அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/17/13

Quilling Flower Tutorial ..மற்றும் அச்சு பிச்சு மனிதர்கள் :))

இது எனது மகள் அன்னையர் தினத்துக்கு செய்து 
கொடுத்த வாழ்த்து அட்டை .


                                                                         
                                                                       

டுடோரியல் collage 
123
456
789

இந்த வரிசையில் பார்க்கவும் 
எண்களை அப்படியே கொலாஜ் பாக்ஸில் வைத்து பாருங்க


                         1,இதில் உள்ளபடி செய்தால்தான் நன்கு இறுக்கமாக 
வட்டம் வரும் .டூலில் இருந்து எடுத்தவுடன் கொஞ்சம் லூசாக
விட்டு க்ளூ போட்டால் ஒட்டிக்கொள்ளும் பிறகு ஷேப் செய்யலாம் .
எல்லா இதழ்களும் ஒரே அளவாக வர ஒரே அளவு நீளத்தில் 
பேப்பர் துண்டுகள் வெட்டி பயன்படுத்தவும் 
படத்தை பார்த்தாலே விளங்கும் .
என்று நினைக்கிறேன் .


அடுத்தது அச்சு பிச்சு ஆசாமிகள் 
இவர்கள பற்றி ஆசியாவில் ப்ளாகில் வாசித்தேன் .
அதற்க்கு அவார்ட் வேறு இருந்தது .
ஆனால் என்னால் ஒரிஜினல் தளத்துக்கு 
அது word press தளம் ..சென்று பின்னூட்டம் இட முடியவில்லை .
ஆனால் ரஞ்சனி மேடம் உங்க பதிவு எனக்கு நிறைய தத்து பித்துக்களை 
நினைவுக்கு கொணர்ந்து விட்டது .

(நானும் கொஞ்சம் அச்சு பிச்சு வேலைகள் செய்திடுவேன் ...:))

ஆனா எல்லாம் கியூரியாசிட்டி காரணமாத்தான் .
தேவையற்ற ஆராய்ச்சில இறங்கி முடிவில் 
பயந்து போய் அழுதும் இருக்கேன் .
செய்து முடிச்சிட்டு குய்யோ முறையோ :))

நிறைய வம்பிலும் மாட்டியிருக்கேன் :)))எல்லாம் துறு துருப்பு வேலைகள்தான் :)))
நான் நினைக்கிறேன் தத்து பித்து /அச்சு பிச்சு /துறுதுறுப்பு 
அவசரகுடுக்கை தனம் எல்லாமே First Cousins,பங்காளிகள்தான் என்று :))

நான் சந்தித்த அச்சு பிச்சுக்கள் /தத்து பித்துக்கள் 
1, how sweet aunty 

இவர் வாயில் எப்பவும் how sweet // என்ற வார்த்தை வரும் 
இன்ன இன்ன விஷயங்களுக்கு என்றில்லை ..
பாசானாலும் அதே தான்ஃ பெயில் ஆனாலும் டூர் போறேன் என்றாலும் அதே தான் புது ட்ரஸ் போட்டாலும் அதேதான் ..பட்டாசு வெடிச்சாலும் இல்லை அதே பட்டாசு நமுத்து  வெடிக்காமல் போனாலும் அதே 


HOW SWEET :))


இவருக்கு அந்த வார்த்தை மனப்பாடமாகி போய் 
எங்கள் ஆலயத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை  விவாகரத்து செய்ய 
போகிறேன் என்று சொல்ல அதற்கும் இவர் அதே வார்த்தையை சொல்லஅந்த மனிதர் நொந்து கோபத்தில் சென்று விட்டார் .அவர் மனதில் இதை வைத்து கொண்டிருந்தார் போலும் .ஒருமுறை நம் HOW SWEETஆண்டிக்கு பாத்ரூமில் 
வழுக்கி விழுந்து பயங்கர முறிவு ..இப்போ விவாகரத்து பார்ட்டி வீட்டுக்கு 
வந்து எவ்வாறு விழுந்தார்கள் என்று விவரம் கேட்டுகொண்டிருந்தார் 
ஆண்டியும் ..விலாவரியாக சொல்லி முடிக்கவும் ..இவர் 
HOW SWEET!!! என்று சொல்லவும் ஆண்டியின் முகத்தில் எள்  கொள் /எல்லாம் சேர்ந்து வெடித்தது ..NOW A(U)NTI CLIMAX :))
அதிலிருந்து ஆண்டி HOW DARE ஆன்டி :)))
அவங்க அன்றில் இருந்து ஹவ் ஸ்வீட் சொல்றதேயில்லை :)).

அடுத்த அ ச்சு பிச்சு .சம்பவங்களின் ஹீரோஸ் ..காதாட்டி டேனியல் அங்கிள் .
மற்றும் தல "" தாத்தா .

வேறொரு பதிவில் :))

இப்படிக்கு 
ஏஞ்சலின் :))

26 comments:

 1. வாழ்த்து அட்டை பிரமாதம்.. வண்ணத்து பூச்சி அழகு..உங்க மகளுக்கு என் .பாராட்டுக்கள். அச்சு பிச்சுகள் தத்து பித்துக்கள் படித்து ரசித்தேன்..:)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராதா

   Delete
 2. வாழ்த்து அட்டை அழகு... அருமை... வாழ்த்துக்கள்...

  அச்சு பிச்சு... தத்து பித்து... தலை சுத்துது சாமியோய்...!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கே பயப்படலாமா தனபாலன் ,,இன்னும் வரப்போகுது :))

   Delete
 3. HOW SWEET STORY ........ ஆஹா ஹெள ஸ்வீட்டாக உள்ளது! ;)

  தங்கள் மகள் செய்து கொடுத்துள்ள் அன்னையர் தின கார்ட் சூப்பர்.

  நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் ஹௌ ஸ்வீட் ரசித்ததற்கும் மிக்க நன்றிண்ணா

   Delete
 4. 123
  456
  789
  ???

  ரொம்ப நேரம் குழம்பிப்போயட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. அந்த எண்களை அப்படியே கொலாஜ் பாக்ஸில் வைத்து பாருங்க ..குழப்பமே வராது :)))

   ஆனாலும் நான் இன்னிக்கு கொஞ்சம் அச்சு பிச்சு தத்து பித்துன்னு சில வேலை செய்து வச்சிருக்கேன் ரெவரி :)) sorry for the confusion

   Delete
 5. Replies
  1. மிக்க நன்றி அக்கா .

   Delete
 6. மஞ்சள் பூ அழகாய் இருக்கு. அன்னையர் தின கார்ட் சூப்பர்! :)

  கொலாஜும், அதுக்கு உங்க விளக்கமும்...ஹஹஹா! :)))

  அச்சுப்பிச்சு மனிதர்கள் கதை அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங், ஹவ் ஸ்வீட்?! ;) :)

  ReplyDelete
  Replies
  1. ஆன்டி வாயில் இனி ஸ்வீட் கூட போகாது :)))))))

   .அவ் அவ்வ :))

   நமக்கு வெதர் மாற்றான் கொஞ்சம் வேலை காட்டும் நாளைக்கு ஒரு போஸ்ட் போட்டுட்டு கொஞ்சம் இடைவெளி தர்போறேன்

   Delete
 7. மகள் வடிவமைத்த வாழ்த்து அட்டை பிரமாதம். அன்னையர் தினத்தில் அன்னை விரும்பும் வகையில் அருமையான பரிசு.

  அச்சு பிச்சுப் பகிர்வு அருமை. ஹௌவ் ஸ்வீட் ஆன்ட்டி எனக்கு ஒரு மாமியை நினைவுபடுத்துகிறார். அந்த மாமி நல்ல விஷயங்கள் சொல்லும்போதெல்லாம் அடப்பாவமே என்றும் கெட்ட விஷயங்கள் கேள்விப்படும்போது இது நன்னாயிருக்கே என்றும் சொல்வார். பழக்கதோஷம்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கீதா .ஆமாம் நீங்க சொல்வதை போல சில பேர் இருக்காங்க எனக்கும் ஒரு உறவினர் அத்தை இருக்காங்க ..கல்யாண வீட்டில் போறேன் என்பார்கள் துக்க வீடுகளில் போயிட்டு வரேன் என்பார்கள் ..நிறைய பேர் அவங்களை திட்டியும் இருக்காங்க பாவமாயிருக்கும் !!

   Delete
 8. மகளின் கார்ட் அழகாக இருக்கு. அழகாக செய்முறை விளக்கம் அஞ்சு. உங்க அச்சுபிச்சு how sweet. சிரிப்போடு சிந்திக்கிற விடயம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்முலு

   Delete
 9. ரசித்து சிரித்தேன்.அடுட்த பதிவு சீக்கிரம்’

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸாதிகா ..சீக்கிரம் எழுதறேன் :))

   Delete
 10. ஆஹா.. அருமை. முதலில் குட்டி அஞ்சுவின் கார்ட் ரொம்ப அழகு. வாழ்த்துக்கள் அவருக்கும்!

  க்விலிங் Tutorial செய்முறைப் பயிற்சி அருமை. கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு அழகாக விளக்கப்படத்துடன் பதிவு.

  அச்சுப்பிச்சு தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளமதி

   Delete
 11. வாழ்த்து அட்டை அழகு .. வண்ணத்து பூச்சி அழகு..உங்க மகளுக்கு என் பாராட்டுக்கள். அச்சு பிச்சு- தத்து பித்து- படித்து ரசித்தேன்....அருமை...

  ReplyDelete