அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/26/14

ஜப்பான் நாட்டின் அதிசய செர்ரி மரம் ...


ஜப்பானிய புத்த மத துறவிகளையும்,குருக்களையும்  ,
அந்நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானிகளையும் வியக்க  
வைத்துள்ளது இந்த செர்ரி மரம்  .
                                                                               


                                                      இதுதான் 1250 வயது தாய் மரம்     
                                                                                 


காரணம் இந்த மரம் இயற்கைக்கு மாறாக நான்கு வயதிலேயே  பூத்துள்ளது 
சாதாரணமாக ஒரு செர்ரி மரம் பூ பூக்க பத்து வருட காலம் எடுத்துக்கொள்ளும் .
ஆனால்  இந்த மரம் ஆறு வருடத்திற்கு முன்பாகவே  பூத்துள்ளது
இந்த மரம் வளர காரணமாக இருந்த செர்ரி பழத்தின் விதை சுமார் எட்டு மாத
 காலம்விண் வெளிநிலையத்தில் ஆராய்ச்சிக்கென   விண்வெளி 
ஆராய்ச்சியாளர் கொயிச்சி வகாட்டா......................
                                                                                                 

 என்பவரால் விண்வெளி கூடத்துக்கு எடுத்து  செல்லப்பட்ட விதைகளில்
  ஒன்று .

விண்வெளி ஆராய்ச்சி கூடத்துக்கு அனுப்ப ஜப்பானில் பதினான்கு 
இடங்களில்இருந்து 265 விதைகளை சேகரித்து இருக்கின்றனர் .
அவற்றில் சில Ganjojii கோவிலின் அருகில்  அமைந்த  பழமை வாய்ந்த 
1250 வயதான    Chujo-hime-seigan-zakura"  செர்ரி மரத்தில்  
இருந்து சேகரித்தவை .
கடந்த 2008 ஆம் ஆண்டுநவம்பர் மாதம் முதல்  பூமியை   சுமார் 4100 
முறை சுற்றி வந்தபின்எட்டு மாதங்களுக்கு பின்னர் ஜூலை மாதம் மீண்டும் 
பூமிக்கு  இந்த விதைகள் எடுத்து வரப்பட்டன .

பூமிக்கு எடுத்து வந்த விதைகளில் சிலவற்றை மீண்டும் ஆய்வு செய்ய 
ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை எடுத்த இடத்துக்கே 
அனுப்பி வைத்திருக்கின்றனர் 
அப்படி அனுப்பப்பட்ட விதைகலிள்  சில தாய் மரத்தின் அருகிலுள்ள ஒரு  
பண்ணையில் நடப்பட்டுள்ளது ..
அதன் வளர்ச்சி பிற மரங்களை விட அதி விரைவாகவும் வேகமாகவும் 
இருந்துள்ளது .
ஏப்ரல் மாதம்  நான்கே வயது நிரம்பிய இந்த விண்வெளி பயணி :)
13 அடி உயரம் வளர்ந்து ஒன்பது செர்ரி மலர்களை பூத்திருக்கின்றது .
ஒவ்வொரு மலரிலும் ஐந்து இதழ்கள் இருக்கின்றன ..


                                                                                                            
ஆனால் தாய் மரத்தில் பூக்கும் மலர்களில் எப்போதும் முப்பது இதழ்கள் 
காணப்படும் .செர்ரி மரம் இயல்பாக பூ பூக்க சுமார் பத்து வருடம் 
எடுத்துகொள்ளுமாம் .இந்த முதிய மரத்தின் விதைகளில் இதுவரை  சமீப
 காலத்தில்  செடிகள் முளைக்கவில்லை .
எனவே இச்சம்பவம்  அங்குள்ள புத்த மதகுருமார்களை மிகுந்த 
சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது . 
இதில் அதிசயமேன்னவேனில் விண்வெளிக்கு பயணித்த மற்ற செர்ரி 
விதைகளும் இதேபோலஅதி விரைவாக குறித்த காலத்து முன்பாகவே 
வளர்ந்து பூ பூத்திருக்கின்றன.
 கல்வி மற்றும் கலாசார பண்பாட்டு அறிவினை பள்ளி குழந்தைகளுக்கு 
அறிவுறுத்தும் விதம் பள்ளி சிறார்களை வைத்தே இவ்விதைகளை நட 
செய்திருக்கின்றனர் ஆசிரியர்கள்.
மாணவர்கள் நட்ட விதைகள் வளர்ந்து மரமாவதை கற்பிக்க ஆசிரியர்கள் இவ்வாறு  செய்துள்ளார்கள் .
அவர்கள் பத்தாண்டுக்கு பின் பூக்கும் என எதிர்பார்த்த மரம் வெகு விரைவாக 
நான்கே ஆண்டில் பூத்துள்ளது இயற்கை அதிசயம் என வியக்கின்றனர் .
                                                                                  
விண்  வெளி பயணத்தில் ,அண்டகதிர்வீச்சு/cosmic கதிர்கள்  இந்த 
விதைகளின் அதிவேக வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் 
ஜப்பானிய நாட்டு விஞ்ஞானிகள் .

மேலும் இந்த முதிய மரத்துக்கே ஒரு பெரிய அதிசய வரலாறு இருக்காம் 
Chujo-hime என்ற ஜப்பானிய இளவரசி சிறு வயதில் அவரது சித்தியால் ..
கொடுமை செய்யப்பட்டு ஒரு நாள் உயர்ந்த மலைப்பக்கம் கொண்டுபோய் 
விடபட்டாராம் (சித்தி கொடுமை பல நாட்டில் இருக்கு போல :!)
அப்போ அங்கிருந்த புத்த மத பெண் துறவிகலால் காப்பாற்றப்பட்டு 
அவர்களுடன் அழைத்து சென்றார்களாம் ஆனால் சில நாட்களில் இவர் மறுபடியும் நோய்வாய்பட்டு சுகமாக வேண்டும் மட்டு மின்றி மலர்களும்  பூத்ததுதான் அவர்களுக்கே அதிசயம் !

மேலே விவரங்களுக்கு இங்கே  பார்க்கவும் .


................................................................................................................................................................................................................


4/25/14

சிறிய வயதில் வானளாவிய சிந்தனை Google. science-in-action-finalists

சிறிய வயதில் வானளாவிய சிந்தனை science-in-action-finalists

                                                        வாழைபழத்தோலில் பயோ பிளாஸ்டிக் 
இதனை தயாரிதிருக்கும் இளம் மாணவி .
துருக்கியை சேர்ந்த Elif Bilgin,..வயது 16.
இவரது இந்த முயற்சியில் பலமுறைசறுக்கினாலும்!
((பத்து முறை தோல்வி ..அதற்கு பிறகு தான் வெற்றி கண்டார் )!

வாழைப்பழ தோல் அல்லவா :).
பனிரெண்டாம் தடவை விடா முயற்சியுடன் வெற்றி கண்டுள்ளார் இந்த மாணவி ..

உருளை கிழங்கு மற்றும் மாம்பழத்தில் இருந்து பிளாஸ்டிக் ஏற்கனவே தயாரிகிறார்கள் ..அதுபோல  வாழைபழத்தில் உள்ள ஸ்டார்ச் மற்றும் செல்லுலோஸ் ,   மற்றும் சில வேதி பொருட்களுடன் சேர்த்து  இவரது முயற்சியில் உருவான பயோ பிளாஸ்டிக் ..எலெக்ட்ரிக் கேபிள் ஒயர்களை சுற்றி கவசம்(coating ) போல வரும் பிளாஸ்டிக்  மற்றும் பெட்ரோலிய எண்ணையில் இருந்து தருவிக்கப்படும் பிளாஸ்டிக் இற்கு பதிலாக பயன்படுத்தலாம் .
மேலும் இந்த பயோ பிளாஸ்டிக் மற்ற பிளாஸ்டிக் போல எவ்வித பாதிப்பையும் நமது சுற்றுசூழலுக்கு ஏற்படுத்தாது .அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் குறிப்பாக cosmetics /wax strips போன்றவற்றில் பிளாஸ்டிக் கலந்து வருகிறது அவை சுற்றுசூழலுக்கும்நமக்கும் அதிக பாதிப்பை உண்டாக்கும் எனவே அவற்றுக்கு பதில் இந்த பயோ பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது 
Science in actionபோட்டியில் 
 $50,000 அமெரிக்க டாலர்கள் வென்றிருக்கிறார் இந்த மாணவி ,,இவருடன் பதினைந்து மாணவ மாணவியர்கள்  கடந்த  செப்டம்பர் மாதம் 2013 இறுதிகட்ட கூகிள் science போட்டிக்கு  சென்றார்கள்  .

அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த  சாம்பவி 

                                                   

                               source : http://blogs.scientificamerican.com
பெயர் ...S .M . சாம்பவி 
வயது ...13 
class ..IX STD ..Maharishi International Residential School ..Kanchipuram 
Google Science Fair ..2013 ...இவரது கண்டுபிடிப்பு ஆய்வு .Bio electricity ..கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு(WASTE WATER TREATMENT) அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது சம்பந்தப்பட்டது ..
தனது ப்ராஜக்ட் பற்றி 
இந்த குட்டி பெண் கூறுகிறார் //நான் வாழும் பகுதியில் நிறைய  தொழிற்சாலைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து வெளியேறும் இரசாயனகழிவுகள் இயற்கை சூழலுக்கு பாதகம் விளைவிக்கின்றன ..மேலும் மின்சார தேவையும் மிக அதிகம் எங்களுக்கு அதனால் ..இக்கண்டுபிடிப்பு வருங்கால சமுதாயத்துக்கு பேருதவியாக பயன்படும் //

இவரது ரோல் மாடல் ...சிறுவயது முதல்... இவரை ஊக்கபடுத்தி வந்தவர் இவரது தாயாராம் .இயற்கை சுற்று சூழல்விழிப்புணர்வு என இவரை இளம் வயதிலேயே பெரிய கனவு காண வைத்தது இவரது தாய் மற்றும்  முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 

கூகிள்science fair பற்றிய மேலதிக விபரங்களுக்கு  சுட்டியில் பார்க்கவம் 
https://www.googlesciencefair.com/en/projects/ahJzfnNjaWVuY2VmYWlyLTIwMTJyRAsSC1Byb2plY3RTaXRlIjNhaEp6Zm5OamFXVnVZMlZtWVdseUxUSXdNVEp5RUFzU0IxQnliMnBsWTNRWTc4cUpBUXcM
source : SCIENCE FAIR 2013 FINALISTS*********************************************************************************