அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/10/13

ரகாடா பாட்டிஸ்// Ragada Pattice

Ragada Pattice

ரகாடா பாட்டிஸ் 
                                                                             

இது உருளைகிழங்கை கட்லட் போல பொரித்து அதன் மேல் வெள்ளை பட்டாணியில் ஒரு கிரேவி செய்து ...கெட்சப் அல்லது புளி  சட்னியுடன் 
சாப்பிடும் ஒரு மராத்தி உணவு .
வெள்ளை பட்டாணி மெரினா பீச் சுண்டல் பட்டாணிதாங்க :))

நான் வட  இந்திய உணவுகளை செய்தாலும் தென்னிந்திய டச்சுடன் தான் செய்வேன் :))

இப்ப என் சமையல் அறையில் இருந்து 
                                                                               தேவையான பொருட்கள் 


பாட்டிஸ் செய்ய ..

வேக வைத்த உருளைக்கிழங்கு ... மீடியம் அளவில் 3
மிளகுதூள் ....... 1/2 tsp 
சீரகத்தூள் ........ 1/2 tsp 
உப்பு .......தேவையான அளவு 
ஓரம் வெட்டி எடுக்கப்பட்ட  ப்ரெட் துண்டுகள் .......2 ஸ்லைஸ்
வெளிப்புற கோட்டிங்குக்கு ....ப்ரெட் கிரம்ஸ் /bread crumbs 

சிறிது மல்லி இலைகள் நறுக்கியது செய்முறை 

ப்ரெட் துண்டுகளை நீரில் முக்கி நன்கு பிழிந்து வைக்கவும் 
கிழங்கை தோலுரித்து மசித்துக்கொள்ளவும் 
அத்துடன் மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு,பிழிந்து எடுத்த ப்ரெட் துண்டுகள் அனைத்தையும் சேர்த்து கலந்து விருப்பமான
 வடிவில் தட்டி ப்ரெட் தூளில் தடவி எடுத்து தவா அல்லது 
வாணலியில் பொரித்து எடுத்து வைக்கவும் 
                                                               before oil bath                


                                                                             after oil bath 
                                                                                      

நான் எல்லாவற்றையும் செய்து   ப்ரெட்க்ரம்ஸ் 
தேடும்போது காலியாகியிருந்தது 
ஆகவே வீட்டில்இருந்த  kellogs  கார்ன் ப்ளேக்ஸ் எடுத்து 
மிக்சியில் பொடி செய்து ப்ரெட் க்ரம்ப்சுக்கு பதில்
பயன்படுத்தினேன் .நன்றாகவே இருந்தது .அடுத்தது ரகாடா ..


காய்ந்த வெள்ளை பட்டாணி ........... இரண்டு கப் 

தாளிக்கும் போது சேர்க்க 
பாவ் பாஜி மசாலா அல்லது
 கரம் மசாலா .. .. ............1/2 தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் ......................ஒரு தேக்கரண்டி 
தனியாதூள் ஒரு தேக்கரண்டி ..1/2 தேக்கரண்டி 
தாளிக்க ::::::
வெங்காயம் ................சிறிதாக நறுக்கியது ........அரைகோப்பை 
மீடியம் அளவு தக்காளி ,சிறிதாக நறுக்கியது ....................2
பச்சை மிளகாய் ............விதை நீக்கி நறுக்கியது ..........2 
இஞ்சி பூண்டு விழுது .................1 தேக்கரண்டி 
tambarind சாஸ் அல்லது தக்காளி சாஸ் ....இரண்டு கரண்டிகள் 
கறிவேப்பிலை .........சிறிதளவு 
மேக்கப் பொருட்கள் 
வட்டமாக நறுக்கிய எலுமிச்சைபழம் ...
அலங்கரிக்க 
கொத்தமல்லி இலை ..........கைப்பிடியளவு நறுக்கியது
 சாலட் வெங்காயம்மற்றும் புதினா இலைகள்  
நறுக்கியது சிறிது 

எண்ணெய் ...........ஒரு ஸ்பூன் வெள்ளை பட்டாணியை சுமார் ஆறுமணிநேரம் 
ஊறவைத்து குக்கரில் உப்பு மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும் 

இந்த பட்டானிஎளிதில் குழையும் 
 எனக்கு அமெரிக்க இளம்புயல் தந்த டிப்சை 
இங்கு இணைக்கிறேன் ..

//வரணும்னா குக்கர்ல தண்ணிய நல்லா கொதிக்கவிட்டு, பட்டாணி, உப்பு சேர்த்து குக்கரை மூடி மீடியம் ஹீட்ல ஜஸ்ட் ஒரே ஒரு விசில் விடுங்க. மறக்காம அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைச்சு திறந்து பாருங்க. //


பிறகு முதலில் அடுப்பை பற்றவைத்து அதன் மேல் வாணலியை வைத்து 
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றைஉப்பு சேர்த்து  மிதமான சூட்டில் வதக்கவும் பின்பு மசாலாதூள் சேர்த்து வதக்கியபின் வெந்த பட்டாணியை சேர்க்கவும் பிறகு சிறிது தண்ணீர் ...ஒரு கப் விட்டால் போதுமானது ...தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் வெந்ததும் அடுப்பை அணைக்கவும் .
எங்க வீட்டில் ரன்னிங் கன்சிஸ்ட்டன்சி அவ்ளோ விருப்பமில்லை அதனால் நான் குறைந்த அளவே நீர் சேர்த்தேன் .


இப்போ ஒரு தட்டில் இரடு பொறித்த உருளை பாட்டிசை வைத்து அதன்மீது அல்லது பக்கவாட்டில் தயாரான ரகாடா  கலவையை வைத்து அதன் மேல் வெங்காயம் மல்லி எலுமிச்சை இவற்றை அலங்கரித்து மேலே ஒரு தேக்கரண்டி புளி அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும் ...................

வட இந்தியாவில் இதன்மீது ஓமப்பொடியும் சேர்த்து தூவி 
சாப்பிடுவாங்க ...நான் சேர்க்கவில்லை .
                                                                           DEAR FRIENDS 
take time to do the things you  love and be around your most cherished family and friends! Happy Weekend!


50 comments:

 1. ஆவ்வ்வ் மீத 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)

  ReplyDelete
  Replies
  1. இதைதான் இதைதான் நான் எதிர்பார்த்தேன் நன்றி முதல் எலி :))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சாடையா தலைசுத்தியபோதே டவுட்டாயிருந்துது:)) சேஎ..சே.. ஆரையும் சந்தேகப் படக்கூடா என தெகிரியமா இருந்தேன்ன்:) இப்போ கன்ஃபோமா தெரிஞ்சிடுச்சி:))... சூஊஊஊஊஉ பண்ணப்போறேன்ன் அஞ்சுவை:))... உடும்புப் பிடியாக:)

   Delete
 2. இப்போதான் நெட்டுக்கு வந்தேன்ன் உஸ்ஸ்ஸ் அப்பாடா வந்தவுடன் புதுசு தெரிஞ்சுதே இருங்க பற்றிஸ்ஸாமே படிச்சிட்டு வாறேன்ன்..

  ReplyDelete
 3. ///DEAR FRIENDS
  take time to do the things you love and be around your most cherished family and friends! Happy Weekend!// உஸ்ஸ் அப்பாடா இம்முறைதான் நேக்கு நிம்மதி:).. இன்னும் சமைப்பேன், இங்கின போடுவேன்ன்:) எனும் வாக்குறுதி ஏதும் இங்கில்லையே:)

  ReplyDelete
  Replies
  1. அதான் மேலே ரன்னிங் எழுத்தில் போகுதே :))0
   நாங்க சொல்றதில்லை ஒன்லி ஆக்க்ஷன் :))))))))))

   Delete
 4. பற்றிஸுக்கு பிரெட் சேர்ப்பது புது முறையா இருக்கு.. நல்லாவும் இருக்கு பார்க்க...

  ReplyDelete
  Replies
  1. ஆமா அதிஸ் சுவை ரொம்ப நல்லா இருந்தது சும்மா கெச்சப் தொட்டே சாப்பிடலாம்

   Delete
 5. ஏதோ ஒன்று ருசிகரமாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ”ரகாடா பாட்டிஸ்” என்ற தலைப்பைப்பார்த்ததும், ரகாடா என்ற பெயருள்ள யாரோ ஒரு பாட்டியைப்பற்றி ஏதோ கதை சொல்லப்போறீங்களோன்னு, நினைச்சேன்.;)))))

  ReplyDelete
  Replies
  1. :))) அண்ணா ...இந்த சந்தேகம் வரக்கூடாதின்னுதான் இங்க்ளிஷ்ளையும் பேரை எழுதினேன் ..பாட்டிகள் கதை நிறைய இருக்கு ...கமல் படத்தில் வரும் ஒரு பாட்டிபோல ஒரு நிஜ கதை விரைவில் பகிர்கிறேன் .

   Delete
 6. அருமை அக்கா... ரகாடா பாட்டிஸ் என்ற தலைப்பைப் பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல் தோன்றுகிறது....

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜி :)) நான் உங்க ஊர் ஸ்பெஷல் செய்திருக்கேன் ..நீங்களும் செய்து பாருங்க .நல்ல டேஸ்டி .

   Delete
 7. புதுமையாய் செய்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துவது மகிழ்ச்சி. எங்களுக்கும் குறிப்புகள் கொடுப்பது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..செய்து பார்த்ததும் உடனே அனைவரிடமும் பகிரணும்னு ஆவல் ..மிக்க நன்றிக்கா வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 8. அருமை ஏஞ்சலின் .. மும்பையில் இருக்கும் என் அண்ணி இந்த ரகடா பாட்டீஸ் செய்வது பற்றி கூறினார்கள் . சென்ற வாரம் ஒரு சமையல் போட்டியில் இதை செய்தேன். வேக வைத்த உருளையுடன் பச்சை பட்டாணி சேர்த்து செய்தேன். கிரேவியில் சிறிது இனிப்பு சேர்த்தேன்.உங்கள் செய்முறை நல்ல மொரு மொறுப்பாக தெரிகிறது.. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா ..ஆமாம் இதன் சுவை இனிப்பு கலந்தால் நன்றாகவே இருக்கும் .புளி சட்னி கொஞ்சம் ஸ்வீட் ஆக இருக்கும் .நான் தான் சேர்க்கலை .
   I SHALL TRY WITH PEAS NEXT TIME .

   Delete
 9. நல்லாத்தான் இருக்கு பார்க்க ஆனால் செய்யும் நேரம் தான் சிக்கல் பார்ப்போம் வசந்தகாலத்தில்:))))

  ReplyDelete
  Replies
  1. Next Spring வரை நேசன் வெயிட் பண்ணனுமா? -:)

   Delete
  2. நேசன் இது செய்வது மிக ஈசி ...சிஸ்டர் இன்லாவை செய்ய சொலுங்க ..ஆமாம் அப்புறம் சோள சூப் :))))
   இப்பெல்லாம் உங்க வீட்ல மெயின் கோர்ஸ் என்று பிரான்ஸ் 24 இல் செய்தி பார்த்தேன் :))

   Delete
 10. இப்ப தான் மேல உள்ள ஸ்க்ரோல் பார் பார்த்தேன்...அடுத்ததுலாம் இப்பவே ரெடியா? சூடு ஆறிர போகுது...:)

  ReplyDelete
  Replies
  1. இல்லையில்லை ...செய்யபோரதைதான் போட்டிருக்கேன் ..அதனால் சுட சுட வரும் :))

   Delete
 11. DEAR FRIENDS
  take time to do the things you love and be around your most cherished family and friends! Happy Weekend!//

  எழுத வந்தப்பவே நான் எடுத்த முடிவு...சனி-திங்கள் நமக்கு விடுமுறைன்னு...

  Have a nice weekend Angelin...

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க ...வார இறுதியில் நாங்க மூணுபேரும் சேர்ந்து monopoly மற்றும் UNO இதெல்லாம் விளையாடுவோம்

   Delete
 12. //DEAR FRIENDS// என்னடா வியய் போல ஆரம்பிக்கிறாங்க என்று பார்த்தேன். ;) //take time to do the things you love// ம். //and be around your most cherished family and friends! Happy Weekend!// இப்ப இங்க இருக்கவா? எழுந்து போகவா? ;)))

  கட்டாயம் ட்ரை பண்ணுறேன் அஞ்சூஸ். வேற பேர் இல்லையோ! வீட்டில... "இது ப்ளாகர் பேரா?" என்று கேட்டாலும் கேட்பினம். ;D

  ReplyDelete
  Replies
  1. வாங்க இமா :)).ஓ !!!.உங்களுக்கு இப்ப சாடர்டேவா :))...

   இதற்கு வேறு பெயர் இல்லையே :)) வேன்னும்னா பொடேடோ கட்லட் வித் பீஸ் மசாலா என்று சொல்லிடுங்க:))

   Delete
 13. padam படமாப் போட்டு பசியக் கிளப்பி விடும் ஏஞ்சல் அக்காவை என்ன பண்ணலாம்!!?!!.. இதுக்கு ஸ்வீட் சட்னி-க்ரீன் சட்னி - ஓமப் பொடி எல்லாம் போட்டு சாப்புடுங்க, இன்னும் கலக்கலா இருக்கும். நான் இதுவரை ரகடா பட்டீஸ் சாப்பிடலை..நான் சாப்பிட்டதா நினைச்சது சோளே டிக்கி!!! அவ்வ்வ்வ்! அது பொடடோ பட்டீஸ் வித் சன்னா மசாலா..கர்ட், சட்னி, சாட் மசாலா என்று ஒரு நார்த் இண்டியன் ப்ரெண்ட் செய்தது.

  இளம்புயல் பட்டத்துக்கு நன்றி! ;)

  //ஒரு தட்டில் இரண்டு பொறித்த உருளை பாட்டிசை வைத்து அதன்மீது அல்லது பக்கவாட்டில் தயாரான ரகாடா கலவையை வைத்து அதன் மேல் வெங்காயம் மல்லி எலுமிச்சை இவற்றை அலங்கரித்து மேலே ஒரு தேக்கரண்டி புளி அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும் ...................// ம்ம்ம்ம்ம்ம்....வாய் ஊறுதே!! :) ;)

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் மகிம்மா ..சாஸ் கெட்சப் /எல்லாம் போட்டு பார்சல் அனுப்பட்டா

   Delete
 14. //DEAR FRIENDS
  take time to do the things you love and be around your most cherished family and friends! Happy Weekend!// Will try to do that! Its so hot in here this week end! lets see!!

  Happy Mother's day in advance! :)

  ReplyDelete
 15. வணக்கம் தங்கையே!நலமா????அருமை.செய்து பார்க்கிறேன்,'பாட்டிஸ்'!!!////(பூசார் வந்து எல்லாம் முடிச்சுப் போட்டார்,ஹூம்!)

  ReplyDelete
  Replies
  1. அண்ணா :)) தனியா ஒரு போர்ஷன் உங்களுக்கும் உங்க மருமகளுக்கும் வைச்சிருக்கேன்

   Delete
 16. மராத்தி உணவு அருமை ..!

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிக்கா

   Delete
 17. இரண்டு வகைகளுமே அருமை.
  நானும் ப்ரட் கிரம்ஸ் க்கு பதில் கார்ப்ளேக்ஸ் மிக்ஸ் அடிக்கடி பயன் படுத்துவதுண்டு

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜலீலா வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 18. செய்முறைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிஸாதிகா

   Delete
 19. Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 20. after oil bath
  என்றுள்ளதைப் பார்க்கவே....இப்படி எண்ணை சாப்பிடுலது உடலுக்கு நல்லதா? முடியாதப்பா. நோய் வந்திடுமே.
  இது என் கருத்த மட்டுமே.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. அக்கா வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிக்கா
   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் .நான் பெரும்பாலும் எண்ணெயில் பொறிப்பதை தவிர்ப்பேன்
   இதை தவாவிலும் சிறுது எண்ணெய் விட்டு திருப்பி விட்டு வாட்டலாம்

   ,,குறிப்பாக வெளிநாட்டில் வாழும் நம்ம மக்கள் மஎண்ணெய்பதார்த்தங்களை அளவுடன் சாப்பிடுவது உடலுக்கு
   மிக நல்லது //மிக்க நன்றிக்கா

   Delete
 21. புதிய ரெசிபி நல்ல டேஸ்டியா& ஈசியா இருக்கும்போல. உங்க செய்முறைப் படங்களைப் பார்த்தால் தெரியுது அஞ்சு. எண்ணெய் ஸ்பிரே செய்துவிட்டு அவனில்வைத்து எடுக்க‌முடியாதா?

  ReplyDelete
  Replies
  1. எண்ணெய் ஸ்பிரே செய்துவிட்டு அவனில்வைத்து எடுக்க‌முடியாதா? //
   முடியும்

   Delete
 22. //வரணும்னா குக்கர்ல தண்ணிய நல்லா கொதிக்கவிட்டு, பட்டாணி, உப்பு சேர்த்து குக்கரை மூடி மீடியம் ஹீட்ல ஜஸ்ட் ஒரே ஒரு விசில் விடுங்க. மறக்காம அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைச்சு திறந்து பாருங்க. ////

  ஊற வைத்த பாட்டாணியா?ஊற வைக்காத பட்டானியா?

  ReplyDelete
  Replies
  1. ஊற வைத்த பட்டானி.

   Delete
 23. புதிய புதிய உணவுப் பதார்த்தங்களின் செய்முறைகளோடு சமையல் குறிப்புகளும் கொடுத்து அசத்துறீங்க. பாராட்டுகள் ஏஞ்சலின். பாட்டீஸ் செய்வது இவ்வளவு எளிமையா? கட்டாயம் செய்துபார்க்கிறேன். நன்றிப்பா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி Geetha

   Delete