அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

3/26/14

South Africa to Croatia...அழகிய மனதை மயக்கும் உருக்கும் காதல் கதை !


மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல :)
அதையும் தாண்டி புனிதமானது !!
பார்த்த காதல் ,பார்க்காமல் காதல் ,நெட் காதல் ,ஒருதலை காதல் ,
பொருந்தா காதல் ,முகபுத்தக காதல் :)இதையெல்லாம் தூக்கி 
கடலில் கொட்டுங்க :)

                                                         Rodan and Malena :)
                                                                                           

இன்னிக்கு நாம பார்க்கப்போவது !!

இரண்டு நாரைகளின் அழகிய மனதை மயக்கும் உருக்கும்
 காதல் கதை !
தென் ஆப்பிரிக்காவில் இருந்து ரோடான் என்ற ஆண் பறவை 
குரோயாஷியாவில் இருக்கும் மலேனா  என்ற  தனது 
காதல் இணையைகாண  ஒவ்வோர் ஆண்டும் எட்டாயிரம் 
மைல்கள் பிரயாணம் செய்து வருகின்றது ..
பயணத்தின் இடையே மனிதர்களை போல ட்ரான்சிட் விமானமோ 
இல்லை தங்கி இளைப்பாறவோ இந்த பறவையினால் முடியாது .!!

இந்த இருவரில் ஆண் நாரையின் பெயர் ரோடன் 
பெண்ணின் பெயர் மலேனா !


இதில் மலேனா என்ற பெண் பறவையினால் 
 பறக்க முடியாது :( .......

                                                                                                      
1993 ஆம் ஆண்டு இத்தாலிய வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் 
சுட்டதில் ஒரு பக்க இறக்கை உடைந்தது .
அப்போதில் இருந்து இதனை Stjepan Vokic என்ற நல்ல மனிதர் தனது 
வீட்டின் கூரைபகுதியில் இடம் அமைத்து கொடுத்து 
பாதுகாத்து வருகின்றார் .
                                                                                                 

ஒவ்வோர் ஆண்டும் பறவைகள் வசந்த காலத்தில் வேறு 
இடங்களுக்கு  இடம்பெயரும் அப்படி ஒருமுறை தனது 
காதலனை அதாவது ரோடானை சந்தித்திருக்கு மலெனா .
இருந்து சுமார் ஏழெட்டு வருடங்களுக்கும் 
மேல் ரோடான் ஆண்டுதோறும்மார்ச் மாதம் ஒரு குறிப்பிட்ட 
தேதியில் ..குறிப்பிட்ட நேரத்தில்  மத்திய தரைக்கடல் ,மலை, 
பாலைவனம் இவற்றையெல்லாம் கடந்து 
குரோயாசியாவுக்கு பயணித்து (டைம் டேபிள் ரொம்ப
 ஸ்ட்ரிக்டா பின்தொடர்கிறார் ) :)
முட்டை இட்டு குஞ்சு பொரித்து ,அவற்றுக்கு பறக்கவும் கற்று கொடுத்து
 பிள்ளைகளை தன்னுடன் ஆப்பிரிக்காவிற்கு அழைத்து செல்கின்றதாம் .

இதுவரை 32 நாரை குஞ்சுகள் தந்தையுடன் ஆப்பிரிக்காவிற்கு 
பயணித்திருக்கின்றன !
மலேனாவினால் தனது இணையுடன் பறக்க முடியாது ஆனால் 
ஆண்டுதோறும் காதல் கணவனின் வருகைக்காக ஆவலுடன் 
எதிர்பார்ப்புடன் காத்துகொண்டிருக்குமாம் ! 
இதனை பாதுகாத்துவரும் Stjepan ஒரு சாதாரண
 நடுத்தரவர்க்க மனிதர் .மலேனாவிற்கு உணவு வாங்க தன் 
தொலைபேசியையும் கூட விற்று இருக்கின்றார் ..
                                                                                                           


(மானையும் முயலையும் கொன்று சுட்டு தின்னும் மனித 
முதலைகள்  இதை சற்று கவனிக்க வேண்டும்  )

ஒவ்வோர் ஆண்டும் இவருக்கு கவலையாக இருக்குமாம் 
அந்த ஆண் வருமாவென்று !! இதன் பாதுகாபாளர்  கவனிதிருக்கார் 
மலேனா  சரியான நேரத்துக்கு பதட்டத்துடன் பார்த்து
கொண்டிருக்குமாம் ரோடானின் வரவை நோக்கி !


ஆனால் அந்த பறவை தனக்காக காத்து கொண்டிருக்கும் 
இணையை காண அதற்க்கு ஏமாற்றம் தர கூடாதென அறிந்திருக்கின்றது ,
மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தாங்கும் ரோடான் ஆகஸ்ட் மாதம் 
குஞ்சுகளோடு பயணிக்கும் பிறகு மலெனா அடுத்த வசந்த காலத்துக்கு 
தனது இணையின் வரவிற்கு காத்து கொண்டிருக்கும் !!

இதுவல்லவோ காதல் !!!இது இவர்களின் பனிரெண்டாவது மண நாள் 


நேற்று aljazeera சானலில் இதனை ஒளிபரப்பினார்கள் ..இம்முறை ஒரு மணிநேரம் சீக்கிரமே ரோடன் வந்துட்டாராம் காதல் மனைவியை காண !


3/25/14

நெயில் பாலிஷ் !!!...// இரசாயன பொருட்கள்????

நெயில் பாலிஷ் !!!....இதில் எதற்கு இவ்ளோ இரசாயன பொருட்கள்????


                                                                                                        


               
.....இது பல வர்ணங்களில் பல வடிவ குப்பிகளில் வித விதமாக
 பல்பொருள் அங்காடிகளிலும் ..மேக்கப் சாதனங்கள் விற்கும் 
கடைகளிலும் இப்போ கிடைக்கின்றது ..
நெயில் ஆர்ட் என்று விரல் நகத்திலேயே இப்போ டிசைன்
கோலம் போட ஆரம்பிச்சுட்டாங்க ..
அதில் கற்கள் பதிப்பதென்ன பல முகங்களை வரைவதென்ன !!!!
பண்டிகைகளா உடனே நகங்களும் டெகரேஷன் போட்டுக்கும் :))


                                                                                                           

இப்போ கொஞ்சம் இந்த நெயில் பாலிஷ் பற்றிய சில விபரங்கள் .

சில வருடங்கள்; முன்பு வரை ..கர்ப்பிணி பெண்களை சிகரட் மற்றும் 
மதுபான வகைகள் தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் 
அறிவுறுத்துவார்கள் ..
ஆனால் இப்போ நிலைமையே வேறு ..
பெர்சனல் கேர் ப்ரொடக்ட்ஸ் அதாவது மேக்கப் /நெயில் பாலிஷ் /
பெர்பியூம் போன்றவற்றில் காணப்படும் அதிகளவு இரசாயன 
பொருட்களால் அவற்றை தவிர்க்க சொல்கின்றார்கள் 
அடுத்தது இதில் உள்ள  formaldehyde, toluene or dibutyl phthalate..
இவை மூன்றும் Toxic trio ...பார்மால்டிஹைட் ...புற்றுநோய் காரணி 
மற்ற இரண்டும் REPRODUCTIVE TOXIN .....
நெயில் பாலிஷ் பாட்டில்களில் உள்ள லேபிளில் //inflammable ///
காற்று வரும் வென்டிலேஷன் உள்ள ஜன்னல்கள் திறந்து வைத்துள்ள 
இடங்களில் பயன்படுத்தவும் // என்று குறிப்பிட்டிருப்பார்கள் ..
எத்தனை பேர்கள் இதனை விரலில் போடுமுன் வாசித்திருப்பார்கள் ??
//as of June 10, 2011, the U.S. Department of Health and Human Services updated its 
National Toxicology Program Report on Carcinogens (RoC) to state that 
formaldehyde is “known to be a human carcinogen,” //


Formaldehyde...இது பிளைவுட் //GLUE Adhesive/ பல வீட்டு உபயோக 
பொருட்களில் காணப்படும் ஒரு வித கடும் மணம் வீசும்
 இரசாயனப்பொருள் ..
இதைதான் நெயில் பாளிஷிலும் பயன்படுத்துகின்றனர் 


                                                                                                               மேலும் முன்பு பல வருடங்களுக்கு முன்னால் பயன்படுத்திய 
நெயில் பாலிஷ நாம் ஒவ்வொரு முறையும் குலுக்கி பின்பு 
பயன்படுத்துவோம் ஏனெனில் விரைவில் கடினமகிடும் ..
இப்போ மாற்றாக பிரபல நக பாலிஷ் நிறுவனகள் 
பயன்படுத்துவது டொலுவீன் ,
இதை நம்ம வீட்டுசுவருக்கு அடிக்கும் பெயின்டிலும் கலக்கறாங்க 

நகத்தில் இப்பூச்சுக்கள் CUTICLE வழியே ஊடுருவி இரத்த ஓட்டத்தில் 
கலக்குமாம் ,
நக பாளிஷை கடினமாக்காமல் நீர்தன்மையுடன் வைக்கும் டொலுவீன் .

TOLUENE ..
.இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மயக்கம் தலை வலி 
மற்றும் சிலகுறைபாடுகளை உருவாக்குதாம் !!!!!

                                                                                                       எப்பவும் விழிப்புடன் எந்த பொருளை வாங்கினாலும் அல்லது வாங்கி 
கொடுத்தாலும் அதன் லேபிளில் என்னென்ன குறிப்பிட்டு உள்ளது என 
வாசித்து பார்த்து வாங்கவும் ...
கூடுமானவரை இரசாயன பொருட்கள் மேலே குறிப்பிட்ட TOXIC TRIO 
மற்றும் ..
DMDM Hydantoin ,
Butylparaben, Isobutylparaben 
Propylparabenகலந்திருந்தால் தவிர்க்கவும் ..


                                                     


(மிக பிரபல நெயில் பாலிஷ் நிறுவனகள் LOREAL மற்றும் ரெவ்லான் இல் காணப்படும் ரசாயன பொருட்களும் அவற்றின் விளைவுகளும் பற்றிய ஒரு இடுகை வாசித்தபின் இதனை பகிர்ந்துள்ளேன் )

3/15/14

விழிப்புணர்வு !! தேனிக்கள் ...Monsanto ...Eco friendly coffee cup


                  மகரந்தசேர்க்கைக்கு முக்கிய காரணிகலான தேனீக்கள் ,
வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிற உயிரினகள் இப்போ முற்றிலும் 
அழிந்து கொண்டு வருகின்றன .
அமெரிக்காவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களின் அழிவுக்கு இந்த 
மொன்ஸாண்டோ விதைகளே காரணம்!!
     


                                                                                    

                                                                                 
இந்த லேபிளின் மேலே குறிப்பிட்டிருக்கு /உணவுபொருளாகவோ ,
எண்ணெய் எடுக்கவோ ,தீவனமாகவோ பயன்படுத்த வேணாம் //என்று ..
,அப்போ இந்த விதைகளை நிலத்தில் விதைத்து விளைச்சலில் வரும் 
பயிர்களை ,உண்ணும் நமது நிலைம


                                                                                  
                                                                                   

******************************************************************************************கொஞ்சம் காப்பி குடிச்சிட்டு போங்க :)

                                                                                  
வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரபல டிசைனர் Enrique Luis Sardi இத்தாலிய 
நாட்டின் குழம்பி !!!! coffee  நிறுவனத்திற்கு பிரத்தியேகமாக 
வடிவமைத்துள்ள டூ இன் ஒன பிஸ்கட் கோப்பை / ..cookie cup ..

இந்த கோப்பையின் வெளிப்புறம் பிஸ்கட்டால் ஆனது .உட்புறம் குறிப்பிட்ட
வகை ஐசிங் சர்க்கரையினால் நீர்த்தன்மை உட்புகாவண்ணம்  அதே நேரம்
 இனிப்பூட்டும் சுவை கொடுக்கும்படி மேற் பூச்சிடப்பட்டுள்ளது .
இந்த குக்கி கோப்பை சூழல் இயலுக்கு அதாவது ecologyக்கு நிறைய 
விருதுகளை அள்ளி குவித்துள்ளது ...
இனிமே காப்பியை குடிச்சிட்டு பிளாஸ்டிக் கோப்பையை வீச குப்பை
தொட்டியை தேட வேண்டாம் :)) 


காப்பியை குடிச்சோம் பிஸ்கட்டை சாப்பிட்டோம்னு போய்க்கிட்டே 
இருக்கலாம் 
அடுத்து சாக்லேட் சுவை!!! சேர்த்த பிஸ்கட் கோப்பை தயாரிப்பில் தீவிரமா இறங்கியுள்ளார்களாம் ...இந்நிறுவனத்தினர் .
வெகு விரைவில் நம் நாட்டிலும் வரும் :)

ஆர்யா !! சூர்யா!! எல்லாரும் உங்களை குடிக்க வைப்பாங்க :))))))))))))


Angelin ..
3/7/14

மரபணு மாற்ற பயிரும் மான்சன்டோவும் !!GMO Awareness !! BT Cotton


   பருத்தி ..அன்றும் இன்றும் ! 

                                                                                      


உலகிற்கு பருத்தியை தந்தது நமது இந்தியா .பண்டைய மொஹஞ்சதரொவில் 
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நெய்யப்பட்ட பருத்தி துணி வகை நமது 
தேசத்தை சார்ந்ததாம் .
பாரம்பரிய மென்மைக்கும் நுட்பத்துக்கும் பெயர்போனது நமது நாட்டு பருத்தி .
உலகின் பல நாடுகளின்அரசர்களுக்கும் மேற்குடி  மக்களுக்கும் என்று 
அதிக அளவில் நமது நாட்டின் நுண்ணிய பருத்தி  மஸ்லின் துணிகள் 
ஏற்றுமதியான பொற்  காலமும் உண்டு !

                                                                                      
காலனி ஆதிக்கம் ஏற்படும் வரை நமது நாட்டு பாரம்பரிய பருத்திக்கு  
பிரதான இடம் உலக அரங்கில் கிடைத்தது .
Arboreum ,Herbaceum என்ற இரண்டு வகைகள் பிரபலமான பாரம்பரிய 
பழமையான பருத்தி வகைகள் !!!இன்று !!!!

பல மாநிலங்களில் ஏழை விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் BT பருத்தி .

பல தற்கொலைகளுக்கு அப்புறமும் கையை சுட்டுக்கொண்ட பின்னரும் 
நமது மத்திய அரசை சேர்ந்த மேதகு அமைச்சர் ஒருவர் ..field trial இற்காக
சோதனை முறையில்  மரபணு மாற்ற பயிர் களை ..அரிசி ,கோதுமை ,
சோளம் ,ஆமணக்கு ,பருத்தி ,ஆகிய வற்றை நமது நாட்டின் பல மாநிலங்களில் 
பயிரிட அனுமதி வழங்கியிருக்கார் :(..
இதற்க்கு முன்பிருந்த அமைச்சர் இந்த மரபணு மாற்றபயிர் விஷயத்தில் முட்டுக்கட்டையாக இருந்ததால் அவரை விலக (விலக்கி ) செய்து இவரை நியமித்திருந்தார்கள் 
//"If a particular state government does not allow it, these entities will not be 
able to go for field trial," environment secretary V Rajagopalan said. // 
அனைவரும் அறிய வேண்டியது மாநில அரசின் ஒத்துழைப்பின்றி இதனை செயல்படுத்த முடியாது .


                                                                                
ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான 
MONSANTO என்ற நிறுவனத்தின் 500,000 பங்குகளின் உரிமையாளர் இந்த 
பெரிய்ய்ய்ய்ய மனிதர் தான் 

ஏழை நாடுகளில் பசிபிணியை முற்றிலும் நீக்கணும் என்பது இந்த 
மான்சாண்டோவின் குறிக்கோள் ..ஆனா மறைமுகமாக மக்கள் தொகையை
 தற்கொலை மற்றும் மரபணு மாற்றப்யிரினால் ஏற்படும் பக்க விளைவுகளின்
 பரிசுகளான பல நோய்கள் மூலம் குறைத்ததுதான் இவர்களின் சாதனை :(

                                                                                         
                                                                                     


எதெல்லாம் இயற்கைக்கும் நமது மனித வளத்துக்கும் பிற்கால சந்ததிக்கும் கேடு விளைவிக்குமோ அதையே எதற்கு செய்ய முற்படுகிறார்கள் :(

******************************************************************************************

3/6/14

அழகு சாதன பொருட்களின் அழுக்கு பக்கம் !!

முக வெளுப்பு பூச்சு க்ரீம் மற்றும் உதட்டு சாயம் !! ஒரு சிறு ரிப்போர்ட் .

                                                                           CSE எனும் அறிவியல் மற்றும் சுற்று சூழல் மையம் நிறுவனம் ஜனவரி
 மாதம் வெளி யிட்ட ஆய்வு அறிக்கை .

73 சர்வதேச உலக நாடுகளில் விற்பனையாகும் முக அழகு ,பூச்சு 
பொருட்களில் பெரும்பாலானவற்றில் அடர் உலோகம் அதிக 
அளவில் காணப்படுகின்றது .
மெர்க்குரி எனப்படும் பாதரசம் FAIRNESS க்ரீம்களிலும் குரோமியம் ,
காட்மியம் ஆகியன உதட்டு சாயங்களிலும் இருக்கின்றனவாம் .

இவைகள் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகள் !

மெர்க்குரி இந்திய மருந்து ,அழகு சாதனபொருட்கள் சட்ட விதிகளின்படி 
தடை செய்யப்பட்ட ஒரு இரசாயன நச்சு பொருள் .
 சிறுநீரக பாதிப்பு ,தோலில் அரிப்பு ,நிறம் மாறுபடுதல் ,தழும்புகள் 
இவையெல்லாம் ஏற்படக்காரணம் இந்த மெர்க்குரி /பாதரசம் .
இயற்கையாக நமது தோலின் மெலனின் எனும் நிறமியின் செயல்பாட்டை 
தடை செய்து தோலை வெளுப்பாக வைக்க இந்த பாதரசத்தை முக அழகு
 கிரீம்களில் பயன்படுத்துகிறார்கள் //
                                                                               


Fairness creams Aroma Magic Fairy Lotion, Olay Natural White and Pond’s White Beauty were
 the top three with high mercury content.The top three lipstick brands with high nickel content
 were Lancome L’Absolu Nu-204, Hearts & Tarts-080V and MAC So Chaud-A82.//Aroma Magic 
Fair Lotion, a product of Blossom Kochhar Beauty Products Pvt Ltd, had the highest mercury
 level at 1.97 ppm, followed by Olay Natural White (1.79 ppm), 
a product of Procter and Gamble, India, and Ponds White Beauty (1.36 ppm) of Hindustan Unilever Ltd.

                                                                                 தகவல் பகிர்வு நன்றி ..ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் cseindia.org .

ஏற்கனவே கோடை வாசஸ்தலம் கொடைக்கானலில் ஏரிகள் மற்றும் 
சுற்றுபுறங்களில் இந்த நச்சுபொருள் பாதரசம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கு 
இன்னும் HUL கம்பெனி இது வரையிலும் நஷ்ட ஈடு வழங்காமல்
 இழுத்தடித்து கொண்டிருக்கு .
அது அறியாமையால் பாதரசத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு 
இல்லாமையால் அங்கு வேலைசெய்த அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு .
கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி .இரசாயன பொருள் கலப்படமில்லாத 
முக அழகு சாதனங்களை பயன்படுத்துங்கள் .
சைனா /தாய்லாந்து நாட்டு முக அழகு க்ரீம்களிலும் அதிக அளவில் 
மெர்க்குரி உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன .


இன்னொரு முக்கிய விஷயம் ..பல பன்னாட்டு முக அழகு சாதன தயாரிப்புக்கள்
 இந்திய சந்தையை நம்பித்தான் இருக்கின்றனவாம் !!!!