அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/11/13

Puppy Graphics Quilling /Kitchen Corner ..நீர் தோசை

என்னுடைய பப்லு :))                                                                 


நீர் தோசை    

நாங்க உடுப்பி பக்கம் போனப்போ அங்கே ஹோட்டலில் இதை 
சாப்பிட்டேன் ,, .சமீபத்தில் ஒரு தளத்தில்   இந்த தோசை குறிப்பு 
பார்த்தபோது செய்து பார்க்க தோன்றியது .


                                                                       
மாவு தயாரிக்க ...பச்சரிசி இரண்டு கோப்பை இரவே
 ஊறவைக்க வேண்டும் .
அல்லது குறைந்தது ஆறு மணி நேரம் ஊரனும் .
அத்துடன் அரை கோப்பை துருவிய தேங்காய் சேர்த்து மின் 
அம்மியில் அதாவது கிரைண்டரில் அரைக்கவும்.
அரைக்கும்போது சிறிது கறிவேப்பிலை இலைகளையும்
சிறு துண்டு இஞ்சியும் சேர்த்து அரைக்கலாம் .
.கர்நாடகாவில் இதற்க்கு இளநீர் சேர்த்து அரைப்பார்கள் 
என்று எங்கோ படித்த நினைவு .
                                               

இந்த மாவு உடனே தோசையாக சுடலாம்..ஆனால் மாவு 
#நீர் பதமாக இருக்க வேண்டும் .மற்ற தோசை சுடுவதுபோல
வட்டம் ,சதுரம் முக்கோணம் எல்லாம் போடக்கூடாது .:)))
ரவா தோசை ஊற்றுவதுபோல கரண்டியால் தெளிக்க் 
வேண்டும் ...மொரு மொரு தோசை தயார் ..பூண்டு சட்னியுடன் 
நல்ல காம்பினஷன் .......................................

அடுத்தது நானும் செய்து வச்சிட்டேன் மிளகாய் பொடி :))
gun powder   ..ரெசிப்பி உபயம் வை.கோபாலகிருஷ்ணன் 
அண்ணா அவர்கள் .மிக்க நன்றி அண்ணா .
                இது ஒரு பங்கு கொப்பரை சேர்த்து அரைத்து வைத்தேன் 
                                    
                                                   
இது கொப்பரை /dessicated தேங்காய் சேர்க்காமல்
 அரைத்தது 


              
                                                    


ஏதேனும் ஒரு புதிய ரெசிப்பியுடன் விரைவில் வருவேன் :)))))))))                

59 comments:

 1. ஆஆஆவ்வ் மீலாண்டட்... இருங்க வடிவாப் பார்க்கிறேன்ன்ன்ன்...

  ReplyDelete
  Replies
  1. ஆதிராக்கு பாதி தோசை எனக்கு பாதித் தோசை
   நான் தான் இரண்டாவதா வந்திருக்கேன் :(

   Delete
  2. ஆவ்வ்வ்வ் தோசை முழுசா இருந்தா பிச்சுப் பிச்சுத் தந்திருப்பேன்ன்:)) ஆனா அஞ்சு ஏற்கனவே பிச்சுபிச்சு சுட்டுப்போட்டு..:) எங்களுக்கு கதை விடுறா வட்டமா சுடுறேல்லையாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இந்த அழகில எங்கின போய் பாதியாக்குறதாம்ம்:))

   Delete
  3. அதிரா டயட்டிங்காம் அதனால் நீங்களே எல்லாத்தையும் எடுங்க

   Delete
  4. இல்லை அதிஸ் அந்த தோசை அப்படிதான் வருது ஓரங்கள் லேஸ் வைத்தாற்போல :))

   Delete
  5. ;)))))
   அது க்வில்லிங் தோசையாக்கும் என்று நினைச்சன் அஞ்சூஸ். ;)

   பப்லு.. க்யூட் க்யூட் க்யூ..ட்... கையைத் தாங்கோ! ;))

   Delete
 2. பசி வயித்த கிள்ளுது தோழி .அப்படியே இந்தத்
  தோசைய மெல்ல என்னுடைய கையில போடுங்க
  அவ்வீற்று ஒடீர்ரன் :)பிளீஸ் .......

  ReplyDelete
 3. ஆஹா பப்லு சூப்பரோ சூப்பர் அஞ்சு... நிஜபப்பிபோல இருக்கிறார்ர்.... கண் எல்லாம் நல்ல அழகா வந்திருக்கு...

  ReplyDelete
 4. அஞ்சு... பப்பிலு வின் கண்ணுக்கும் பேப்பர்தான் பாவிச்சிருக்கிறீங்களா?

  ReplyDelete
  Replies
  1. அதிஸ் குட் நைட் ..கண்ணுக்கும் பேப்பர்தான் ,,என்வலப் சீல் செய்யும் இடத்தில வழு வழுப்ப ஒட்டியிருக்குமே அதை வெள்ளை பகுதிக்கு உருட்டி செய்தேன்

   Delete
  2. //,என்வலப் சீல் செய்யும் இடத்தில வழு வழுப்ப ஒட்டியிருக்குமே அதை வெள்ளை பகுதிக்கு உருட்டி செய்தேன்//
   எனக்கு இது கொஞ்சம் புரியேலை அஞ்சு...:(

   Delete
  3. இளமதி,
   என்வலப் நீங்கள் ஒட்டிவிடுமட்டும் தன்னால ஒட்டாமல் இருக்கிறதுக்கு, ஒரு நீ..ள பட்டர் பேப்பர் போல ஒட்டி இருப்பினமே, அது.

   Delete
 5. / மின்
  அம்மியில் ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஒழுங்க “ழ”, ள எழுத வருகுதில்லையாம்ம்:) ஆனா தமிழ் மொழிபெயர்ப்பு வேற:)).. றீச்சர் ஓடிவாங்கோ... அம்மிக்கு என்ன தமிழ்?:)))

  ReplyDelete
  Replies
  1. ஏன்! ஏஞ்சல் சிங்களத்திலயோ எழுதினவ!! அப்பிடியெண்டால்... மம்மி! ;))))

   ம்... 'அரைவை இயந்திரம்' என்று எழுதினாற்போல சும்மா விடுவமே! அதுக்கும் என்னவாவது கருத்துச் சொல்லத்தானே போறோம், என்ன அதீஸ்!! ;D

   Delete
 6. அட என்ர கண்ணுக்கு தோசைதான் முதலில் தெரிஞ்சதாக்கும் ;)

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா... நானும் அதையே தான் நினைச்சேன்ன் ஆனா சொல்லல்ல:))

   Delete
  2. வாங்க வாங்க அம்பாளடியாள் ..உங்களுக்கு தான் தோசை ..அதிராவுக்கு வேணாம் :))

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேக்கு ஜலதோஷை வாணாம்ம்..:)).

   நீர் = ஜலம் சரிதானே அஞ்சு??

   Delete
  4. :)))))))கரெக்டா கண்டுபிடித்த அதிராவுக்கு புன்னாகவராளி இசையோடு ஒரு பாடல் நேயர் விருப்பமாக போடுங்க நிரூபன்

   Delete
 7. என்னென்னமோ குறிப்பெல்லாம் சொல்றா அஞ்சு... நீர்யானை கேள்விப்பட்டிருக்கிறேன்ன்:) இது என்ன நீர்த்தோசை.. இப்போதான் பெயரையே கேள்விப்படுறேன்ன்... ஆனா நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. இது பெங்களூர் /கொங்கணிஸ்பெஷல் :))) நீர்த்தன்மையாக இருக்குக்கணும் மாவு அப்பத்தான் ஓரங்கள் டிசைன் போல வரும் ஆகவே அந்த பெயர் :))

   Delete
 8. அடடா அதுக்குள் கோபு அண்ணனின் பொடி செய்திட்டீங்களோ? நான் இன்னும் படிக்கவில்லை.. முழுவதும்... நாளைக்குள் படிச்சு நானும் செய்யப்போறேன்ன்ன்... அதுக்குள் கொஞ்சம் உடன் திருவிய தேங்காய்ப்பூப் போட்டுக் குழைத்தால் இன்னும் சூப்பரா இருக்கும் அஞ்சு... இது என் கண்டு..பிடிப்பாக்கும்:))..

  ReplyDelete
  Replies
  1. நோ :))என் கண்டுபிடிப்பு டெசிகெடட் கோக்கனட் சேர்த்து அரைத்தேன்

   Delete
  2. ஆவ்வ்வ்வ்... கொஞ்சம் லைம் சேருங்க..

   Delete
  3. அது தேங்காய் சம்பல் :))

   Delete
 9. ///ஏதேனும் ஒரு புதிய ரெசிப்பியுடன் விரைவில் வருவேன் :))))))))) ///

  கருணை மழையே மேரி மாதா.. ... ஏன் இன்னும் உலகம் அழியாமல் இருக்கூஊஊஊஊஊ:))))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :)) இன்னும் புன்னாகவராளி ராகத்தில் பாட்டு போடல்லியா :))
   இன்னும் பாருங்க ஒரே நாளைல மூன்று ரெசிப்பி போடப்போறேன் நான் ....:))))))))))

   Delete
 10. அஞ்சு... அழகான அருமையான பப்பிலு...:) மிகமிக தத்ரூபமா வந்திருக்கு. அழகென்றால் அப்படி அழகு.
  அதன் கண் எப்படி இவ்வளவு அழகாகச் செய்தீங்கள்...
  சூப்பர்... வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. பப்லுவை ரசித்ததற்கு நன்றி இளமதி

   Delete
 11. தோசையும் வித்தியாசமானதாக இருக்கிறதே... செய்து பார்க்கத்தான் வேணும்.

  மிளகாய்ப்பொடியும் தோசையும் நல்ல கொம்பினேஷன்...:)
  அருமை. தோசைக்குறிப்பிற்கு மிக்க நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி சீக்கிரம் நீங்களும் மிளகாபொடி செய்து பாருங்க நல்ல டேஸ்டியா இருக்கு

   Delete
 12. தோசை அருமை... வைகோ ஐயா குறிப்பு அதற்குள் செய்து விட்டீர்கள்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் ..வைகோ சாரின் குறிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ...பார்த்தவுடன் சிலவற்றை செய்திடுவேன் :))..இந்த மிளகாய் பொடிஉண்மையில் மிக மிக டேஸ்டி ..எல்லாவகை கலவை தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ..

   Delete
 13. தேங்காய் சேர்த்தது, சேர்க்காதது - இரண்டில் எது சுவை அதிகம் அதைச் சொல்லுங்க :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்பாதுரை :)) இங்கே உங்களை அழைத்து வந்தது தேங்காய் சேர்த்த மிளகாய்பொடி :))சரிதானே ..
   இரண்டுமே நல்ல டேஸ்ட் ..இந்த மிளகாய் பொடிக்கு அதாவது தேங்காய் சேர்க்காத பொடிக்கு நல்லெண்ணெய் /வெஜ் எண்ணெய்க்கு பதில் ...கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து சாப்பிடலாம் ..அப்படிதான் நாங்க ஊரில் இருக்கும்போது சாப்பிட்டிருக்கோம் .....
   ஆனால் கொப்பரை சேர்த்து அரைத்து செய்வதை நான் ரெப்ரிஜரெட்டரில் வைத்துவிடுவேன் ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 14. I missed this post in the morning-aa??! avvvvvvvvvvv! will come after dinner. Grrrrrrrrrrrrrr!

  ReplyDelete
  Replies
  1. மகிம்மா வாங்க எப்ப நேரம் கிடைக்குதோ ..நல்லவேளை பூஸ் கண்ணை மூடிக்கிட்டே கமெண்ட் போட்ருக்காங்க ..இதை பாக்க வில்லை

   Delete
 15. எங்க ஊர்ல இதன் பேர் ஆப்பம்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. ஆப்பம் ferment செய்யணும் ...இது அரைத்தவுடன் செய்யலாம் மலர் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 16. மிளகாய் பொடி பார்க்கவே நன்றாக இருக்கு angelin.கொப்பரை சேர்த்து செய்வது அதிக சுவையாக இருக்கும்.நீர் தோசை செய்முறைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா இந்த தோசை உங்க ஊரிலும் பிரபலம் தானே .சும்மா ட்ரை செய்தேன் நன்றாகவே வந்தது .
   இங்கே டெசிக்கெட்டட் தேங்காய் என்று விற்பார்கள் ..நானே கண்டுபிடித்தேன் அதுதான் கொப்பரை என்று

   Delete
 17. உங்களுடைய பப்லு :)) அழகு ...

  நீர் தோசை ,பொடி அருமை ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..என் பப்லு பிடிச்சிருக்கா !!.மிக்க சந்தோசம்

   Delete
 18. பசியை கிளப்பி விட்டீங்க! ஒரு பார்சல் அனுப்பி வையுங்க! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சுரேஷ் ..இது எனக்கு ஒரு பெரிய பாராட்டு ...கண்டிப்பா பார்சல் அனுப்பிடறேன் .:))

   Delete
 19. நீர் தோசை + மிளகாய்ப்பொடி அருமை ..பாராட்டுக்கள்..

  உங்களுடைய பப்லு :)) அழகோ அழகு ...! வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா ...இப்ப கூட ராகி கோதுமை தோசைக்கு இந்த மிளகாய் பொடி தொட்டு சாப்பிட்டேன் ...நல்ல டேஸ்டி :)))
   இத்தனை நாளும் உளுந்து மட்டும் மிளகாயுடன் வறுத்து அரைப்பேன் அது லைட் கலரில் வரும் ஆனாஅரிசி இட்லி தோசா விற்கு மட்டுமே நன்றாக இருக்கும் ..இந்த பொடிஉங்க ரெசிப்பி அனைத்து கலவை தோசைக்கும் டேஸ்டியாக இருக்கு ,...மிக்க நன்றி

   Delete
 20. நீர் தோசையும், மிளகாய் பொடியும், பப்லு நல்லா இருக்கு.

  பப்லுவுக்கு பின் மாட்டு வணடி போல் தெரிகிறதே நீங்கள் செய்த வணடியா?

  மிளகாய் பொடியில் கொப்பரை தேங்காய் வறுத்துப் போடுவீர்களா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா ..அந்த மாட்டு வண்டி என் மகள் சென்னை பூம்புகாரில் ஆசைப்பட்டு வாங்கியது ..என்னதான் ஆயிரம் பார்பி பொம்மைகளும் கிச்சன் செட்டும் இங்கே கிடைத்தாலும் ...என் மகளுக்கு ..இந்த மாதிரி பொம்மைகள் ரொம்ப பிடிக்கும்:)).....பல்லாங்குழி கேட்டா ..ஆனா அது கொஞ்சம் ஹார்டா இருந்தது பெயிண்ட் செய்யாம அதனால் வாங்கவில்லை ..
   இப்ப ஐடியா வந்து விட்டது ..நான் ஒரு மாட்டு வண்டி செய்யபோறேன் க்வில்லிங்கில் :))..
   இந்த கொப்பரை தனியாக வருக்கவில்லை ..உளுந்து வறுத்து இறக்கும்போது இதை சேர்த்து இறக்கினேன் ..

   Delete
 21. மாலை வணக்கம்,அஞ்சலின்!///நீர் தோசை?புதுசா இருக்கு!நாளைக்கே செஞ்சு பாத்துடுவோம்!குவிலிங்க் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா மாலை வணக்கம்.சீக்கிரமே செய்து பாருங்க

   Delete
 22. அண்ணனுக்கு ஒரு தோசை பார்சல்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா உடனே அனுப்பிடறேன் :)) ...

   Delete
 23. I heard that neer dosa is soft..but you are saying its crisp..I am so confused! ;) anyhow I haven't tasted it yet angel Akka..will try your recipe once and let you know!

  Balloo is chchchchooo chchchcveet! :)

  A bit disappointed that I could not participate with comments war:) with poosar..but will make it up in the next post! Lol!

  ReplyDelete
  Replies
  1. மகி :)) இந்த மாவு கரண்டியால் வெளிபக்கமிருந்து ஊட்ற்றனுமாம் :)எனக்கு அப்படி வரவில்லை அதனால் சும்மா ரவா தோசை போல தெளித்து சுட்டேன் அதான் மொரு மொறுன்னு இருக்கு .
   மேலும் நான் ஸ்டிக் கல்லில் சுட்ட தோசைகள் நீங்க சொன்ன மாறியே மென்மையா வந்தன .மற்ற கல்லில் சுட்டா க்ரிஸ்பியா வருது ....:))

   Delete
  2. மஹீஸ்... அது பன்மை. ;)) ஒன்று மட்டும் இருந்தால் ballaa. ;D

   Delete
 24. Super recipe. I will try this very soon.

  ReplyDelete
 25. உங்க பப்லு சூப்ப்ப்ர் அஞ்சு. மிக மிக அழகாக இருக்கிறார்.நிஜமான பப்லுபோல்,கண் சூப்பர். அப்படியே தத்துரூபமா வந்திருக்கு.பாராட்டுக்கள்.

  நீர்த்தோசை வெள்ளைவெளேரென இருக்கு.தோசை ரெசிப்பி நிச்சயம் செய்துபார்க்கிறேன் அஞ்சு. மிளகாய்பொடியும் கண்ணைக் கவருது. அதையும் முயற்சிக்கிறேன்..

  ReplyDelete