அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/10/13

பாராட்டுவோம் இந்த கிராமத்தை !!!

வணக்கம் நண்பர்களே !!!கொஞ்சம் நாளா நான் சமையல் போஸ்ட் ஏதும்போடாம இருந்ததில் நிறைய பேர் சந்தோஷமா இருந்திருப்பீங்க :))...எனக்கும் நிறைய வித விதமா சமைத்து அசத்த ஆசைதான் ..இப்போதைய சூழ்நிலையில் நான் ரொம்ப பிஸி :)
வேலை வெட்டி இல்லாம இருந்தேன் இப்ப பார்ட் டைம் கேர் டேக்கர் மற்றும் ஆலயத்தில் முக்கிய வேலைகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கு ..
அடுத்தது மனதோடு மட்டும் கௌசல்யா என் மீது அபார நம்பிக்கை வைத்து என்னை பசுமை விடியலில் அவ்வப்போது பதிவெழுத சொல்லியிருக்காங்க .

https://www.facebook.com/PasumaiVidiyal

பதிவுகள் எனது பெயரில் வெளியாகாது ..எல்லா போஸ்டும் பசுமை விடியல் என்ற பேரில்தான் வெளிவரும் அதனால் நான் தப்பிச்சேன் :))

இப்படி நான் பசுமை விழிப்புணர்வு குறித்த செய்திகளை தேடிகிட்டு இருக்கும்போது ஒரு படம் பார்த்தேன் ஒரு சின்னஞ்சிறு சிறுமி pot belly சிம்ப்டம்சுடன்  கிழிந்த அரை பாவாடை மட்டும் அணிந்து கையில் ஒரு இறந்த வயல் எலியை ஏந்திக்கொண்டு இருக்கு :(

ஒரு வெள்ளையம்மா அதற்க்கு கமெண்ட் போட்டிருக்காங்க 

//oh !!! is it  that Little girls new pet//is she crying because its no more alive ../
அது ஐக்கிய நாடுகள் சபையின்  புகைப்பட நிருபர் எடுத்த படம் .ஆத்தி அதுதேங் அந்த புள்ளையோட ஒரு வேளை  சாப்பாடு என்று இன்னொருவர் பதில் அளித்திருந்தார் ..அப்புறம் அவங்க அதை வாசித்தாங்கலான்னு  தெரில .....

கீழேயுள்ள பதிவு எனது போஸ்ட் பசுமை விடியலுக்கு ..உங்களுடனும் பகிர்கிறேன் 


                                                                                       


ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 
111 மரக்கன்றுகளை நடுகின்றார்கள் !!
வேறெங்குமில்லை நமது தாய் நாடான இந்தியாவில் உள்ள 
மிகவும் பின்தங்கிய ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமுன்ட் 
மாவட்டத்தில் தான் இந்தஅதிசய  நிகழ்வு நடைபெறுகிறது .

நெல்லும் கள்ளிப்பாலும் கொடுத்து பெண் சிசுவை மண்ணுக்கு
தானமாக்கும் அரக்கர் மத்தியில் கடந்த சில வருடங்களாக 
பிப்லான்ட்ரி கிராமத்தில் பஞ்சாயத்தினர் ஒன்று கூடி இவ்வாறான
 நற்செயலில் ஈடுபடுகிறார்கள் !!

கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை லட்சம் வேம்பு ,சீசேம் ,
நெல்லிக்காய் ,மா மரக்கன்றுகளை  நட்டிருக்கிறார்கள் 

இந்த புண்ணிய காரியத்தை துவக்கி வைத்தவர் ஷியாம் 
 சுந்தர் பலிவால் ..அவரது மகளின் இறப்புக்கு பின்னர் இப்படி
மரம் நடுவதை ஆரம்பித்திருக்கிறார் .
இக்கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60 பெண் 
குழந்தைகள் பிறக்கின்றன ..

பிறக்கும் குழந்தைக்கு ஒரு வங்கி கணக்கு ஆரம்பித்து அதில்
பெற்றோர் ஒரு குறிப்பிட்ட தொகைய போட்டு வைக்கிறார்கள் .
.அப்பெண் 20 வயதானதும் அந்த சேமிப்பை எடுக்கலாம் அதுவரை 
அப்பெண் பெயரில் நட்டு வை த்த மரத்தையும் பராமரிக்க வேண்டும் 
அதற்கு முன்பு பால்ய விவாகம் செய்யகூடாது திருமண வயது
 வரை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் affidavit இல் 
பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெறப்படுகிரதாம் .

மேலும் ஒருவர் இறக்கும்போதும் அவர் நினைவில் பதினோரு 
மரங்களை நடுகின்றார்கள் இந்த கிராமத்தில் !!
இந்த கிராமத்தின் மக்கள்தொகை 8000 பேர் .
இத்துடன் மட்டும் நின்றுவிடாமல் மரங்களை செள்ளரிக்காமல் 
(termites ) இடமிருந்து பாதுகாக்கவென கற்றாழை நட்டு
அதில் ஜூஸ் /ஜெல் /ஊறுகாய் காஸ்மாடிக்ஸ் என்று  அதிலும் 
இலாபமடைகிறார்கள்..

முக்கியமான விஷயம் ...கடந்த ஏழெட்டு வருடங்களாக இந்த கிராமத்தில் போலிஸ்கிரிமினல்  கேஸ் இல்லையாம் :)  

சோம பானம் சுராபானம் கள் ,போன்ற உற்சாக பானங்கள் இங்கில்லை மரத்தைகண்மூடித்தனமாக  வெட்டுதல் என்று எதுவும் கிடையாதிங்கு..

.............................................................................................................................................................


இதில் என்ன ஆச்சர்யமென்றால் இந்த நியூஸ் ஹிந்து பத்திரிகையில்
 வந்திருக்கு அதனை கிரீன் peace வெப் சைட்டில் பார்த்தேன் ..

நடிகை tattoo குத்தினாரா எங்கே குத்தியிருக்கார் ,,குத்தின பெயரை 
அழிப்பாரா ,
ஐஸ்வர்யா ராய் வெயிட் குறைச்சாரா.. இதை வாசிக்கும்போது 
அப்படியே எழுதின ஆளை கட்டைஎடுத்து மொத்தணும் போல இருக்கு ..
சாப்பாடே இல்லாம மாங்க்கொட்டையும் செத்த எலியும் உண்ணும் 
மக்களைப்பற்றிஅல்லது  வந்தனா சிவா என்பவரை பற்றி எல்லாம் 
எழுதுவார்களா ???? 

ஐஸ் cannes ல என்ன ட்ரெஸ் போட்டிருக்கார் ,
 நடிகை ..லீனா மரியா பால் கர்ப்பமா லிவிங் டு கேதரா போன்ற
 நாட்டுக்கு அவசியமான விஷயங்கள் வரும் நம்ம தமிழ் பத்திரிகளில் 
இதுவரை இந்த கிராமம் பற்றிய செய்திவரல்லைன்னு நினைக்கிறேன் 
..யாராவது பார்த்திருந்தா தெரிவிக்கவும் எனது கருத்தை எடுத்து 
மன்னிப்பு கேட்டு வாபஸ் வாங்கிக்கறேன் ..


வாழ்க்கைக்கு பொழுது போக்கு அவசியம்தான் அப்படியே கொஞ்சம்
 நம் வருங்கால சமுதாயத்தையும் நினைத்து பாருங்களேன் .
.கார்பொரேட் நிறுவனங்கள்/ monsanto /
G M O என பல நம் வளத்தை விழுங்க காத்திருக்கின்றன .
                                                                           
    
நமது பக்கத்து மாநிலம் கேரளாவில் அரசு ஆணை பிறப்பித்துருக்காங்க .
விளை  நிலங்களை ..பில்டர்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் மற்றும் 
தொழிற்சாலை களுக்கு விற்க கூடாதென்று ......

                                            

எனக்கும் நிறைய விஷயங்கள் இப்போதான் அறிய வருகிறது ..
நானும் இந்த செய்திகளை அறியாமல் தான் இருந்திருக்கேன் ..
அறிந்து கொண்ட பின் குறைந்தது நாலு பேருக்காவது கொண்டு
சேர்க்கணும்னு தோன்றியது .
..இனி நான் பதிவுலகு பக்கம் அதிகம் வர இயலாது ஆலயப்பணி
 மற்றும் இடைப்பட்ட நேரத்தில் பசுமை விடியல் ..


முடிந்த நேரம் அனைவரின் பக்கமும் வருகை தருகிறேன் ..
quilling  எனது ஆங்கில வலையில் மட்டும் அவ்வப்போது  வரும் ..

பொறுமையாக வாசித்ததற்கு மிக்க நன்றி ..அன்புடன் 

ஏஞ்சலின்