அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/7/14

மரபணு மாற்ற பயிரும் மான்சன்டோவும் !!GMO Awareness !! BT Cotton


   பருத்தி ..அன்றும் இன்றும் ! 

                                                                                      


உலகிற்கு பருத்தியை தந்தது நமது இந்தியா .பண்டைய மொஹஞ்சதரொவில் 
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நெய்யப்பட்ட பருத்தி துணி வகை நமது 
தேசத்தை சார்ந்ததாம் .
பாரம்பரிய மென்மைக்கும் நுட்பத்துக்கும் பெயர்போனது நமது நாட்டு பருத்தி .
உலகின் பல நாடுகளின்அரசர்களுக்கும் மேற்குடி  மக்களுக்கும் என்று 
அதிக அளவில் நமது நாட்டின் நுண்ணிய பருத்தி  மஸ்லின் துணிகள் 
ஏற்றுமதியான பொற்  காலமும் உண்டு !

                                                                                      
காலனி ஆதிக்கம் ஏற்படும் வரை நமது நாட்டு பாரம்பரிய பருத்திக்கு  
பிரதான இடம் உலக அரங்கில் கிடைத்தது .
Arboreum ,Herbaceum என்ற இரண்டு வகைகள் பிரபலமான பாரம்பரிய 
பழமையான பருத்தி வகைகள் !!!இன்று !!!!

பல மாநிலங்களில் ஏழை விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் BT பருத்தி .

பல தற்கொலைகளுக்கு அப்புறமும் கையை சுட்டுக்கொண்ட பின்னரும் 
நமது மத்திய அரசை சேர்ந்த மேதகு அமைச்சர் ஒருவர் ..field trial இற்காக
சோதனை முறையில்  மரபணு மாற்ற பயிர் களை ..அரிசி ,கோதுமை ,
சோளம் ,ஆமணக்கு ,பருத்தி ,ஆகிய வற்றை நமது நாட்டின் பல மாநிலங்களில் 
பயிரிட அனுமதி வழங்கியிருக்கார் :(..
இதற்க்கு முன்பிருந்த அமைச்சர் இந்த மரபணு மாற்றபயிர் விஷயத்தில் முட்டுக்கட்டையாக இருந்ததால் அவரை விலக (விலக்கி ) செய்து இவரை நியமித்திருந்தார்கள் 
//"If a particular state government does not allow it, these entities will not be 
able to go for field trial," environment secretary V Rajagopalan said. // 
அனைவரும் அறிய வேண்டியது மாநில அரசின் ஒத்துழைப்பின்றி இதனை செயல்படுத்த முடியாது .


                                                                                
ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான 
MONSANTO என்ற நிறுவனத்தின் 500,000 பங்குகளின் உரிமையாளர் இந்த 
பெரிய்ய்ய்ய்ய மனிதர் தான் 

ஏழை நாடுகளில் பசிபிணியை முற்றிலும் நீக்கணும் என்பது இந்த 
மான்சாண்டோவின் குறிக்கோள் ..ஆனா மறைமுகமாக மக்கள் தொகையை
 தற்கொலை மற்றும் மரபணு மாற்றப்யிரினால் ஏற்படும் பக்க விளைவுகளின்
 பரிசுகளான பல நோய்கள் மூலம் குறைத்ததுதான் இவர்களின் சாதனை :(

                                                                                         
                                                                                     


எதெல்லாம் இயற்கைக்கும் நமது மனித வளத்துக்கும் பிற்கால சந்ததிக்கும் கேடு விளைவிக்குமோ அதையே எதற்கு செய்ய முற்படுகிறார்கள் :(

******************************************************************************************

8 comments:

 1. பணம் மனித உயிரை என்றோ வாங்கத் துவங்கி விட்டது...

  ReplyDelete
 2. கேட்கவே மிகவும் பயங்கரமாகவும் வருத்தமாகவும் உள்ளது. ;(

  ReplyDelete
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

  வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

  ReplyDelete
 4. வருத்தம்தருகிறது.

  வலைச்சரவாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புகாரிலிருந்து யவனரகம் எனப்படும் கிரேக்க, எகிப்து, ரோம தேசங்களுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.

  காலம் மாறிப்போச்சு!!! ஊழல்...தான் அனைத்திற்கும் காரணம்.

  ReplyDelete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

  வலைச்சர தள இணைப்பு : டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...

  ReplyDelete
 7. //எதெல்லாம் இயற்கைக்கும் நமது மனித வளத்துக்கும் பிற்கால சந்ததிக்கும் கேடு விளைவிக்குமோ அதையே எதற்கு செய்ய முற்படுகிறார்கள்//தான் மட்டுமே நல்லா இருக்கனுங்கிற பண வெறிதான் :(

  ReplyDelete