அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/12/13

பசுமை குறிப்புகள் ..என் வீட்டு தோட்டத்தில் :)

பசுமை குறிப்புகள் ..என் வீட்டு தோட்டத்தில் :)


முதலில் குடலை இட்லி :))

                                                                           


மனோ அக்காவின் குறிப்பு பார்த்து செய்தது .
இட்லி அரிசி 1 கப் பாசி பருப்பு 1 கப் உளுந்து 1 கப் அரைத்து செய்தது 
அரிசி 1 கப் ..பருப்புகள் தலா அரை கப் அரைத்து செய்தாலும் 
அருமையாக இருக்கு 


உடுப்பி சாம்பார் with உளுந்து வடை :)           இந்த சாம்பார் கமலா அவர்களின் குறிப்பு பார்த்து செய்தது 
அவர் குறிப்பில் தக்காளி வெங்காயம் இல்லை ஆனா நான்
 கொஞ்சம் சேர்த்தேன்         ..உளுந்து வடையை அதில் ஊற 
வைத்து சாப்பிட  !!!!! ஆஹா அருமை .

வடை மேலிருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் மல்லி தழைகள் 
எங்க வீட்டு அறுவடை :)


வீட்டு தோட்டம் குறிப்புகள் 
பழைய பால் பாட்டில்களை நன்கு கழுவி அதன் அரை பகுதியை வெட்டி எடுங்க  மீண்டும் மூடி மூடிபகுதில துளையிட்டு ..மண் நிரப்பி 
மல்லி மற்றும் வெந்தயம் போட்டு வைத்தேன் ..

மல்லி விதைகளை சற்று சப்பாத்தி உருட்டும் கட்டையால் ஒரு உருட்டு உருட்டி விதைக்கணும் 

                                                                           இது வெந்தய கீரை     


                                                      என் மகள் ஆர்வமுடன் நீரூற்றி 
வளர்த்து பிறகு அவளே அறுவடை செய்தா                               
                                                                             


இப்போ தோட்டத்தில் 
தக்காளி /சோளம் சோம்பு பீட்ரூட் எல்லாம் 
வளராங்க :)அடுத்தது !!!

ஒரு செய்தி ..


பென்சில்களிளிருந்து செடி முளைக்குமா ??

ஆம் முளைக்க வைச்சிருக்காங்க 
MIT மாணவர்கள் அமெரிக்காவில் 


camlin /natraj பென்சில் மாதிரி இந்த பென்சில்களின் 

பெயர் sprout 


பேசில் /செர்ரி தக்காளி /மல்லி /சோம்பு /கத்தரி/ரோஸ்மேரி /கலண்டுலா /thyme/புதினா  போன்ற சிறு மூலிகை,தாவரங்களை முளைக்க செய்துள்ளார்கள் ...
இந்த  பென்சில்..cedar மரத்தால் ஆனது மேலும் பென்சில் உள்ளே இருக்கும்
 lead எழுதும் பகுதிக்கு இவர்கள் களிமண் மற்றும் கிராபைட் இரண்டையும் கலந்து பயன்படுத்துகிறார்கள். அதன் காப்சூல் அடி பாகத்தில் விதைகள் இருக்கும் ..பென்சில் எழுதி சீவி அளவு குறைந்து வரும் நேரம் சிறு தொட்டியில் செருகி நீர் ஊற்றி வர நீரால் விதைகள் activate ஆகி முளைக்க ஆரம்பித்து சில நாட்களில் சமையலுக்கு பயன்படும் அழகிய சிறு மூலிகை தாவரங்கள்வளந்திருக்கும்

தற்சமயம் இம்மூலிகை முளைவிடும் பென்சில்கள் அமெரிக்கா  மற்றும் 
ஐரோப்பாவில் விற்பனையாகிறது ..விரைவில் ஆசியாவிலும் பென்சில்கள் முளை விடலாம் :))))))(கிடைக்கலாம் ):
இந்த பென்சில்கள் அளவு குறையும் வரை நீர் படாம பார்த்துக்கணும் :))

பிள்ளைகள் பென்சில் கடிக்கும் கெட்ட பழக்கத்தை விடவும் இவை உதவும் :))


இப்போ எங்க தோட்ட  காவல்காரன் :))

மீன்களுக்கும் செடிகளுக்கும் :))

                                                                                  


மீண்டும் வருவேன் 
தக்காளி சோளம் எல்லாம் விளைந்ததும் :))

17 comments:

 1. அருமையான பசுமையான பயனுள்ள பதிவு.

  //என் மகள் ஆர்வமுடன் நீரூற்றி
  வளர்த்து பிறகு அவளே அறுவடை செய்தா //

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அறுவடை செய்த தங்கள் மகளுக்கு அன்பான வாழ்த்துகள்.

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. முதல் ப்ளேட் சாம்பார் வடை அண்ணாவுக்கே :))
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிண்ணா ..மகள் முதலில் செடியை பிடுங்க ஆசைபடல்லை :))அப்படியே விட்ராலாம்னா:))அவ்ளோ ஆசை

   Delete
 2. உங்கள் வீட்டு அறுவடை என்றால், சாம்பார் சுவை கூடுதல் தான்...! ஸ்ஸ்ஸ்...

  Sprout வியப்பு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .வீட்டு அறுவடை உண்மைல டேஸ்ட்

   Delete
 3. பசுமையான வீடு.,பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோகுல்

   Delete
 4. பசுமை பதிவு அருமை.. பிளாஸ்டிக் தொட்டி ஐடியா நல்லாயிருக்கு.. உங்க வீட்டு பூனை கொழு கொழுன்னு அழகா இருக்கார்...:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா ராணி .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
   பூசார் :)) அவர் பக்கத்து வீட்டு பூஸார் :))
   எங்க வீட்டு தங்க மீன்கள் மீன்கள் pond இல் இருக்கு .அதானால் இவர் அவங்களை காவல் காக்கிறார் :))

   Delete
 5. Nice to see the blog getting updated! :) will come again in Tamil!

  ReplyDelete
 6. கலக்குங்க. எனக்கு இப்போ சீசன் இல்லை. பார்த்து ரசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இமா :)) மேத்தி யில் ஆரம்பிச்சு இப்போ இவ்ளோ வந்திருக்கு ..
   தி கிரேட் பூசார் இல்லாததால் ..தமிழ் ஸ்பெல்லிங் மிச்டேக்லாம் பாக்காமலேயே பப்ளிஷ் பண்ணிட்டேன் :)
   ஆஅ மறந்திட்டேனே ...mint உம வளருது .

   Delete
 7. உங்க வெந்தயக் கீரை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி நானும் வெந்தயம் முளைக்கப் போட்டிருக்கேனே! :)

  சோளம்?! ஒரு செடி:)தான் வளர்க்கறீங்களா? நிறையப் போட்டா ஒரு ஸ்னாக்-க்காவது ஆகும், ஒரு கருது ஒரு வாய்க்குக் கூட போதாதே ஏஞ்சல் அக்கா!?! ;) பீட்ரூட் கீரையப் பறிச்சு சமைக்க மறந்துராதீங்க, சூப்பரா இருக்கும். வெஜ்ஜி பாட்ச் சூப்பர்! சீக்கிரம் அறுவடை செய்து ஆறுவடை படமும் போடுங்க! :)))))

  பென்சில்ல செடி முளைப்பது புதுசு, பகிர்வுக்கு நன்றி! பூஸார் செக்யூரிட்டி டியூட்டிய நல்லாவே பார்க்கிறார் போல? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. வெந்தயக்கீரை போட்ருக்கீங்களா ..சூப்பர் ...நான் சமைத்து சூப்பர் டேஸ்டி ..பீட்ரூட் கீரை ...கண்டிப்பா செய்றேன் .யா வந்தது .

   சோளம் !!!!! ஒரு அஞ்சு பேர் வளராங்க :)
   சும்மா ஆசைக்குதான் ..ஆக்சுவலி பநேண்டு இருந்தது ..கர்ர்ர்ர்ர்ர் என் வீட்டு தோட்டக்காரர் weeds என்று நினைச்சு என்னை கேக்காம பிடுங்கி போட்ருக்கார் .ஏற்கனவே அப்படிதான் சோம்பு செடியை பிடுங்கி போட்டார் போன வருஷம் .
   செர்ரி தக்காளியை சும்மா வீசினாலே வளருது ..வளந்ததும் அதையும் படம் போடறேன் .படத்தில் இருப்பது பெரிய தக்காளி ..:)மகி கொத்தமல்லியும் போடுங்க ..ரொம்ப டேஸ்டியா இருக்கு வீட்டில் முளைப்பது
   பூசார் தினமும் அந்த அஞ்சு மீனையும் கவுண்ட் பண்ணித்தான் தூங்கவே போறார் :))

   pencil sprouts....உங்க ஊர் கண்டுபிடிப்புதான் :)

   Delete
 8. அழகான குறுந்தோட்டம். பார்க்கவே ரம்மியமாக உள்ளது. நம் தோட்டத்தில் வளர்ந்தவற்றை நம் கையால் பறித்து சாப்பிடுவது எவ்வளவு ஆனந்தம். மகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து விடுங்கள் ஏஞ்சலின். pencil sprouts - வியப்பு.

  குடலை இட்லியும் உடுப்பி சாம்பாரும் அசத்துகிறது. நன்றி.

  ReplyDelete
 9. உங்கள் வீட்டு அறுவடை என்றால், சாம்பார் சுவை கூடுதல் தான்...

  ReplyDelete
 10. ரசனையான பக்கங்கள்! சுவையான செய்திகள்!

  ReplyDelete