அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/25/14

நெயில் பாலிஷ் !!!...// இரசாயன பொருட்கள்????

நெயில் பாலிஷ் !!!....இதில் எதற்கு இவ்ளோ இரசாயன பொருட்கள்????


                                                                                                        


               
.....இது பல வர்ணங்களில் பல வடிவ குப்பிகளில் வித விதமாக
 பல்பொருள் அங்காடிகளிலும் ..மேக்கப் சாதனங்கள் விற்கும் 
கடைகளிலும் இப்போ கிடைக்கின்றது ..
நெயில் ஆர்ட் என்று விரல் நகத்திலேயே இப்போ டிசைன்
கோலம் போட ஆரம்பிச்சுட்டாங்க ..
அதில் கற்கள் பதிப்பதென்ன பல முகங்களை வரைவதென்ன !!!!
பண்டிகைகளா உடனே நகங்களும் டெகரேஷன் போட்டுக்கும் :))


                                                                                                           

இப்போ கொஞ்சம் இந்த நெயில் பாலிஷ் பற்றிய சில விபரங்கள் .

சில வருடங்கள்; முன்பு வரை ..கர்ப்பிணி பெண்களை சிகரட் மற்றும் 
மதுபான வகைகள் தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் 
அறிவுறுத்துவார்கள் ..
ஆனால் இப்போ நிலைமையே வேறு ..
பெர்சனல் கேர் ப்ரொடக்ட்ஸ் அதாவது மேக்கப் /நெயில் பாலிஷ் /
பெர்பியூம் போன்றவற்றில் காணப்படும் அதிகளவு இரசாயன 
பொருட்களால் அவற்றை தவிர்க்க சொல்கின்றார்கள் 
அடுத்தது இதில் உள்ள  formaldehyde, toluene or dibutyl phthalate..
இவை மூன்றும் Toxic trio ...பார்மால்டிஹைட் ...புற்றுநோய் காரணி 
மற்ற இரண்டும் REPRODUCTIVE TOXIN .....
நெயில் பாலிஷ் பாட்டில்களில் உள்ள லேபிளில் //inflammable ///
காற்று வரும் வென்டிலேஷன் உள்ள ஜன்னல்கள் திறந்து வைத்துள்ள 
இடங்களில் பயன்படுத்தவும் // என்று குறிப்பிட்டிருப்பார்கள் ..
எத்தனை பேர்கள் இதனை விரலில் போடுமுன் வாசித்திருப்பார்கள் ??
//as of June 10, 2011, the U.S. Department of Health and Human Services updated its 
National Toxicology Program Report on Carcinogens (RoC) to state that 
formaldehyde is “known to be a human carcinogen,” //


Formaldehyde...இது பிளைவுட் //GLUE Adhesive/ பல வீட்டு உபயோக 
பொருட்களில் காணப்படும் ஒரு வித கடும் மணம் வீசும்
 இரசாயனப்பொருள் ..
இதைதான் நெயில் பாளிஷிலும் பயன்படுத்துகின்றனர் 


                                                                                                               மேலும் முன்பு பல வருடங்களுக்கு முன்னால் பயன்படுத்திய 
நெயில் பாலிஷ நாம் ஒவ்வொரு முறையும் குலுக்கி பின்பு 
பயன்படுத்துவோம் ஏனெனில் விரைவில் கடினமகிடும் ..
இப்போ மாற்றாக பிரபல நக பாலிஷ் நிறுவனகள் 
பயன்படுத்துவது டொலுவீன் ,
இதை நம்ம வீட்டுசுவருக்கு அடிக்கும் பெயின்டிலும் கலக்கறாங்க 

நகத்தில் இப்பூச்சுக்கள் CUTICLE வழியே ஊடுருவி இரத்த ஓட்டத்தில் 
கலக்குமாம் ,
நக பாளிஷை கடினமாக்காமல் நீர்தன்மையுடன் வைக்கும் டொலுவீன் .

TOLUENE ..
.இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மயக்கம் தலை வலி 
மற்றும் சிலகுறைபாடுகளை உருவாக்குதாம் !!!!!

                                                                                                       எப்பவும் விழிப்புடன் எந்த பொருளை வாங்கினாலும் அல்லது வாங்கி 
கொடுத்தாலும் அதன் லேபிளில் என்னென்ன குறிப்பிட்டு உள்ளது என 
வாசித்து பார்த்து வாங்கவும் ...
கூடுமானவரை இரசாயன பொருட்கள் மேலே குறிப்பிட்ட TOXIC TRIO 
மற்றும் ..
DMDM Hydantoin ,
Butylparaben, Isobutylparaben 
Propylparabenகலந்திருந்தால் தவிர்க்கவும் ..


                                                     


(மிக பிரபல நெயில் பாலிஷ் நிறுவனகள் LOREAL மற்றும் ரெவ்லான் இல் காணப்படும் ரசாயன பொருட்களும் அவற்றின் விளைவுகளும் பற்றிய ஒரு இடுகை வாசித்தபின் இதனை பகிர்ந்துள்ளேன் )

8 comments:

 1. மிகவும் பயனுள்ள விஷயங்கள்.

  எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது என்றுமே நல்லதே.

  நகங்களை அழகு படுத்தும் இவற்றில் இவ்வளவு ஆபத்துக்களா?

  நம் நகத்தால் நம் கண்களையே குத்திக்கொள்வது போலல்லவா உள்ளது. இயற்கையான அழகே போதும். இதெல்லாம் வேண்டவே வேண்டாம். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு... பலரையும் சென்று அடைய வேண்டும்...

  நன்றி...

  ReplyDelete
 3. வணக்கம்,தங்கச்சி!நலமா?///நல்ல விழிப்புணர்வூட்டும் பகிர்வு/பதிவு.////எத்தனை பேர்கள் இதனை விரலில் போடுமுன் வாசித்திருப்பார்கள் ??///ஒவ்வொரு பொருளுக்கும்/சாதனத்துக்கும் ஏன் மாத்திரை&மருந்துக்குக் கூட 'பாவனைக்கு முன்' என்று குறிப்பேடு இணைத்திருப்பார்கள்.அதையெல்லாம் படிச்சுப் புரிஞ்சு...........நடக்கிற காரியமா ன்னு தூக்கிப் போட்டுட்டு ,நாம தான் அதி மேதாவி(?!)யாச்சேன்னு............ஹூம்..............!

  ReplyDelete
 4. நல்ல விழிப்புணர்வு பதிவு அஞ்சு. அழகே ஆபத்துபோல. சிலபேர் வீட்டில் இருக்கும்போதும் நெயில்பாலிஷ் இல்லாமல் இருக்கமாட்டார்கள். இடையில் நகம் சுவாசிக்க விடவேணும் என நான் புக் ஒன்றில் வாசித்திருக்கேன். எனக்கும் இந்த நெயில் பாலிஷ் க்கும் எட்டாம் பொருத்தம். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 5. மிக்க நன்றி கோபு அண்ணா ,யோகா அண்ணா , சகோதரர் தனபாலன் ,அன்ட் அம்முலு

  ReplyDelete
 6. விழிப்புணர்வூட்டும் பகிர்வு. எல்லோரும் தஎரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
  எனக்கு இதுவரை நெயில் பாலிஷ் இட்டுக் கொள்ளும் பழக்கமே இல்லை...:)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி ..நானும் நெயில் பாலிஷ் பயன்படுத்துவதில்லை ..அந்த வாசனைக்கே ரூமை விட்டு ஓடிடுவேன்

   Delete
 7. very good post. Always buy good quality products that's one of the advices from experts. However good products have chemicals too.

  ReplyDelete