அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/25/14

ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!!....Please Share !!!

                                                                                       


ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!!
நம் பூமி மலட்டு நிலமாவதை தடுக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!!
அதிகம் பகிர்ந்து நம்கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!!
►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது..
►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை.
• முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்...
• அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும்.
• நிலத்தடி நீர் உப்பானால் அங்கு விவசாயம் செய்ய முடியாது.
• குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் போகும்.
• பயிர்களும் மரங்களும் கருகி போகும்..►மீதேன் வாயுவை எடுக்க உங்களிடம் அமெரிக்க நிறுவனமான GELCL உங்களிடம் நிலத்தை நாப்பது வருட குத்தகைக்கு கேட்கும்.
►நாப்பது வருடத்திற்கான குத்தகை பணத்தை ஒரே காசோலையில் கொடுத்து விடுவார்கள்.
►நம் நிலம்தான் நாப்பது வருடத்தில் நம் கையிக்கு கிடைத்து விடுமே, அத்துடன் விவசாயம் செய்தாலும் நாப்பது வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே என்று ஏமாந்து நீங்களும் நிலத்தை கொடுத்து விடுவீர்கள்.
►நாப்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி,எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும்.
►ஏற்கனவே ஆற்று நீரும், குளத்து நீரும் இல்லாம போன நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும்
►எனவே இவர்கள் உங்களிடம் நிலத்தை குத்தகைக்கு கேட்டால் தயவு செய்து கொடுத்துவிடாதீர்கள்.
►நம் எதிர்கால சந்ததியினரை வஞ்சிக்காதீர்..
►நம் எதிர சந்ததியினருக்கு நம் பசுமையான தமிழ்நாட்டை விட்டுசெல்வோம் பாலைவனத்தை அல்ல..
►ரத்தம் சிந்தி ஈன்றெடுத்த சுதந்திரத்தை மீண்டும் அயல்நாட்டு முதலாளியிடம் அடகு வைத்து விடாதீர்..
►மயிலாடுதுறை நண்பர்களே இந்த திட்டம் முதல் கட்டமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியான திருவிடைமருதூர்,நரசிங்கன்பேட்டை உட்பட்ட சில பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. நம் நிலம் மலடாவதர்க்கு நீங்களே துணைபோகாதீர்கள் நண்பர்களே..பிகு: போபால் நிகழ்வை சிந்தித்து பாருங்கள் தோழர்களே..
இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.."

மீத்தேன் திட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டையில் விளை நிலங்களில் கிணறு தோண்ட ஊன்றப்பட்டிருக்கும் கல்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகிற்கே சோறு போட்ட இடமடா! காசுக்காக எதையும் செய்யும் பிச்சைகாரர்களே உங்களுக்கு எவ்வுளவு பணமடா வேண்டும்? கேளுங்கள் பிச்சை போடுகிறோம்! 7 கோடி பேர் இருக்கோம்! 
 Original Source ...from
https://www.facebook.com/DoctorBiotechnology

12 comments:

 1. வரவிருக்கும் ஆபத்தைப் பற்றித் தெளிவாக மிகச்சரியான தருணத்தில் எச்சரித்துள்ளீர்கள். விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 2. ►நாப்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி,எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும்.//

  உண்மை .
  கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.

  ReplyDelete
 3. How r u Angelin...?

  Just this weekend we watched Promised Land (A movie produced by Matt Damon on the same subject...)

  http://www.movies.com/promisedland/details/m68985

  It is a big issue in the western world too..with economy being so bad and the promised returns from this FRACKING being on the higher side...farmers fall prey to the big companies...

  Sad to see Indian farmers being lured...

  ReplyDelete
 4. பின்னூட்டமளித்த கோமதி அக்கா ,கீதா ,சகோதரர்கள் தனபாலன் மற்றும் ரெவரிக்கு மிக்க நன்றி.

  நமது நாட்டை சுடுகாடாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கு ..

  அப்பாவி கிராம மக்களை வலையில் வீழ்த்த எளிது என்பதனால் இவர்களின் அட்டூழியத்தை அரங்கேற்றுகின்றார்கள் :(..exploration,extraction போது முதலில் இவர்கள் செய்வது நிலத்தடியில் உள்ள பல மில்லியன் காலன்கள் நீரை வெளியேற்றுவது ..என்னவொரு அக்கிரமம் ..பாவம் பிற்கால சந்ததி ..நாற்பது வருடம் பின் அவர்களுக்கு கரிசல் சுடுகாடுதான் மிச்சம் ..

  @ரெவரி ..தகவலுக்கு நன்றி பார்க்கின்றேன் சகோ .the tech of CBM extraction is relatively recent even in the U.S and the technology has been used in areas where there was no agriculture...பிறகு எதற்காம் இங்கே பசுமையான நிலத்தில் இவர்களின் methane ஆராய்ச்சி :( ஏற்கனவே கூடங்குளத்தில் ரஷ்யா ...மற்றும் மத்திய இந்திய காடுகளில் ..cil புண்ணியத்தால் பல அதிகாரவர்க்க வெளிநாட்டு வங்கிகளின் உதவியுடன் நிலக்கரிக்காக பெரும் பரப்பளவு காடுகள் அழிய போகுதாம் ..
  poor farmers /tribes and innocent people are scapegoats :(


  btw நான் நலம் ..:)

  ReplyDelete
 5. வணக்கம் தங்கச்சி!நலமா?///தங்கச்சியைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.நல்லா இருக்கணுமின்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.///நல்ல விழிப்புணர்வூட்டும் பகிர்வு!இந்தியாவில் என்றால் பணத்துக்குப் பிணமும் வாய் திறக்கும் என்று பல் தேசியக் கம்பனிகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன.எதிர் கால சந்ததிக்காக இப்போதே எச்சரிக்கையாய் இருப்போம்!

  ReplyDelete
  Replies
  1. நாங்க அனைவரும் நலம் அண்ணா ..நீங்க சொல்வது சரி ..ஒவ்வொருவரும் வருங்கால சந்ததிய நினைத்தாவது விழிப்புடன் இருக்கணும்

   Delete
 6. இதில் இறங்கிய நிறுவனத்தின் லாபம் ஆறு லெட்சம் கோடி என்பது அதிர்ச்சி...
  www.malartharu.org

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் .எவ்வித லாப நோக்கில்லாம வெளிநாட்டு கம்பெனிகள் இந்த விஷயத்தில் இறங்க மாட்டாங்க நண்பரே :( ..வருத்தமான விஷயம் இப்படி தங்கள் சுயலாபத்துக்காக அப்பாவிகளை நசுக்குவது .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 7. ''..இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்...''
  சிறந்த விழிப்புணர்வு சிரத்தில் எடுப்பர்களாக!
  இனிய வாழ்த்து சகோதரி...நீண்ட இடைவெளியின் பின்..
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. ''..இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.."
  (No info That this is registered ..That is why I am uploading my Words Again.)..

  சிறந்த விழிப்புணர்வு சிரத்தில் எடுப்பர்களாக!
  இனிய வாழ்த்து சகோதரி...நீண்ட இடைவெளியின் பின்..
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. வணக்கம் !
  நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்! என்ன கொடுமை இது.
  சிறந்த விழிப்புணர்வு பதிவு, அனைவரும் செவி சாய்க்க வேண்டும் .ஆவன செய்ய முன்வரவேண்டும்.
  நன்றி ! வாழ்த்துக்கள்....!

  ReplyDelete