அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/5/13

மீள் சுழற்சி பப்பியும்/quilled Puppy /...பஞ்சாபி சமோசாவும்

                                                                                 
                             


 என் பப்பி :))))
                                                                                 
                                                                         
                                          இவர் ப்றைமார்க் காகித பையிலிருந்து
உருவானவர் .மீள்சுழற்சி பப்பி ..
                                                                           
                                                                               அடுத்தது பஞ்சாபி சமோசா என் சமையல்அறையிலிருந்து :))
இது fine white atta flour இல் செய்தது இது மைதா எனப்படும் all purpose மாவில் செய்தது .


குஜராதிக்காரர்கள் ஆட்டமாவில் சமோசா செய்வார்கள் அதுவும் காய்கறிகளை வேக வைக்காமல் நேரடியாக வதக்கி வெந்தபின் 
சமொசாவில் பூரணமாக இட்டு பொரிப்பார்கள் .


பஞ்சாபியர் உருளைகிழங்கினை வேக வைத்து மசித்தபின் வெங்காயம் இன்னபிறவற்றை தாளித்து கலந்தபின் பூரணமாக இட்டு பொரிப்பார்கள் .

நான் செய்த சமோசா 
தேவையான பொருட்கள் 
சமோசா செய்ய 250 கிராம் மைதா மாவை நீர் குறைவாக விட்டுஒரு ஸ்பூன் நெய்யுடன்மற்றும் ஒரு ஸ்பூன்அஜ்வைன்  /carom seeds மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து  ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும் .

பூரணம் 

செய்ய தேவையானவை 
வேக வைத்த உருளைகிழங்கு ................5
பெரிய வெங்காயம் ................1நறுக்கியது 
பச்சை மிளகாய் .........2விதை நீக்கி நறுக்கியது 
இஞ்சி .................1 சிறுதுண்டுநறுக்கியது 
கரம் மசாலா தூள் ..............1 தேக்கரண்டி 
தனியாதூள் ........1 தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் ......1/2 தேக்கரண்டி 
frozen பட்டாணி ...........1 கோப்பை 
(நான் காய்ந்த மிளகாய் தனியா மற்றும் வாசனை பொருட்கள் 
ஆகியவற்றை வறுத்து அரைத்த செட்டிநாட்டு மசாலாத்தூள் 
மட்டும் போட்டேன் )
பெருஞ்சீரகம் ............1 தேக்கரண்டி
 கடுகு ...............1 தேக்கரண்டி 
உப்பு ..........தேவைக்கு 

கொத்தமல்லி இலைகள் .......கைப்பிடியளவு நறுக்கியது 


வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,பெருஞ்சீரகம் தாளிக்கவும் ,பிறகு நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி ,பச்சை மிளகாய் இவற்றை வதக்கவும் பின்பு மசாலாதூளை சேர்த்தபின் பட்டாணியையும் வதக்கவும் 
frozen பட்டாணி என்பதால் சீக்கிரம் வெந்துவிடும் .பிறகுமசித்த கிழங்கையும் 
சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும் ..கொத்தமல்லி இலைகளை நறுக்கி அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும் .
இப்படி இருக்கும் இந்த லிங்கில் இவர் சமோசா செய்முறை மடிப்பு 
எல்லாம்சொல்லியிருக்கார் 
பிறகு பெரிய கோலிகுண்டு அல்லது டேபிள் டென்னிஸ் பால் அளவு மாவு உருண்டை எடுத்து சப்பாத்தி கட்டையில் உருட்டி 
இப்படி ஒரு அரை வட்டத்துக்கு மட்டும் ஒரு slit வெட்டவும் 
பிறகு படத்தில் உள்ளவாறு பூரணத்தை இட்டு மடிக்கவும் 
எண்ணையில் போடும்போது அளவான சூடாக இருக்கணும் மீன் நீரில் சுவாசிக்கும்போது நீர்க்குமிழி வருமே அதுபோலதான் எண்ணையில் சமோசாவை இட்டதும்  குமிழ்கள் வரணும் .
அதே சூட்டில் அனைத்து சமோசாக்களையும் பொரித்து எடுக்கவும் 

எப்படி இருக்கு நான் செய்த சமோசா :))அடுத்து ஒரு ரெசிப்பியுடன் வர்ர்ரர்ர்ர்றேன் :)))))))))))))

49 comments:

 1. ருசியாத்தான் இருக்குமென நினைக்கிறேன்.சாப்பிட்டாத்தானே தெரியும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ,,நண்பரே ..முதல் வருகைக்கு மிக்க நன்றி:))

   Delete
 2. பப்பி அழகு. அதைவிட சமோசா மிகவும் அழகு. பப்பியை சாப்பிட முடியாது. ஆனால் சமோசாவை சாப்பிட முடியும். ருசியாக இருக்கும். செய்முறையும் படங்களும் அருமையாகக் கொடுத்துள்ளீர்கள். சுடச்சுட 1 டஜன் பார்ஸல் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ,,அண்ணா .....உங்களுக்கில்லாததா ...அடுத்த ப்ளைட்டில் வருது சமோஸா :))

   Delete
 3. ///அடுத்து ஒரு ரெசிப்பியுடன் வர்ர்ரர்ர்ர்றேன் :)))))))))))))///

  விடுங்கோ விடுங்கோ.. என்னை விடுங்கோ.. தடுக்காதீங்க:)).. நான் இனியும் என் புளொக்கை வச்சிருக்கோணுமோ என யோசிக்கிறேன்ன்... :))

  ReplyDelete
  Replies
  1. அலெக்சா ரேட்டை ஏத்த சொன்னது நீங்கதானே மியாஆஅவ் :))

   Delete
  2. ஓஓஓஓஓஓஒ ஆமா இல்ல:) அதுக்காக இப்பூடியா அதிராவைக் கடுப்பேத்துறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  3. கொஞ்சம் தலையை தூக்கி மேலே பாருங்க இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ரா இணைச்ருக்கேன் ரன்னிங் எழுத்தில்

   Delete
  4. Super. I like samosa. I will try this one in the future.

   Delete
  5. ஆஆஆஆஆஆஆஅ என் குரு ...குரு .....குருவே வயக்கம் எப்படி இருக்கீங்க

   Delete
  6. வாங்க வானதி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீக்கிரம் செய்து பாருங்க .

   Delete
  7. ஹா ஹா கலையின் வயக்கத்தபார்த்து கலையின் குரு மயக்கமாம் :)))

   Delete
 4. பப்பி சூப்பர்ர்.. மீ ஒரு மயில் செய்யப்போறனாக்கும்:) விரைவில் இருந்து பாருங்கோ.. இப்போ ஆரும் நம்பமாட்டீங்க அதிராவை:).

  ஒரு டவுட் அஞ்சு, ஒரேயடியாக பெரிதாக சுத்தோணுமோ? உடம்பு செய்ய?..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ..ஒரு படம் டெம்ப்ளேட் போல எடுத்து செய்யுங்க

   Delete
 5. // இவர் ப்றைமார்க் காகித பையிலிருந்து
  உருவானவர் .மீள்சுழற்சி பப்பி ..//

  மீயும் பிரைமார்க் பாக்குகள் சேர்த்து வச்சிருக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:))

  ReplyDelete
 6. //அடுத்தது பஞ்சாபி சமோசா என் சமையல்அறையிலிருந்து :))///
  அப்பாடா பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:) அஞ்சுவின் ஊக்குவிப்பால இன்று மீ சமோசா செய்திட்டேன்ன் சூப்பர்ர்....

  விரைவில் எதிர் பாருங்கள் என்பக்கத்தில் “அதிராவின் சிக்கின் சமோசா”:).. பெயர் கேட்கவே அதிருதில்ல:)).. எனக்கு நானே சொன்னால்தான் உண்டு..:))

  ReplyDelete
  Replies
  1. என்னாது நானு எப்போ?? ஊக்கு வித்தேன்:)))

   கர்ர்ர்ர்ர்ர் என் ப்ளாகே இப்ப அதிருது :))

   Delete
  2. குருவே நானாம் இந்த மாறி தவறனா முடிவெல்லாம் எடுத்துடதிங்கோ அவசரப் பட்டு

   Delete
 7. கலக்கல் அஞ்சு சூப்பரா இருக்கு சமோசா... பஞ்சாபி முறைதான் ஈசி , சமோசா மடிக்க.

  ReplyDelete
  Replies
  1. அதனால் தான் இப்ப அந்த வீடியோ லிங்கையும் இணைசிட்டேன் :)

   Delete
 8. சமோசா மடிக்க இவ்வளவு எளிதாக இருக்கிறதே... நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதனபாலன் ..ஆமாம் இம்முறை எனக்கு எளிதா வந்தது

   Delete
 9. கலக்குறீங்க ஏஞ்சலின். பப்பி ரொம்பவே அழகு. பஞ்சாபி சமோசா பார்க்கவே சாப்பிடத்தோன்றுகிறது. சமோசா மடிப்புதான் எனக்கு எப்பவுமே பிரச்சனை. நீங்க செய்திருப்பது எளிமையா இருக்கு. நிச்சயம் செய்துபார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி எனக்கும் கோன் மடிப்பு சரியா வராது ,,இது ரொம்ப சுலபம் செய்து பாருங்க

   Delete
 10. சூப்பர் ஏஞ்சலின்,பஞ்சாபி சமோசா அழகாக மடித்து காட்டடியிருக்கீங்க...கார்டு அழகைத்தான் கேட்கவே வேண்டாமே !!.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா ..இந்த முறை எனக்கு மிக சுலபமா வந்தது

   Delete
 11. பப்பியும் ருல்ப் மொட்டுக்களும் அழகு!
  சமோசா நல்ல கரில் பார்க்கவே அருமையாக இருக்கிறது அஞ்சு...:)
  எல்லாமே சிறப்பு! வாழ்த்துக்கள்! வருகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி ..வாங்க சுட சுட பொரிச்சு தரேன் :))

   Delete
 12. பப்பி மிகவும் அழகாக இருக்கு அஞ்சு. சமோசா நன்றாக இருக்கு. ஈசியா இருக்கு மேல்மாவு செய்முறை.நிச்சயம் செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்முலு ..எனக்கும் முதலில் சரி வராது எனவே மோல்டில் போட்ட செய்வேன் ஆனா மடித்து செய்தாதான் க்ரிஸ்ப வரும் .

   Delete
 13. ஏஞ்சலின் ,பஞ்சாபி சமோசா பூரணம் அழகு ச்மோசா அருமை.
  காகிதப்பையிலிருந்து அழாய் வந்த பப்பி வெகு அழகு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி அக்கா

   Delete
 14. நானும் ஒவ்வொரு முறையும் பாட்டி மேக்கரில் தான் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்...இப்போது தான் ரகசிய கட் அண்ட் மடிப்பு புரிந்தது...

  RECYCLED பப்பி is CUTE...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரெவரி .முன்பு சோமாஸ் patties மேக்கரில் தான் செய்தேன் ஆனா இப்படி மடிச்சு செய்யும் முறை முன்பு ஒரு பஞ்சாபி பெண்மணி காட்டினார் அவர் செய்ததில் வேட்டாமா தான் காட்டினார் ஆனா எனக்கு இப்படி செய்தா நல்லா வருது

   Delete
 15. அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎ பப்பீஈஈஈஈஈஈஈஈ

  அக்கா எனக்குத்தான் அந்த பப்பி ..

  அழகா இருக்கு அஞ்சு அக்கா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் உனக்கேதாண்டா அந்த பப்பி :))

   Delete
 16. உங்கட சமோசா பார்த்து ரொம்ப பசிக்குது அக்கா ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ இப்போ டயட்டில இறுக்கினான் ...

  சமோசா மதிக்கிறது .இப்புடித்தனோ ..கற்றுகிட்டனான் ,...நல்லா இருக்கு அக்கா

  ReplyDelete
  Replies
  1. அது மதிக்கிறது இல்லை என்னதான் அக்காமேலே இவ்ளோ மதிப்பு பாசம்லாம் இருந்தாலும் :)இப்படியா

   Delete
 17. அக்கா அந்த பிறை மார்க் இலிருந்து தான் நம்ம பப்பி உருவானரா ....

  கலை : குருவே அந்த ரீன்ஸ் போட்ட அக்காள் அஞ்சு அக்கா தானே ....
  அதிரா அக்கா ச சா நல்லா கண்ணை துடைச்சிட்டு பாருங்கோ கலை ... நம்மட செட்டில் இப்படி ஒல்லியா யாருமே இருக்க மாட்டினம் இமா ரீச்சர் தவிர ...

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்:))அலை அடிச்சு ஓய்ந்த மாறி இருக்கு ஹா ஹாஹ்

   Delete
  2. வாம்மா இளம் புயல் குட்டி வாத்து :))
   ஒவ்வொரு கமெண்ட் வரும்போதும் ஒளிஞ்சிருந்து பார்த்துக்கிட்டே இருந்தேன் ..:))
   எங்கடா என்னைய கிண்டல் பண்ணவில்லைஎன்னு பார்த்தா :))ஜீன்ஸ்ல :))))

   Delete
 18. அனைத்தும் அருமை அக்கா....சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜி .வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

   Delete
 19. பப்பியும் சமோஸாவும் சூப்பர்! இவ்வளவு பெரிய காகிதப்பைகளை கட் செய்து க்வில் பண்ணீங்களா?! ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அமோகம் ஏஞ்சல் அக்கா! :)

  கோதுமை சமோஸாவ விட மைதா சமோஸாதான் பளபளன்னு கவர்ச்சியா;) இருக்கு. முழுவட்டம் செய்து சமோஸா மடிப்பதை விட அரைவட்டம் தான் ஈஸி. இங்கே ஒரு மராட்டி ஆன்டி செய்யும்போது பார்த்திருக்கேன். கிடுகிடுன்னு மடிச்சுட்டாங்க, என்ன வேகம் தெரியுமா?

  //அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும் . இப்படி இருக்கும் // ம்ம்...மஞ்சளா அழகா இருக்கு. நீங்க மிளகாப்பொடி கரம்மசாலாப் பொடி எல்லாம் போட்ட மாதிரியே தெரியலையே? ;) காரம் கம்மியா செய்தீங்களோ?
  எனக்கு இந்த ஸ்டஃபிங்-ஐ விடவும் நம்மூர் முக்கோண ஆனியன் பஃப்ஸ்தான் பிடிக்கும், அதனால அடுத்து அதைய போஸ்ட் பண்ணுங்கோ, ரைட்? ;) :)

  ReplyDelete
 20. வாங்க மகி .
  நான் கையால் வெட்டல்லை .என் பேப்பர் ஷ்ரெடர் உள்ளே போட்டதும் பீஸ் பீஸ் ஸ்ட்ரிப்ஸ்கிடைக்கும் .அதில்தான் செய்தேன் .
  எனக்கு அரைவட்ட சமோசாவும் பிடிக்கும்
  ரிக்வஸ்ட் .....for அனியன் சமோசா ...இஸ் கிராண்டட்:)))
  ஆமா கோதுமை மாவில் செய்தது மசாலா பூரி மாரிதான் இருந்தது .
  ..நான் மசாலாதூள் குறைவாதான் சேர்ப்பேன் (நான் காய்ந்த மிளகாய் தனியா மற்றும் வாசனை பொருட்கள்
  ஆகியவற்றை வறுத்து அரைத்த செட்டிநாட்டு மசாலாத்தூள்
  மட்டும் போட்டேன் )ஆனா இஞ்சி காரம் பச்சைமிளகா காரம் நிறைய இருக்கும் :)

  ReplyDelete
 21. பஞ்சாபி சமோசா உடனே செய்து பார்த்திட வேண்டும்.

  ReplyDelete
 22. ஆகா, நாவில் நீர் ஊரைச் செய்யும் ஐட்டமாக இருக்கிறது..
  தொடர்க
  வாழ்த்துக்கள்.
  http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

  ReplyDelete