அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/30/13

இன்று எங்கள் வீட்டில் மேத்தி/வெந்தய கீரை தினம் :)))

இன்று எங்கள் வீட்டில் மேத்தி தினம் :)))


நான் ஊரிலிருக்கும்போது அம்மா வெந்தய கீரை உருளை பொரியல் 
செய்வாங்க ..அதில் இரண்டு இலை தான் இருக்கும் .
இங்கு செடி வளர்ந்து கீரையாகி மஞ்சள் மலரும் வந்தபின்புதான் 
மார்க்கெட் பக்கம் இவற்றை வட இந்தியர் சமையலில் 
பயன்படுத்துகிறாங்க .

வெந்தயக்கீரை benefits இங்கே சென்று பாருங்க 
மேலே இருக்கும் கீரை சைப்ரசில் இருந்து இறக்குமதியாம் 
பெட்டியில் பார்த்தேன் .ஒரு பெரிய கட்டு கொண்டு வந்ததும் 
நேரே மகி பக்கத்தில் இருந்து எடுத்த குறிப்புகள் ))

                                                      வெந்தயக்கீரை பருப்பு கூட்டு          


இது நம்ம ரெசிப்பி 

மேத்தி /ஆலூ பராத்தாஸ் :))

வட இந்தியர்கள் இந்த மேத்தி ரொட்டியுடன் 
வெறும் தயிர் கெட்டி தயிர் தொட்டு சாப்பிடுவார்கள் 
காமாட்சியம்மா குறிப்பு .செய்து சாப்பிட சுவை அபாரம் !!!
இந்த மேத்தி ஆலூ ரோட்டி செய்முறை 

ஒன்றும் பெரிய விஷயமில்லை 
ஏற்க்கனவே சமைத்த ஆலூ .மேத்தி கூட்டு 
மீதமானது ..இருந்தது அதை அப்படியே சப்பாத்திக்கு மாவு பிசையும்போது 
சேர்த்து பிசைந்து ரொட்டிகளாக தட்டி சுட வேண்டும் :))
....................................................................................................................
இது மெயிலில் வந்த செய்தி :)))
.//miss you alll lot ...guru ,giriiiiiiiiiiiiiiiiii akkaa,vaans akka ,young moon akka ellaarkkitatum kettannu sollidunga ...koodiya viraivila vanthu ungalai vaichikkiren ...//

Guess Whoooooooooo:????

.....................................................................................................................................................


எனக்கு அன்புடன் பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு மிக்க நன்றி 
மேலே படத்தில் இருக்கும்புத்தகங்களை 
வாசித்து விட்டு விரைவில் அனைவருக்கும் பதில் தருகிறேன் .
இரண்டு நாளில் ரிட்டர்ன் செய்யணும் :))

38 comments:

 1. Replies
  1. வாங்க விஜி ..உங்க ரெசிப்பி நெல்லிகா மோர்குழம்பும் செய்தேன் .வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

   Delete
 2. வெந்தயக்கீரை கூட்டு எத்தனை தடவையானாலும் சாப்பிடலாம். அலுக்காது. சப்பாத்தி ஐடியா அருமை!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அக்கா நேற்று கீரைகளை விரும்பாத என் மகளே மிக விரும்பி சாப்பிட்டா .இக்கீரை உடலுக்கு மிக நல்லதாம் .வருகைக்கு நன்றிக்கா

   Delete
 3. வெந்தயக்கீரைச்சமையல் எனக்கும் பிடிக்கும் இங்கு விலை அதிகம் தான்:))

  ReplyDelete
  Replies
  1. இங்கே சிலநேரம் ஐந்து கட்டு ஒரு பவுண்டுக்கு கிடைக்கும் ..ஆனா நேற்று வாங்கினது 59 P .
   வீட்டில் தொட்டியிலும் வளர்த்து செய்யலாம் நேசன்

   Delete
 4. வனவாசம் வாசிக்க சுவாரசியம் மற்றவை என்னிடம் இல்லை முடிந்தால் விமர்சனம் பகிருங்கள் அஞ்சலின் அக்காள் பிறகு பார்க்கலாம் பாலகுமாரை:))) சென்னை போகும் போது!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா நேசன் .பாலகுமாரன் கதைகள் உங்களுக்கும் பிடிக்குமா ..
   சுஜாதா பாலகுமாரன் எல்லாம் இங்கே வந்துதான் வாசிக்கிறேன் ,பிரபஞ்சனின் வானம் வசப்படும் கூட படித்தேன்

   Delete
 5. நிறைய நாட்கள் இந்திய கடைகளில் பார்த்துள்ளேன்...வட இந்தியர்கள் சாப்பிடும் ஏதோ கீரைன்னு அவ்வளவா காண்டுக்கிட்டது இல்லை ஏஞ்சலின்...

  அதோட நன்மைகள் பார்த்ததால் இனி முயற்சி செய்து பார்த்திருவோம்...

  ReplyDelete
  Replies
  1. நானும் அதே தப்பை செய்திருக்கேன் ..மகி பக்கம் ரெசிப்பி பார்த்ததும்தான் அடடா இதுதானே அதுன்னு மனதில தோன்றி வாங்கி வந்தேன் ..
   நீங்களும் வாங்கிட்டு போங்க வீட்டுக்கு மேத்தி ஆலூ ரொட்டி சும்மாவே சாப்பிடலாம்

   Delete
 6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தமிழ்ல ஸ்பெல்லிங் மிசுரேக்கு விடுகினம்:)... மேதினத்தைப் போய் மேத்தி தினமாமே:)) எங்கிட்டயேவா?:)... நான் இப்போ இங்கின வந்திருக்காட்டில் என்ன ஆகியிருக்கும்?:) ஆருமே இதைக் கவனிக்கல்ல:).. இதுக்குத்தான் அதிரா போய்ப் படிக்கோணும் பதிவுகளை என எல்லோரும் சொல்லுவினம்:) ஆர் எல்லோரும் என குறுக்கு கேள்வி கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
 7. எனக்கு அன்புடன் பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு மிக்க நன்றி
  மேலே படத்தில் இருக்கும்புத்தகங்களை
  வாசித்து விட்டு விரைவில் அனைவருக்கும் பதில் தருகிறேன் .
  இரண்டு நாளில் ரிட்டர்ன் செய்யணும் :))/////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வயிற்றெரிச்சலைக் கூட்டீனம் யுவஆனர்:)).. லைபிரரியில் கிடைக்குதோ அஞ்சு? பார்க்கவே ஆசையா இருக்கு.

  அந்த கண்ணதாசனின் புத்தகத்துக்கு என்ன பெயர்? அவருடையதெல்லாம் பெரும்பாலும் நான் படிச்சதாத்தான் இருக்கும்.

  கனவு கண்டேன் தோழியும் படிச்ச ஞாபகம்.. அது ஸ்டோரி புக்கா அல்லது மகசினில் வருதோ?

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசனின் புத்தகத்துக்கு என்ன பெயர்? //

   வன வாசம் ..மிக அருமையா இருக்கு

   Delete
  2. உங்களுக்கு இங்கே borrow பண்ணி பார்சலில் அனுப்பட்டா ..

   Delete
  3. எல்லாமே இங்கு லைப்ரரில எடுத்தது அதிஸ் .இங்குள்ள லைப்ரரியன் குஜராத்தி லேடி என்னிடம் தமிழ் புத்தகங்கள் தருவிக்கட்டுமா என்று கேட்டு செய்தார் ..அவரால்தான் இப்போ நிறைய புக்ஸ் கிடைக்குது

   Delete
 8. மேத்தி ஐட்டமெல்லாம் சூப்பர். நான் சாடியில் போட்டு முளைக்க வைக்கப்போறேன்ன். நேற்று மல்லி போட்டு வச்சேன்ன்.. இன்று காலையில் போய்ப் பார்த்தேன் முளைக்கவேயில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. குண்டு மல்லியா செண்டு மல்லியா :)))ROFL:)))

   Delete
 9. ஊருக்கு போகும்போது நிறைய புத்தகம் வாங்கனும்னு நினைப்பேன்...

  நெல்லைலையோ தூத்துக்குடியிலையோ குமிச்சுப்போட்ட புத்தகங்களை வியர்க்க விறுவிறுக்க தேடி ஏதாவது ரெண்டு மாட்டி...கடைசியில பெட்டி கட்டும் போது பொண்ணுக்கு பிடித்த இறால் ஊறுகாயா புத்தகமான்னு போட்டி வரும்போது பெண் பாசம் அந்த கடைசி ரெண்டு பவுண்ட் இடத்தை பிடிச்சிரும்...

  அதனால இப்ப ஓசில ஆன்லைன்ல PDFல படிச்சாதான் உண்டு...

  (இப்ப புரியுது ஏன் படைப்பாளிகள் ஏழையாகவே இன்னும் இருக்காங்கன்னு...சாருவை கூட திட்ட மனம் இப்ப வரலை...தப்பு நம்ம மேல தான்.)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரெவரி ..இந்த புத்தகங்கள் இதைபோல நிறைய எங்க லைப்ரரில இருக்கு .
   ஜெயமோகன் /எஸ்ரா ..ரெண்டும் இருந்தது ..இதை படித்து முடித்ததும் எடுத்து வருவேன் .
   எனக்கு ஆன்லைனில் வாசிப்பது கொஞ்சம் போரிங் .
   எனக்கு சில நேரத்தில் எதை விட எதை எடுக்கான்னு மனம் தடுமாறும் :))..
   சுஜாதாவின் பல நாவல்கள் இங்குதான் வந்து படித்தேன்

   Delete
  2. திருவல்லிக்கேணி சென்னைப்பக்கம் போனா நிறைய புத்தக கடைகள் இருக்கு ....இன்னும் இருக்கும்னு நினைக்கிறேன்

   Delete
  3. எங்க வீட்ல பொண்ணு வாங்கும் புத்தக மூட்டைக்கே தனி லக்கேஜ் வேணும் ரெவரி .
   enid blyton முழு தொகுப்பும் ஹிக்கின்பாதம்ஸில் இருந்து வாங்கி வச்சிருக்கா .
   இங்கே லைப்ரைல கிடைத்தாலும் அவளுக்கே என்று வேணுமாம் :))

   Delete
 10. அருமை... நன்றி...

  காமாட்சியம்மா அவர்களுக்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் .காமாட்சியம்மாவின் பல குறிப்புகள் நான் செய்து பார்த்திருக்கேன் எல்லாமே அருமை ..
   நீங்க இன்னு ம எனக்கு திண்டுக்கல் ரொட்டி ரெசிப்பி தரவில்லை :))

   Delete
 11. எல்லாம் அருமை. ஆலு பரோத்தா படம் இழுக்கிறது. நாங்கள் வெந்தயக் கீரையைப் போட்டு சாம்பார் கூடச் செய்வோம்!

  வனவாசத்துக்கு அடுத்த பாகமும் உண்டு. மனவாசம். அதுவும் நன்றாக இருக்கும். பாலகுமாரன் கதைகளில் பெஸ்ட் 'மெர்க்குரிப் பூக்கள்' மற்றும் 'இரும்புக் குதிரைகள்' தான்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்தது வெந்தய சாம்பார்தான் ))
   மன வாசம் தேடிப்பார்க்கிறேன் இரும்பு குதிரை முன்பு வாசிதிருக்கேன் ..மெர்க்குரிபூக்கள் தேடிப்பார்க்கணும் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியண்ணா .

   Delete
 12. வெந்தயக்கீரை பயன்பாடுகள் பற்றிய விளக்கங்கள் அருமை. ஸ்ரீராம் அவர்கள் சொல்லியுள்ளது போல சாமபாரில் வெந்தயக்கீரையைப் போடுவது உண்டு. ருசியாகவே இருக்கும்.

  ஆலுபுரோட்டா படம் பார்க்க அழகாக தான் இருக்கிறது. வட இந்தியர்கள் இதை அடிக்கடி தினமும் சாப்பிடுகிறார்கள். நம்மால் அதெல்லாம் முடியவே முடியாது.

  தமிழ் புத்தகங்கள் வாங்கிப்படிப்பது கேட்க சந்தோஷமாக உள்ளது.

  நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள். நன்றிகள், நிர்மலா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .
   அடுத்த ரெசிப்பி சாம்பார்தான் வெந்தயக்கீரையில் :))
   உடலுக்கு மிக நல்லது அண்ணா வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுங்க

   Delete
 13. Thanks for trying my recipes angel Akka. Happy to see your pictures n feed back. Will come again later. Thank you!

  ReplyDelete
  Replies
  1. மகி ரொம்ப டேஸ்டியா இருந்தது உங்க குறிப்புக்கள் .நன்றிம்மா

   Delete
 14. மே தினம்!! ;))

  வழக்காமாக தவணை விடுமுறைக்கு என்னோடும் சில புத்தகங்கள் வரும். ஐடீ காணோம். ;( புக்ல வைச்சு ரிட்டர்ன் பண்னிட்டேனோ தெரியாது. ;)

  அது... க்வாக் க்வாக்தானே? என் பேர் இல்ல. அதனால்தான் இப்படி நினைக்கிறேன். ;)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இமா க்வாக் க்வாக் தான் :)))

   Delete
 15. What happened to my comment...?.?...avvvvvvv...

  ReplyDelete
  Replies
  1. இல்லையே வான்ஸ் ஸ்பாமில் கூட பார்த்தேன் ..அங்கும் இல்லை

   Delete
  2. இமா ஒரு ரகசியம் சொல்றேன் ...நான் எப்பவும் கணவரின் கார்டில் தான் புக்ஸ் எடுப்பேன் ..காணாம போனாலும் அவர்தான் fine கட்டனும் ஹா ஹா ஹா

   Delete
 16. ஆலு மேத்தி, மேத்தி பராத்தா சூப்பராக இருக்கும். படங்களில் அழகாக உள்ளன.

  புத்தகங்கள் படிப்பது குறித்து மகிழ்ச்சி. இப்போது தான் என் பதிவில் பாலகுமாரனின் தாயுமானவனை பற்றி எழுதியிருந்தேன்.

  http://kovai2delhi.blogspot.in/2013/04/blog-post_29.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆதி .முன்பே சொல்லியிருந்தீங்க இல்ல ரோஷினியும் என் மகள் போலதான் சப்பாத்தி பிரியை .அவளுக்கு மிகவும் பிடிச்சது இந்த ஆலூ மேத்தி பராதாஸ் .

   எனக்கும் எல்லா புக்சும் இப்ப கிடைக்குது ..துணை கூட சமீபத்தில் படிச்சேன் .அப்புறம் அருகம்புல் ..அதுவும் மிகவும் பிடித்தது

   Delete
  2. அஞ்சு மேத்தி பரோடாகூட ரொட்டி வகைகளில் நான் எழுதியிருக்கிறேன். உன்னுடையதும் ருசியாக இருக்கிரது. நெல்லிக்காய் பச்சடி மிக்க ஸந்தோஷம்
   ஞாபகப்படுத்தியதற்கு. படங்களெல்லாம் அழகாக இருக்கு. ருசியும்தான் டேஸ்டி.
   புத்தகங்கள் இப்போது மஹாபாரதம் 10 பெரிய புத்தகங்கள்.. அது முடியவே நாட்களாகும்.
   திரு தனபாலன் அவர்களுக்கும்,உனக்கும் நன்றி.அன்புடன்

   Delete