அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/16/13

Quilling Design // மற்றும் வட கறி :))

                                     


                                       Quilling Design With Old book paper   

இது பழைய புத்தகத்தின் தாள்களை ஷ்ரெடரில் வெட்டி
 செய்த டிசைன் ..எனது ஆங்கில வலையிலும் பகிர்ந்தேன் 
அனைவருக்கும் பிடித்தது அந்த பாக் க்ரவுன்ட் அட்டை 
எம்போஸ்ட் டிசைன் ...
                                                                                   
              

வட கறி :))            

தேவையான பொருட்கள் 
கடலை பருப்பு ....1 கப் ...இரண்டு மணிநேரம் நீரில் ஊற வைக்கவும் 
இஞ்சி ................ஒரு சிறு துண்டு 
சிவப்பு வற்றல் மிளகாய் ...........2
பெருஞசீரகம் ..........1/2 தேக்கரண்டி 
உப்பு ...............தேவையான அளவு 


இரண்டு மணிநேரம் ஊறியபின் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் 
நீர் சேர்க்காமல் மிக்சியில் அரைக்கவும் 
பின்பு கையால் சிறு விள்ளல்களாக பிடித்து இட்லி வேக வைப்பது போல 
சுமார் 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்


கறி செய்ய 

வெங்காயம் ....................1 நறுக்கியது 
இஞ்சி பூண்டு விழுது ..................1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை ...............சிறிதளவு 
தக்காளி ...................2 
கொத்தமல்லி இலை ........சிறிதளவு 
அரைத்த தேங்காய் விழுது ................1 மேசைக்கரண்டி 
வாசனை பொருட்கள் 
பட்டை ......ஒன்றிரண்டு துண்டுகள் 
கிராம்பு ........3
ஏலக்காய்.......3
பெருஞ்சீரகம் ....1/2 தேக்கரண்டி 
கடுகு ...1/2 தேக்கரண்டி 


மசாலா தூள்கள் 
பாவ பாஜி மசாலாதூள் ....1 தேக்கரண்டி 
அல்லது செட்டிநாட்டு மசாலா தூள் 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் ...1/2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் ......ஒரு சிட்டிகை 
எண்ணெய் ..........தாளிக்க மற்றும் உப்பு  தேவையான அளவு 
காரம் அவரவர் விருப்பத்திற்கு  சேர்க்கவும் 


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் 
வாசனை பொருட்களை வதக்கவும்  
பிறகு இஞ்சி பூண்டு விழுது /வெங்காயம் /தக்காளி கறிவேப்பிலை இவற்றை சேர்த்து வதக்கவும் இப்போதே உப்பு சேர்க்கவும் ..உப்பின் அளவு கவனம் ..ஏற்க்கனவே ஆவியில் இட்ட வடை துண்டுகளில் உப்பு சேர்த்திருக்கிறோம் 
மசாலா தூள்களை சேர்க்கவும் பிறகு ஸ்டீம் செய்த வடை துண்டுகளை சேர்த்து வதக்கவும் அரை கோப்பை நீர் விட்டு மெதுவான தீயில் வேக வைக்கவும் 
பிறகு தேங்காய் விழுது சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் பின் அடுப்பில் இருந்து இறக்கவும் இறக்குமுன் ஒரு கொத்து கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும் 
கம கம ருசியான வடை கறி தயார் 
கேரளா ஸ்டைல் தட்டு தோசையுடன் சாப்பிட நல்ல ருசி .


நான் வருவேன் 
இந்த புத்தகங்களை படித்து முடித்த பின் :))))
41 comments:

 1. Quilling Design - அட்டகாசம்...

  வட கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி... கேரளா ஸ்டைல் தட்டு தோசை தான் செய்யணும்... ஹிஹி...

  செய்முறை விளக்கங்களுக்கு நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
   இன்னிக்கு உங்களுக்குத்தான் முதல் ப்ளேட் வடகறியும் தட்டு தோசையும் :))

   Delete
 2. வட கறி கடைசியா வட ? பழனில அந்த குட்டி தோசைக்கடைல சாப் பிட்டது...நானும் மிச்சம் உள்ள வடை..பக்கோடால செய்வாங்கன்னு நினைச்சேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரெவ்ரி அப்படியும் செய்யலாம் இப்படி ஸ்டீம் பண்ணியும் செய்யலாம் ..ஆனா ஸ்டீம்ட் வெர்ஷன் நல்ல டேஸ்ட். பொரித்து செய்தா அது பகோடா குழம்பு /வடை குழம்பு ,,((வர வர நானும் எக்ஸ்பெர்ட் ஆகிறேனோ :))))
   இவ்ளோ டீடெயில்ஸ் ஒரு ஃப்ளோவில் வருதே !!!!!!!!!!

   Delete
 3. புத்தகங்களை படித்து முடித்த பின்...பொறாமையா இருக்கு ஏஞ்சலின்...-:)

  ReplyDelete
  Replies
  1. :))) என் அதிர்ஷ்டம் மொத்தமா இவ்ளோ புக்ஸ் கிடைச்சுது விட்டா சான்ஸ் போய்டும் அதான் அள்ளிக்கிட்டு வந்திட்டேன் .

   Delete
 4. Quilling With recycled paper is cute...

  ReplyDelete
 5. கம கம ருசியான வடை கறி ,
  Quilling With recycled paper,
  படிக்க புத்தகங்கள் அனைத்தும் அசத்தல்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

   Delete
 6. கம கம ருசியான வடை கறி தயார். கேரளா ஸ்டைல் தட்டு தோசையுடன் சாப்பிட நல்ல ருசி .

  ஓட்டை ஓட்டையான தோசையைப்பார்க்க கண்களுக்கு இன்பமாகவும், வடை கறிக்கான செய்முறைகளைக்கேட்க செவிக்கு இன்பமாகவும் உள்ள்து.

  குவில்லிங் வேலை வழக்கம்போல அழகோ அழகோ.

  ஆஹா, நல்ல நல்ல புத்தகங்களின் அட்டையைப்பார்க்கவே ஜோராக உள்ளது. படிப்பது என்பது தனி சுகம் தான். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..விரும்பிய புத்தகங்கள் எங்க லைப்ரரியில் இப்படி அத்தி பூத்தாற்போல கிடைக்கும் அதான் மொத்தமா அள்ளிக்கிட்டு வந்திட்டேன் .

   Delete
 7. வடை கறி வித்தியாசமாக, நன்றாக இருக்கிறது ஏஞ்சலின்! பாவ் பாஜி மசாலா சேர்ப்பது சற்று புதுமை!

  கைவேலை அருமை!

  நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிற புத்தகங்களில் 'மெள்ள மெள்ள' மனதை உருக்கி விடும்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா ...வீட்டில் கரம் மசாலா இல்லாததால் பாவ பாஜி மசாலா சேர்த்தேன் ..சுவை குருமா போல வந்தது .
   எனக்கு சிவசங்கரியின் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் ....இன்னும் சில இருந்தது முதலில் இவற்றை முடித்து பின்பு எடுத்து வரணும் ..மிக்க நன்றிக்கா வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 8. ஆஹா..ஆஹா.. குயில் இங்:) அழகு... சூப்பரா இருக்கு அந்த ப்க்கிரவுண்ட்.

  வடக்குகறி.. + ஓசை பார்க்க பின்பு வாறேன்ன் இப்போ முடியல்ல:)

  ReplyDelete
  Replies
  1. நீங்க வரதுக்குள்ள தெற்கு கறின்னு ஒரு ரெசிப்பி போடுவேன் :))))))))))))0

   Delete
  2. நீங்க புதுசா ஏதும் கண்டுபிடிச்சு போட்டாலும் போட்டிடுவீங்க.. அதை தடுக்கோணும்:) எனும் நல்லெண்ணத்தில்:) ஓடோடி வந்தேனாக்கும்:).

   Delete
 9. அழகான க்வில்லிங் வேலைப்பாட்டை பின்னட்டை ஓவர்டேக் செய்துவிட்டது. இதை வேறு வேலைப்பாடில்லாத பின்னணியில் செய்திருந்தால் க்வில்லிங் எடுப்பாகத் தெரியும். வடகறி செய்முறைக்கு நன்றி ஏஞ்சலின். இன்று எங்கள் வீட்டில் அதுதான் என்று நினைக்கிறேன். பார்த்தவுடனேயே செய்யத்தூண்டுகிறது. புத்தகங்கள்... அப்பப்பா... படித்துமுடித்து விமர்சனமும் போடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா ..அந்த கருமை நிற பின்னணி கார்ட் ரொம்ப நாளா பயன்படாம இருந்தது இன்னிக்கு அவர்தான் ஹீரோ ஆகிட்டார் .
   இந்த வடை கரி இட்லி தோசைக்கு நல்ல டேஸ்டி மேலும் எண்ணெய் இல்லாம செய்வது ..

   Books....ஸ்ரீரங்கத்து தேவதைகள் படிக்கிறேன் இப்போ :

   Delete
 10. அழகான் க்வில்லிங் கைவேலை.
  எங்கள் வீட்டில் தட்டு தோசை அம்மா செய்வார்கள்.
  வடைகறி அருமை.நூலகத்தில் புத்தகங்கள் புதிதாக படிக்க கிடைப்பது சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிக்கா ..உங்க ரெசிப்பியும் எங்களோடு பகிருங்களேன் ஆவலா இருக்கு .
   ஆமாம் அக்கா இப்பெல்லாம் புத்தகங்கள் எனை அப்படியே ஆட்கொள்கின்றன

   Delete
 11. ellaame super...appuramaa vaaren angel akka! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி ..ரிலாக்ஸ்டா வாங்க

   Delete
 12. க்விலிங் அழகாக இருக்கு. பக்ரவுன்ட்தான் கலக்குது.வடகறி குறிப்பு புத்தகங்கள்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 13. அருமையாக இருக்கு க்விலிங். அதிலுள்ள சிவப்பு சாதாரண தாளில் வெட்டியவைகளோ? புத்தகதாள் வெட்டில் அங்கங்கே மஞ்சள் நிறம் தெரிகிறதே நீங்கள் அதற்கு நிறம்கொடுத்தீர்களோ... இல்லை புத்தகத்தாளே அப்படித்தானோ? அதுவும் மிக அழகாக இருக்கிறது. எம்போஸிங் பிண்னணி இன்னும் எடுப்பாக இருக்கிறது அஞ்சு. அருமை.

  தோசை, வடைகறி பிரமாதம். அந்ததோசை அதென்ன தட்டுத்தோசை??? குறிப்புச் சொல்லுங்கள். பார்க்கவே பசிக்கிறது...;)

  புத்தகப்பூச்சிதான் நீங்கள்...:))) வாழ்த்துகள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. அது பழைய புத்தக தாள் ..இயற்கையாகவே அதன் நிறம் பழுப்பு ..
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Thattu Dosai ...

   2 cups idli rice and 1 cup lentils urid dal plus two table spoons cooked parboiled rice = Thattu Dosai

   Delete
  2. மிக்க நன்றி அஞ்சு...:)

   Delete
 14. nice vada gari and superb quilling dear.. I request you to visit my blog and give your valuable comments and likes..http://acolorfulbuterfly-riya.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. sorry for spell mistake.. its http://acolorfulbutterfly-riya.blogspot.in/

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 15. அஞ்சு வடகரி சூப்பர். வடையை எண்ணெயில் பொரித்து சேர்ப்பது தெரியும். இது இன்னும் நல்ல முறையில் இருக்கிரது.
  தட்டு தோசை பெயர் தெரியாது. ஆனால் இந்த வகையில் எண்ணெய் அதிகம் விட்டு செய்யரதுதான் எனக்குப் பிடிக்கும். தட்டு தோசை
  அழகான பொத்தல்களுடன் ருசியாகவும் இருக்கு. இந்த க்வில்லிங் வேலை எல்லாம், இளமதியும் நீயும் அசத்துகிரீர்கள். எல்லாம் அழகாக இருக்கிரது. அன்புடந்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 16. வடக்கு கறி.. சூப்பர். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

  நாங்கள் இக்கறியை துவரம் பருப்பில் மட்டுமே செய்வோம். அதுவும் அவித்தெடுத்த பின், எண்ணெயில் பொரித்தெடுத்து ஆறிய பின் ரின்னில் அடைத்து வைத்தால் கொஞ்சக்காலம் பாவிக்கலாம்.

  ReplyDelete
 17. தோசை சூப்பரா வந்திருக்கு.

  ReplyDelete
 18. நான் வருவேன்
  இந்த புத்தகங்களை படித்து முடித்த பின் :))))////

  உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆஆஆ.. நல்லதாப்போச்ச்ச்ச்:) அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் எடுத்து வாங்கோ அஞ்சு. மீ பொன்னியின் செல்வன் ஆரம்பிச்சிட்டனாக்கும் படிக்க.. மொபைல்லதான்:)

  ReplyDelete
  Replies
  1. கண்டுபிடிப்புகள் தொடரும் :)))
   இப்போ கொஞ்சம் பிசி ....வந்து கவனிக்கிறேன் மியாவ்

   Delete
 19. அம்மா இதே மாதிரி பருப்பு உருண்டையை இட்லித் தட்டில் வேகவைச்சு குழம்பு செய்வாங்க, அதை "பருப்பு உருண்டை குழம்பு" என்று சொல்லுவோம். பட்டை-கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் இல்லாம, புளி சேர்த்து செய்வாங்க. சாதத்துடன் சாப்பிடுவோம். வடகறி-ந்னா வடையப் பொரிச்சுப் போட்டாத்தான்!! :) ;)
  சீக்கிரம் உங்க மெதட் படி செய்து பார்க்கிறேன் ஏஞ்சல் அக்கா!

  உங்க கதை புக் எல்லாம் பார்க்கப் பார்க்கப் பார்க்கப் பாக்க....எனக்குக் காதில புகை புகையா வரவேஏஏஏஏஏஏஏஏ இல்ல...என்ஜாய் மாடி! :)

  க்வில்லிங் சிம்பிள் அண்ட் எலிகண்ட்! :)

  தட்டு தோசை-செட் தோசை- தோசையம்மா தோசை! பலவகையாய் தோசை! :) எங்காத்துக்காரருக்கு இப்படி மெத் மெத் தோசைய விடவும் முறுகல் ரோஸ்ட் தான் புடிக்கும். அதனால் நான் எப்பவாவதுதான் இதெல்லா டிரை பண்ணறது. தோசை-வடகறி பார்ர்கும்போதே பசிக்குது, நான் (லன்ச்) சாப்ட்டு வரேன். அவ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 20. மாலை வணக்கம்,அஞ்சு!நலமா?///அருமை.வட கறி :))///செய்து பார்க்க வேண்டும்,பொழுதிருக்கையில்!நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 21. வடகறியும் தோசையும் பின்னே க்வில்லிங்கும் சூப்பர்.

  ReplyDelete
 22. தோசை தோசை தோசை அடுத்த ஆக்கத்தையும் படித்து முடித்து விட்டு இன்னும் இரண்டு அயிற்றம் செய்து அனுப்புங்கள் தோழி (இருந்து கொண்டு சாப்பிட எங்களைத் தான் கேக்கணுமாக்கும் :).... )

  ReplyDelete