அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/6/14

அழகு சாதன பொருட்களின் அழுக்கு பக்கம் !!

முக வெளுப்பு பூச்சு க்ரீம் மற்றும் உதட்டு சாயம் !! ஒரு சிறு ரிப்போர்ட் .

                                                                           CSE எனும் அறிவியல் மற்றும் சுற்று சூழல் மையம் நிறுவனம் ஜனவரி
 மாதம் வெளி யிட்ட ஆய்வு அறிக்கை .

73 சர்வதேச உலக நாடுகளில் விற்பனையாகும் முக அழகு ,பூச்சு 
பொருட்களில் பெரும்பாலானவற்றில் அடர் உலோகம் அதிக 
அளவில் காணப்படுகின்றது .
மெர்க்குரி எனப்படும் பாதரசம் FAIRNESS க்ரீம்களிலும் குரோமியம் ,
காட்மியம் ஆகியன உதட்டு சாயங்களிலும் இருக்கின்றனவாம் .

இவைகள் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகள் !

மெர்க்குரி இந்திய மருந்து ,அழகு சாதனபொருட்கள் சட்ட விதிகளின்படி 
தடை செய்யப்பட்ட ஒரு இரசாயன நச்சு பொருள் .
 சிறுநீரக பாதிப்பு ,தோலில் அரிப்பு ,நிறம் மாறுபடுதல் ,தழும்புகள் 
இவையெல்லாம் ஏற்படக்காரணம் இந்த மெர்க்குரி /பாதரசம் .
இயற்கையாக நமது தோலின் மெலனின் எனும் நிறமியின் செயல்பாட்டை 
தடை செய்து தோலை வெளுப்பாக வைக்க இந்த பாதரசத்தை முக அழகு
 கிரீம்களில் பயன்படுத்துகிறார்கள் //
                                                                               


Fairness creams Aroma Magic Fairy Lotion, Olay Natural White and Pond’s White Beauty were
 the top three with high mercury content.The top three lipstick brands with high nickel content
 were Lancome L’Absolu Nu-204, Hearts & Tarts-080V and MAC So Chaud-A82.//Aroma Magic 
Fair Lotion, a product of Blossom Kochhar Beauty Products Pvt Ltd, had the highest mercury
 level at 1.97 ppm, followed by Olay Natural White (1.79 ppm), 
a product of Procter and Gamble, India, and Ponds White Beauty (1.36 ppm) of Hindustan Unilever Ltd.

                                                                                 தகவல் பகிர்வு நன்றி ..ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் cseindia.org .

ஏற்கனவே கோடை வாசஸ்தலம் கொடைக்கானலில் ஏரிகள் மற்றும் 
சுற்றுபுறங்களில் இந்த நச்சுபொருள் பாதரசம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கு 
இன்னும் HUL கம்பெனி இது வரையிலும் நஷ்ட ஈடு வழங்காமல்
 இழுத்தடித்து கொண்டிருக்கு .
அது அறியாமையால் பாதரசத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு 
இல்லாமையால் அங்கு வேலைசெய்த அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு .
கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி .இரசாயன பொருள் கலப்படமில்லாத 
முக அழகு சாதனங்களை பயன்படுத்துங்கள் .
சைனா /தாய்லாந்து நாட்டு முக அழகு க்ரீம்களிலும் அதிக அளவில் 
மெர்க்குரி உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன .


இன்னொரு முக்கிய விஷயம் ..பல பன்னாட்டு முக அழகு சாதன தயாரிப்புக்கள்
 இந்திய சந்தையை நம்பித்தான் இருக்கின்றனவாம் !!!!


6 comments:

 1. இதெல்லாம் வாங்குவதேயில்லை... விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 2. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

  4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

  6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

  லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

  நன்றி...

  ReplyDelete
 3. பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வு.

  சாயத்தை வெளுக்கச்செய்து வெளுத்து வாங்கிவிட்டீர்களே, நிர்மலா. சபாஷ். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 4. ஆரோக்கிய வாழ்விற்கான தகவல்க்ள்! பகிர்விற்கு நன்றி! இரசாயனப் பொருட்கள் கலப்பில்லாத முக அழகு சாதனங்களை பயன்படுத்துவதைப் பற்றியும் குறிப்புகள தந்து இருந்தால் மகளிருக்கு உபயோகமாக இருக்கும். .

  ReplyDelete
 5. அதிரா :நம்ம க்ரூப்ஸ் லா யாரவது இப்படி இருக்கீகளா ப்பா....

  அஞ்சு :நம்ம மேனா மினுக்கி கலைக்காக தான் இந்த பதிவே ...

  கலை:பயனுள்ள பதிவு ...

  ReplyDelete
 6. பகிர்விற்கு நன்றி....

  ReplyDelete