அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/18/13

Book Quilling

புக் க்விலிங் என்பது  பழைய புத்தகத்தின் தாள்களை 
பயன்படுத்தி க்வில் செய்வது .

                                                                    

ஒரு வகையில் மீள் பயன்பாடு /மீள் சுழற்சி எனவும் கூறலாம் .
ஒரு ரஷ்ய பெண்மணியின் வலைப்பூவில் இதற்க்கான 
செய்முறை பார்த்தேன் .அவர்களை பார்த்து சற்றே எனது 
முறையில் மாற்றம் செய்து செய்தது இந்த பெயர் பலகை .
இது நானும் என் குட்டி பெண்ணும் சேர்ந்து செய்தது .
குட்டி மேடத்தின் அறை  கதவில் மாட்ட வேண்டும் என்றாள் .

இதன் அளவு 17இன்ச் /7 இன்ச் 

charity shop இல் முப்பது பென்னிசுக்கு ஒரு பழைய புத்தகம் 
வாங்கி அதில் ஆங்கில எழுத்துக்களை வரைந்து 
வெட்டினேன் .எழுத்துக்கள் சுமார் எட்டு காகித துண்டுகளை 
ஒன்றின் மீது ஒன்றாக   வைத்து லேயர் போல வைத்து பசை 
வைத்து கவனமுடன் ஓட்டனும் .மகள் தானே செய்வேன் 
என்று விருப்பப்பட்டதால் ..கொஞ்சம் எழுத்துக்கள் லேயர் 
பிசகி இருக்கு .
எழுத்துக்களை ஸ்டென்சில் வைத்தும் வரைந்து வெட்டலாம் .
craft knife வைத்து வெட்டுவது சுலபம் அழகாக வரும் .
ஆனால் அனைத்து எட்டு தாள் லேயரையும் ஒன்றாக
பிடித்தே வெட்ட வேண்டும் .மீதமான காகிதத்தை ஷ்ரெட்டரில்  போட்டு எடுத்து ..
கிடைத்த தாள்களை வைத்து அத்துடன் வேறு கலர் 
தாள்களை சேர்த்து பட்டர்ப்ளை மற்றும் மலர்களை 
செய்தேன் .
                                                                               


இந்த மலர் மங்குஸ்தான் பழத்தின் பின் புறம் இருக்கும்
 பாகத்தை வெட்டி காய வைத்து நடுவில் ஒரு கிறிஸ்டல்
 மணியை ஓட்ட அழகிய பிரவுன் வின்டாஜ் 
மலராகி விட்டது :))
இதே போல முன்பும் இவற்றை பயன்படுதியிருக்கிறேன் 
                               
                                                                               
எழுத்துக்களை வெட்ட சிறிய கத்திரியை பயன் படுத்தவும் 
நான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததால் 
எதிபார்த்த அழகு வரல்லை .மேலும் எழுத்துக்கள் உட்புறம் 
ஊசியால் குத்தினால் பேப்பர் எளிதில் கழண்டு வரும் .


காகிதத்தின் ஓரங்கள் பிரவுன் நிறத்தில் டார்க்காக 
இருக்கணும்னா ..எல்லா லேயரும் ஒட்டி பசை 
காய்ந்ததும் .ஸ்பாஞ்சினால் ink pad தொட்டு அதை 
எழுத்துகளின் ஓரத்தில் தடவ இந்த grunge effect வரும் 
.நான் பெரிய அட்டையின் ஓரங்களிலும் சிவப்பு ink
தடவி இருக்கேன் ..

                                                                                      

                                                                                   
                                                                  மகள் செய்த நீல நிற மலர்                      
                                                                                                                                                                          
     grunge effect இந்த படத்தில் தெரிகிறதா மகளுக்கு புத்தகம் வாசிப்பது மிக பிரியம் 
அதனால் இந்த புத்தகத்தை போல செய்து 
அதில் ஸ்க்ரிபில் செய்ததும் அவளே அன்புடன் ஏஞ்சலின் 

19 comments:

 1. அருமையான வித்தியாசமான முயற்சி! அழகு.
  தெளிவான செயன்முறை விளக்கம். மிக்க நன்றி அஞ்சு...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ஏஞ்சலின் நீங்களும், உங்கள் மகளும் செய்த கைவேலைகள் அழகு. உங்கள் மகள் செய்த புத்தகம் வெகு அழகு.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. நல்ல தடிமனா அட்டையில் செய்த மாதிரி ரொம்ப அழகா இருக்கு.. ரெம்ப பொறுமையும் கவனமும் இருக்கனும். செய்ய .ஆசைதான்.. நேரம் கிடைகிறப்ப பண்ணனும் ஏஞ்சலின்.

  ReplyDelete
 4. குட்டி மேடத்தின் அறை கதவில் மாட்ட அழகான முயற்சி ..பாராட்டுக்கள் இருவருக்கும் ...

  ReplyDelete
 5. அழகு... அருமை...

  உங்களின் ரசனைக்கும் பொறுமைக்கும் வாழ்த்துக்கள் பல... தொடருங்கள் அருமை படைப்புகளை...

  ReplyDelete
 6. புலிக்குபிறந்தது பூனை யாகுமா? Thoroughly enjoyed the creative aspect of all...

  ReplyDelete
 7. நீங்களும் குட்டிப்பொண்ணும் செய்த வேலைப்பாடு மிக அழகு..புத்தகம் கூட ரொம்ப அழகா இருக்கு,பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 8. //இது நானும் என் குட்டி பெண்ணும் சேர்ந்து செய்தது .
  குட்டி மேடத்தின் அறை கதவில் மாட்ட வேண்டும் என்றாள் .//

  ஆஹா, மிகவும் அழகாக உள்ளது.

  மற்ற அனைத்துமே நன்றாகத்தான் உள்ளன.

  இருவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. //மகளுக்கு புத்தகம் வாசிப்பது மிக பிரியம்
  அதனால் இந்த புத்தகத்தை போல செய்து
  அதில் ஸ்க்ரிபில் செய்ததும் அவளே //

  குட்டி மேடம் செய்துள்ள குட்டியூண்டு புஸ்தகம் சூப்பராக உள்ளது.

  மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. அம்மாவும் மகளும் சேர்ந்து அடி பின்னறீங்க போங்க! ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ஏஞ்சல் அக்கா! ஒவ்வொரு சின்ன டீடெய்லும் அசத்திட்டீங்க! பாராட்டுக்கள் இருவருக்கும்! :)

  ReplyDelete
 11. வாவ்! ரொம்ப அழகா இருக்கு ஏஞ்சலின். உங்களுக்கும் குட்டிப்பெண்ணுக்கும் பாராட்டுகள். ரஷ்யவலைத்தளமெல்லாம் கூட விடுறதில்லையா? சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கின்றன உங்கள் கலை சேகரிப்புகள். நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 12. மிக அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறீங்க அஞ்சு. மகளின் கைவண்ணம் சூப்பரா இருக்கு.புத்தகம் அழகாக செய்து இருக்கிறா ஷரோன். அசத்தியிருக்கிறீங்க இருவரும்.வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  ReplyDelete
 13. மிக அழகாக இருக்கிறது. ஒவ்வொன்றும் அழகாக உள்ளது. இருவரின் கைவண்ணம் அருமை. மகள் செய்த நீல பூவும் புத்தகமும் மிக அருமை.வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. தேவதையின் (ஏஞ்சலின்) கைப்பட்ட அத்தனையும் மிக அழகாக உள்ளது...

  ReplyDelete
 15. ஆஹா சூப்பர் அஞ்சு. பார்த்ததும் எனக்குப் புரியவில்லை, எழுத்துக்களை வெட்டி ஒட்டியிருக்கு இதில் எங்கிருக்கு குயில் வேர்க் என ஒரு கணம் ஓசிச்சு... பின்புதான் இதைப் படிச்சேன்ன்..

  ////எழுத்துக்கள் சுமார் எட்டு காகித துண்டுகளை
  ஒன்றின் மீது ஒன்றாக வைத்து லேயர் போல வைத்து பசை
  வைத்து கவனமுடன் ஓட்டனும் .///

  இப்போ புரிஞ்சு போச்சு, அத்தனையும் அழகு. ஒவ்வொரு முறையும் புதுசு புதுசா ட்ரை பண்ணுறீங்க.

  ReplyDelete
 16. அனைவரின் அன்பான கருத்துக்களுக்கும்..பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. நீளமா ஒரு ஃப்ரேம் இருக்கு. ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். இதுவரை மனதில் தோன்றிய யோசனைகளை எல்லாம் நிராகரித்துக் கொண்டே வந்திருந்தேன். இது கச்சிதமாக இருக்கும். செய்து முடித்ததும் ஏஞ்சல் பார்வைக்கு வரும்.
  நன்றி ஏஞ்சல்.

  ReplyDelete
 18. மிகவும் அருமை.

  ReplyDelete
 19. சூப்பர்ர் ஏஞ்சலின்!!

  ReplyDelete