அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/16/13

ரசித்து ருசித்தவை பருத்தி துறை ,ஓடக்கரை தோசை


                                                                             

சமீபத்தில் மாதேவி அவர்களின் வலைப்பூவில் இந்த தோசை 
குறிப்பு பார்த்தேன் .
தோசை படத்தில் பார்க்கும்போதே வித்யாசமாக இருந்தது 
அவர்களின்செய்முறையும் நம்மூர் தோசை போலில்லாமல்
 புதிதாக இருந்தது .நான் இங்கே எனது முறையில் சிறிது 
மாற்றம் செய்து தோசை செய்தேன் 
..மென்மையாக பட்டுபோல வந்தது .


ஒரிஜினல் குறிப்பு :
பருத்தி துறை ,ஓடக்கரை தோசை குறிப்பு பகிர்வுக்கு
 நன்றி மாதேவி 
எனது முறையில் பருத்தித்துறை ...தோசையும் ...கோசுமல்லியும் 


தேவையான பொருட்கள் 


பச்சரிசி .........2 கப் 
புழுங்கல் அரிசி ........1/2 கப் 
உளுந்து .............1 கப் 
வெந்தயம் ..1 1/2 தேக்கரண்டி 
வடித்த அரிசி சாதம் .......1 தேக்கரண்டி 


செய்முறை :


அரிசி ,உளுந்து வெந்தயம் இவற்றை தனித்தனியே 
சுமார் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும் .

பிறகு ஊறிய பச்சரிசியில் ஒரு கைப்பிடியளவு 
எடுத்து கொஞ்சம் நீர் இருந்தால் போதும் 
அதனை மிக்சி சின்ன சட்னி ஜாரில்  மையாக 
அரைக்கவும் .
அரைத்த மாவை அடுப்பில் ஒரு கப் கொதி நீரில் இட்டு
 கரைத்து கஞ்சி போல காய்ச்சி எடுக்கவும் ..
எனக்கு கோந்து பேஸ்ட் போல வந்தது ..ஆனாலும் பரவாயில்லை 
அதை அப்படியே நன்கு ஆற வைக்கவும் 
.பிறகு கிரைண்டரில் வெந்தயம் பிறகு உளுந்து சேர்த்து 
 அரைத்து எடுக்கவும் 
பிறகு மீதமுள்ள பச்சை  அரிசி ./புழுங்கள் அரிசி .,வடித்த சாதம் 
இவற்றையும் அரைத்து ,வழித்து எடுத்து .......

................ஆறிய கஞ்சி + அரைத்த வெந்தய உளுந்து + 
அரைத்த பச்சை,புழுங்கல் அரிசி இவற்றை நன்கு கலந்து 
வைக்கவும் .
.உப்பு தோசை வார்க்கும்போது தான் சேர்க்கணும் .
மாவை சேர்த்து கலக்கும்போதே பட்டுபோல மென்மையாக 
இருந்தது .எனக்கு நம்மூர் செட் தோசை போலிருக்கு ..:))
வார்க்கும்போது கனமாக THICK  ஆக வார்க்கணும் .
                                                                                    

                                                                               
இந்த தோசையின் ஸ்பெஷாலிட்டி   ..சுட்டு வைத்து 
நான்கைந்து மணிநேரத்துக்கு பின்னும் 
மென்மையாகவே இருந்தது 


இந்த தோசைக்கு மீன்குழம்பு நன்றாக இருந்ததின்னு 
கணவர் சொன்னார் 

எனக்கு செய்த கூட்டு ..கோசுமல்லி 
குறிப்பு சோலை அவர்களின் வலையில் பார்த்தது .

நான் சற்றே அளவுகளை வசதிகேற்றார்போல மாற்றி செய்தேன் 

                                                                                         

                                                                     இது சம்பலுடன் 
                                       குறிப்புக்கு நன்றி வானதி     அனைவரும் வந்து ரசித்து ருசிக்கவும் :)))

31 comments:

 1. வாவ்! அப்படியே தோசை கண்ணு கண்ணாய் சிவந்த நிறமாய் மிக அசத்தல்..நல்ல பகிர்வு ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா ..முதல் செட் தோசை உங்களுக்கே :))

   ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

   Delete
 2. இரண்டுமே அருமை... கோசுமல்லி குறிப்பிற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. ஆவ்வ்வ்வ்வ் மீ லாண்டட் அஞ்சூஊஊஊஊஊஊ...

  ReplyDelete
 4. ஏதோ சந்திரனில கால் பதிச்ச பீலிங்சா வருதே:)).... வந்திட்டனில்ல... ஆ ஓசை.... மீக்கு வாணாம்ம்.. மீ லா ஷபே ல ஒரு யூரோவுக்கு ஒண்டென வாங்கிச் சாப்பிட்டமாக்கும்:).

  ReplyDelete
 5. ஓசைக்கு நல்லா குத்துக் குத்தா ஓட்டை விழுந்திருக்கு சூப்பரா இருக்கு.. எனக்கு என்னவோ ஓசை எண்டால்ல் உப்படி சம்பல்தான் வேணும்....

  ReplyDelete
 6. ஆவ்... அஞ்சு அசத்துறீங்க...:) டெயிலி தோசைதானோ? ம்.ம் .. யாருக்குப் பிடிக்காது. எல்லாருக்குமே எங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும் தோசை.

  அதுவும் நம்ம பருத்தித்துறை தோசையோ... எங்க அம்மம்மா அடிக்கடி முன்பு செய்வது. மாதவி சொல்லியிருக்கும் அதே பக்குவம்தான்... உங்க முறையிலும் முன்பு செய்து பார்த்திருக்கிறேன். மாதவிக்கும் என் நன்றிகள்!

  சட்னியும் சூப்பர்...

  நல்ல பகிர்வுகள்.நன்றி அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .இரண்டு நாள் தோசை போட்டதற்கு என் மகள் முகம் சுளிக்கிறா ..தோசை அவ்ளோதான் இனி ஒன்லி சப்பாத்தி

   Delete
  2. இந்த தோசை பார்க்கவே மிக மென்மையா இருந்தது முறையும் எங்கள் தோசை போலில்லாமல் வேறு போல இருந்தது அதான் செய்து பார்த்தேன்

   Delete
  3. ஓ... அப்படியோ.. அப்ப மகளுக்கு மட்டும் சப்பாத்தி மீக்கு தோசை ப்ளீஸ்ஸ்ஸ்...:)

   ஹா. அப்புறம் அஞ்சு நீங்க உங்க முறையில சப்பாத்தி எப்படி செய்வீங்கன்னு ஒருக்கா டீரெல்ட்டா சொல்லுங்கோ...
   உங்க மக எப்படி இதுக்கு இப்படி அடிமையானான்னு.. தெரிஞ்சுக்கணும்... அந்த ரஹஸ்யம் என்ன...;)

   எனக்க்கும் நிஜம்மாவே எப்படி நீங்க செய்யுறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆசை.. ஏன்னா இங்கே எனக்கும் அதுக்கு எட்டாப்பொருத்தம். எனக்கு மிக விருப்பம். ஆனா... சுட்ட உடனே சாப்பிட்டாத்தான் உண்டு....:(

   Delete
  4. //நான் இங்கே எனது முறையில் சிறிது மாற்றம் செய்து தோசை செய்தேன் மென்மையாக பட்டுபோல வந்தது//

   பட்டுப்போன்ற தங்கள் கை பட்டதாலேயே அது மென்மையாகவும், மேன்மையாகவும், பட்டுப்போலவும் வந்துள்ளது, நிர்மலா.

   பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள். பிரியமுள்ள கோபு அண்ணா. .

   Delete
 7. தோசை மெல்லிசா துணி மாதிரி நல்லா வந்திருக்கு.. ஆப்பத்துக்கு இது மாதிரி சாதம் சேர்த்து செய்வேன்..உங்க செய்முறை அளவு படி தோசை செய்து பார்க்கணும். கோசுமல்லி செய்து பார்க்கும் ஆவலை தூண்டுது ஏஞ்சலின். ஏன்னா ஒருமுறை கூட செய்து பார்த்ததில்லை..:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா .இந்த தோசை மாதேவி அவர்களின் வலைப்பூவில் பார்த்த போதே செய்யனும்னு ஆவலாஇருந்தது .
   அவங்க இடித்து அம்மி உரல் என்றெல்லாம் சொல்லியிருந்தாங்க ..நான் நமக்கு வசதிகேற்றவாறு மாற்றி செய்தேன் .கண்டிப்பா கோஸு மல்லி செய்யுங்க ..என் மகள் மிகவும் விரும்பி சாப்பிட்டா .நல்ல ருசியான சைட் டிஷ் .இட்லி தோசை இரண்டுக்கு

   Delete
 8. தோசையை பார்க்கும்போதே சாப்பிடதோனுதுப்பா,ரொம்ப மென்மையா இருக்கு..சம்பல் எனக்கு பிடித்த ஒன்று.கோசுமல்லியும் சூப்பர் சைட்டிஷ்!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மேனகா .இந்த தோசை அப்படியே மிருதுவா இருக்கு ..சம்பலுடன் மிக டேஸ்டி ...கோஸுமல்லியும் மிக ருசி இதனுடன் .

   Delete
 9. ஆஹா தோசையா அப்ப விடுமுறையில் இருந்து சாப்பிடவேண்டியது தான் :)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ..உங்க கிட்ட கேக்கனும்னு நினைத்தேன் ..எங்கே போனார் யோகா அண்ணா ??
   கொஞ்சம் நாளாக பாக்கலை ..
   ..விடுமுறையில் தோசை செய்ய சொல்லுங்க சிஸ்டர் இன் லாவை :)) எனக்கும் புதுசா ரெசிப்பி அவங்க கிட்டருந்து கற்க ஆசை .

   அப்புறம் நானும் சோள சூப் செய்யணும் :)))

   Delete
 10. Dosa with Fish curry....Nalla combination....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரெவரி :)) ..தோசைக்கு மீன் குழம்பு நல்ல காம்பினேஷன் ...எங்க அப்பா வின் ஃபேவரிட் :))
   அதுவும் நெத்திலி ,நெய் மீன் , இவற்றில் செய்யும் குழம்பு மிக அருமையாக இருக்கும் .especially with this super soft Dosa :))

   Delete
 11. கலக்கலாய் விதவிதமாய் சமையல் பதிவுகள் போடுகிறீர்கள். பாராட்டுகள் ஏஞ்சலின். இந்த தோசை செய்முறை வித்தியாசமாக உள்ளது. ஆப்பம்போல் மிருதுவாய் இருக்குமென்று நினைக்கிறேன். இந்த வாரமே செய்துபார்க்கிறேன். நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ..எனக்கு புதியதாக ஒரு குறிப்பு பார்த்தா உடனே செய்து பார்க்க தோணும்.இந்த தோசை முன்பொரு இலங்கை ரெஸ்டாரண்டில் சாப்பிட்டிருக்கேன் ..அப்பவே யோசிச்சேன் எப்படி இவ்ளோ மிருதுவா இருக்குன்னு .
   நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க

   Delete
 12. இந்த தோசை சாப்பிடாத எங்க ஊர்க்காரங்க இருக்கமாட்டாங்க. எனக்கு இந்த முறையில் சரிவரவில்லை.நீங்க கொடுத்த ரெசிப்பியில் செய்து பார்க்கனும். சம்பலும்,தோசையும் பார்க்க நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு ..நானும் இந்த தோசை ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டேன் ..
   ருசியா மிருதுவாக இருந்தது..உங்க ஊர் ஸ்பெஷல்ஸ் நீங்களும் கொஞ்சம் ரெசிப்பிஸ் பகிருங்களேன் .
   நாங்களும் செய்து பார்க்கிறோம் :))

   Delete
 13. வித விதமாய் தோசை ! தோசை அம்மா தோசை ஏஞ்சலின் சுட்ட தோசை என்று பாடவைத்துவிடுவீர்கள் போலும்.நான் தோசை பிரியை. என் கணவருக்கு பூ போன்ற இடலி என்றால் எந்தன் ஓட்டு தோசைக்கே! தோசையை ரசித்து ருசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதியம்மா :)) என் மகள் இட்லி தோசை என்றால் இட்லியை திரும்பியும் பாக்க மாட்டா ..தோசை தான் பிடிக்கும் அவளுக்கு ..
   எனக்கு இரண்டு இட்லி பூப்போல இருந்தா போதும் .:)) .

   ஆனா அனைவரின் விருப்பமும் தோசைதான் :)) இந்த தோசை நல்ல மிருதுவான தோசை .வருகைக்கும் கருத்தக்கும் மிக்க நன்றி

   Delete
 14. அருமையான தோசை கோசுமல்லியுடன் சுவைத்தது ஏஞ்சலின்.

  இளமதி அறியத் தந்திருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் ..மிக டேஸ்டியான தோசைரேசிப்பிக்கும் மிக்க நன்றி மாதேவி

   Delete
 15. தோசை சூப்பரா இருக்கு ஏஞ்சல் அக்கா! இப்படி கஞ்சி காய்ச்சி மாவுடன் கலந்து ஆப்பம் செய்யும் ரெசிப்பிகள் பார்த்திருக்கேன். தோசைக்கும் இப்படி செய்யலாம் என்பது புதுசு. தோசை சும்மா சூப்பரா தங்க நிறத்தில தகதகக்குது! :)

  கோசுமல்லி-தோசையின் ஒரிஜினல் ரெசிப்பி லிங்குகளுக்கு நன்றி! சீக்கிரம் போய்ப் பார்க்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா மகி தோசை செம கலக்கலா வந்தது super soft :))
   கோசுமல்லி பெஸ்ட் சைட்டிஷ்

   Delete