அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/24/13

Vaisaki aka Baisakhi கொண்டாட்டமும் "மதராஸி பெண்ணும் ""


நாம்  தமிழ் !!?? புத்தாண்டு கொண்டாடும் நாட்களில் பஞ்சாபியரின் பைசகி கொண்டாட்டமும் நடைபெறும் .  

                                                                                 


ஒவ்வோர் ஆண்டும் எங்க சுற்று வட்டாரத்தில் உள்ள பஞ்சாப் இன மக்கள் ஒன்றுகூடி பேரணியாக செல்வார்கள் . அவர்கள் ஊர்வலம் செல்லும் வழியெல்லாம் பிற வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வைக்கபட்டிருக்கும் .ஊர்வலம் போகும்போது ஆங்காங்கே குளிர்பானம் /சமோசா /சிப்ஸ் என பலவகை கொறிப்பான்களும் இலவசமாக விநயோகிக்கப்படும் .முதியோர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு தனியாக ஸ்பெஷல் வாகனங்கள் ஊர்வலத்தில் போகும் அவர்கள் அதில் ஏறி பாட்டு பாடிக்கொண்டு போவார்கள் .

இறுதியில் அவர்கள் ஒரு பெரிய சீக்கிய  கோவிலில் ஒன்ற கூடி அவர்களது வழிபாடுகள்மற்றும் விருந்து 
முடிந்து வீடு திரும்புவார்கள் .

கடந்த ஞாயிறன்று என்னால் பிற் பாதி ஊர்வலம் தான் பார்க்க முடிந்தது 
துவக்கமுதல் band ஊர்வலம் எல்லாம் அருமையாக இருக்கும் .
இதில் வேடிக்கை என்னவென்றால் இருபது பிரிட்டிஷ்காரர்கள்  ஹரே ராமா குழுவை சார்ந்தவர்கள் நடனமாடிக்கொண்டு ஊர்வலத்தில் செல்வார்கள் :))
பைசகி பற்றிய விவரம் இங்கே காணவும் .
http://www.bbc.co.uk/religion/religions/sikhism/holydays/vaisakhi.shtml

                                                                                      

                                                                                           
                                நகர் கீர்த்தன் பாடிக்கொண்டு செல்லும் குழுவினர் 


                                                                                                                 
                                                                                                                       தொண்டர் படை
                                                                                                                                                                

.நான் இந்த ஊர்வலத்தை தவறாமல்  பார்த்து விடுவேன் 
புது புது ஃபாஷன் சல்வார்கமீஸ் இங்கேதான் எனக்கு பார்க்க முடியும் :))

..........................................................................
மதராஸி .


இரண்டுநாட்கள்  முன் உறவினருடன் இங்குள்ள பெரிய 
வைத்தியசாலை செல்ல நேரிட்டது .
உறவினருக்கு கையில் முறிவு ..
அங்கு X Ray   எடுக்க சென்ற இடத்தில ஒரு சீட்டு கொடுத்தார்கள்
அதனை நாங்கள் வைத்து கொண்டு அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டோம் அப்போது அங்கிருந்த ஒரு பஞ்சாப பெரியவர் ..[பஞ்சாபி மொழியில் என்னிடம் எதோ சொன்னார் ..எனக்கு சரியாக விளங்கவில்லை .மீண்டும் ஹிந்தியிலும் எதோ சொன்னார் அந்த ஆக்சண்டும் புரியவில்லை !!.பிறகு  ஆங்கிலத்தில் என்னிடம் அந்த துண்டு சீட்டினை அங்குள்ள  பெட்டியில் போடுமாறு சொன்னார் .
இப்போது மீண்டும் பஞ்சாப் பெரியவர் என்னிடம் ..
பேட்டி நீ பாகிஸ்தானா ? என்றார் ... நான் ...இல்லையென்றே ன் /சிறீலங்கனா ??..அதற்கும் இல்லைன்னு சொன்னேன் 
மீண்டும் இந்தியாவா என்றார் ..நான் ஆம் என்றேன் 
மறுபடியும் ..கல்கத்தாவா என்றார் ..நான் இல்லை சவுத் இந்தியன் என்றேன் 
அவர் விடுகிரார்போலில்லை மீண்டும் ..ஓ கேரளாவா இல்லை பாங்களூரா ???????????

இப்போ அழுது விடும் நிலையில் நான் ...

இல்லை நான் தமிழ் நாடு மதராஸி  ..என்றேன் 

ஓ மதராசி :)ஐ  லைக் why this kola veri song அண்ட் மசாலா தோசா  என்று சொலிட்டு கடகடக்டா என்று சிரித்தார் ....

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .இது நான் எனக்கே சொல்லிக்கிட்டது .


20 comments:

 1. I also like...why this kola veri song அண்ட் மசாலா தோசா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  அங்க உள்ள மக்களுக்கு சீக்கியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வித்தியாசம் தெரியுமா ஏஞ்சலின் ?

  ReplyDelete
  Replies
  1. இவங்களுக்கு எல்லாரையும் தெரியும் ரெவரி ..
   60/எழுபதுகளில் garments மற்றும் சில தொழிர்சாலைகளில்வேலை செய்ய பாகிஸ்தானியர் மற்றும் இந்தியாவில் இருந்து சீக்கியர் எல்லாரும் வரவழைக்கப்பட்டனர் .

   இங்கே ஆங்கிலத்துக்கு அடுத்து அதிகம் பேசிய மொழி பஞ்சாபி அடுத்து பாகிஸ்தானியரின் உருது :))

   ஆனால் ஐரோப்பிய ஒன்றிய குளறுபடிகளால் மற்றும் குள்ளநரித்தனத்தால் இப்போது பாகிஸ்தானியர் மூன்றாம் இடத்தில இருந்து நான்காம் இடத்தில்
   மூன்றாமிடத்தில் ....polish :))

   Delete
  2. I did not know that...

   My Aunt is a pole...She somehow has managed to live with a Tamil male,my uncle for 45 years...

   I always tell her ...."It is a medical miracle..." -:)

   Delete

  3. 2004 இக்கு பிறகு போலிஷ் மொழி தான் uk வில் அதிகம் பேசப்படுது அப்புறம்பஞ்சாபி உருது குஜராத்தி பெங்காலி!!!
   second place goes to polilsh ..then punjabi ...urudhu bengali..
   in population .as ...we Indians speak several languages ..
   and now the Poles are
   the biggest UK community by foreign nationality - and the second (after India) by country of birth.

   Delete
 2. அருமையான படங்கள் ஆஸ்பத்திரியிலும் குறும்பூ:)))

  ReplyDelete
  Replies
  1. ஆஅஆ :))நேசன் விடுமுறையா ?
   சீசீ :))நான் குறும்பெல்லாம் செய்யமாட்டேன் ...நல்லபிள்ளை .

   Delete
 3. 1] அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள்.

  //நான் இந்த ஊர்வலத்தை தவறாமல் பார்த்து விடுவேன்
  புது புது ஃபாஷன் சல்வார்கமீஸ் இங்கேதான் எனக்கு பார்க்க முடியும் :))
  //

  ;))))) அதானே பார்த்தேன். ;)))))

  ReplyDelete
 4. 2]

  //இப்போ அழுது விடும் நிலையில் நான் ...

  இல்லை நான் தமிழ் நாடு மதராஸி ..என்றேன்

  ஓ மதராசி :)ஐ லைக் why this kola veri song அண்ட் மசாலா தோசா என்று சொலிட்டு கடகடக்டா என்று சிரித்தார் .//

  பேசாமல், முதலிலேயே மதறாஸி எனச்சொல்லியிருக்கலாம் நீங்க்ள்.

  அருமையான உரையாடல்கள். ;)))))

  அருமை. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்..
  ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா ..முதலிலேயே சொல்லியிருக்கலாம் ..ஆனால் இங்குள்ள வயதான பஞ்சாப் தாத்தாக்கள் ..
   ரொம்ப கேள்வி கேப்பாங்க இல்லைன்னா இன் 1947/..Indira Gandhi என்று ஆரம்பிச்சு ஆஸ்பிடல் சூழலையே மாத்திருவாங்க ..
   நமக்கு ஏற்கனவே சிலபல அனுபவம் இருக்கு :)

   Delete
 5. உங்கூருப்பக்கம் பஞ்சாபிங்க அதிகம் போலருக்கு! :) புது டிசைன் சுரிதார் பார்க்கறீங்க சரி, அதெல்லாம் எங்க வாங்குவீங்க? சென்னைல இருந்தா...அல்லது லண்டன்லயே கிடைக்குதா? :)))

  மதராஸி...ஹிஹிஹி!!

  ReplyDelete
  Replies
  1. மகி :)) நாம் வசிப்பது லிட்டில் இந்தியா ..:))
   இங்கே நிறைய கடைகள் இருக்கு ..இப்பகூட கொஞ்சம் தள்ளி கடைல ஸ்டாக் கிளியரன்ஸ் போட்ருக்கான் .

   லேட்டஸ்ட் பாஷன் எல்லாம் இங்கே உடனே கிடைக்கும் ..தைத்தும் கொடுப்பாங்க உடனே குமரன் சில்க்ஸ் போல

   Delete
 6. நல்ல படங்களுடன் பஞ்சாபியர்களின் கொண்டாட்டம் அழகாக இருக்கிறதே...:)

  அவர்களுக்கு இக்கொண்டாட்டம் மத சார்பானதா?

  ReplyDelete
 7. தில்லியிலும் பைசாகி ஊர்வலங்கள் நடைபெறும்...

  நம்ம தோசை எல்லா இடத்திலும் பாப்புலர்..... தோசையும் பக்கெட் சாம்பாரும்...:))))

  வட இந்தியர்களுக்கு நம்முடைய எல்லா சாப்பாடு ஐட்டமுமே பிடிக்கும்... அவர்களுடைய சப்ஜிகள் நமக்கு பிடிப்பது போல்.

  ReplyDelete
 8. நல்ல அனுபவபகிர்வு அஞ்சு. எனக்கு இக்கூட்டத்தைப்பார்க்க இந்தியாவா ,இலண்டனா என நினைக்கத்தோன்றுகிறது.

  ReplyDelete
 9. நல்ல பஞ்சாபிகளின் கொண்டாட்ங்களை பார்த்து ரசித்தேன்.

  பஞ்சாப் பெரியவருடன் உரையாடல் அருமை.

  ReplyDelete
 10. அருமிஅயான படங்களுடன் சுவையான அனுபபகிர்வு சுவாரஸ்யமாக உள்ளது.//
  .நான் இந்த ஊர்வலத்தை தவறாமல் பார்த்து விடுவேன்
  புது புது ஃபாஷன் சல்வார்கமீஸ் இங்கேதான் எனக்கு பார்க்க முடியும் :))
  // :):)

  ReplyDelete
 11. ஆஹா இதை இப்போதான் பார்க்கிறேன்ன்..

  ///ஓ மதராசி :)ஐ லைக் why this kola veri song அண்ட் மசாலா தோசா என்று சொலிட்டு கடகடக்டா என்று சிரித்தார் ....///

  ஹா..ஹா..ஹா.. கரீட்டாத்தான் சொல்லியிருக்கிறார்:).

  ReplyDelete
 12. அட! இது இப்போதான் முதல் முறையாகப் படிக்கிறேன் போல!! எப்படியோ மிஸ் ஆகி இருக்கு. இது 'கொலவெறி' சீசன் போஸ்ட்டா!!

  //.நான் இந்த ஊர்வலத்தை தவறாமல் பார்த்து விடுவேன்
  புது புது ஃபாஷன் சல்வார்கமீஸ் இங்கேதான் எனக்கு பார்க்க முடியும் :))// ம். ;)))

  ReplyDelete
 13. ஆகா
  இந்தப் பதிவுகள் ஒரு கலாச்சராத்தை பதிவு செய்திருகின்றன ...
  தொடர்க
  வாழ்த்துக்கள் மதராசி

  ReplyDelete