அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/8/13

சில குறிப்புகள் மற்றும் ரசித்து ருசித்த நட்புக்களின் சமையல் குறிப்புகள்

              நம்ம ஊரில் மே தினம் 1  திகதி விடுமுறை .ஆனா எங்களுக்கு 
ஆறாம் தேதி விடுமுறை நாள் .
1978 இல் இருந்து இங்கிலாந்தில் பொது மக்களின் ...வசதிக்கு ஏற்ப 
மே மாததின் முதல் திங்கள் வங்கி விடுமுறை என அனைவருக்கும் 
பொதுவான விடுமுறை நாள் .
அன்று  வெளியே சென்றபோது எடுத்த    படங்கள்  

இது டூலிப் மரம் 

Family:Magnoliaceae
Genus:Magnolia
Species:x soulangeana
Synonym:Magnolia x soulangiana

 

                                                               
                                            
                                                             
                                                   

ஒரு க்ளோசப் படம் 
                                                        

ப்ளுபெல்ஸ் பூத்திருக்கும் என சென்றோம் ஆனால் 
குறைந்தஅளவே  மலர்ந்திருந்தன 
                                     


                                                           
...........சில குறிப்புகள் 
Quilling 
கீழே இருக்கும்  வலைப்பூவில் சுலப செய்முறை விளக்கமும் படங்களும் இருக்கிறது .

http://canardette.centerblog.net/rub-quilling-ou-paperolles-.html


நான் பெரும்பாலும் க்வில்லிங் செய்ய பழைய காகிதங்கள் அதாவது கடித உறைகள் ,காகித பைகள் மற்றும் நியூஸ் லெட்டர் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் .
எதுவாக இருப்பினும் 3 mm பேப்பர் ஷ்ரெட்டரில் போட்டு வெட்டி எடுத்து தான் செய்வேன் .
ஆனால் frame அல்லது பெரிய அளவில் ஆர்ட் வேலை செய்ய ரெடிமேட் 
strips மட்டுமே பயன்படுத்துவது நல்லது .

இந்த வலைப்பூவிலும் எப்படி quilling slotted tool பயன்படுத்துவதில் இருந்து நிறைய குறிப்புகள் இருக்கு 
http://limeriot.blogspot.co.uk/2013/03/junior-varsity-quilling-tutorial.html


..........................................................................................................
இது 7 இல் இருந்து 14வயது வரை உள்ள மாணவர்கள் படிக்கும் 
செய்தித்தாள் ..ஆன்லைனிலும் வருகிறது 
Award-winning UK national newspaper for children aged 7-14. 
http://www.firstnews.co.uk/

.....................................................................................................................................
                                 


நான்கு  வயதில் நான் ..

அப்பா நான் ஏன் உங்க கல்யாண ஆல்பத்தில் இல்லை ????
                                                                  Thanks google)
நான்கு வயதில் என் மகள் 

அப்பா ஏன் நான் உங்க கலயாணத்துக்கு flower girl  ஆக இல்லை ????


                                                                                  ( Thanks google)


ஐந்து வயதில் நான் :))(காலண்டரை பார்த்து )

  அப்பா ..நீங்க ஊருக்கு போயிட்டு வர எவ்ளோ நாளாகும் ??        

ஐந்து வயதில் என் மகள் (காலண்டரை பார்த்து )

அப்பா ஏன் பிப்ரவரியில் மட்டும் 28 நாள் இருக்கு         ???????

                        .

........................................................................................................................................
இது நம்ம ஆசியா அவர்களின் குறிப்புப்படி செய்த கேப்பை கூழ் 
மிக மிக சுவையாக இருந்தது 
                                                                                   

குறிப்பு பார்த்து செய்த ஹெல்தி அடை .


@@@@@@@@@@@@@@@@@


அடுத்த ரெசிப்பி மேலே ரன்னிங் லெட்டரில் போகும் ஏதாவது ஒன்று 

54 comments:

 1. ம்ம்ம்ம் அருமையான பதிவு நல்ல நல்ல செய்திகள்... பூவின் படம் அருமை....

  சிந்திக்க வைக்ககூடி தங்கள் படமும் மகளின் படமும் ம்ம்ம்ம் சூப்பர்...

  சுவையான பதிவும் கூட....

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா .
   உரையாடலுக்கு சேர்த்த என் படம் மகள் படம் ...அது கூகிளில் சுட்டது :))

   அங்கே டூலிப் மலர் மரத்தின் கீழே மூன்று மலர்கள் இருக்கே அதில் உயர்ரமான ஒரு போனி டேயில் போட்ட மலர் தான் என் மகள்

   Delete
 2. புகைப்படங்கள் யாவும் மிக அழகு! அதுவும் அந்த வெள்ளை மலர்கள் கொள்ளை அழகு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா .. இந்த மலர்கள் பார்க்க கண்ணை கொள்ளை கொண்டது இரண்டொரு நாளில் கொட்டி சிதறிவிடும் அந்த இடமே பாய் விரித்தாற்போல இருக்கும்

   Delete
 3. முதலில் காட்டியுள்ள அவுட் டோர் பட்ங்கள் அழகோ அழகு.

  >>>>

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா

   Delete
 4. //நான்கு வயதில் நான் ..

  அப்பா நான் ஏன் உங்க கல்யாண ஆல்பத்தில் இல்லை ????//

  ;)))))

  >>>>>

  ReplyDelete
 5. ஐந்து வயதில் நான் :))(காலண்டரை பார்த்து )

  அப்பா ..நீங்க ஊருக்கு போயிட்டு வர எவ்ளோ நாளாகும் ??

  ஐந்து வயதில் என் மகள் (காலண்டரை பார்த்து )

  அப்பா ஏன் பிப்ரவரியில் மட்டும் 28 நாள் இருக்கு ???????//

  இன்றைய குழந்தைகள் நம்மைவிட, பிறக்கும்போதே மிகவும் புத்திசாலிகளாகத்தான் உள்ளனர்.;)))))

  தங்கள் ம்களுக்குப் பாராட்டுக்கள்.


  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அண்ணா சில நேரம் கேள்விகளுக்கு பதில் கூறவே முடியாது

   Delete
 6. //இது கோபு அண்ணா அவர்களின் குறிப்பு பார்த்து செய்த ஹெல்தி அடை .//

  சந்தோஷம். மொறுமொறு காரசார அடைக்கான ராயல்டி தொகையை அதிரடி அதிராவின் எக்க்வுண்டில் சேர்த்து விடவும். டாலராகவோ பவுண்ட்ஸ் ஆகவோ ஏதோ சொல்லுவாங்கோ ... கேட்டுக்கொள்ளவும்.

  அந்த ஓரஞ்சு கலர் ஹேண்ட் பேக்கை போட்டுத்தள்ளிக் கொண்டு வரவும். முடிந்தால் அந்த மோதிரத்தையும் கழட்டிக்கொள்ளவும். நான் சொல்லிக்கொடுத்ததாக தயவுசெய்து சொல்லி விடாதீர்கள். இது விஷயம் நமக்குள் மட்டும் இரகசியமாக இருக்கட்டும்..

  >>>>>>

  ReplyDelete
 7. அனைத்தும் அருமை. அழகான பதிவு. பாரட்டுக்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள், நிர்மலா.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும்

   Delete
 8. படங்கள் அருமை அதுபோல தந்தை மகள் ??? சிந்தனை ஒத்தவையே :))))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ஆமாமாம் பொண்ணு என்னை மாதிரியே அறிவாளி :)) யாருமே சொல்லாததை நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க .உங்களுக்கு சீஸ் பராதாஸ் ரகாடா பாட்டிஸ் எல்லாம் பார்சல் அனுப்பறேன்

   Delete
 9. டூலிப் மரம் அழகு...!!

  ReplyDelete
 10. டூலிப் மரம் அழகு.....!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா .. இந்த மலர்கள் இரண்டொரு நாளில் கொட்டி சிதறிவிடும் அந்த இடமே பாய் விரித்தாற்போல இருக்கும்

   Delete
 11. கடந்த வருடம் FALL COLORS பார்க்க நான்கு மணி நேரம் பயணம் செய்து ஏமாற்றம் தான் மிஞ்சியது...திரும்பி ஊருக்கு வந்தால் எங்கள் வீட்டருகிலே கொள்ளை அழகு...-:)

  ReplyDelete
  Replies
  1. இதிலிருந்து என்னதெரியுது ..அழகு உங்க பக்கத்திலேயே இருக்கு @:)))))

   Delete
  2. நல்ல வேளை ...பக்கத்து வீட்டிலன்னு சொல்லல...-:)

   Delete
  3. Garrrr:))!! ..இதோ இருங்க உங்க வீட்டம்மாக்கிட்ட இதை fwd செய்றேன் ..:))

   Delete
 12. மலர்களை ரசித்துக்கொண்டே இருக்கலாம்...

  நான்கு வயதில் நான் ...:)

  ReplyDelete
  Replies
  1. அப்பா ஏன் நான் உங்க கலயாணத்துக்கு flower girl ஆக இல்லை ????//

   இது மட்டுமா :)) காத்து எங்கிருந்து வருது ,அணிமல்சுக்கும்marriage /divorce இதெல்லாம் இருக்கா
   என்ற எடக்கு மடக்கு கேள்விலாம் கேட்டிருக்கா .
   நான்கு வயதில் ஒரு திருமணத்துக்கு அழைத்து சென்றோம் ...மணமக்கள் your children and my children are playing with our children வகை :)) அங்கேதான் இவளுக்கு அந்த டவுட் வந்திருக்கும் :))

   Delete
  2. புதிய உலகில் வாழ நாம் தான் அதிகம் பயில வேண்டியது உள்ளது...

   We have a hard time digesting this insanity...Whether we like it or not,it is the new normal...

   Kids are curious,but they have an open mind,unlike us...-:)

   Delete
  3. yes thats true, they approach everything even the unconventional with an open heart and mind ..

   Delete
 13. டூலிப் மரம், உங்கள் கேள்வி, குழந்தையின் கேள்வி, எல்லாம் அருமை.
  ஆசியாவின் கேப்பைகூழ், கோபு சாரின் ஆடை எல்லாம் பார்க்கவே அழகு. மிகருசியாக செய்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..இப்பெல்லாம் ரொம்ப கேள்வி கேட்பதில்லை அவள் :))

   Delete
 14. பூக்கள் மனதை கொள்ளை அடித்தன...

  குறும்புகளை ரசித்தேன்...

  சுவையான கேப்பை கூழ் + ஹெல்தி அடை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ .இப்பதான் மலர்கள் மலர ஆரம்பிச்சிருக்கும இன்னும் படங்கள் வரும்

   Delete
 15. அழகான புகைப்படங்கள்..கூழ்+அடை சூப்பர்ர்ர்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா

   Delete
 16. Very nice photos and recipes.

  ReplyDelete
 17. ட்யூலிப் பூ??? மரத்தில் பூத்திருக்கா என்று ஆச்சரியமா வந்தேன்! நீங்களே போட்டிருக்கீங்களே, "மேக்னோலியா" என்று!! அதானே இந்தப் பூவின் பெயர்?! ட்யூலிப் பூக்கள் வேறுதானே..குயப்புறீங்களே!! ;)

  இங்கும் இந்த மரங்கள் உண்டு, ஆனா நான் இருக்குமிடத்தில் இல்லே..சான்ஃபிரான்ஸிஸ்கோ-bay area-பக்கம் நிறைய இருக்குது. படஙக்ள் பார்த்திருக்கேன். பூக்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கு. பகிர்வுக்கு நன்றி ஏஞ்சல் அக்கா!

  கேப்பை கூழும் அடையும் அருமையா இருக்கு. ரெண்டையும் பார்ஸல் போட்டு அனுப்பிவிடுங்க..இனிமேல் ஒரு டீல்..நீங்க டெய்லி செய்யும்(!) ஸ்னாக் எல்லாம் எனக்கு ஒரு பார்சல் ஆட்டோமேடிக்-ஆ வந்து சேர்ந்துரணும், சரியா? :)

  ReplyDelete
  Replies
  1. http://en.wikipedia.org/wiki/Liriodendron


   check this ,they call it as tulip tree ..

   Delete
  2. Saw that! Thanks for the explanation! :)

   Delete
 18. //அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ..வடை கறி . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!// OMG! எனக்கு சமையலே மறந்து போன மாதிரி இருக்கே, பேசாமா லண்டன்ல உங்க நெய்பரா வந்துரவா ஏஞ்சல் அக்கா?! பக்கத்து வீட்ட காலி பண்ணி வையுங்கோ, நான் மூட்டை-முடிச்சுகளை கட்ட ஆரம்பிக்கிறேன்! :))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி :))வெல்கம் ..வந்தா இங்கே ரெண்டு எட்டு நடந்ததும் ஒரு கடையில் நேந்திரங்கா சிப்ஸ் வாங்கி வரலாம் :))நாம் இருவரும் சேர்ந்து :))

   Delete
 19. படங்கள் அழகு! எனக்கும் மஹிக்கு வந்த சந்தேகம்தான் ஏஞ்சலின். ட்யூலிப் மரம் என்று சொல்றீங்களே.. ட்யூலிப் செடிவகைப்பூதானே என்று... படம் பார்த்தபின் புரிந்தது இதுவேறு அதுவேறு என்று.

  மகளின் கேள்விகள் ரசிக்கவைத்தன. தாயைப்போல பிள்ளை. :)

  சமையலில் தானாகவே முயன்று புதியபுதிய வகைகளை உருவாக்குவது ஒரு திறமை என்றால் ஏற்கனவே உள்ள சமையல் குறிப்பை வைத்துக்கொண்டு அதை சொதப்பாமல் அதே ருசியுடன் அதே பக்குவத்துடன் சமைப்பது இன்னொரு திறமை. உங்களிடம் அது நிறையவே உள்ளது. பாராட்டுகள் ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே அதன் காமன் நேம் டூலிப் மரமாம் கீதா ..ஆனா கண்ணை பறிக்கும் அழகு ..
   சமையல் :))எனக்கு வெக்கம் வெக்கமா வருது எல்லாரும் பாராட்டும்போது :))

   Delete
 20. புகைப்படங்கள் கண்களை பறிக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸாதிகா வருகைக்கும்கருத்துக்கும் ..மலர்கள் இன்னும் நிறைய வரவிருக்கின்றன:))

   Delete
 21. அஞ்சு.. சொந்தக் கதஒ யோகக்கதை:) இப்போ ச்சோஓஓஓஓஒ ரயேட்ட் நாளைக்கு வாறேன்ன்.. ஏனெண்டால் கொஞ்சம் பட்டாசு, ஆனைவெடியும் இங்கின தேவைபடுது:) வாங்கிக்கொண்டு வருகிறேன்ன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. வணக்கம்,அதிரா மேம்!நலமா?///யோகக்கதை/////என்னுடைய கதை..................................?????????????ஹ!ஹ!!ஹா!!!!

   Delete
  3. ஆஆ !!!புலாலியூர் பூசானாந்தா !!!! அடுத்த போஸ்ட் உடனே போட்டாதான் நான் தப்பிக்க முடியும்

   Delete
  4. ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணனின் கண்ணுக்கும் தெரிஞ்சுபோச்சா..:))..

   ஆஆ அஞ்சு பெரியாஆஆஆஆஅ போஸ்ட் போட்டு நான் வரமுந்தி புதுசுக்கு போயிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இங்கும் மே பிளவர் வந்திடுச்சீஈஈஈஈஈஈஈஈ:)

   Delete
 22. அஞ்சு உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.இது உங்க வெற்றிகரமான 150வது பதிவு. இன்னும் நீங்க பலபதிவுகளை தர‌வேண்டும் என வாழ்த்துகிறேன்.
  அழகாக இருக்கிறது படங்கள் அஞ்சு. இங்கு இப்பத்தான் பூக்கத்தொடங்கினம். இதில் பிங்க் கலர் இருக்கா?
  மிக பிரயோசனமான க்விலிங் லிங்க் அஞ்சு.நன்றி.
  அப்பா மகள் உரையாடலும் மிக நன்றாக இருக்கு.ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
  கேப்பைக்கூழ்,அடை பார்க்க நன்றாக இருக்கு.செய்ய‌வேணும். ரெம்ப நன்றிஅஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்முலு வருகைக்கும் கருத்துக்கும் .

   பிங்க் மற்றும் மஞ்சள் இரண்டும் இருக்கு ....ரொம்ப அழகு

   Delete
 23. அன்புள்ள நிர்மலா,

  தங்களின் வெற்றிகரமான 1 5 0 வ்து பதிவுக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

  மேலும் பல பதிவுகள் தந்து 250, 500, 1000 என் வெற்றியின் உச்சத்தினை அடைய வாழ்த்துகிறேன்.

  இதை நினைவூட்டிய நம் அம்முலுவுக்கு என் அன்பான ஸ்பெஷல் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும்

   Delete
 24. வணக்கம் தங்கையே,நலமா?///அருமையான படங்கள்!குவிலிங்க்.................................!இப்போதைய குழந்தைகள் ............ஹூம்,சொல்லவா வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா :)) நாங்கள் அனைவரும் நலம் .
   அமாம் அண்ணா இக்கால பிள்ளைகள் எல்லாவற்றிலும் நல்லா விழிப்பா இருக்காங்க :

   Delete