அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/7/13

Jack Fruit Seed Gravy ./பல்லே பல்லே தாத்தா !!!


 Jack Fruit Seed Gravy.

                             
                                                                         


                         
                                                                              

  என் கணவர் ..இன்று பல்பொருள் அங்காடியில் இந்த பலா 
கொட்டைகளை பார்த்து விட்டு எனக்கு சமைக்க தெரியுமா 
என்று கேட்டார் ..எனக்கு தெரியாதென்பது அவருக்கும் 
நன்றாகவே தெரியும் :))) ..சரி ஆசைப்படுகிறாரே என்று 
எடுத்து வந்து விட்டோம் ..யாராவது தோழிகள் ரெசிப்பி 
தந்திருப்பாங்க ..மகி ,மேனகா ஆசியா எல்லாம் நினைவில்
 வந்தார்கள் ..கணினியில் பார்க்கலாம் என்று   யோசித்து 
கொண்டிருப்பதற்குள் எனது தோழி ஒருவர் வந்துவிட்டார் 
..அவரிடம் கேட்க அவர் பாகிஸ்தானியர் ..அவர் இதை 
வெஜிடபிள் குருமா போன்று செய்ய சொன்னார் ..


                                                                         


தேவையான பொருட்கள் 


பலாகொட்டைகள் .............சுமார் 10-15 
இஞ்சி பூண்டு விழுது ....ஒரு தேக்கரண்டி 
பாதி தக்காளி ................  மெலிதாக நறுக்கியது 
பச்சை மிளகாய் ..............இரண்டாக கீறியது ...1
பாதி வெங்காயம் ............ மெலிதாக நறுக்கியது 
சூர்யா மாசலா தூள் ..........1 1/2 தேக்கரண்டி 
காஷ்மீரி மிளகாய்த்தூள் ...ஒரு தேக்கரண்டி 
அரைத்த தேங்காய் விழுது .... ஒரு மேசைகரண்டி 
மஞ்சள் தூள் ......................1/2  தேக்கரண்டி 
உப்பு ...............தேவையான அளவு கறிவேப்பிலை ................சிறிதளவு 
எண்ணெய் ....ஒருகரண்டி /தாளிக்க தேவையான அளவு 
தாளிக்க வாசனை பொருட்கள் 
பட்டை .............சிறுதுண்டு 
சோம்பு ................ஒரு தேக்கரண்டி 
பிரிஞ்சி இலை .......சிறிதளவு                                                      

செய்முறை ..

முதலில் ஏழெட்டு நிமிடங்கள் பலா கொட்டைகளை 
நீரில் வேக வைக்கவும் /முக்கால் பதம் வெந்துவரும் 
இப்போது நீரை வடிகட்டி வெளி தோலை வெட்டி 
நீக்கவும் .
பின்பு இரண்டு பாதிகளாக நறுக்கி வைக்கவும் 
ப்ரெஷர் குக்கரில் ..எண்ணெய்  ஊற்றி சூடானதும் 
பட்டை /சோம்பு பிரிஞ்சி இலை ஆகியவற்றை 
வதக்கவும் .
பிறகு அந்த எண்ணையில் இஞ்சி பூண்டு விழுது 
நறுக்கிய பச்சை மிளகாய் ,வெங்காயம் ,தக்காளி  
ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மிதமான 
சூட்டில் வதக்கவும் ,உப்பு சேர்க்கவும் 
பின்பு மசாலா தூள்களை சேர்த்து அதற்குபின் 
வெட்டி வைத்த பலா கொட்டைகளை சேர்க்கவும் ,
ஒருகோப்பை நீர் அந்த கலவையுடன் சேர்த்து 
பிரட்டவும் ..இரண்டு நிமிடங்கள் பின் அரைத்த 
தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும் .
பிரஷர் குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் 
இறக்கவும் ..ஏற்கனவே வேக வைத்ததால் சீக்கிரம் 
தயாராகிவிடும் ..

ஆவியடங்கியபின்பு   ..திறந்து பரிமாறவும் .


ரசம் சாதத்துக்கு நன்றாக இருந்தது என்று கணவர் சொன்னார் .
நான் மைதா சப்பாத்தியுடன் சாப்பிட்டேன் :))
                                                              
இமாவின் குறிப்பு  உப்பும் மஞ்சளும் சேர்த்து பொரித்து (deep fry) 
சாப்பிடலாம். அதற்கு மிளகாய்த்தூள் + எலுமிச்சம்புளி விட்டு 
காரமாகச் சாப்பிடலாம்.

முருங்கைக்காய் வெள்ளைக்கறிக்கு கொஞ்சமாகச் சேர்த்துப் பாருங்கள். 

சுவை அருமையாக இருக்கும் .

ரமாவின் குறிப்பு 

பலாக்கொட்டையை கத்திரிக்காய் போன்ற காயில் செய்யும்
 புளிப்பு கூட்டில் சேர்த்துக்கொண்டால் அல்லது சாம்பாரில் சேர்த்துக்
கொண்டாலோ மிகவும் சுவையாக இருக்கும் .
ஸாதிகாவின் குறிப்பு 


பலா கொட்டைகளை சிறுதுண்டுகளாக்கி, வெங்காயம் கருவேப்பிலை 
சேர்த்து வதங்கியதும்,பலாக்கொட்டை மஞ்சல் பொடி உப்பு நீர் சேர்த்து 
குக்கரில் வேக வைக்கவும்.கூடவே சிறிது அரைத்த தேங்காய் 
விழுது அல்லது தேங்காய்ப்பால் சேர்க்கவும்.நீர் நன்கு வற்றி கூட்டு 
சுருண்டு எண்ணெய் மிதந்ததும் பறிமாறவும் சாதம்,சப்பாத்தி 
அனைத்துக்கும் ஏற்ற சைட் டிஷ்.

மாசி சாப்பிடுவதாக இருந்தால் ஒரு டீஸ்பூன் மாசிப்பொடி 

சேர்த்துக்கொள்ளலாம்.
வானதியின் குறிப்பு 
boil jack fruit seeds, then drain the water, add chilli powder, turmeric, salt. 
Cook in little bit oil until it turns crispy. ......................................................................................................................................................................


பல்லே பல்லே தாத்தா !!!                   
பொதுவாகவே பஞ்சாபியர்    மிகுந்த சுறுசுறுப்பு  மிக்கவர்கள் 
கொஞ்சம் சிரிப்பூட்டும் காமெடியர்கள் இருந்தாலும் ..
அவர்கள் நல்ல உழைப்பாளிகள் .

எங்கள் ஆலயத்தில் மூன்று வகை மக்கள் உறுப்பினர்கள் 
பிரிட்டிஷ் ,வெஸ்ட் இண்டீஸ் ,பஞ்சாபி கிறிஸ்தவர்கள் .
நாங்கள் மட்டுமே தமிழ் .
..எந்த ஆலய வைபவமாக இருந்தாலும் பஞ்சாபியர் 
அவர்கள் மொழியில் சில கிறிஸ்தவ பாடல்களை 
பாடுவார்கள் ...அவர்கள் வாத்திய கருவிகள் சகிதம் :)))
சில மணித்துளிகள் பஞ்சாப் ஜலந்தரில் இருக்கும் ஃ பீலிங் 
வரும் :)).இவர்களில் வெகு சிலரே டர்பன் அணிவர் .
சமீபத்தில் எங்கள் ஆலயத்துக்கு புதிய பேராயர் நியமனம் 
நடந்தது ..பக்கத்து சிட்டியில் இருந்தெல்லாம் நிறை பேர்
வந்தார்கள்..பஞ்சாபியரின் முறை பாடல் பாடும்போது ..
பெரும் கோஷம் ...அவர்கள் பாடல்கள் பாங்க்ரா ஸ்டைலில் 
இருக்கும்..ஆங்கிலேயரும் பல்லே பல்லே ரேஞ்சுக்கு தாளமிட்டுகொண்டிருந்தார்கள் ,,திடீரென எல்லார் பார்வையும் 
எதையோ நோக்கி ....அங்கே ஒரு தாத்தா நடக்க முடியாமல் 
ஒவ்வோர் இருக்கையாக பிடித்துகொண்டு முனனே செல்கிறார் 
பாடும் கூட்டத்தை நோக்கி ...ஒருவாறு அங்கு சென்று 
இரண்டு கைகளையும் உயர்த்தி பல்லே டான்ஸ் 
ஆடினார் ..:))

அவரை பார்த்ததும் கமலின் ஒரு திரைபடத்தில் ஒரு 
தாத்தா கேரம் ஆடுவாரே அந்த மாதிரி இருந்தது:))
சில விருப்பங்கள் ரத்தத்துடன் கலந்து விடும் 
என்பார்களே அதுபோல .

இந்த பல்லே பல்லே தாத்தாவுக்கு  98 வயதாம் ,
இசை என்றால் உடனே துள்ளி நடனமாடுவாராம் ..

உண்மையில் அவரின் உற்சாகம் ஆலயத்தில் இருந்த 
அனைவரையும் தொற்றிக்கொண்டது .
சிலர் தாத்தாவை படமெடுக்க விரும்பியபோது தாத்தா 
அன்போடு மறுத்து விட்டார் ......:)))

நன்றி நண்பர்களே அடுத்து மீண்டும் ஒரு புதிய 
ரெசிப்பியுடன் வர்ர்ர்ர்ட்டா :))))))))))

49 comments:

 1. வ்வ்வ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ
  பல்லே..பல்லே.... அதிராட மேல் வாயில் முளைச்சிருக்கும்...பால்பல்லே....

  ReplyDelete
 2. பலாக்கொட்டை ரெசிப்பி வித்தியாசமா இருக்கு.... ஒவ்வொரு நாட்டு உணவு ஒவ்வொரு வகை... நான் நினைக்கிறேன் உருளைக் கிழங்கிலும் இப்படிச் செய்யலாம் என...

  ReplyDelete
 3. பலாகொட்டை குழம்பு நல்லா இருக்கு ஏஜ்சல்.. பட்டை ,பிரிஞ்சி போடாமல் வத்தக்குழம்பு போல் செய்வதுண்டு. நீங்க செய்த குழம்பு சாதம், இட்லி,தோசை,சப்பாத்தி அனைத்திற்கும் பொருத்தம்..:) பல்லே பல்லே தாத்தா
  கற்பனை செய்து பார்த்தேன். நல்ல நகைசுவை..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா ..இந்த குருமா கிரேவி சப்பாத்திக்கு நல்லா இருந்தது ..இட்லிக்கும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் ..இன்னும் கொஞ்சம் பலா கொட்டைகள் இருக்கு ட்ரை பண்ணிற வேண்டியதுதான்

   Delete
 4. நான் அஞ்சு , எப்பவும் உறைப்பு பிரட்டலாகத்தான் வைப்பேன். எனக்கு சமையலில் ஆர்வம் அதிகம், அதனால எப்பவும் சின்னனில் அம்மா சமைக்கும்போது பக்கத்திலயே நிற்பேன்ன் அம்மாவும் சொல்லி சொல்லி சமைப்பா.. இதுக்கு இது சேர்க்கோணும்.. இதுக்கு இதுதான் பொருந்தும் என... ஆனா திருமணமா சமைச்ச தொடங்கல்ல... அம்மாதான் சமையல்... பின்புதான் நான் சமைக்க தொடங்கினனான்... இப்போ மீ ரொம்ப முன்னேறிட்டனாக்கும்...:) பின்ன காண்ட் பாக் கிடைச்சதெண்டால் ச்ச்ச்சும்மாவோ..? மகிக்கே கிடைக்கல்ல:).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)..

  ReplyDelete
  Replies
  1. சின்னனில் அம்மா சமைக்கும்போது பக்கத்திலயே நிற்பேன்ன்//

   அதாவது ஆறு வயசில் இருந்து ..கரெக்டா :))

   Delete
  2. என் மகளுக்கு காரம் கொடுத்து பழக்கலை அதிஸ் ..அதான் மசாலா குறைவா சேர்த்தேன்

   Delete
 5. //நான் மைதா சப்பாத்தியுடன் சாப்பிட்டேன் :))// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  ReplyDelete
  Replies
  1. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:க:))

   Delete
 6. இதில் நான் பொரியல்,உசிலி,பயற்றங்காயுடன் சேர்த்து கறி.இப்படித்தான் செய்வேன்
  இது வேறு வித்தியாசமாக இருக்கு. பார்க்கவும் நன்றாக இருக்கு அஞ்சு.
  பல்லே பல்லே தாத்தா நல்ல நகைச்சுவை. நல்ல பகிர்வுக்கு நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. நீங்க உங்க முறையை ரெசிப்பி தாங்களேன்

   Delete
  2. நோ புரொப்ளம்... அம்முலு ரெசிப்பியை அனுப்புங்கோ டி ஏச் எல்ல... ஆனா அஞ்சு ஃபீசை இப்பவே என் எக்கவுண்டில போட்டிடுங்க...:)

   Delete
 7. Varen,varen,,,vanthutte irukken! Arai mani nerathila land aakiruven! :)

  Till then grrrrrrr*7 to Miyav & bye to everybody else! ;)

  ReplyDelete
  Replies
  1. என்னாது அமெரிக்கா பிளேன் இன்னும் லாண்ட் ஆகல்லியோ?:)).. அங்கின காத்தும் மழையுமாமே.. பிபிசில சொன்னாக... இன்னும் சொன்னாக... நான் சொல்ல மாட்டேன்ன்ன்:)..

   Delete
  2. கர்ர்ர்ர் :))

   Delete
 8. குருமா சூப்பரா இருக்கு ஏஞ்சல் அக்கா! மத்த காய்கள் போலவே பலாக்கொட்டைலயும் சாம்பார்-குழம்பு-குருமா-பொரியல் எல்லாமே செய்யலாம். பலாக்கொட்டையை குக்கரில தனியா வேகவைச்சு எடுத்துகிட்டு ப்ரொஸீட் பண்ண வேண்டியதுதான்! :)

  பூஸக்கா-க்கு என்னாச்சு? :) பால் பற்கள் எல்லாம் நம-நமங்குது போல? //இப்போ மீ ரொம்ப முன்னேறிட்டனாக்கும்...:) பின்ன காண்ட் பாக் கிடைச்சதெண்டால் ச்ச்ச்சும்மாவோ..? மகிக்கே கிடைக்கல்ல:).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)..// ஹூம்..செலக்டிவ் அம்னீஷியா வந்தாட்களை எதுவுமேஏஏஏஏ சொல்ல ஏலாது. யு கேரி ஆன் பூஸக்கா! ;))))

  பல்லே பல்லே தாத்தா சூப்பர் போங்க. பஞ்சாபில க்றிஸ்டியன்ஸ் இருப்பாங்க என்பது இதுவரை நான் நினைச்சுப் பார்க்காத விஷயம். அங்கே சீக்கியர்கள்தானே அதிகம். அந்த ம்யூஸீக் கேட்டாலே டான்ஸ் ஆட தோணுமே! ;) பாலிவுட் டான்ஸ்னா இந்த ஊர்காரங்க(யு,எஸ்.) இந்த பல்லே-பல்லே ஸ்டெப் தான் போடுவாங்க. ஹஹ்ஹ!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ..வெல்டன் மகி :))வான்ஸ் வேறு பிசியானதால் பூஸ் ரொம்ப naughty:))

   இங்கே பஞ்சாப கிறிஸ்டியன்ஸ்/பாகிஸ்தானிய கிறிஸ்டியன்ஸ் பிகார் கிறிஸ்டியன்ஸ் என்று நிறைய இருக்காங்க மகி .அவங்க ஆனா தலைபாகை மட்டும் கழட்டலை ..சிலர் தலைபாகை போடாத வகை .
   பல்லே பல்லே தாத்தா டர்பன் அணிந்துதான் வந்தார் .எங்க வீட்டருகில் masishi குரூப் என்று அவர்கள் மொழிலேயே பிரசங்கம் எல்லாம் நடக்குது .
   எனக்கு அப்படியே வட இந்தியாவில் இருக்கும் ஃபீலிங் :)))..அவங்க செய்யும் சமோசாவும் இப்படி வைபவங்களுக்கு வந்திடும் .

   Delete
  2. /// ஹூம்..செலக்டிவ் அம்னீஷியா வந்தாட்களை///

   நோஓஓஓஒ மீக்கு பொஸிடிஃப் அம்னீஷியாவாக்கும்:))))... அஞ்சு நான் ஜிம்முக்குப் போறேன்ன்..:) இப்ப கதைக்க நேரமில்லையாம் எனச் சொல்லிடுங்க.. அமெரிக்காப் புயலிடம்:))... மீ ரொம்ப மெலிஞ்சுட்டேன்ன்ன்ன் ஜிம்மால:).. பார்க்கிறவை எல்லாம் ஏசீனம்.. மட்டின், அவிச்ச கோழிமுட்டை எண்டு சாப்பிட்டு கொஞ்சமாவது உடம்பை ஏத்துங்கோ என....:)..

   Delete
  3. haiyo ஹையோ :))நாங்க பாக்காம நம்ப மாட்டோம் ..

   Delete
 9. சுருக்கமாக சில ரெசிப்பீஸ்... ;)
  தணலில் சுட்டால்... வாசனையும் சுவையும்.. யமீ....
  உப்புப் போட்டு அவித்துச் சாப்பிடலாம்.

  உப்பும் மஞ்சளும் சேர்த்து பொரித்து (deep fry) சாப்பிடலாம். அதற்கு மிளகாய்த்தூள் + எலுமிச்சம்புளி விட்டு காரமாகச் சாப்பிடலாம்.

  முருங்கைக்காய் வெள்ளைக்கறிக்கு கொஞ்சமாகச் சேர்த்துப் பாருங்கள். சுவை அருமையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உஸ்ஸ்ஸ் றீச்சர் இலங்கைக் குறிப்பை எல்லாம் கரீட்டாச் சொல்லிட்ட்டா... முருங்கைக்காய்க்கு பலாக்கொட்டைதான் சூப்பர் கொம்பினேஷன்... எங்கள் வீட்டில் உறைப்பாக வைப்போம்ம்... இப்ப எதுவும் கிடைக்கிறேல்லை...

   Delete
  2. எங்க வீட்டில் ஊரில் இம்முறை செய்வாங்க இமா ..அவியல்னு சொல்வாங்க ..செம டேஸ்டி :))

   Delete
 10. அடடே அஞ்சு.. இன்றைக்கென்று நான் இவ்வளவு லேட்டாப்போயிட்டேனே...:)
  நல்ல பலாக்கொட்டை சமையல் நடந்திருக்கு. உங்க முறையில் நான் செய்ததில்லை. செய்து பார்க்கணும்.

  நானும் இங்கே இமா சொன்னவிதமாக செய்வதுதான் அதிகம்.

  பல்லே பல்லே தத்தா மனதில் நிழலாடுகிறார். இத்தனை வயதாகியும் அவரின் மனதில் இளமையாக தன்னை நினைத்திருப்பதே அவரை நோய்நொடி இன்றி வாழவைக்கும்.

  நல்ல பகிர்வு அஞ்சு. பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பல்லே பல்லே தத்தாவுக்கு இன்னும் ரெண்டு வருஷம்தான் இருக்கூஊஊஊஊஊ:).. ஐ மீன் 100 க்கு:).

   சமீபத்தில் இங்கு ஒரு கத்தலிக் சேர்ஜ்ஜில் ஒரு பியூன்றல் நடந்தது... விசாரித்த இடத்தில்... ஒரு கிரான்பா(ஸ்டைலாச் சொல்லுவம் என்ன:)) இறந்திட்டார்.. அவருக்கு இன்னும் 4 மாதங்கள் உயிரோடிருந்திருந்தால் 100 வயதாம்ம்.... என்ன கொடுமை முருகா...:).

   Delete
  2. //செய்து பார்க்கணும்.
   \\ எப்ப????:)

   Delete
  3. நாலுநாள் நான் பிசி :)) .
   அதனால் மக்கள்ஸ் அனைவரையும் திங்கள் சந்திக்கிறேன்

   Delete
  4. ம்ஹூம்ம்ம் சிலருக்கு தாங்கள் பெரீய எம் பி எண்ட நினைப்பூஊஊஊஊஊஊஉ.. பூஸ்ஸ் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)

   Delete
  5. ஆமா அதை திருப்பி சொல்லுங்க பி .எம் ..
   எங்க வீட்டு பிரைம் மினிஸ்டர் நான்தான்

   Delete
 11. Super recipe. I boil jack fruit seeds, then drain the water, add chilli powder, turmeric, salt. Cook in little bit oil until it turns crispy. Mmmm...yum. Here we should buy the whole fruit in order to get the seeds. I do have that much patience to deal with it.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானதி ..இந்த முறையும் நல்லா இருக்கு ..வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி

   Delete
 12. அட... சூப்பர்...

  நிறைய சாப்பிட்டால் பித்தம் அதிகம் என்று சொல்வார்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிங்க தனபாலன் ..அளவோடு சாப்பிட்டால் நல்லது ..இன்னும்திண்டுக்கல் ரொட்டி ரெசிப்பி நீங்க தரல்லை எனக்கு :))

   Delete
 13. வித்தியாசமாக செய்து காட்டி இருக்கீங்க ஏஞ்சலின்.நானும் பலாப்பழம் வாங்கினால் கொட்டைகளை கூட்டு வைப்பேன்.பலா கொட்டைகளை சிறுதுண்டுகளாக்கி, வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதங்கியதும்,பலாக்கொட்டை மஞ்சல் பொடி உப்பு நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.கூடவே சிறிது அரைத்த தேங்காய் விழுது அல்லது தேங்காய்ப்பால் சேர்க்கவும்.நீர் நன்கு வற்றி கூட்டு சுருண்டு எண்ணெய் மிதந்ததும் பறிமாறவும் சாதம்,சப்பாத்தி அனைத்துக்கும் ஏற்ற சைட் டிஷ்.

  மாசி சாப்பிடுவதாக இருந்தால் ஒரு டீஸ்பூன் மாசிப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.வாங்கிய பலாகோட்டை மிச்சம் மீதி இருந்தால் இந்த முறையில் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

  பலாப்பழம் இல்லாமலே வெறும் கொட்டைகள் கூட உங்கள் ஊரில் கிடைக்கின்றதா ஏஞ்சலின்.

  பின்னூட்டத்திலேயே உங்களுக்காக ஒரு மினி சமையல் குறிப்பே கொடுத்து விட்டேன்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சாதிகா .வருகைக்கும் அட்டகாசமான குறிப்புக்கும் மிக நன்றி எனது பதிவிலேயே உங்கள் அனைவரி பின்னூட்ட குறிப்புகளையும் இணைக்க போறேன் ..மாசி கணவர் சாப்டுவார் ..இங்கும் தமிழ் கடையில் கிடைக்குது ..செய்கிறேன் ..
   இங்கே ஒரு பாகிஸ்தானியர் கடை இருக்கு அதில்தான் வாழைத்தண்டு /மற்றும் சில கிடைக்காத பொருட்கள் இருக்கு ..சில பெயர் எனக்கு தெரியாது :))தண்டு கீரை/சிவப்பு பசலை கூட பார்த்தேன் ஒருமுறை

   Delete
 14. பலா கொட்டை குழம்பு மிக அருமை.

  தாத்தாவின் ஆடல் மகிழ்ச்சி. இசைக்கு எல்லோரையும் மகிழ்ச்சிபடுத்தும் ஆற்றல் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதியக்கா ..உங்கள் பதிவும் flashing தன் அதான் வர முடியலை .அன்று லைப்ரரியில் பின்னூட்ட மிட முடிந்தது .நடனசபாபதி அய்யா கொடுத்தளின்கில் உங்க பதிவும் இருக்கா ..அப்பநான் பார்க்கலாம்

   Delete
 15. பலாக்கொட்டையில் வித்யாசமான குருமா.நன்றாக இருக்கு.

  பலாக்கொட்டையை கத்திரிக்காய் போன்ற காயில் செய்யும் புளிப்பு கூட்டில் சேர்த்துக்கொண்டால் அல்லது சாம்பாரில் சேர்த்துக்கொண்டாலோ மிகவும் சுவையாக இருக்கும் angelin.

  தாத்தா பலே தான்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா உங்க குறிப்பும் அருமை ..இணைத்து விடுகிறேன் ..அவர் சூப்பர் ஜாலி தாத்தா

   Delete
 16. வணக்கம். இந்த உலக மகளிர் தின நாளில் எனது வாழ்த்துக்கள். வலைப்பதிவுகளை படிக்கும்போது ஆடுவதாக சொல்லியிருந்தீர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ சொடுக்கி அதில் உள்ளது போல் செய்தாலும் அந்த பிரச்சினை வராது.

  http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் ,சுட்டி அளித்ததற்கும் மிக்க நன்றி அய்யா ..அங்க வந்து பின்னூட்டம் இடுகிறேன்

   Delete
 17. பலாக்கொட்டைகளை அப்படியே குக்கரில் போட்டு வேக வைத்துவிட்டு [பருப்பு வேகவிடுவது போல] சாப்பிட்டாலே மிகவும் ருசியாக இருக்கும். வெந்த பலாக்கொட்டைகளை சாம்பாரில் குழம்புத்தான் போல போட்டும் சாப்பிடலாம். அதுவும் நன்றாக இருக்கும்.

  //அவரை பார்த்ததும் கமலின் ஒரு திரைபடத்தில் ஒரு
  தாத்தா கேரம் ஆடுவாரே அந்த மாதிரி இருந்தது:))//

  வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.

  //இந்த பல்லே பல்லே தாத்தாவுக்கு 98 வயதாம் ,
  இசை என்றால் உடனே துள்ளி நடனமாடுவாராம் ..//

  சிலருக்கு இதுபோல சில விருப்பங்களில் குஷி ஏற்பட்டு விடும்.

  மிகவும் நல்ல பதிவு + பகிர்வு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. :))மிக்க நன்றி அண்ணா ..அந்த காட்சியை நகைசுவை பகுதி மட்டும் அடிக்கடி இங்கு ஒரு சேனலில் போடுவாங்க அதான் படம் பெயர் மறந்திட்டேன் ..மிக்க நன்றி ..வயதானாலும் மிகுந்த உற்சாகமான happy தாத்தா அவர்

   Delete
 18. ரொம்ப நாள் கழிச்சு கனடாவில் பலாக்கொட்டை பார்த்தப்ப ரொம்ப சந்தோசமா இருந்தது...உப்பு போட்டு அவிச்சாலே தேவாமிர்தம் போல...

  ரெசிப்பி வித்தியாசமா இருக்கு ஏஞ்சலின்...கரி மசாலா போட்டா எதையும் மாத்திறலாம்..-:)

  பல்லே பல்லே...இன்னைக்கு முழுசும் பல்லே பல்லே...

  ReplyDelete
 19. பலாக்கொட்டையுடன், முருங்கைக்காய், மாங்காய் சேர்த்து சாம்பாரில் போட்டால் நன்றாக இருக்கும்.

  பலாக்கொட்டையை வேகவைத்து தேங்காய் சேர்த்த பொரியலாகவும் செய்தால் மிக நன்றாக இருக்கும்.

  பல்லே பல்லே தாத்தா சூப்பர்.

  ReplyDelete
 20. பலாக்கொட்டை குருமா குறிப்பு அருமை!

  பொதுவாக பலாகொட்டையை சாம்பார், கூட்டு, வறுவல், குருமா என்று செய்யலாம். இது தவிர, கோழி, மட்டன் குழம்புகளிலும் சேர்த்து செய்யலாம். ப‌லாக்கொட்டை வடை, பலாக்கொட்டை கட்லட், பலாக்கொட்டை பொடிமாஸ் என்றும் செய்யலாம்.

  ReplyDelete
 21. மாலை வணக்கம்,அஞ்சலின்!///நாங்கள் கத்தரிக்காய்,முருங்கைக்காய் போன்ற குழம்பு/வெள்ளைக் கறிகளுக்குப் போட்டு சமைப்போம்.தோல் நீக்கி இரண்டாகப் பிளந்து உப்பு&மிளகாய்த் தூள் சேர்த்து தாவர எண்ணெய்/நல்லெண்ணெயில் பொறித்து சாப்பிட சுவையாக இருக்கும்.வெறுமனே தண்ணீரில் உப்பும் சேர்த்து அவித்தும் சாப்பிடலாம்.அருமையாக இருக்கும்!///பல்லே,பல்லே நூறாண்டு காணட்டும்!

  ReplyDelete