அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/25/13

Set Dosai /Kal Dosai & ரசித்து ருசித்த நட்பூக்களின் அசத்தலான சமையல் குறிப்புகள்                                     


                                         கொஞ்சம் மிளகா பொடி    மேக்கப்போடு


கொஞ்சம் வெங்காய மேக்கப்போடு :))

NATURAL BEAUTY :))

தேவையான பொருட்கள் 
பச்சரிசி ...1 கப் 
இட்லி அரிசி ...1 கப் 
உளுந்து .......1/2 கப் 
வெந்தயம் ...1  தேக்கரண்டி 
அனைத்தையும் நான்கு 
மணி நேரம் ஊறவைத்து ..வெந்தயம் உளுந்து 
அரைத்த பின் இரண்டு அரிசிகளையும் 
ஒன்றாக அரைத்து அனைத்தையும் 
ஒன்றாக கலந்து பத்து மணி நேரம் புளிக்க வைத்து 
சற்றே தடிமனான தோசைகளாக வார்க்கவும் .


தோசை வார்க்கும்போது கரண்டியால்தேய்த்து  வட்டம் போட
வேண்டியதில்லை .சற்றே லேசா ஒரு சுற்று சுற்றினால் போதும் .
வார்த்து அதன் மேல் ஒரு மூடி போட்டு இரண்டு நிமிடம் வைத்தால் 
தோசை வெந்து விடும் .எனக்கு சுடும்போது வந்த சந்தேகத்தில் 
எதற்கும் இருக்கட்டும் என்று திருப்பி போட்டும் சில படங்கள்
:)) எடுத்தேன் 
தோசை பஞ்சு போல மென்மையாக இருந்தது 
...........................................................................................................................................................................
ரசித்து ருசித்த நட்பூக்களின் அசத்தலான சமையல் குறிப்புகள் 
                                                              ஜலீலா அவர்களின் குறிப்பு 
                                                                    காஞ்சிபுரம் இட்லி    .

இட்லின்னா அவ்ளோ விரும்பாத என் மகள் இதை மிகவும் 
விரும்பி சாப்பிட்டா     ..NUTTY அண்ட் CRUNCHY  
என்று சொல்லிக்கொண்டே  :))


அந்த பஞ்சு தோசையோட செம காம்பினேஷன் 
இது ஆத்தூர் கோழி மிளகு கறி 
நன்றி சொல்ல சொன்னாங்க கணவர்அன்ட் மகள் 
மிக சுவையாக இருந்ததாம் :))

22 comments:

 1. மேக்-அப் போட்டுள்ள முதல் இரண்டு தோசைகளும் சூப்ப்ர். அதிலும் முதல் தோசை ஓட்டை ஓட்டையாக பார்க்கவே மிகவும் அழகாக, உடனே ருசிக்க வேண்டும் போல உள்ளது.

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா :))
   முதல் இரண்டும் திருப்பவில்லை அப்படியே மூடி போட்டு சுட்டது .மூன்றாவது திருப்பி விட்டதால் அந்த ஓட்டைகள் தெளிவா இல்லை .
   முதல் ஆனியன் செட் தோசை உங்களுக்கே ..

   Delete
  2. நோஓஓஓஓஓ இத நான் ஒத்துக்க மாட்டேன்ன் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஉ:) எல்லாமும் எனக்கே...:)

   Delete
 2. அட அட இட்லி, தோசை, சட்னி-ன்னு சமையல் அசத்தலா இருக்கு...:)

  ஓ.. ஆத்தூர் கோழி மிளகு கறி ... அதுவும்...:)

  தோசை உங்க ரெஸிப்பியோ... பார்த்தாலே தெரியுது அவ்வளவு மென்மையா இருக்கு...
  ம்.ம். நடக்கட்டும் நடக்கட்டும்...:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி :)))எது வேணுமோ சொல்லுங்க DHL பார்சலில் அனுப்பிடறேன் :))

   Delete
 3. விதவிதமா சமைப்பதோடு, அழகாப் படங்களும் பிடித்து எனக்கும் (சமைக்கும் + சாப்பிடும்) ஆசையைக் கிளப்பிவிட்டீங்க... பாராட்டுகள் ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா :))
   நட்பு களிடம் இருந்து கற்றுக்கொண்ட குறிப்புகள் ..மிகவும் அருமையாக வந்தவை அதான் பகிர்ந்து கொண்டேன் சந்தோஷத்தை ..

   Delete
 4. நட்பூக்களின் அசத்தலான சமையல் குறிப்புக்களை அழகாய் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து விட்டீர்கள். எங்கள் பாராட்டுக்களை பெற்று விட்டீர்கள்.
  வாழ்கவளமுடன்.

  ReplyDelete
 5. ம்ம்ம்ம்...You are killing me my Lord...-:)

  ReplyDelete
 6. அழகான மேக்கப்...

  தோசை பஞ்சு போல் இருந்தால் எனக்கும் பொண்ணுக்கும் பிடிக்கும்...

  துணைவி பேப்பர் ரோஸ்ட் செய்வதில் No.1

  ReplyDelete
  Replies
  1. தனபாலன்சார் அந்த no 1 ரகசியத்தை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்.

   Delete
 7. நட்பூக்களின் சமையல் குறிப்புக்களை அழகாய் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு அசத்தலான மகிழ்ச்சியை கொடுத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 8. ஆஹா..நட்பு சமையல் பிரமாதம்.

  ReplyDelete
 9. விதவிதமா தோசை! சூப்பரா இருக்கு. காஞ்சீபுரம் இட்லி பார்க்கவே சாப்பிடணும் போலிருக்கு. கடைசிப் படம் க்ரீமி அண்ட் யம்மி..ஆனா நான்வெஜ்-நு சொல்லிட்டீங்க...அவ்வ்வ்வ்வ்! படம் படமாப் போட்டு நல்லா பசியக் கெளப்புறாங்கப்பா!! :)))

  லிங்க்-க்கு டாங்க்ஸுங்கோ! ;)

  ReplyDelete
 10. ஆகா மீண்டும் தோசை ரெசிப்பி. பார்க்க சூப்பரா இருக்கு அஞ்சு.நிச்சயம் செய்யனும். மற்றைய நட்பூக்களின் ரெசிப்பியும் செய்து கணவரையும்,மக‌ளையும் அசத்தியதுமில்லாமல் குறிப்பு தந்தவங்களையும் சந்தோஷப்படுத்தியிருக்கிறீங்க.

  ReplyDelete
 11. இம்முறை என்னைக் கவிட்டுப் போட்டீங்க அஞ்சு:) இப்படி தோசைதான் எனக்குப் புய்க்கும்... பார்க்கவே சூப்பர். அதில இட்லி வேறு.. என் ஃபேவரிட்டே இட்லிதான். ஹையோ எல்லாமே இன்று அருமையா இருக்கு... எனக்கு ஒண்ணும் வாணாம்ம்:))

  ReplyDelete
 12. உஸ்ஸ்ஸ் அப்பாடா நான் முதல்ல கீழ ஓடிப்போய்த்தான் பார்த்தேன்ன்.. சமையல் தொடரும்... அப்பூடி ஏதும் இல்ல:) இப்பத்தான் நிம்மதியா இருக்கு:).

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் ரெண்டு மூணு நாள் gap விடும்போதுதான் சொல்வோம் ..தினமும் போடற போஸ்டுக்கு சொல்றதில்லை :))))))))))))))))

   Delete
 13. பார்க்கவே ஆசையா இருக்கு,உங்க ஊரிலும் அரிசி உளுந்துலாம் கிடைக்குதா ?

  ReplyDelete
 14. அஞ்சு... நீங்கள் கூறிய இடத்தில் பதிவு செய்துள்ளேன்.

  உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி...:)

  ReplyDelete
 15. முதலில் 'எங்கள்' ஞாயிறு படம் பற்றி இளமதி அவர்களிடம் சொன்னதற்கு நன்றிகள்.

  செட் தோசையும் காஞ்சீபுரம் இட்லியும் சூப்பர்! கடைகளில் செட் தோசைக்கு வடகறி காம்பினேஷன் தருவார்கள். நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 16. நட்பு சமையல் அனைத்தும் பிரமாதம்.ஆத்தூர் மிளகு கறிக்கு ஜலீலாவிற்கு தான் நன்றி சொல்லனும்.அவங்க மட்டனில் செய்திருந்தாங்க,நான் சிக்கனில் செய்து பார்த்தேன்..அவ்வளவே!ஆஹா ! ஏஞ்சலின் சமைத்து அசத்துறீங்க,எனக்கு டேஷ்போர்ட் ஓப்பன் ஆகாததால் யார் பதிவு போட்டிருக்காங்கன்னு உடனே தெரிந்து கொள்ள முடியலைபா..

  ReplyDelete