான் நாட்டின் அதிசய செர்ரி மரம் ...


ஜப்பானிய புத்த மத துறவிகளையும்,குருக்களையும்  ,
அந்நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானிகளையும் வியக்க  
வைத்துள்ளது இந்த செர்ரி மரம்  .
                                                                               


                                                      இதுதான் 1250 வயது தாய் மரம்     
                                                                                 


காரணம் இந்த மரம் இயற்கைக்கு மாறாக நான்கு வயதிலேயே  பூத்துள்ளது 
சாதாரணமாக ஒரு செர்ரி மரம் பூ பூக்க பத்து வருட காலம் எடுத்துக்கொள்ளும் .
ஆனால்  இந்த மரம் ஆறு வருடத்திற்கு முன்பாகவே  பூத்துள்ளது
இந்த மரம் வளர காரணமாக இருந்த செர்ரி பழத்தின் விதை சுமார் எட்டு மாத
 காலம்விண் வெளிநிலையத்தில் ஆராய்ச்சிக்கென   விண்வெளி 
ஆராய்ச்சியாளர் கொயிச்சி வகாட்டா......................
                                                                                                 

 என்பவரால் விண்வெளி கூடத்துக்கு எடுத்து  செல்லப்பட்ட விதைகளில்
  ஒன்று .

விண்வெளி ஆராய்ச்சி கூடத்துக்கு அனுப்ப ஜப்பானில் பதினான்கு 
இடங்களில்இருந்து 265 விதைகளை சேகரித்து இருக்கின்றனர் .
அவற்றில் சில Ganjojii கோவிலின் அருகில்  அமைந்த  பழமை வாய்ந்த 
1250 வயதான    Chujo-hime-seigan-zakura"  செர்ரி மரத்தில்  
இருந்து சேகரித்தவை .
கடந்த 2008 ஆம் ஆண்டுநவம்பர் மாதம் முதல்  பூமியை   சுமார் 4100 
முறை சுற்றி வந்தபின்எட்டு மாதங்களுக்கு பின்னர் ஜூலை மாதம் மீண்டும் 
பூமிக்கு  இந்த விதைகள் எடுத்து வரப்பட்டன .

பூமிக்கு எடுத்து வந்த விதைகளில் சிலவற்றை மீண்டும் ஆய்வு செய்ய 
ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை எடுத்த இடத்துக்கே 
அனுப்பி வைத்திருக்கின்றனர் 
அப்படி அனுப்பப்பட்ட விதைகலிள்  சில தாய் மரத்தின் அருகிலுள்ள ஒரு  
பண்ணையில் நடப்பட்டுள்ளது ..
அதன் வளர்ச்சி பிற மரங்களை விட அதி விரைவாகவும் வேகமாகவும் 
இருந்துள்ளது .
ஏப்ரல் மாதம்  நான்கே வயது நிரம்பிய இந்த விண்வெளி பயணி :)
13 அடி உயரம் வளர்ந்து ஒன்பது செர்ரி மலர்களை பூத்திருக்கின்றது .
ஒவ்வொரு மலரிலும் ஐந்து இதழ்கள் இருக்கின்றன ..


                                                                                                            
ஆனால் தாய் மரத்தில் பூக்கும் மலர்களில் எப்போதும் முப்பது இதழ்கள் 
காணப்படும் .செர்ரி மரம் இயல்பாக பூ பூக்க சுமார் பத்து வருடம் 
எடுத்துகொள்ளுமாம் .இந்த முதிய மரத்தின் விதைகளில் இதுவரை  சமீப
 காலத்தில்  செடிகள் முளைக்கவில்லை .
எனவே இச்சம்பவம்  அங்குள்ள புத்த மதகுருமார்களை மிகுந்த 
சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது . 
இதில் அதிசயமேன்னவேனில் விண்வெளிக்கு பயணித்த மற்ற செர்ரி 
விதைகளும் இதேபோலஅதி விரைவாக குறித்த காலத்து முன்பாகவே 
வளர்ந்து பூ பூத்திருக்கின்றன.
 கல்வி மற்றும் கலாசார பண்பாட்டு அறிவினை பள்ளி குழந்தைகளுக்கு 
அறிவுறுத்தும் விதம் பள்ளி சிறார்களை வைத்தே இவ்விதைகளை நட 
செய்திருக்கின்றனர் ஆசிரியர்கள்.
மாணவர்கள் நட்ட விதைகள் வளர்ந்து மரமாவதை கற்பிக்க ஆசிரியர்கள் இவ்வாறு  செய்துள்ளார்கள் .
அவர்கள் பத்தாண்டுக்கு பின் பூக்கும் என எதிர்பார்த்த மரம் வெகு விரைவாக 
நான்கே ஆண்டில் பூத்துள்ளது இயற்கை அதிசயம் என வியக்கின்றனர் .
                                                                                  
விண்  வெளி பயணத்தில் ,அண்டகதிர்வீச்சு/cosmic கதிர்கள்  இந்த 
விதைகளின் அதிவேக வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் 
ஜப்பானிய நாட்டு விஞ்ஞானிகள் .

மேலும் இந்த முதிய மரத்துக்கே ஒரு பெரிய அதிசய வரலாறு இருக்காம் 
Chujo-hime என்ற ஜப்பானிய இளவரசி சிறு வயதில் அவரது சித்தியால் ..
கொடுமை செய்யப்பட்டு ஒரு நாள் உயர்ந்த மலைப்பக்கம் கொண்டுபோய் 
விடபட்டாராம் (சித்தி கொடுமை பல நாட்டில் இருக்கு போல :!)
அப்போ அங்கிருந்த புத்த மத பெண் துறவிகலால் காப்பாற்றப்பட்டு 
அவர்களுடன் அழைத்து சென்றார்களாம் ஆனால் சில நாட்களில் இவர் மறுபடியும் நோய்வாய்பட்டு சுகமாக வேண்டும் மட்டு மின்றி மலர்களும்  பூத்ததுதான் அவர்களுக்கே அதிசயம் !

மேலே விவரங்களுக்கு இங்கே  பார்க்கவும் .


................................................................................................................................................................................................................


25 comments:

 1. மிகவும் வியப்பளிக்கும் செய்திதான் இது. பகிர்வுக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா

   Delete
 2. ஏஞ்சலின்,

  இந்த அறிவியல் தகவ‌லைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.

  செர்ரி பூ பூக்க பத்து வருடங்களாகுமா ! ஆச்சர்யமா இருக்கே ! இங்கு எங்கள் வீட்டிற்கு முன்னால், சில குட்டி செர்ரி செடிகள் நடப்பட்டு, இன்னும் ஒரு வருடம்கூட ஆகவிலை, அதற்குள் இந்த வருடமே அழகாகப் பூத்துவிட்டன.

  ReplyDelete
  Replies
  1. எல்லா வகையும் பத்து வருடம் எடுக்காது .இந்த species மட்டும் பத்து ஆண்டுகள் ஆகும்மாம் .
   அடுத்தது செர்ரி மரத்தில் மலர்கள் மட்டும் தரும் வகையும் ,பழங்கள் தரும் வகையும் உண்டு
   நான்எங்கோ படிச்சேன் வாஷிங்க்டன் நகருக்கு நூறு வருடங்கள் முன்பு பல செர்ரி மர கிளைகள் பரிசாக இறக்குமதியாகி
   நடபட்டனவாம் .மேலும் graft வகை எளிதில் சீக்கிரம் பூக்கும் .

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Chitra.

   Delete
 3. ஆமாம் நானும் கூட பார்த்து இருக்கின்றேன்...எங்க வீட்டில் பக்கத்தில் இருக்கும் நிறைய மரங்கள்(அல்ல செடிகள்) அழகாக பூக்கும் ... தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. எல்லா வகையும் பத்து வருடம் எடுக்காது .இந்த species மட்டும் பத்து ஆண்டுகள் ஆகும்மாம் .
   அடுத்தது செர்ரி மரத்தில் மலர்கள் மட்டும் தரும் வகையும் ,பழங்கள் தரும் வகையும் உண்டு
   நான்எங்கோ படிச்சேன் வாஷிங்க்டன் நகருக்கு நூறு வருடங்கள் முன்பு பல செர்ரி மர கிளைகள் பரிசாக இறக்குமதியாகி
   நடபட்டனவாம் .மேலும் graft வகை எளிதில் சீக்கிரம் பூக்கும் .

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா

   Delete
 4. Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதியம்மா

   Delete
 5. வியக்க வைக்கும் தகவல்... நன்றி....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் தனபாலன்

   Delete
 6. கல்வி மற்றும் கலாசார பண்பாட்டு அறிவினை பள்ளி குழந்தைகளுக்கு
  அறிவுறுத்தும் விதம் பள்ளி சிறார்களை வைத்தே இவ்விதைகளை நட
  செய்திருக்கின்றனர் ஆசிரியர்கள்.///

  ஆச்சரியப்படவைக்கும் தகவல்கள்..

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. ஆச்சரியமளிக்கும் தகவல்!அதிசயமும் தான்!!இன்மேல் அதிக ஆண்டுகள் காத்திருந்து பயன் பெற வேண்டியதில்லை.விண்வெளிக்கு அனுப்பி மீளக் கொண்டு வந்து விதைகளை மண்ணில் நாட்டி விட வேண்டியது தான்!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 9. ஆச்சரியமான தகவல்தான். செர்ரி பூக்க இவ்வளவு வருடமாகுமா.
  அருமையான பகிர்வு அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பிரியா .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
   there are different varieties and species ...

   Delete
 10. மன்னிக்கவும் நண்பர்களே இன்னும் விவரம் சேகரித்து இணைப்பதற்குள் இரவோடிரவா பப்ளிஷ் ஆகியிருக்கு :)
  இப்போ சில சுட்டிகளை இணைத்துள்ளேன்

  ReplyDelete
 11. ஆச்சரியமான தகவல்.

  ReplyDelete

 12. வணக்கம்!

  விண்வெளி கண்டு விளைந்த மரமென்றோ!
  எண்ணம் விாியும் எழுந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 13. Sorry Angelin....Since we went on a cruise,I could not follow you in valaicharam after day one...I really felt bad when we returned today and read all the posts...Wish we had internet access on the ship...

  BTW you did a wonderful job....Congrats on that front....ttyl

  ReplyDelete
 14. ஆவ்வ்வ் புதிய தகவல்.. மற்றும் அரிய தகவல்.. அருமை.

  ReplyDelete
 15. சுவாரஸ்யமான தகவல்...
  நன்றி..
  http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

  ReplyDelete