அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/30/13

கொஞ்சம் ரிலாக்ஸ் :)) AND G M O விழிப்புணர்வு செய்தி !!!!!!!

கொஞ்சம் ரிலாக்ஸ் :))

போவோமா ஊர்கோலம் :))
                                                                                       

                                                               ஹா ஹா :)
     
                                                                             


குஷி படம் பார்த்திருப்பாங்களோ இவங்க பெற்றோர் :))


                                   
                                    எங்க கிளம்பிட்டீங்க மேடம் :)

                                                                                 

                                                                                 

காட்டுக்கே ராஜாவானாலும் 
இவரும் வீட்டம்மாகிட்ட திட்டு வாங்குறார் 
அங்கும் மதுரை  :)தான் போல :))

விழிப்புணர்வு செய்தி !!!!!!!

GMO..... மரபணு மாற்றுப் பயிர்.

அதாவது ... .D N A வில் சில பல மாற்றங்கள் செய்து உருவாக்கப்படும் 
பயிரினங்கள்மற்றும் உயிரினங்கள் .
உதாரணத்திற்கு தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி கிடைக்க 
உருளைக்கிழங்கின் மரபணுக்களை கலந்திருக்கின்றனர்.
பிறகு ..ஆப்பிள் பழம் இருக்கே அதை வெட்டி வைச்சா சிறிது நேரத்தில் 
காற்று பட்டவுடன் பிரவுன் நிறம் ஏற்படும் ,,இந்த மரபணு மாற்றம் 
மூலம் உருவானவற்றில் ..அப்படி வெட்டி வைத்தாலும் நிறம் 
மாறாமலிருக்க சில பல மரபணு சித்து வேலைகளை செய்திடுவாங்க ..

சமீபத்தில் வெளிவந்த செய்தி 
SOURCE :-http://www.peoplemovers.com/ideas/keep-genetically-modified-bananas-out-of-india-40
//Billionaire Bill Gates and Australian scientist James Dale are pushing for unnatural genetically modified (GMO) bananasand have started a "creation myth" by claiming their GMO bananas are an "innovation" to save Indian women from child birth deaths due to iron deficiency anaemia. //

த்சோ !!!த்சோ !!!! யப்பப்பா ...எங்க நாட்டு பெண்கள் தான் கிடைச்சாங்களா 
உங்களுக்கு ..நாங்க என்ன LAB எலிகளா ???

இப்படிதான் பிலிப்பைன்சில் பீட்டா கரோட்டின் உள்ள கோல்டன் 
அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றுGMO வகை அரிசியை பயிரிட்டார்கள் ..
எதற்கு தெரியுமா ? பிலிப்பைன்சில் பசிப்பிணி மற்றும் ஊட்டக்குறை அல்லது ஊட்டச்சத்துக்குறைபாடு ஆகியவற்றால் பால்ய வயது குழந்தைகள் மரணிக்கிறார்கலாம் அதற்க்கு இவங்க GMO மூலம் உதவிக்கரம் நீட்ட முற்பட்டிருக்கிறார்கள் 


விளைவு என்ன நடந்தது !!!!!!

இரவோடிரவாக பொதுமக்கள் அத்தனையையும் வெட்டி சாய்ச்சிட்டாங்க :))

இந்த மகா கனவான்கள் ..பெரிய ஜாம்பவான்கள் தங்கள் சொந்த நாட்டில்

 எதையாகிலும் செய்து கொள்ளட்டும் அல்லது கொல்லட்டும்!! 
அவர்கள் நாட்டில் உள்ளவர்களை ..ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாய் போல
அல்லது தனது உடலில் உள்ள அதிகப்படியான உப்பை கண்ணீர் மூலம்
 வெளியேற்றும் முதலை போல தனது சுய லாபத்துக்கு அப்பாவி 
ஏழை நாடுகளில் இவர்களின் சித்து வேலைகளை காட்ட வேண்டாம் ..எல்லா விஷயமும் அமெரிக்காவில் தானே நடைபெறுது நமக்கொன்றும் 
பிரச்சினை இல்லை என்று நினைக்க வேண்டாம் ..நம் நாட்டில் விளையும் 
95%பருத்தி ..பிடி பருத்தி .B.T COTTON ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு
ஒரு அப்பாவி விவசாயியின் தற்கொலை எதனால் என்பதையும் சிந்தியுங்கள் .
சென்னை மாநகரத்தில் கேவிண்டிஷ் எனப்படும் GMO  வாழை பழங்கள் இப்போ 
விற்பனையில் இருக்காம் 

எச்சரிக்கைமரபணு  வாழைப்பழம் 
                                                                          

இதை பற்றிய பகிர்வு பசுமை விடியலில் காணவும் 


10/29/13

Sad News ..:(


துயரத்தில் பங்கு கொள்வோம் 


                                                                                         
அன்பு நண்பர்களே 

                            

நாம் அனைவருக்கு மிகவும் பரிச்சயமான தோழி ஆச்சி ..திருமதி B .S . ஸ்ரீதர் ..http://aatchi.blogspot.co.uk/
அவர்களின் அன்பு தந்தை சமீபத்தில் 22.10.2013 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார் ..

தந்தையை இழந்து வாடும் சகோதரி ஆச்சி அவர்களின் குடும்பத்தாருக்கு எல்லா ஆறுதலையும் தேறுதலையும் தர எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுவோம் ...