அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/11/13

VIBGYOR !!! .....

நவம்பர் ..11  ...
Red ....Poppy 
இன்று போரில் மரணித்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி 
செலுத்தும் நாள் ..இங்கே இந்நாளில் ஒரு காகிததாலான 
POPPY மலரை நினைவு கூறும் அடையாளமாக அனைவரும் 
அணிவர் .

                                                                                  
                                                                                     



முதல் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் ஜெர்மானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது 
. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி,
 காலை 11 மணிக்கு நிகழ்ந்தது.

 இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை
நினைவு கூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் 
நிறுத்தப்படுகின்றது...

ஒவ்வொரு வருடமும் எங்கள் ஆலயத்திலும் இந்த நாள் நினைவு
 கூறப்படும் ..எங்கள் ஆலயத்தில்  உள்ள ஒரு Commemorative plaque
முன் அங்கு உயிரிழந்த வீர்களின் நண்பர்கள் உறவினர் அனைவரும் 
அஞ்சலி செலுத்துவார்கள் ..இந்த ஆண்டு இவ்வைபவத்தில் 65வது 
மண நாளை கொண்டாடிய இளம் தம்பதியரை அங்கு சந்தித்தேன் ...
அந்த பெண்மணியின் அண்ணன்  போரில் மாண்டவராம் அவரை 
நினைவு கூற வந்தனர் மிகவும் அன்பான அழகிய இந்த ஜோடி 
இருவரும் மிக அழகாக உடை உடுத்தி வந்தார்கள் ..
அவர் என்னிடம் தனது பர்சிலுள்ள 
புகைப்படம் ஒன்றை காட்டினார் அவர்களின் என்கேஜ்மேண்டின்போது 
எடுத்ததாம் :)அதை இடப்புறம் உள்ள சட்டை பாக்கெட்டில் இதயத்துக்கு அருகே வைத்திருக்கேன் என்றார் ..இன்னும் நிறைய சொன்னார் !!!!!அவர் பெயர் jack 
மனைவி பெயர் jill :)
அந்த இடமே சிரிப்பால் சந்தோஷத்தால் 
நிரம்பி வழிந்தார்போல ஒரு அனுபவம் எங்களுக்கு .


                                                                               

அவர்கள் இருவரும் 15,16 வயதிருக்கும்போது திருமணம்  செய்தார்களாம் 
ஆராதனை முடிந்த பின் நான் பார்த்தேன் எனக்கு முன்னே  அவர்கள் 
இருவரும் ஒரு குடையின் கீழ் கைகளை இருக்க பிடித்து நடந்து சென்றனர் .
இருவருக்கும் எண்பது வயதிருக்கும் ..அன்புன்னா இதுதான் ...வாலிப வயதில் ஹார்மோன்களில் ஈர்ப்பில் வரும்  காதலை விட  வயோதிகத்திலும் 
உள்ளார்ந்த நேசம் பாசம் எல்லாம் சேர்ந்த ஒரு காதல் எக்செட்ரா 
எக்செட்ரா !!!!!!!!!பார்க்கவே 
அவ்ளோ சந்தோசம் .





இரண்டாவது சூரியன் :)  இது நோர்வே நாட்டு செய்தி 



                                                                              

நோர்வே நாட்டில் உள்ள Rjukan, எனும் பகுதி ஒஸ்லோவிலிருந்து சுமார்
 160 கிமீ தொலைவில் சுற்றிலும் மலை குன்றுகளால் சூழ்ந்துள்ள ஒரு இடம் 
.இதனால் வெயில் கதிர்கள் மலைகளால் தடுக்கப்படுகின்றது .
குளிர்காலங்களில் சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு இருட்டு மட்டுமே .
.இந்த பகுதியை சார்ந்த 3500 மக்கள் பலருக்கு S .A .D எனும் seasonal affective
 disorder பாதிப்பும் உண்டு .
இப்பகுதி மக்கள் வெயிலை பார்க்கணும்னா கேபிள் காரில் ஏறி மலை உச்சி 
சென்று தான் வெய்யிலை !! தரிசிக்க முடியும் ..
 இப்போ Martin Andersen,என்பவரின்  முயற்சியால் 17 மீட்டர் அளவுள்ள 
பிரமாண்டமான கண்ணாடிகளை /heliostat' mirrors 450 மீட்டர் மலை உச்சியில் பொருத்திஇரண்டாம் சூரியனை இருண்ட குளிர்காலங்களிலும் மக்கள் காண செய்திருக்கிறார்கள்இந்த கண்ணாடிகள் கணினியால் இயங்கி சூரிய ஒளியை பிரதிபலிகின்றன .
Source ...BBC News


இது முக புத்தக டிப்ஸ் :) 

                                                                                  



நாம் அன்றாடம் உண்ணும் பழங்கள் organic 
முறையில் பூச்சி மருந்துகள் இல்லாமல் விளைந்தவற்றை உண்பதே
நல்லது 
அப்படி கிடைக்காத பட்சத்தில் ..இந்த முறையில் கழுவி உண்ணலாம் .

                                                             
இதுவும் முக புத்தகத்தில் இருந்து ஒரு பகிர்வு ..
சில விஷயங்களை சொல்ல 
விவரிக்க வார்த்தைகள் தேவையில்லை ,,,!!!!!!

                                                                                    

                                                                                     



14 comments:

  1. போர்வீரர் அஞ்சலிக்கு வந்த ஜக் அண்ட் ஜில் உண்மையிலேயே
    உள்ளம் கவர்ந்த உன்னத ஜோடிகளே!

    உங்கள் வரிகளில் உள்ள
    //அன்புன்னா இதுதான் ...வாலிப வயதில் ஹார்மோன்களில் ஈர்ப்பில் வரும் காதலை விட வயோதிகத்திலும் உள்ளார்ந்த நேசம் பாசம் எல்லாம் சேர்ந்த ஒரு காதல் ..//

    உள்ளத்தைத் தொட்டது அஞ்சு! அருமை!

    ReplyDelete
    Replies
    1. இளமதி வாங்க :)

      அவர்களை நேரில் பார்த்தபோது அந்த சந்தோசம் ..எனக்கு விவரிக்க தெரியலை ...
      அவ்ளோ அன்பு //ஜில் என் மனைவியை இதயத்தின் அருகில் வைச்சிருக்கேன் என்றார் ஜாக் //

      Delete
  2. இரண்டாவது...
    இரண்டாவது சூரியன் விஞ்ஞான வளர்ச்சி அற்புதம்!

    அடுத்தது....
    முகப்புத்தக டிப்ஸ் மிக மிக உபயோகமானது.. அவசியமானது!

    இறுதியாக...

    சொல்லாத வார்த்தை சுமந்த படம்
    உள்ளாடக் கண்டேன் களிப்பு..:)

    அத்தனையும் மிக மிக அருமையான பகிர்வுகள் அஞ்சு!
    ரொம்பவே ரசித்தேன்!

    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  3. ஆவ்வ்வ்வ்வ் புதுப் போஸ்ட்ட்ட்ட்ட்ட்.... 11.11.11.11..... அஞ்சலிகள் உரித்தாகட்டும்... நாளை வருகிறேன்ன்ன். விரிவான “மின்னலுக்கு”... தூக்கம் வருது இப்போ:))

    ReplyDelete
  4. இங்கு இப்படி நீண்டகாலம் சேர்ந்திருக்கும் தம்பதிகளை பார்ப்பது கொஞ்சம் குறைவு. நான் இருக்கும் இடத்தில் வயதான குடும்பத்தினர் இருக்கிறார்கள்.எனது பக்கத்துவீட்டுகாரரும் சனிக்கிழமைதான் 50வது திருமணநாளைக் கொண்டாடினார்கள். ஜாக்&ஜில் நல்ல மகிழ்ச்சியான தம்பதிகளாக,அன்பானவர்களாக இருக்கிறார்கள்.
    //இவ்வைபவத்தில் 65வது மண நாளை கொண்டாடிய இளம் தம்பதியரை அங்கு சந்தித்தேன்// ரசித்த வரி.

    //அன்புன்னா இதுதான் ...வாலிப வயதில் ஹார்மோன்களில் ஈர்ப்பில் வரும் காதலை விட வயோதிகத்திலும்
    உள்ளார்ந்த நேசம் பாசம் எல்லாம் சேர்ந்த ஒரு காதல் எக்செட்ரா
    எக்செட்ரா !!!!!!!!!///அழகாக எழுதியிருக்கிறீங்க.
    நோர்வே நாட்டின் தகவல் அருமை. கூடவே டிப்ஸ் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிதொன்று. வினிகர் நல்ல க்ளீனரும் கூட.

    இந்த அன்னங்களைப்பார்த்தால் எனக்கு எப்போதும்(இங்கு கூட)
    ""அதிராவைத்தேடிய அன்னம்"" என்ற அதிராவின் பதிவுதான் ஞாபகம் வரும். (குடும்பம் ஒரு கதம்பம் இது லேட்டஸ்ட் ஆ.)
    படங்கள் ,தகவல்கள் என நல்லதொரு பதிவு அஞ்சு.

    ReplyDelete
  5. வயோதிபத் தம்பதிகள்... ஆஹா கண்படாமல் இருக்கோணும்... இப்படிப் பல ஜோடிகள் இருக்கிறார்கள்தான்... அதுக்கு கடவுளின் அருளும் வேண்டும்... இங்கும் ஒரு தம்பதிகள் இப்படித்தான் இருவரும் 80 தாண்டிய நிலையில் மனைவி இறந்திட்டா... அப்போ கணவரால் தாங்கவே முடியாமல் டிப்பிறஸ்ட் ஆக்கி... பின்பு ஒரு வருடத்தில் அவரும் போய் விட்டார்ர்... அதுக்கு முன்பு அவர் சொன்னது, தான் இறந்ததும் தன்னை மனைவியின் அருகில் புதைக்க வேண்டும்... அடுத்து மனைவியின் ஒரு பத்தை ஃபிரேமில் போட்டு, சொல்லியிருந்தாராம், இதை என் நிஞ்சிலே வைத்துவிட்டுத்தான் என்னைப் புதைக்க வேண்டும் என....

    இன்னுமொன்று என்னவெனில் நம் கலாச்சாரம் வேறு... அதாவது எவ்வளாவு ஒற்றுமையாக இருப்பினும் தந்தை இறந்திட்டால்ல்.. பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்.. தாயை யோசிக்க விடாமல் சுற்றி இருந்து அணைத்து ஆறுதல் கொடுத்து தேற்றிடுவோம்.. ஆனா இந்நிலை வெள்ளையர்களுக்கு இல்லையெல்லோ... என்ன ஆறுதல் எனினும் பிள்ளைகள் பகலுக்கு மட்டுமே தாய் விட்டில் நிற்பினம், நைட் தம் வீட்டுக்கு போய் விடுவினம்... அப்போ அவர்கள் தனியே இருந்து தவித்து... அதிலயே கார்ட் அட்டாக் வந்திடும்...

    ReplyDelete
    Replies
    1. மிசுரேக்கு... மனைவியின் படத்தை என வரோணும்...

      Delete
  6. நோர்வே சூரியன் சூப்பர். ஓம் இங்கு சிலர் பக்கட்டில்தானே கிடைக்குது என கழுவாமல் சாப்பிடுகின்றனர் அது தப்புத்தான்ன்ன்.. அதன் விளைவு பின்னடிக்குத்தான் தெரிய வரும்...

    தாராப் பிள்ளையும் குஞ்சுகளும்.. ஆஹா... ச்சோ சுவீட்ட்ட்...

    ReplyDelete
  7. தாராவும் குஞ்சுகளும் அழகு. சில நாட்கள் முன்பு வரிசையாக நிறைய வீடியோ பார்த்தேன்.

    மீதிச் செய்திகள் அனைத்தும் படித்தேன்.

    Anzac Day தான் இங்கு Poppy Day. http://en.wikipedia.org/wiki/Anzac_Day

    ReplyDelete
  8. அன்புள்ள நிர்மலா, வணக்கம்.

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு 04 12 2013

    ReplyDelete
  9. //இருவருக்கும் எண்பது வயதிருக்கும் ..அன்புன்னா இதுதான் ... வாலிப வயதில் ஹார்மோன்களில் ஈர்ப்பில் வரும் காதலை விட வயோதிகத்திலும் உள்ளார்ந்த நேசம் பாசம் எல்லாம் சேர்ந்த ஒரு காதல் ......//

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான்.

    >>>>>

    ReplyDelete
  10. தகவல்கள் அனைத்தும் அருமை. கடைசி இரண்டு படங்களும் மிகவும் பிடித்துள்ளன.

    இந்தப்பதிவினை ஏனோ நான் இன்று தான் பார்க்க முடிந்தது. அதனால் தாமதமான வருகை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete