அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/11/13

VIBGYOR !!! .....

நவம்பர் ..11  ...
Red ....Poppy 
இன்று போரில் மரணித்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி 
செலுத்தும் நாள் ..இங்கே இந்நாளில் ஒரு காகிததாலான 
POPPY மலரை நினைவு கூறும் அடையாளமாக அனைவரும் 
அணிவர் .

                                                                                  
                                                                                     முதல் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் ஜெர்மானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது 
. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி,
 காலை 11 மணிக்கு நிகழ்ந்தது.

 இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை
நினைவு கூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் 
நிறுத்தப்படுகின்றது...

ஒவ்வொரு வருடமும் எங்கள் ஆலயத்திலும் இந்த நாள் நினைவு
 கூறப்படும் ..எங்கள் ஆலயத்தில்  உள்ள ஒரு Commemorative plaque
முன் அங்கு உயிரிழந்த வீர்களின் நண்பர்கள் உறவினர் அனைவரும் 
அஞ்சலி செலுத்துவார்கள் ..இந்த ஆண்டு இவ்வைபவத்தில் 65வது 
மண நாளை கொண்டாடிய இளம் தம்பதியரை அங்கு சந்தித்தேன் ...
அந்த பெண்மணியின் அண்ணன்  போரில் மாண்டவராம் அவரை 
நினைவு கூற வந்தனர் மிகவும் அன்பான அழகிய இந்த ஜோடி 
இருவரும் மிக அழகாக உடை உடுத்தி வந்தார்கள் ..
அவர் என்னிடம் தனது பர்சிலுள்ள 
புகைப்படம் ஒன்றை காட்டினார் அவர்களின் என்கேஜ்மேண்டின்போது 
எடுத்ததாம் :)அதை இடப்புறம் உள்ள சட்டை பாக்கெட்டில் இதயத்துக்கு அருகே வைத்திருக்கேன் என்றார் ..இன்னும் நிறைய சொன்னார் !!!!!அவர் பெயர் jack 
மனைவி பெயர் jill :)
அந்த இடமே சிரிப்பால் சந்தோஷத்தால் 
நிரம்பி வழிந்தார்போல ஒரு அனுபவம் எங்களுக்கு .


                                                                               

அவர்கள் இருவரும் 15,16 வயதிருக்கும்போது திருமணம்  செய்தார்களாம் 
ஆராதனை முடிந்த பின் நான் பார்த்தேன் எனக்கு முன்னே  அவர்கள் 
இருவரும் ஒரு குடையின் கீழ் கைகளை இருக்க பிடித்து நடந்து சென்றனர் .
இருவருக்கும் எண்பது வயதிருக்கும் ..அன்புன்னா இதுதான் ...வாலிப வயதில் ஹார்மோன்களில் ஈர்ப்பில் வரும்  காதலை விட  வயோதிகத்திலும் 
உள்ளார்ந்த நேசம் பாசம் எல்லாம் சேர்ந்த ஒரு காதல் எக்செட்ரா 
எக்செட்ரா !!!!!!!!!பார்க்கவே 
அவ்ளோ சந்தோசம் .

இரண்டாவது சூரியன் :)  இது நோர்வே நாட்டு செய்தி                                                                               

நோர்வே நாட்டில் உள்ள Rjukan, எனும் பகுதி ஒஸ்லோவிலிருந்து சுமார்
 160 கிமீ தொலைவில் சுற்றிலும் மலை குன்றுகளால் சூழ்ந்துள்ள ஒரு இடம் 
.இதனால் வெயில் கதிர்கள் மலைகளால் தடுக்கப்படுகின்றது .
குளிர்காலங்களில் சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு இருட்டு மட்டுமே .
.இந்த பகுதியை சார்ந்த 3500 மக்கள் பலருக்கு S .A .D எனும் seasonal affective
 disorder பாதிப்பும் உண்டு .
இப்பகுதி மக்கள் வெயிலை பார்க்கணும்னா கேபிள் காரில் ஏறி மலை உச்சி 
சென்று தான் வெய்யிலை !! தரிசிக்க முடியும் ..
 இப்போ Martin Andersen,என்பவரின்  முயற்சியால் 17 மீட்டர் அளவுள்ள 
பிரமாண்டமான கண்ணாடிகளை /heliostat' mirrors 450 மீட்டர் மலை உச்சியில் பொருத்திஇரண்டாம் சூரியனை இருண்ட குளிர்காலங்களிலும் மக்கள் காண செய்திருக்கிறார்கள்இந்த கண்ணாடிகள் கணினியால் இயங்கி சூரிய ஒளியை பிரதிபலிகின்றன .
Source ...BBC News


இது முக புத்தக டிப்ஸ் :) 

                                                                                  நாம் அன்றாடம் உண்ணும் பழங்கள் organic 
முறையில் பூச்சி மருந்துகள் இல்லாமல் விளைந்தவற்றை உண்பதே
நல்லது 
அப்படி கிடைக்காத பட்சத்தில் ..இந்த முறையில் கழுவி உண்ணலாம் .

                                                             
இதுவும் முக புத்தகத்தில் இருந்து ஒரு பகிர்வு ..
சில விஷயங்களை சொல்ல 
விவரிக்க வார்த்தைகள் தேவையில்லை ,,,!!!!!!

                                                                                    

                                                                                     11/1/13

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள் :) நண்பர்கள் அனைவருக்கும் :)                                                                              


அன்புடன்  ஏஞ்சலின் .