அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/15/13

சோள தோசை /Jowar Dosai...பைனாப்பிள் ரசம் /Strawberry smoothie ..


சோள  தோசை 


         
இதுதான் jowar எனப்படும் வெள்ளை சோளம் 


 


            


             


                
இந்த சுலப தக்காளி சட்னி .ஆசியா அவர்களின்
பார்த்து செய்தேன் ..காஷ்மிரி மிளகாய் தூள் 
சேர்க்காததால் நல்ல சிவந்த நிறம் வரவில்லை 
ஆனால் சுவை அபாரம் .


                                         
  

தேவையான பொருட்கள் காய்ந்த சோளம் .....2 கப் 
இட்லி அரிசி ....1 கப் 
உளுந்து ....1 கப் 
வெந்தயம் ...1 தேக்கரண்டி 
சோளத்தை சுமார் எட்டிலிருந்து 6-8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
அரிசி /உளுந்து  எப்பவும் இட்லிக்கு ஊறவைக்கும் நேரம் போதும் .
நான் முதலில் சோளத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தேன் 
பின்பு .உளுந்து +வெந்தயம் ,மற்றும் அரிசியை கிரைண்டரில் அரைத்து .,
மூன்றையும் ஒன்றாக கலந்து புளிக்க வைத்து .தோசை சுட்டேன் 
முன்பொருமுறை மனோ அக்கா அவர்களின் சோள இட்லி செய்ய 
ஜோவர் வாங்கி வர சொன்னேன் :))))
இரண்டு கிலோ சோளம் ...வந்தது இப்போ பயன்படுகிறது :))


                                                                                  .....................................
நன்றி மகி :))))))))))                    
மகி சொன்னாற்போலவே ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஐந்து ப்ளஸ் 
பால் ப்ளஸ் ..மற்றும் யோகர்டுக்கு பதில் fresh கிரீம் சேர்த்து 
அடித்தேன் ..     

                                                                             

வீட்டில் நிறைய பழங்கள் பை ஒன் கெட் ஒன ஃப்ரீ இல்
 பைனாப்பில் ....
அதில் செய்த பைனாப்பிள் ரசம் 
ரெசிப்பி உபயம் மேனகா ...
நன்றி மேனகா 


                                                                                

இந்த படம் ஸாதிகா அவர்களுக்காக :)))
களாக்காய் 

                                                                             

அன்புடன் 
Angelin 

23 comments:

 1. சுவையான தோசை...

  தக்காளி சட்னி கலர் இல்லாவிட்டாலும் சுவையாக இருந்தால் சரி...

  செய்முறை குறிப்பிற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .தனபாலன் ..உங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதி எடுத்துக்கோங்க

   Delete
 2. ஆகா.. நல்ல நல்ல குறிப்புகள் அஞ்சு...:)
  வெள்ளைச் சோளம் தோசைக்கு போட்டிருக்கிறீங்களே.. எங்கை வாங்குனீங்க.. அதாவது ஆசிய பொருட்கள் கடையிலா இல்லை...

  அப்புறம் அது கோது வராதோ.. அது ஊறினாப் போகவைக்கலாமோ?

  தக்காளி சட்னியும் சூப்பர்தான்...

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் அது கோது வராதோ.. அது ஊறினாப் போகவைக்கலாமோ//

   கோது என்றால் தோல் ...அப்படியா ..

   அப்படின்னா தோல் வராது இதில் .கொஞ்சம் கடினம் என்பதால் பத்து மணி நேரம் ஊற வைக்கணும்
   மிக்சியில் ப்ளேட் நன்கு அரைக்கும் .#இங்கே ஆசிய கடையில் வாங்கினேன் ..வட இந்திய உணவுகள் இல் இது பிரபலம் .உடலுக்கும் நல்லது .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
   களாக்காய் ஊறுகாய் போட நன்றாக இருக்கும் .சாதிகாவுக்குஎன இணைத்தேன்

   Delete
  2. ஓ. நன்றி அஞ்சு... நாங்கள் அதனை கோது என்றுதான் சொல்லுவோம். அதையே இங்கேயும் எழுதிவிட்டேன்...:)
   சரி சரி நானும் இந்த சோளத்தில் பல பதார்த்தங்கள் செய்யலாம்ன்னு அறிஞ்சிருக்கிறேன். அதுதான் எங்கே வாங்கலாம் என்று கேட்டேன். வாங்கி முதல் தோசை செய்து பார்க்கணும்...

   மிக்க நன்றி அஞ்சு...:)

   Delete
 3. களாக்காய்ன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. இப்ப நீங்க காட்டித்தான் தெரிகிறது. ஆமா அது எதுக்கு உபயோகப்படுத்துவீங்க?

  சும்மாவே சாப்பிடலாமோ...

  நல்ல குறிப்புகள். மிக்க நன்றி அஞ்சு பகிர்விற்கு!

  ReplyDelete
 4. Replies
  1. வாங்க ரெவரி ...பைனாப்பில் ரசமும் ,அந்த ஸ்மூதியும் நீங்க சொன்னார் போல யம்மி தான் .

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 5. சோள தோசை போன்ற அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

  கலாக்காய் என்பதில் நீங்கள் காட்டியுள்ளது சற்று பெரிய சைஸாக உள்ள்து. இதுவும் சாப்பிட்டுள்ளேன். ஆனால் சற்றே புளிக்கும்.

  இதைவிட குட்டியூண்டு சைஸ் கலாக்காய்கள் உண்டு. எங்கள் ஊர் திருச்சியில் சீசனில் கிடைக்கும். வெகு அருமையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும், தனியே அப்படியே சாப்பிடவும் ஜோராக இருக்கும்.

  அந்தக் குட்டியூண்டு சைஸ் கலாப்பழம் அதைவிட மிகவும் டேஸ்ட் ஆக இனிப்போ இனிப்பாக இருக்கும். குட்டியூண்டு கலாக்காய்.பழமான பின் கருப்பாக இருக்கும். [மிளகுபோல் கருப்பாக] ஆனால் பளபளப்பாக வழுவழுப்பாக இருக்கும். அதன் இனிப்புச்சுவை அலாதியானது.. .

  பதிவுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா ..இந்த கலாக்காய் சரியான புளிப்பாக இருந்தது ...இது பழுத்ததும் நாவற்பழம் போல கரு நிறத்தில் இருக்கும் ..அதுவும் அப்பா ஒருமுறை திருவாரூர் பக்கமிருந்து கொணர்ந்தார் . ஊறுகாய் செய்வோம் கலாகாயில் .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 6. ஆஹா..காலையில் காஃபி கப்போட இங்க வந்தா...இப்படி படம் படமா காட்டி பசியெடுக்க வைக்கறீங்களே!!! :)

  அம்மா சிறுவயதில் சோளச்சோறு-சாமைச் சோறு-வரகரிசி சோறு செய்வோம் என்பாங்க. சோளத்தில் தோசையும் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா சாப்பிட்டதில்லை ஏஞ்சல் அக்கா! வழக்கம் போல் ஒரு சந்தேகம், சோளம் வயித்துக்கு கெடுதல் ஏதும் செய்யுமோ? இல்ல எதுவும் ஆகாதா?!

  களாக்காய் நான் பள்ளிக்காலத்தில் சாப்பிட்டிருக்கேன், இப்பக்கூட லண்டன்ல கிடைக்குதா? அவ்வ்வ்வ்வ்...என்ஸாய்!!

  ஸ்மூத்தில ப்ரெஷ் க்ரீமா? கலக்குங்கோ! எல்லா ரெசிப்பிகளும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி ..ஜோவர் எனும் சோளம் உடலுக்கு நல்லதுன்னு கேள்விபட்டிருக்கேன் ..வட இந்தியர்கள் ஜோவர் ஆட்டா என்று இதை அரைத்துகோதுமை மாவுடன் சப்பாத்தி செய்துசாப்பிடறாங்க .


   க்ரிட்ஸ் என்று கீதா ஆச்சல் சொன்னது இதுவான்னு தெரில ..ஆனாலும் இது உடலுக்கு நல்லதுதான் .
   ..
   களாக்காய் ஊரில் போனப்போ காமிராவில் போட்டு கொண்டாந்தேன் ..
   இங்கே களாக்காய் கிடைக்கலை இது வரை :))

   Delete
 7. ஓ..இதுதான் களாக்காயா?பெயர் தெரியாமல் யாரோ தந்து எப்பவோ சாப்பிட்டு இருக்கிறேன்...ம்ம்...ஞாபகம் வந்துடுச்சி..சமீபத்தில்தான் என் தங்கை பாலிதின் கவரில் உப்பு மிளகாய் தூவி பொட்டலம் 10 ரூபாய் என்று வாங்கி வந்தாள் .எலந்தப்பழம் என்று நினைத்து.சைஸில் சிறிய வித்தியாசம்.சாப்பிட்டுப்பார்த்தால் புளிப்பு சுவையுடன் வித்தியாசமாக இருந்தது.நீங்கள் சொல்லாதவரை அதன் பெயர் தெரியாது ஏஞ்சலின்.படத்துக்கும்,தகவலுக்கும் நன்றி.

  அதெப்படி ஜெர்மனியில் இருந்து கொண்டு இதெல்லாம் கிடைக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. /அதெப்படி ஜெர்மனியில் இருந்து கொண்டு இதெல்லாம் கிடைக்கிறது? //
   நன் இப்ப இங்கிலாந்து :)) இன்னும் இங்கே களாக்காய் கிடைக்கல்லை .இந்த களாக்காய் ..நான் சென்னைக்கு 2011 போனபோது வாங்கி எடுத்த படம் ..வட இந்திய பொருட்கள் எல்லாம் கிடைக்குது சாதிகா இங்கே .நீங்க சொன்ன அந்த பொரி ..இங்கும்பிளாஸ்டிக் பாட்டிலில் விக்கிறாங்க ..அதில் இனிப்பு coating கும் இருக்கும்

   Delete
 8. சோள தோசை வெள்ளை வெளேர் என்று அருமையா இருக்கு..தக்காளி சட்னியும் கலர் இல்லையென்றாலும் சுவை தெரியுது படத்துல.. களாக்காய் இங்க சீசன்ல கிடைக்கும். கோபு அண்ணா சொல்ற பழம் திப்பிலி பழம்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா வருகைக்கு மற்றும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ....திப்பிலி பழமா ..அதுவும் இப்படிதான் இருக்குமா ..அடுத்த முறை ஊரில் பாக்கணும் ..
   தோசை முதல் முயசியே அருமையாக வந்தது

   Delete
 9. நீங்கள் வெள்ளை சோளத்தைக்காடியது எனக்கு ப்ழைய ஞாபகம் பீறிடுகிறது ஏஞ்சலின்.சின்னவளில் அரிசிக்க்டையில் கிடைக்கும் இந்த சோளத்தை வாங்கி மண் சட்டியில் போட்டு வறுப்போம்.சோளம் வெடித்து முகத்தில் தெரிகும் ஆகையால் கனமான டவலை சோளத்தின் மீது போட்டு கையால் திருப்பி விடுவோ,சப்தம் அடங்கியதும் சட்டியை கீழே இரக்கி துணியை நீக்கி பார்த்தால் மல்லிகைப்பூப்போல் பாப்கார்ன்..வித்தியாசமாக இருக்கும்.
  சோளதோசை சூப்பர்.பிரன்ஸ் சமையலைப்போட்டு அசத்திட்டீங்கப்பா.

  அது என்னன்னு தெரியலே.உங்கள் புதுபதிவு இப்போது என் டாஷ் போர்டுக்கு வர்ரதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகா நான் கொஞ்சமாச்சும் சமைக்கிறேன்னா அதற்க்கு இந்த அத்தனை தோழிகளும் தான் காரணம் .
   அதான் செய்ததும் உடனே சந்தோஷத்தில் படமெடுத்து போட்டிடுவேன்

   Delete
 10. சோள தோசை அருமை, தக்காளி சட்னி நல்ல பொருத்தம்.

  களாக்காய் கோவையில் கிடைக்கும்,சும்மா சாப்பிடலாம் ஊறுகாய் செய்து சாப்பிடலாம்,இங்கு கிடைப்பது இல்லை.

  பைனாப்பில் ரசமும் ,ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதி குறிப்பும் நன்றாக இருக்கிறது படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 11. தோசையைப்பார்க்கவே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு. இங்கு என்ன வெரைட்டி தோசையென்றாலும் 3நேரமும் சாப்பிடத்தயார். சோளத்தோசையும் ட்ரை பன்னுறேன். தக்காளிச்சட்னி,பைனாப்பிள் ரசம் பார்க்க நல்லா இருக்கு.
  ஸ்மூத்தி நான் தயிர் சேர்த்துசெய்தது. ப்ரெஷ் க்ரீம் சேர்த்து பார்க்கனும்
  களாக்காய் பார்த்ததே இல்லை. ஆனா சாப்பிடனும் போல இருக்கு.
  மிக்க நன்றி அஞ்சு பகிர்வுக்கு.

  ReplyDelete
 12. சோள தோசை ஒரு புதிய அறிமுகம் எனக்கு. இங்கே கடைகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சோளம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். ஸ்ட்ராபெர்ரி சீசனில் தினமும் பள்ளி விட்டு வரும்போது ஸ்மூத்தி தயாராக இருக்கவேண்டும் பிள்ளைகளுக்கு! ஒவ்வொரு பழ சீசனிலும் அந்தந்த பழ ஸ்மூத்தி! களாக்காய் நினைக்கவே நாவில் நீரூறுது. எல்லாமே செம கலக்கல். பாராட்டுகள் ஏஞ்சலின்.

  ReplyDelete
 13. ரசம் செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.தோசை,லிஸ்ஸி,சட்னி அனைத்தும் சூப்பர்ர்!! களாக்காய்லாம் கிடைக்குதா உங்களுக்கு,அதை பார்த்ததும் நாவூறுதுப்பா ஒரு பார்சல் ப்ளீஸ்..

  ReplyDelete
 14. சோள‌ தோசை, பைனாப்பிள் ரசம், தக்காளி சட்னி எல்லாம் அருமை ஏஞ்ச‌லின்!!

  ReplyDelete