அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/14/13

கோதுமை தோசை , Kitchen Corner.

கோதுமை தோசை ...
ஊறவைத்து அரைத்து செய்யும் முறை 
                                                                               
தேவையான பொருட்கள் 
முழு கோதுமை ....... இரண்டு கோப்பை ,சுமார் ஆறு 
                                           மணிநேரம் ஊறவைக்கனும் 
இஞ்சி ................ஒரு சிறு துண்டு ..
அதுக்கப்புறம் ...அன்போடு ..பொன் மானே!! தேனே !!
(உப்பு /சிறு சிட்டிகை பெருங்காயத்தூள் /சீரகம் /
கறிவேப்பிலை )
இதெல்லாம் சேர்த்துக்கோங்க :)))தேங்க்ஸ் மகி அண்ட் கிரி :))

செய்முறை :

சுமார் ஆறு மணிநேரம் ஊறவைத்த கோதுமையை 
குளிர் நீரில் அலசி சிறு துண்டு இஞ்சியை குட்டி யாக 
நறுக்கி ....மிக்சியில் தேவையான அளவு நீர் சேர்த்து 
நன்கு அரைக்கவும் 

இதோ இப்படி இருக்கும் 
சுமார் ஒரு மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து தோசைகல்லில் 
தோசைகளாக வார்த்து எடுக்கவும் .
...
டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ..:))
முந்தைய நாள் இட்லி  மாவு மீதமிருந்தா அதில் ஒரு கரண்டி 
இத்துடன் கலந்து வைத்து பின்பு தோசையாக சுட்டா 
இன்னும் சுவையாக இருக்கும் .


இது நம்ம ராஜேஸ்வரி அக்கா அவர்களின் பின்னூட்ட டிப்ஸ் 

முழு கோதுமையுடன் சிறிதளவு துவரம் பருப்பும், ஒருஸ்பூன் அரிசியும் 
சேர்ப்பது திகட்டாமல் இருக்கும் ..
                                                                                                                                                                                                                                               
இந்த தோசைக்கு வெங்காய சட்னி /பூண்டுசட்னி நன்றாக
இருக்கும் .எங்க வீட்டில் ஸ்டாக்கில் மிளகாய்பொடி 
இருப்பதால் அத்துடன் சாப்பிட்டோம் ......................................................................................................................................
..இது இன்ஸ்டன்ட் தோசை 

கோதுமை +ராகி தோசை 

 ராகி மாவு அரைகோப்பை மற்றும் கோதுமை ஆட்டா 
மாவு ஒன்றரை கோப்பை சேர்த்து நீரில் கரைத்து ..
அரைமணிநேரம் கழித்து சுட்டு சாப்பிடலாம் ..
டயட்டிங் மக்கள்ஸ் நோட் திஸ் :)))
உடம்புக்கு ரொம்ப நல்லது .                                                                       
எப்ப கேட்டாலும் என்னை சந்தோஷப்படுத்தும் பாடல் 
கிட்டாரை  டியூன் செய்திட்டு அவுக வாசிக்க :))
நான் கேப்பேன் 


நீங்களும் கேளுங்களேன் :))


         
அதிராவின் ஆசையை நிறைவேற்ற       வெகு விரைவில் அடுத்த ரெசிப்பி 
வெளிவரும் :)))                                                  

39 comments:

 1. அஞ்சு.... அப்படியே அந்த கோதுமைதோசை இரண்டு என்பக்கம் ஐமீன்ன்ன் எனக்கு தள்ளிவிடுங்கோ....:)
  ம். சூப்பரா வந்திருக்கே. புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்கோ... ;)

  ராகி + கோதுமை தோசை எங்க வீட்டில் எனக்குமட்டுமே பிடிக்க்கும்..

  ReplyDelete
  Replies
  1. முதல் தோசைதட்டு ..இளமதிக்கே :))வாங்க இளமதி ..இன்னும் மனதில் நிறைய ரெசிபி இருக்கு ...அதை ஒரு பூனை அடிகடி தட்டி எழுப்புவதால் ..பார்ட் பார்ட் ஆக நம்ம திறமைகள் வெளி வருது
   :))

   Delete
 2. ஹாஆ... பாலுவின் பாடலும் மோகனின் நடிப்பும் அபாரமான பாடலல்லவோ... எனக்கும் பிடிக்கும்...:)

  நன்றி அஞ்சு சூப்பர் பகிர்வுகளுக்கு!

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஒ அப்பாடல் மீக்குட்த்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாக்கும்... நாந்தான் நன்றி சொல்லுவேன்ன்ன்..:))

   Delete
 3. கோதுமை தோசை அருமை. பாடலும் அழகு.பகிர்வுக்கு நன்றி.

  //அதிராவின் ஆசையை நிறைவேற்ற வெகு விரைவில் அடுத்த ரெசிப்பி வெளிவரும் :)))//

  இந்தமுறை காசிக்கோ, அண்டார்டிகாவுக்கோ, தேம்ஸுக்கோ, புளியமரதின் மேலோ, கட்டிலுக்கு அடியிலோ . .... பாவம், அதிரா.


  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..அதிரா எங்கே ஒளிஞ்சாலும் ..புதுசா ஒரு ரெசிப்பி போட்டு வர வச்சிடுவேனே :))

   Delete
  2. ஹா...ஹா...ஹா... நான் போகும் இடங்களையெல்லாம் கரெக்ட்டாப் பாடமாக்கி வச்சிருக்கிறார் கோபு அண்ணன்.

   ஆனா மீ இம்முறை திருப்பதிக்குப் போறனாக்கும்:).. ச்சும்மா உண்டியலைப் பார்த்துவர:)

   Delete
 4. கோதுமை தோசை செய்முறை அருமை.கரைத்த மாவு தோசை செய்யும் பொழுது சில சமயம் மைதாவிற்கு பதில் கோதுமை மாவு சேர்த்துக்கொள்வது வழக்கம்.முழு கோதுமையில் தோசை செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் angelin.

  இளைய நிலா பொழிகிறதே !! எனக்கும் மிக பிடிக்கும் இந்த பாடல்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா கரைத்த மாவில் சுடுவது சுலபமானாலும் ..இப்படி அரைத்து செயயும்போது தனி ருசியாக இருந்தது.
   உங்களுக்கும் இளைய நிலா பாட்டுபிடிக்குமா ..மிக்க சந்தோசம்

   Delete
 5. முழு கோதுமையுடன் சிறிதளவு துவரம் பருப்பும், ஒருஸ்பூன் அரிசியும் சேர்ப்பது திகட்டாமல் இருக்கும் ..

  கெட்டியாக் அரைத்து வெல்லமோ சர்க்கரையோ சேர்த்து எண்ணையில் இனிப்பு போண்டாவாக செய்வதுண்டு ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா .வருகைக்கும் குறிப்புக்கும் மிக நன்றி ..உங்க டிப்ஸையும் இணைச்சுட்டேன்

   Delete
 6. wow.....kothumai dosai -a vida...unga kalakkalana writing romba suvaiya iruukku....:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹெலன் .வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ..எல்லா பெருமையும் புகழும் :))எங்க சங்க தலைவியை சேரும்

   Delete
 7. கோதுமை தோசை செய்முறை புதுசா இருக்கு..அந்த பாடல் எனக்கும் பிடித்தமானது..

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ..காலை பத்து மணிக்கு ஊறவைத்து மாலை ஆறுமணிக்கு அரைத்து சுடலாம் ..நான் நெடுநேரம் வைக்கவில்லை ..அப்படியே தோசை மாதிரியே வந்தது .
   அந்த பாடல் நிறைய பேர்களின் விருப்பபாடல் என்றென்றும் இனிக்கும் கானம்

   Delete
 8. வித்தியாசமாக உள்ளது ஏஞ்சலின்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சாதிகா ..எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பெரியவர் அவருக்கு சுகர் ப்ராப்ளம் இருந்தது அவர் மூன்று வேளையும் கோதுமை அரிசி சாதம் /கோதுமை காஞ்சி /கோதுமை தோசை என சாப்பிடுவார் ..அவங்க ரொம்ப நேரம் ஊற வைப்பாங்க நான் ஆறு மணிநேரம் தான் ஊற வைத்தேன்

   Delete
 9. இட்லி மாவு மீந்து விட்டால் கோதுமை மாவு சேர்த்து தோசை செய்வேன். இஞ்சி சேர்த்து செய்வது புதுமையா இருக்கு. அதுவும் கோதுமையை ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து செய்ததில்லை ஏஜ்சல்..கோதுமை மாவு மில்லில் அரைத்து வைத்து பயன் படுத்துவேன்.. உங்க முறையை செய்து பார்க்கிறேன். கிடார் இசையோடு சேர்ந்து வரும் பாட்டு எப்பொழுது கேட்டாலும் ரசிப்பேன்.
  டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ..ஆ..என் மகனின் ஆங்கில வலைத்தளம்..:)

  ReplyDelete
 10. வாங்க ராதா ராணி ..இது மிக்சில தான் அரைக்கணும் ..கிரைண்டர் என்கிட்டே இருக்கு ஆனா கோதுமை ஹார்ட் ஆகா இருக்குமே அதனால் மிக்சில தான் அரைத்தேன் .
  கொஞ்சமா ஒரு ஸ்பூன் இட்லி மாவு சேர்த்து சுட்டதில் மொரு மொறுன்னு வந்தது ..இஞ்சி சும்மா சிறு துண்டு
  செரிமானத்துக்கு .மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 11. கோதுமையை அரைச்சு வெல்லம் சேர்த்து கச்சாயம்தான் செய்திருக்கேன். இப்படி அரைத்து தோசை அம்மா செய்வாங்க. ஒரு பங்கு கோதுமை-ஒருபங்கு அரிசி, உளுந்து எல்லாம் ஊறவைச்சு அரைச்சு, புளிக்கவைச்சுத்தான் தோசை ஊத்துவாங்க. உங்க முறை புதுசா இருக்கு. ஹெல்த்தியான தோசைகளா போட்டு தாக்கறீங்க,அப்படியே பொடிக்கும் ஆலிவ் எண்ணெய்-நல்லெண்ணெய் அல்லது வெறும் பொடி--இப்படி சாப்பிட்டு ஆரோக்கியத்தைப் பேணும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  மேலும் தேங்காயை பச்சையாக அரைத்து சட்னி செய்வது உடலுக்கு நல்லதே..வதக்கி அரைச்சால்தான் கொலஸ்ட்ரால்.அதனால் தேங்காச் சட்னி வாரமொருமுறை சாப்பிடலாம். :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி :))தங்கள் அன்பான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது ..அந்த மிளகாய்பொடி உள்ளே dam கட்டியிருப்பது இதயத்துக்கு இதமான சித்ராக்கா பிராண்ட் குட் ஆயில்தான் ..
   எங்க வீட்டில் என் மகளுக்குத்தான் இந்த பொடி ரொம்ப பிடிக்கும் ..நான் சும்மா ஊறுகாய் இருந்தாகூட அதனுடன் தொட்டு சாப்பிடிடுவேன் ..,,நான் செய்த பொடியில் அரைபகுதி நாத்தனாருக்கு பார்சல் செய்திட்டேன் :))மகாராணியின் பாலஸ் பக்கத்தில் இருக்கா :)

   இனிமே பூண்டு சட்னி தக்காளிசட்னிதான் ..மூன்று நாளாக தோசை செய்ததால் என் மகளுக்கு கொஞ்சம் கோபம் வேறு என்மேலே :))மேடம் ஆல்வேஸ் சப்பாத்தி பிரியை :))


   ..உங்க அம்மா செய்முறை ஓவர்நைட் வைக்கணும் ..இது காலை ஊறவைத்தா நைட் தோசை ரெடி :))
   அம்முரையிலும் செய்து பார்க்கிறேன் ..எங்க வீட்ல கச்சாயம் செய்ய வாங்கின கோதுமை நிறைய இருக்கு
   ரெண்டு கிலோ பாக்கட் வாங்கியிருக்கார் :))மிஸ்டர் ஏஞ்சல்

   Delete
 12. மாலை வணக்கம்,அஞ்சு!நலமா?அப்பப்ப புதுசு,புதுசா..............!ஜமாயுங்க!!!!(பூசார் எங்க,காணம்?)

  ReplyDelete
  Replies
  1. நான் இங்கதான் இருக்கிறேன் யோகா அண்ணன்... ஒரு வைர நெக்லெஸ் செய்யோணும்... அதுதான் ஒருக்கால் திருப்பதிவரை போய்வரலாம் என இருக்கிறேன்ன்ன்:))).. ச்ச்சும்மா அங்கிருக்கும் உண்டியலைப் பார்த்துவரத்தான் வேறொன்றுமில்லை:).

   Delete
 13. வாங்க அண்ணா :)) ஏதோ நம்மாலான சேவை :))இந்த மாதிரி நான் சமையலில் கொடிகட்டி பறக்க :))(ஸ்ஸ்ஸ் யாரங்கே கல்லெடுப்பது ):)::காரணம் யார்தெரியுமா என்னை புத்தாண்டு தீர்மானம் போன வருடமெழுத சொன்னாரே அவர்தான் :))சும்மா அமைதியா பென்சில் பேப்பர்னு இருந்தேன் என்னை உசுப்பி விட்டு நான் சும்மா ஒரு பேச்சுக்கு ஏதேனும் ஒரு சொந்த சமையல் குறிப்பு எழுதனும்னு தீர்மானம் போட்டேன் ..இப்ப சமையல் குறிப்பாவற்றா ஜீவநதியாக ஓடுறது :))

  பூசார் வருவாங்க ..அவங்களுக்குதான் வெய்ட்டிங்

  ReplyDelete
  Replies
  1. //இப்ப சமையல் குறிப்பாவற்றா ஜீவநதியாக ஓடுறது :))///

   ஆண்டவா தேம்ஸ்ல கலந்திடாமல் காப்பாத்தப்பாஆஆஆஆஆஆ.. நான் 108 கற்பூரம் கொழுத்துவேன்ன்ன்.... :)... பிறகு கலப்படம் ஆகிடப்போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:).

   Delete
 14. அழகான தோசை அதுக்கு அருமையான சம்பள் துவரம்பருப்பு சேர்த்தது.கலாக்கிய தோசையில் இங்கையும் இரண்டு பார்சல் :))) பாரிஸ் பக்கம் சரியான குளிர் அஞ்சலின்:)))

  ReplyDelete
 15. இரண்டுமே அருமையான குறிப்பு.//டயட் மக்காஸ் நோட் திஸ்//
  இது நல்லாயிருக்கே...

  ReplyDelete
 16. முன்பாதியை வாசிச்சு... ஏங்கிப் போனன். ;) இதுவா கோதுமை தோசை! 'நான் கோதுமை மாவைக் கரைச்சு தோசையாக்கீருவேனே!' என்று நினைக்க பின்பாதியில என் முறையும் சொல்லி இருக்கிறீங்கள்.

  பாட்டு எனக்கும் பிடிக்கும்.

  ஹ்ம்! கிரியை மிஸ் பண்ணுறேன். ;( ஒழிச்சு இருந்து பார்ப்பாங்களோ! பார்த்தால்... ஹாய் கிரீஸ்! ;)

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ றீச்சர் வந்திருக்கிறாக... மொப்பியின் பிரதர் நலமா இமா?:).

   Delete
  2. இமா கோதுமை மாவோடு 2 கப் ஓட்ஸ் அரைச்சு கலந்து ஓசை சுடுங்கோ இன்னும் சொவ்ட்டாவும் சுசியாவும் இருக்கும்...

   Delete
  3. //பிரதர்// ;) சிஸ்டர்... நலம்.
   //2 கப் ஓட்ஸ்// ஹா!! ஒரேயுரு ஆளுக்கு அவ்வளவும் போட்டு என்ன செய்யுறதாம்! ;) நீங்களே சுட்டு, இங்கையும் சின்னதா ஒரு பார்சல் ப்ளீஸ்.

   Delete
 17. ///Kitchen Corner.////

  நான் திருப்பதிக்குப் போய் மொட்டை போடுறது போடுறதுதான்ன்ன்ன் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்:))...

  ReplyDelete
 18. சூப்பராக இருக்குமென நினைக்கிறேன். நான் கோதுமையை ஊறவைத்து முளைவரப்பண்ணி பின்பு ஸ்ரீம் பண்ணி(ஆவியில் அவிச்சு) தாளிச்சு சாப்பிடுவொம், முத்தின சோளன் சாப்பிடுவதுபோல இருக்கும், கொஞ்சம் கஸ்டப்பட்டு சப்போணும்... எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இங்கு கிடைக்காது. ரெஸ்கோவில் இருக்கோ அஞ்சு?

  ReplyDelete
 19. நோஓஓஓஓஓஓஒ நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:) எல்லா விதமான ஓசைக்கும்:) ஒரேவிதமான இட்லிப்பொடியை பாவிச்சிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கிட்டயேவா விடமாட்டனில்ல:).

  ReplyDelete
 20. ////அதிராவின் ஆசையை நிறைவேற்ற வெகு விரைவில் அடுத்த ரெசிப்பி
  வெளிவரும் :)))///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெஞ்சுபொறுக்குதில்லையே..:)).. அதுதான் போனாப்போகுதென மீ சைவமா மாறிட்டேனாக்கும்:)... அஞ்சு எனக்கு இன்னொரு ஆசையும் இருக்க்கு.. அதாவது வள்ளிக்க்கு போட வைர நெக்லெஸ் ஒண்டு வேணும்:)

  ReplyDelete
 21. //கிட்டாரை டியூன் செய்திட்டு அவுக வாசிக்க :))
  நான் கேப்பேன் //


  ஹா..ஹா..ஹா.. வடிவேல் அங்கிளை நினைவுபடுத்துறீங்க கோல்ட் ஃபிஸ்:)))

  ReplyDelete
 22. அடுத்த தோசை ரெசிப்பி.சூப்பர் அஞ்சு. இங்கும் கோதுமை சேர்க்கச்சொல்லி கரைச்சல்.நீங்க ஆபத்பாந்தவனா இக்குறிப்பை தந்துவிட்டீங்க.(எக்ஸ்ராவா அதிராவின் டிப்ஸ் தாங்க்ஸ்) ரெம்ப நன்றி. இனி வரும்வாரம் தோசை வாரம்.(லேட்டாகிவிட்டது பார்க்க. இல்லாவிட்டால் செய்திருப்பேன்.)
  பாட்டு எப்போ கேட்டாலும் அலுக்காத நல்லபாட்டு. பகிர்வுக்கு நன்றி அஞ்சு.

  ReplyDelete